ஆ·பிரிக்காவின் ஓக்லோ யுரேனியச் சுரங்கத்தில் இயங்கிய பூர்வீக இயற்கை அணு உலைகள் கண்டுபிடிப்பு ! (Fossil Reactor & Geo-Reactor)(கட

This entry is part [part not set] of 38 in the series 20100523_Issue

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா

காலக் குயவன் போட்ட
கோலச் சுவடுகளைக்
காட்டுவது
ஆப்பிரிக்கா கண்டம் !
பூமியின் பூர்வீகத் தடங்கள்
விதைப் பாகி உள்ளன
புதைப் பொருட்களாய் !
மனிதத் தோற்றத்தின் மூல
மர்மங்கள்
மறைந்துள்ள பூதளம் !
இரு பில்லியன் ஆண்டுகட்கு முன்
சுயமாய்
இயங்கி வந்த பதினாறு
அணு உலைகள்
ஆப்பிரிக் காவில் காணப்படும் !
அணுப் பிளவு
எச்ச விளைவுகள்
இப்போதும் சான்றளிக்கும் !
புளுடோ னியம் காணப் பட்டு
அழுத்தமாய் உறுதி யாகும்
அணுப்பிளவு !
இயற்கை அணுப்பிளவு பூமியைச்
சுயமாய்ச் சுற்ற வைக்கும்
மையக் கருவில் !
அணுப்பிணைவு சக்தி பரிதியை
ஒளிக்கதிர் உலையாய்
உருவாக்கும் !

புதிய உமர் கயாம்

Fig .1
Oklo Uranium Reactor

“1972 ஆம் ஆண்டில் ஓக்லா யுரேனியத் தாதுக்கனிப் படிமத் தளத்தின் மையத்தில் பல பூர்வீக இயற்கை அணு உலைகள் இயங்கி வந்ததற்கு அழுத்தமான தடங்கள் பதிந்திருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். பூமத்திய ரேகையில் இருக்கும் இந்த ஆ·பிரிக்க அணு உலைகள் விட்டுவிட்டு சில வருடங்களிலிருந்து பல நூறாயிரம் ஆண்டுகளாகச் சுயமாய் இயங்கி வந்திருக்கின்றன. அவற்றின் ஆயுட் கால நீட்சி சுமார் ஓரு மில்லியன் ஆண்டுகள் என்று கருதப்படுகிறது.”

கர்ட்டின் பல்கலைக் கழகத் தொழில்நுணுக்க வெளியீடு, ஆஸ்திரேலியா

ஓக்லா சுரங்கத்தில் காணப்படும் யுரேனிய -235 செறிவு இழப்புக்கு (Depleted Uranium -235 in Oklo Mines) சுயமாய் இயற்கையில் நிகழ்ந்த அணுப்பிளவு இயக்கத்தைத் தவிர வேறொரு சிறந்த காரணத்தை நான் கூற முடியாது. இழந்து போன யுரேனியம் -235 உலோகத்தோடு (From U-235 0.72% to U-235 0.44%) விஞ்ஞானிகள் அணுப்பிளவால் விளைந்த நான்கு வகையான கதிரியக்கக் கழிவு மூலகங்களையும் (சான்றாக) அங்கே கண்டிருக்கிறார்.

டாக்டர் கிலென் ஸீபோர்க் (Dr. Glenn Seaborg, Chairman U.S. Atomic Energy Commission)

Fig .1A
Oklo Natural Reactors

இயற்கையாக இயங்கிய அணுப்பிளவு உலைகள் ஆ·பிரிக்காவின் காபன் நாடு ஒன்றைத் தவிர வேறெந்த நாட்டிலும் இதுவரைக் காணப்பட வில்லை. மற்ற செழிப்பான யுரேனியத் தாதுக்கனித் தளங்களிலும் அணுப்பிளவு நேர்ந்திடப் போதுமான யுரேனியச் செறிவு (Uranium -235 Enrichment 3%) இருந்திருக்கலாம். ஆனால் யுரேனியம், நீர், இயற்கைச் சுற்றமைப்பு (Physical Conditions) இwtha மூன்றும் ஒருங்கிணைந்து அணுப்பிளவு நேரும் தொகுப்பு நிலை ஓக்லா யுரேனியக் களம் ஒன்றில் மட்டும்தான் தனித்துவ முறையில் நிகழ்ந்திருக்கிறது.

