காலா மீட்

This entry is part of 14 in the series 20010318_Issue


ஆட்டுக்கறி –1/2கிலோ

இஞ்சி –1துண்டு

பூண்டு –சிறிதாக 1

பச்சை மிளகாய் –7

கொத்துமல்லித்தழை –தேவையான அளவு

சீரகம் –1டாஸ்பூன்

ஏலக்காய் –2

கிராம்பு –2

பட்டை –1துண்டு

கரம் மசாலாத்தூள் –1டாஸ்பூன்

எலுமிச்சம்பழம் –1

மட்டனை சிறிய துண்டுகளாக நறுக்கி நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

கறியை வேக வைக்கவும்.

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சிறிதளவு கொத்துமல்லித்தழை இவைகளை நன்கு அரைத்துக் கொள்ளவும்.

சீரகத்தை லேசாக வறுத்து தூள் செய்யவும்.

வாணலியில் நெய்யுடன் எண்ணெய்விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டுப் பொரிந்ததும் வேக வைத்திருக்கும் கறித்துண்டுகளைச் சேர்த்து எண்ணெயிலேயே வதக்க வேண்டும்.

கறித்துண்டுகள் எண்ணெயிலேயே வதங்கியதும், அரைத்த மசாலா சேர்த்து நன்கு வதக்கி திட்டமாக நீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.

கடைசியில் எலுமிச்சம் பழச்சாறு, சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கிளறி, கொத்துமல்லித்தழை தூவி இறக்கி விடவும். காலாமீட் தயார்.

Series Navigation