மீன் கபாப்

This entry is part of 13 in the series 20010408_Issue


மீன் –3/4கிலோ

பெரிய வெங்காயம் –2

முட்டை –2

பச்சை மிளகாய் –4

காரத்தூள் –2டாஸ்பூன்

தனியாதூள் –2டாஸ்பூன்

எலுமிச்சம்பழம் –1

சீரகத்தூள் –1டாஸ்பூன்

ரொட்டித்தூள் –100கிராம்

சதைப்பற்றுள்ள வஞ்சிரம், கொடுவாள் போன்ற மீனை வாங்கி வந்து சுத்தம் செய்து பத்து நிமிடங்கள் வேகவைத்து நீரை வடித்து ஆற வைக்கவும். பிறகு மேல் தோல், முள் இவைகளை நீக்கி நன்கு பிசைந்து வைக்கவும்.

பெரிய வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். மீன் விழுது, தனியாத்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், உப்புத்தூள், காரத்தூள், எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து நன்கு வதக்கியபடியே இருந்து நீர் வற்றியதும் இறக்கி ஆற வைத்து, சற்று கனத்த தட்டைகளாக தட்டி வைக்கவும்.

முட்டைகளை நன்கு அடிக்கவும். ஒரு தட்டையை எடுத்து முட்டையில் தோய்த்து ரொட்டித்தூளில் நன்கு புரட்டி, எண்ணெயில் பொன்னிறமாகப் பொரிக்கவும். இப்படியே எல்லாவற்றையும் தயார் செய்து கொள்ளவும்.

இதுவே மீன் கபாப், இந்தத் தயாரிப்பு சுவையும், சத்தும் மிகுந்தது.

Series Navigation