விக்கிபீடியா தகவல்

“பூமியின் மையத்து வரை ஒரு துளையைத் தோண்டிச் சென்றால் நாம் எதைக் காண்போம் ? உட்கருவின் நடுவில் இயற்கை அணு உலையாய் இயங்கி வரும் 5 மைல் விட்டமுள்ள யுரேனியக் கோளம் ஒன்றிருப்பதை ஊகித்து உடன்பட வைக்க ஆதாரம் உள்ளது. அதை நான் ‘புவி அணு உலை’ (Geo-Reactor) என்று குறிப்பிடுகிறேன்.”

மர்வின் ஹெர்ன்டன் Ph.D., (Marvin Herndon, President Transdyne Corpn, San Diego, California)

“ஐஸ்லாந்தின் எரிசாம்பல் முகில் (Plume) விஞ்ஞானத்துக்குக் கிடைத்த ஓர் இயற்கைக் கொடை (Boon to Science).”

பிரையன் ஹான்ட்வெர்க் (Brian Handwerk, National Geographic News)

Fig .1B
African Fossil Reactor Site

ஆ·பிரிக்காவில் இயங்கிய பூர்வீக யுரேனிய அணுப்பிளவு உலைகள்

1.7 பில்லியன் ஆண்டுகட்கு முன்னே ஆ·பிரிக்காவின் காபன் நாட்டில் (Gabon, Western Africa) இயங்கி வந்த பதினாறு பூர்வீக யுரேனிய அணுப்பிளவு அணு உலைகள் (Fossil Uranium Reactors) இருந்ததை 1972 ஆம் ஆண்டில் பிரென்ச் பௌதிக விஞ்ஞானி பிரான்ஸிஸ் பெர்ரின் (Francis Perrin) முதன்முதலில் கண்டுபிடித்தார். நாசாவும் அதை மெய்யென்று அறிவித்தது. காபன் நாட்டின் ஓக்லோ தளம் (Oklo Region) யுரேனிய உலோகத்தின் களஞ்சியம் என்று அறியப் படுகிறது. உலகில் முதன்முதல் சுயமாய் இயங்கியப் பூர்வீக அணு உலைகளின் விளைவு எச்சங்கள் (Fission Products) இப்போதும் ஆங்கே காணப் படுகின்றன என்று நாசா கூறுகிறது. 1956 ஆம் ஆண்டிலேயே ஆர்கன்ஸாஸ் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானி டாக்டர் பால் குரோடா (Dr. P.aul Kuroda) என்பவர் எந்த மாதிரி நிலைப்பாடுகளில் இயற்கைச் சுய இயக்க அணு உலைகளில் பிளவுகள் நேரும் என்பதை விளக்கமாகக் கூறியிருக்கிறார். அதாவது யுரேனியம் -235 சுயப் பிளவில் வெளிவரும் வேக நியூட்ரான்கள் சுற்றியுள்ள நீரில் மிதமாக்கப்பட்டு மீண்டும் யுரேனியம் -235 உலோகத்துடன் மோதி தொடர்ந்து அணுப்பிளவை உண்டாக்கலாம் என்பதே அவர் ஊகித்த கோட்பாடு.

Fig .1C
Garbon Location, Africa

பொதுவாகப் பூமியில் கிடைக்கும் யுரேனியம் -235 இயற்கையில் எடுக்கப்படும் யுரேனியம் -238 கலவையில் 0.72% விகிதத்தில் உள்ளது. ஆனால் காபன் நாட்டில் உள்ள ஓக்லோ சுரங்கங்களின் (Oklo Uranium Mines) ஒருசில பகுதிகளில் கிடைக்கும் யுரேனியம் -235 வேறுபாட்டில் குறைவாக 0.44% விகிதத்தில் காணப்பட்டது. ஆதலால் யுரேனியம் -235 உலோகம் 0.72% விகித அளவிலிருந்து எப்படி 0.44% விகித அளவாய்க் குறைந்தது ? ஏன் குறைந்தது ? எப்போது குறைந்தது ? காணாமல் போன 0.28% யுரேனியம் -235 உ,லோகத் துக்கு என்ன ஆயிற்று போன்ற கேள்விகள் எழுகின்றன.

