பாசிப்பருப்பு சாம்பார்

This entry is part [part not set] of 12 in the series 20010722_Issue


பாசிப்பருப்பு – இரண்டு மேஜைக்கரண்டி

தக்காளி – 2 – நறுக்கிக் கொள்ளவும்

வெங்காயம் – 2 சிறியது (அல்லது 1/2 பெரிய வெங்காயம்) நறுக்கிக் கொள்ளவும்

பச்சைமிளகாய் – 2

இஞ்சி ஒரு சிறிய துண்டு

சாம்பார் பொடி ஒரு தேக்கரண்டி

கறிவேப்பிலை கொத்தமல்லி

தாளிக்க கடுகு உளுத்தம்பருப்பு ஜீரகம்

**

செய்முறை

எண்ணெய் அல்லது நெய் இரண்டு தேக்கரண்டி வாணலியில் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு ஜீரகம் தாளிக்கவும்

பின்பு வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி போட்டு வதக்கவும்.

இதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்

குக்கரில் வேகவைத்த (அல்லது தனியாக வேகவைத்த ) பாசிப்பருப்பை இதில் கொட்டவும்

சாம்பார் பொடியை கலந்து தேவையான அளவு உப்புப் போட்டு கொதிக்க விடவும்.

(மிகச்சிறிதளவு புளித்தண்ணீர் ஊற்றினால் நன்றாக இருக்கும்)

கறிவேப்பிலை கொத்தமல்லி போட்டு இறக்கவும்.

**

Series Navigation