சிக்கன் எலும்பு சூப்

This entry is part [part not set] of 15 in the series 20010311_Issue


தேவையான பொருட்கள் :

கோழி எலும்பு — 1/4 கிலோ

வெங்காயம் — 100 கிராம்

தக்காளி — 100 கிராம்

பூண்டு — 8 பற்கள்

இஞ்சி — 1 துண்டு

மிளகுத்தூள் — 2 டாஸ்பூன்

மிளகாய் வற்றல் — 5

தனியா — 2 டாஸ்பூன்

சீரகம் — 1 டாஸ்பூன்

பட்டை — 1 துண்டு

கிராம்பு — 2

சோம்பு — 1/2 டாஸ்பூன்

கொத்துமல்லி — தேவையான அளவு

கோழி எலும்புகளை நன்கு கழுவி சுத்தம் செய்யவும்.

வெங்காயம், தக்காளியை மெல்லிய நீள வில்லைகளாக நறுக்கவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல், தனியா, பட்டை, கிராம்பை சிவக்க வறுத்து கடைசியில் சோம்பு போட்டு வறுக்க வேண்டும். கடைசியில் சீரகம் சேர்த்து லேசாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும், அதே வாணலியில் எண்ணெய் இஞ்சி, பூண்டு, பாதி வெங்காயம், பாதி தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

முதலில் வறுத்த சாமான்களை அரைத்து பாதி அரைபடும் பொழுதே இஞ்சி, பூண்டு, தக்காளி, வெங்காயம் சேர்த்து நன்கு மைப்போல் அரைக்கவும்.

எலும்புகளுடன் மீதி இருக்கும் வெங்காயம், தக்காளி, உப்பு, அரைத்த மசாலா, மஞ்சள்தூள், மிளகுத்தூள், திட்டமாக நீர் விட்டு வேக வைக்கவும்.

பிறகு சிறிது எண்ணெயில் 1/2 டாஸ்பூன் சீரகம், கொஞ்சம் சோம்பு கிராம்பு தாளித்து சூப்பில் சேர்க்கவும்.

எலும்பு வெந்து சூப் தயாரானதும் கொத்துமல்லித் தழை தூவி இறக்கவும், இந்த அளவு சுமார் நான்கு பேருக்குப் போதும்.

Series Navigation