ஓக்லா சுரங்கத்தில் காணப்படும் யுரேனிய -235 செறிவு இழப்புக்குக் காரணம் (Depleted Uranium -235 in Oklo Mines From U-235 0.72% to U-235 0.44%) சுயமாய் இயற்கையில் நிகழ்ந்த அணுப்பிளவு இயக்கத்தைத் தவிர வேறொரு சிறந்த காரணத்தை நான் கூற முடியாது. இழந்து போன யுரேனியம் -235 உலோகத் தோடு (From U-235 0.72% to U-235 0.44%) விஞ்ஞானிகள் அணுப்பிளவால் விளைந்த நான்கு வகையான கதிரியக்கக் கழிவு மூலகங்களையும் (சான்றாக) அங்கே கண்டிருக்கிறார்.

Fig .1D
Fossil Fission Process

டாக்டர் பால் குரோடா ஊகித்த இயற்கை அணுப்பிளவுக் கோட்பாடு

மூன்று வித நிலைப்பாடு அமைப்புகளில் யுரேனியம் -235 இல் இயற்கைச் சுய அணுப்பிளவுகள் நிகழும் என்று தெளிவாக அறிவித்தார் டாக்டர் பால் குரோடா. அவை பின்வறுமாறு :

1. முதல் நிலைப்பாடு : யுரேனியத் தாதுக்கனிப் படிவுத் தளமானது அணுப்பிளவு ஏற்படுத்தும் நியூட்ரான்கள் பயணம் செய்யும் சராசரி தூரத்தை மிஞ்சி (> 66 செ.மீ.) (> 2.5 அடி) இருக்க வேண்டும். இந்த அமைப்பு அணுப்பிளவு செய்யும் நியூட்ரான்கள் அடுத்து யுரேனியம் -235 யை மோதுவதற்கு ஏதுவாக இருக்கும்.

2. இரண்டாவது நிலைப்பாடு : போதுமான அளவு யுரேனியம் -235 நிறையும் செறிவும் (3%) (Mass of Uranium & Enrichment) யுரேனியத் தாதுக்கனித் தளத்தில் இருக்க வேண்டும். அந்த அளவு யுரேனியம் -235 இன் 3% செறிவே தற்போதைய நீர் மிதவாக்கி வெப்பக் கடத்தி அணுமின் நிலையங்களில் பயன்பட்டு வருகிறது. (Like PWRs – Pressurized Light Water Reactors).

Fig .1E
Plutonium Production in Natural Reactors

3. மூன்றாவது நிலைப்பாடு : வேக நியூட்ரானை மிதமாக்க ஒரு மிதவாக்கி திரவம் அல்லது திடவம் (Liquid or Solid Moderator for Fast Neutrons) தேவைப் படுகிறது. மிதமாக்கிய வேக நியூட்ரானே யுரேனியம் -235 வுடன் சேர்ந்து அடுத்தும் அணுப்பிளவைத் தூண்ட முடியும்.

வியக்கத் தக்க முறையில் இம்மூன்று நிலைப்பாடு விதிகளும் 2 பில்லியன் ஆண்டுகட்கு முன்னர் பதினாறு தனிப்பட்ட தளங்களில் ஓக்லோ யுரேனிய தாதுக்கனித் தளத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. மேலும் யுரேனிய அணுப்பிளவு இயக்கங்கள் நிகழ்ந்ததின் உறுதிப்பாட்டை நிலைநாட்ட ஓக்லோ தளங்களில் உற்பத்தியான 2 டன் புளுடோனியம் -239 உலோகம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. பிளவுபட்ட யுரேனியம் -235 உலோக அளவின் சக்தியைக் கணக்கிடும் போது உற்பத்தியான வெப்ப சக்தி மொத்தம் 15,000 மெகா வாட் ஆண்டுகள் (15,000 megawatt-years) என்றும் சராசரி வெப்ப ஆற்றல் 100 கிலோ வாட்ஸ் என்றும் அறியப் படுகிறது.

Fig .2
Fossil Reactor Questions

டைனோஸார்ஸ் இருந்ததற்கு முன்பு ஆ·பிரிக்காவில் இயங்கிய அணு உலைகள்

பிரென்ச் விஞ்ஞானி பிரான்ஸிஸ் பெர்ரின் (Francis Perrin) கண்டுபிடித்து எடுத்துக் காட்டிய இயற்கை அணுப்பிளவுக் கோட்பாட்டை மிஞ்சி வேறு யாரும் தக்கதோர் விளக்கத்தை இதுவரை வெளியிட்டதில்லை. “மென்டல் ·பிளாஸ்” இதழில் (Mental_Floss Magazine) ஸாமுவெல் கீன் (Samuel Kean) வெகு அழகாக இந்த இயற்கை அணுப்பிளவு இயக்கத்துக்கு மேலும் விளக்கம் அளித்தார். நீர், ஆக்ஸிஜன், யுரேனியம் ஆகிய மூன்றும் ஒன்று சேரும் போது அம்மாதிரி ஓர் சுயப்பிளவு அணுவியல் இயக்கத்தை உண்டாக்கும். யுரேனியம் நீரில் கலந்திட ஆக்ஸிஜன் மிகவும் உதவி செய்யும் போது, நீர் வேக நியூட்ரான்களை மிதமாக்குகிறது. யுரேனியம் -235 இல் சுயமாகவே அணுப்பிளவு (Spontaneous Fission of U-235) நிகழ்ந்து எப்போதும் வேக நியூட்ரான்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. காபன் ஓக்லோ யுரேனியத் தளங்களில் நீர் சூழ்ந்துள்ள யுரேனியம் -235 (0.72%) சுயப் பிளவில் அணுசக்தியும், பிளவுக் கழிவுகளும் நியூட்ரான்களும் வெளியாகித் தொடரியக்கங்கள் நிகழ்ந்திருக் கின்றன. பிறகு வெப்ப சக்தியால் சுற்றியுள்ள நீர் ஆவியாகிப் போன பிறகு மிதவாக்கி இல்லாமல் அணுப்பிளவு இயக்கம் நிறுத்தம் அடைகிறது. அடுத்து நீர் மீண்டும் யுரேனியத்தைச் சூழும் போது மறுபடியும் அணுப்பிளவு தொடங்கு கிறது. பிரான்ஸிஸ் பெர்ரின் கணக்கிட்டுப் பார்த்ததில் ஓக்லோ யுரேனியச் சுரங்கத்தில் இருந்த யுரேனியம் -235 இன் நிறை சுமார் 13,000 பவுண்டு (சுமார் 6.5 டன்) என்று தெரிகிறது. அணு உலை இயக்கம் அரை மணி நேரம் இயங்கி இரண்டரை மணி நேரம் நிறுத்தம் அடைந்து (மூன்று மணிக்கு ஒருமுறை) குறைந்தது 150,000 ஆண்டுகள் தொடர்ந்தன என்றும் பெர்ரின் அறிவித்துள்ளார்.

Fig .3
Fission & Fission Products

இயற்கை அணுப்பிளவில் விளைந்த எச்சக் கழிவு மூலகங்கள்

ஓக்லோ யுரேனியத் தாதுக்கனி தளங்களில் அணுப்பிளவுகள் பல்லாயிரம் ஆண்டுகள் சுயமாக இயங்கி வந்ததற்கு அழுத்தமான சான்றுகள், ஆங்கு காணப்பட்ட பிளவுகளில் விளைந்த அணுக்கழிவு எச்சங்களே ! ரேனி நூர்பெர்கன் (Rene Noorbergen, Author of Secrets of the Lost Races: New Discoveries of Advanced Technology in Ancient Civilizations) ஓக்லோ தளங்களில் கிடைத்த மாதிரிகளில் பிளவுக் கழிவு எச்சங்கள் நியோடிமியம், சமேரியம், ஈரோப்பியம், சீரியம் (Neodymium, Samarium, Europium and Cerium) ஆகிய நான்கும் இருந்தன என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆயினும் 2 பில்லியன் ஆண்டுகட்கு முன்னர் நிகழ்ந்த அணுப்பிளவு இயக்கத்தின் சமயத்தில் உலகம் இப்போதுள்ளது போல் இருக்க வில்லை. ஆனால் கன மூலகங்களின் கதிரியக்கத் தேய்வுகளும், அவற்றின் அரை ஆயுள்களும் (Radioactive Decay & Half Life) காலக் கடிகாரமாய் மாறாத நிலைப்பாடுகளாய்க் கோடான கோடி ஆண்டுகளாக அழியாத கல்வெட்டுபோல் பிரபஞ்ச வரலாற்றை எழுதி வைத்துள்ளன !

Fig .4
Xenon Poisoning in Uranium Reactors

அணுப்பிளவு விளைவுகளில் உண்டாகும் கதிரியக்கக் கழிவுகளில் ஐந்து வித நிறையுள்ள ஸீனான் வாயுக்கள் (Xenon Gases) எச்சங்களில் அடங்கிக் கிடந்தன. 2 பில்லியன் ஆண்டுகட்குப் பிறகு காணப்படும் ஸீனான் ஏகமூலங்களின் தனி இருப்புகள் (Concentrations of Xenon Isotopes) அணு உலை இயக்க நீடிப்பு, நிறுத்தக் காலம் ஆகியவற்றைக் கணக்கிட உதவுகின்றன. ஓக்லோ அணுப்பிளவுக் கழிவுகளின் இருப்பளவு தற்போதைய யுரேனிய அணு உலைகள் இயங்கி பிளவுக் கழிவுகளை வெளியேற்றுவதை முற்றிலும் ஒத்துள்ளன. உற்பத்தியாகும் ஸீனான் அணுக் கழிவுகள் ஆரம்பத்தில் நியூட்ரான் விழுங்கும் நஞ்சாகி (Xenon Poisoning) பிறகு கதிரியக்கத் தேய்வில் நிறை மாறி நியூட்ரான் விழுங்காத வாயுவாகும்.

1.7 பில்லியன் ஆண்டுகட்கு முன்னிருந்த ஓக்லோ பூர்வீக யுரேனியத் தாதுக்கனியில் (Fossil Uranium Ore) சுய அணுப்பிளவு நிகழ்ந்த ஆதிமூல யுரேனியம் -235 உலோகம் 3% என்று தேய்வு முறை விதிப்படிக் கணக்கிடப் பட்டுள்ளது. யுரேனியம் -235 உலோகம் தேய்வு விதிப்படி தற்போது 0.72% விகித அளவுதான் தாதுக்கனியில் காணப்படுகிறது.

Fig .5
Fission Product Poisoning in Reactors

நீர்மயம் சுற்றியுள்ள கவசச் சூழ்நிலையில் யுரேனியம் -235 உலோகத்தின் செறிவு குறைந்தது 3% அளவுதான் சுயத் தொடரியக்கம் நிகழ்த்தும் தகுதி கொண்டது. நீரில் யுரேனியம் கரைந்து போக ஆக்ஸிஜன் உதவுகிறது. திரவ நிலையில் உள்ள யுரேனியக் குழம்பில் அணுப்பிளவு சுய இயக்கம் விரைவாக நிகழ்கிறது. அருகில் காணப்பட்ட புளுடோனியம் -239 உலோகம் அணுப்பிளவு ஓக்லோவில் நேர்ந்திருப்பதை நிச்சய மாக்கியது. நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் இயற்கை அணுப்பிளவு உலைகள் தாமே தம்மை நிரந்தரமாய் நிறுத்திக் கொண்ட பிறகு சேமிப்பான அணுப்பிளவுக் கழிவுகள் யாவும் 2 பில்லியன் ஆண்டுக்குப் பிறகு கதிரியக்கம் குன்றி அந்தத் தளங்களிலே இப்போது அடக்கம் ஆகிக் கிடக்கின்றன. இயக்கத்தில் உண்டாக்கப்பட்ட புளுடோனியம் -239 உலோகம் அணுப்பிளவுத் தளத்திலிருந்து 10 அடித் தூரத்தில் நகர்த்தப் பட்டிருப்பதாய்க் காணப்படுகிறது. பண்டைக் காலக் குகைமனிதர் இந்தக் கதிரியக்கத் தளங்களில்தான் பல்லாயிரம் ஆண்டுகள் நடமாடி வாழ்ந்திருக்க வேண்டும் !

Fig .6
Footsteps of Uranium Reactor In Mines

(தொடரும்)

+++++++++++++++++

படங்கள்: BBC News, National Geographic, The Times UK, & CTV Global Media

தகவல்கள்:

1. Volcanoes & Earthquakes By: Reader ‘s Digest [1992]
2. Time & Life Books Volcanoes & Earthquakes [1995]
3. Hutchinson Encyclopedia of the Earth Edited By: Peter Smith [1985]
4. Encyclopedia Britannica 15 Edition [1978]
5. Reader ‘s Digest Marvels & Mysteries of the World Around Us [1977]
6. National Geographic Frontiers of Science [1982]
7. The Vesuvius Volcano at the Bay of Naples.
8. The Eruptive History of Mt.Vesuvius in Italy & Mt.Etna in Sicily.
9. Krakatoa Volcano near Java & Sumatra of Indonesian Islands
10. Inside the Volcano, National Geographic [November 2000].
11 (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40402051&format=html (Italian Volcano))
11 (b) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40402121&format=html (Hawaii Volcano)
11 (c) http://www.thinnai.com/?module=displaystory&story_id=41004181&format=html (Chile Earthquake)
11 (d) http://www.thinnai.com/?module=displaystory&story_id=41004251&format=html (Iceland Volcano)
11 (e) http://www.thinnai.com/?module=displaystory&story_id=41005021&format=html (Earth Georeactor -1)
12. Hot Theories on the Center of the Earth National Geographic [January 1996].
13. Hawaii ‘s Volcanic Cradle of Life, National Geographic [July 1990].
14. Hawaii, Island of Fire & Flowers, National Geographic [March 1975].
15. Volcano Monitoring Techniques, U.S. Geological Survey (USGS) Report [October 11, 1991]
16. Kilauea, Hawaii ‘s Most Active Volcano.
17. Volcanic & Seismic Hazards, USGS Publication [1997].
18. Volcanic Toxic Gases By: Bill Harby [April 7, 1999]
19. The Hawaii Center for Volcanology [HCV-1992]
20. Icland Volcano’s Fountain of Fire (March 20, 2010)
21 National Geographic News – Harmful Effcts of Volacanic Smoke By Brian Handwerk (April 16, 2010)
22 BBC News Why Iceland Volcano Has Grounded UK Flights By : Victoria Gill (April 15, 2010)
23 BBC News How Volcanoes Shaped History (April 15, 2010)
24 BBC News Experts Update Ash Health Advice (April 16, 2010)
26 BBC News Volcanic Ash Cloud (April 17, 2010)
27 BBC News Ash Deepens Europe Travel Chaos (April 17, 2010)
28 BBC News Ash Imperils Bone Morrow Patients (April 18, 2010)
29 BBC News Half of European Flights to Fly (April 20, 2010)
30 Scientific American – How Much Volcanic Ash is Too Much for a Jet Engine ? By John Matson (April 21, 2010)
31 (a) Daily Galaxy -Are the Planets Volcanoes Being Triggered by Global Warming ? (April 16, 2010)
31 (b) Scientific American -A Warming World Could Trigger Earthquakes, Landslides & Volcanoes By James Watson (April 21, 2010)
32 NASA Report : What are (Volcanic) Aerosols ?
33. Volcanoes & Climate Change ByJason Wolfe (September 5, 2000)
34 18 Most Dangerous US Volcanoes Include Erupting Alaska Peak (Jan 20, 2006)
35 NASA Report : Historic Volcanic Eruption Shrunk the Mighty Nile River (Nov 21, 2006)
36 NuclearPlanet.com : Science About thre True Nature of Earth & Universe
37 The Nuclear Heart of the Earth : The Science Behind “The Core” – An Interview with Marvin Herndon Ph.D. By : Wayne Smith (Mar 31, 2003)
38 Encyclopedia.com : Radioactive Heat Production in the Earth By : David A. Rothery (1993)
39 Can Climate Change Explode ? By : Ridhima (Jan 3, 2010)
40. Wikipedia – Georeactor (March 14, 2010)
41 Nuclear Reactors in the Land Before Time -Oklo Fossil Reactors Attack Einstein Relatively Speaking By : Jacob Saul (September 25, 2008)
42 Scientific American – The Workings of an Ancient Nuclear Reactor, By : Alex P. Meshik (January 26, 2009)
43 Wikipedia – Geological Situation in Gabon (Western Africa) Leading to Natural Nuclear Fission Reators (October 2005) Repeated (May 6, 2010)

********************
S. Jayabarathan (jayabarat@tnt21.com) May 14, 2010

Series Navigationயாழ்ப்பாணத்துத்தமிழ் -மொழி- இலக்கியம்- பண்பாடு >>

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

ஆ·பிரிக்காவின் ஓக்லோ யுரேனியச் சுரங்கத்தில் இயங்கிய பூர்வீக இயற்கை அணு உலைகள் கண்டுபிடிப்பு ! (Fossil Reactor & Geo-Reactor)(கட

This entry is part [part not set] of 26 in the series 20100516_Issue

Series Navigationவிஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தொன்று >>

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா