சூடேறும் கோளம், மேலேறும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, ஓஸோன் துளைகள், தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-6

This entry is part [part not set] of 31 in the series 20060728_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

காலமும், சூழ்வளியும்,
கடல் மட்ட ஏற்றத் தணிவும்
நீர், நிலவளத் தேய்வுகளும் சேர்ந்து,
பயிர்கள் ஏதோ
பசுமை மினுப்பில் தோன்றும்!
யந்திர வாய்கள்
புகைபிடித்து ஊதியதும்,
பச்சை நிலங்கள் எல்லாம் வெளுத்து
பாலை மணலாகும்!
காலநிலைச் சீர்பாட்டைப்
பாழாக்கும் கேடுகள் பூமியைத்
தாலாட்டு கின்றன!
பால்போன்ற பனிக் குன்றுகள் உருகிக்
கால்தடம் பதிக்கும்
பசும்புல் தளமாகி
ஆடு, மாடுகள் பசிக்கு மேயும்
காடுகளாய்
அங்கி மாற்றிக் கொண்டன!
புனித மிழந்து புதையுது,
மனித நாகரீகம்,
வெப்ப யுகப் பிரளயம்,
உப்பி வந்து!

1996 ஆம் ஆண்டில் பூமியைச் சுற்றிவரும் பூகோளத் தளநோக்கி ஏற்பாடு [Global Positioning System (GPS)] துணைக்கோள் மூலமாகக் கிரீன்லாந்தின் கிழக்குப் பகுதியில் உள்ள கான்கெர்டுலுஸாக் பனிக் குன்று [Kangerdlugssuaq Glacier] ஆண்டுக்கு 3 மைல் வீதம் [5 கி.மீ.] மிக்க விரைவாக உருகி வருகிறது என்று ஓரளவு துல்லியமாகக் கணக்கிடப் பட்டுள்ளது! 40 ஆண்டுகளாக மாறுபாடில்லாமல் நிலையாக இருந்த பனிக்குன்று 2001 ஆண்டு முதல் 3 மைல் வீதத்தில் சிறுத்து வருவதாக அறியப்படுகிறது! அந்தப் பேரளவு பனியிழப்புக் குளிர் காலத்தில் மீண்டும் பனிக்குன்றாய்ச் சேமிப்பாகி கிரீன்லாந்தில் ஈடு செய்யப்படா விட்டால், கடல் மட்டம் ஏற ஏதுவாகிறது! கிரீன்லாந்தின் நிலப்பகுதியின் உஷ்ணம் 3 டிகிரி C மிகையானால், அனைத்துப் பனித்தட்டுகளும் உருகிடலாம் என்று அஞ்சப்படுகிறது! அவ்வித உஷ்ண எழுச்சி சுமார் ஒரு நூற்றாண்டில் உண்டானால், கடல்நீர் மட்டம் 23 அடி [7 மீடர்] உயரலாம் என்று கணக்கிடப் படுகிறது! உலக நாடுகளின் 70% ஜனத்தொகை மக்கள் கடல்கரை சார்ந்த பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்கள்! மேலும் அமெரிக்காவில் 2005 ஆம் ஆண்டில் அடித்த கேட்ரினா ஹரிக்கேனால் கடலும், நீர் வெள்ளமும் மீறி மூழ்க்கிய நியூ ஆர்லியன்ஸ் நகரைப் போல் அகில நாடுகளின் 15 பெரிய நகரங்களில் 11 நகரங்கள் கடற்கரையில் அமைக்கப் பட்டுள்ளன!

டாக்டர் கார்டன் ஹாமில்டன் & மார்டினா குரூகர் [Dr. Gordon Hamilton & Greenpeace Expedition Leader: Martina Krueger ]

உலகத்தின் ஜனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக ஏறப் போகிறது! அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன. 15 ஆண்டுகளில் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் ஏதுவு மில்லாமல் காணாமல் போய்விடும்! அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போய் 20 ஆண்டுகளில் வெறும் பூங்காவாக நிற்கும். சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச்சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன! அண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப்பாறைகள் உருகிப் போயின! அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் கரைந்து விட்டன! நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர் மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது! வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும்? அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும்? நமது நாகரீக வாழ்வும், பூகோளமும் மோதிக் கொண்டிருப்பதை மெய்யெனக் கண்டு நாம் சாட்சியம் கூறி நிற்கிறோம்.

முன்னாள் துணை ஜனாதிபதி அல் கோர்

1990 ஆண்டில் பிரென்ச், ரஷிய விஞ்ஞானிகள் அண்டார்க்டிகாவின் தென்துருவத்தில் 1.5 மைல் நீளமான பனித்தண்டைத் தோண்டி எடுத்து 400,000 ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் தோன்றி மாறிய நான்கு பனியுகங்களின் கரியமில வாயுவை [CO2 in Four Ice-Age Cycles] ஆய்ந்தனர். அந்தச் சோதனையில் உஷ்ணம் ஏற, ஏற கரியமில வாயுவின் கொள்ளளவு படிப்படியாகக் குறைந்து [மூன்றில் ஒரு பங்கு] வந்திருக்கிறது என்று அறியப்பட்டது. காரணம் மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்கள் CO2 உடன் மாறி யிருக்க முடியும் என்று எளிதாகக் கருத வழி யிருக்கிறது. அந்த அரியக் கண்டுபிடிப்பு 1896 ஆண்டு விட்ட முன்னறிப்பை உறுதிப் படுத்தியுள்ளது.

பூகோளச் சூடேற்ற விளக்கமும் விவாதமும் [Global Warming Definitions & Debate]

ஆர்க்டிக் வட்டாரத்தைத் துணைக்கோள் கண்காணித்த உளவுகள், பூகோளச் சூடேற்றம் மெய்யானது என்று நிரூபித்ததுடன், அடுத்து வரும் 100 ஆண்டுகளில் முந்தைய காலத்தை விட 8 மடங்கு வேகத்தில் வெப்பச் சீற்றம் ஏறி வருகிறது என்றும் எடுத்துக் காட்டியுள்ளன! கடற்பனி உருகுவதால் கடல் மட்டம் உயராது. காரணம், கடற்பனிக் குன்றுகள் கடலில் மிதக்கின்றன. ஆனால் கிரீன்லாந்தின் நிலப்பகுதிப் பனிக் குன்றுகள் முழுதும் உருகினால் கடல் மட்டம் 7 மீடர் வரை [சுமார் 25 அடி] ஏறிவிடலாம் என்று அஞ்சப் படுகிறது! ஆனால் அவ்விதம் பனிக்குன்றுகள் யாவும் கிரீன்லாந்தில் உருக 1000 ஆண்டுகள் கூட ஆகலாம்!

மார்க் ஸெர்ரீஸ் [Mark Serreze, University of Colorodo]

பூகோளக் காலநிலைப் போக்கை மனிதரின் சீர்கேடான செயல்கள் மாற்றிக் கொண்டு வருகின்றன! கரியமில வாயு, மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களின் கொள்ளளவு பூமண்டலக் காற்றில் மிகையாகும் போது, பூமியின் காலநிலையில் சூடேறுகிறது! கடந்த நூற்றாண்டில் கிரீன்ஹவுஸ் வாயுக்களும், மற்ற மனிதச் செயல்களும் புரிந்த காலநிலை மாறுபாடுகளும், வருங்காலத்தில் நிகழப் போகும் எதிர்பார்ப்புகளும் மனித இனத்துக்குத் தீங்கிழைக்கப் போகும் மெய்யான பிரச்சனைகள்!

அமெரிக்கன் பூதளப் பௌதிகக் குழுவகம் [American Geophysical Union (Dec 2003]

காலநிலைச் சீர்ப்பாடுகளைப் பாழாக்குபவை எவை?

காலைப் பொழுதில் பரிதி எழுச்சி முதல் மாலைப் பொழுதில் அத்தமனமாகி நள்ளிரவுக்குப் பிறகு மீண்டும் உதயமாவது வரைச் சூழ்வெளியில் ஏற்படும் உஷ்ண, வாயு அழுத்த மாற்றங்களே வானிலை (Weather) எனப்படுவது. ஓராண்டு முதல் கூடிய காலம் முப்பது ஆண்டுகளில் சூழ்வெளியில் ஏற்படும் நான்கு காலப் பகுதி மாற்றங்கள் காலநிலை (Climate) எனப்படுவது. பல்லாண்டுகளில் ஏற்படும் உஷ்ண, அழுத்த மாறுதல், கடல்நீர் மட்ட உயர்வு ஆகியவை மிகச் சிறியதாயினும், விளைவுகளில் பெருத்த சீர்கேடுகள் உண்டாகலாம்! பூதளம் உட்கொள்ளும் பேரளவு வெப்ப ஓட்டத்தால் நேர்ந்திடும், ஒன்றுக் கொன்று தொடர்புள்ள பல்வேறு மாறுபாடுகளால் பூகோளத்தின் காலநிலைப் பாதிக்கப்படுகிறது!

1. பூகோளத்தில் பரிதியின் வெப்பத் தாக்கல்:

93 மில்லியன் மைல் பயணம் செய்யும் பரிதியின் வெப்ப சக்தி, பூகோளத்தின் வாயுக் கோளத்தை சதுர கெஜத்துக்கு 300 வாட்ஸ் வீதம் சூடாக்குகிறது! அந்த வெப்பத்தில் மூன்றிலொரு பாகம் திருப்பி விண்வெளியில் பிரதிபலிக்கிறது! மீதியான வெப்ப ஆற்றலே சூழ்மண்டலத்தின் வானிலை எஞ்சினை இயக்குகிறது!

2. சூழ்வெளியில் கிரீன்ஹவுஸ் வாயுக்கள்:

சூழ்வெளியில் பரவிச் சுற்றிவரும் வாயுக்களை [ஆக்ஸிஜென், கார்பன்டையாக்ஸைடு, நைட்ரஜன், ஓஸோன் போன்றவை] அனுதினமும் இயற்கை நுட்பமாக நிறுத்துச் சேர்த்து சராசரி உஷ்ணம் 15 டிகிரி C [60F] நிலவி வருகிறது. கிரீன்ஹவுஸ் வாயுக்களான மீதேன், கார்பன்டையாக்ஸைடு, ஸல்·பர்டையாக்ஸைடு, நைட்ரஸாக்ஸைடு, நீர்மையாவி (Water Vapour) போன்றவை சூழ்வெளியில் கலந்து, பரிதியின் வெப்பத்தை மிகையாக உட்கொண்டு அதில் ஒரு பகுதியையும் திருப்பிப் பிரதிபலிக்கிறது!

3. கடல் மட்ட உயரம், உஷ்ண ஏற்றங்கள்:

பூதளத்தில் 70 சதவீதப் பரப்பில் தங்கியுள்ள கடல் நீரே, அதன் தட்ப, வெப்பநிலைக் கேற்பவும், வாயுவின் அழுத்த, உஷ்ணநிலைக் கேற்பவும் சூழ்மண்டலத்தில் கலந்துள்ள நீர்மையாவியின் திரட்சி [Water Vapour Content] கூடிக் குறைகிறது. கடல்வெள்ளம் பேரளவு வெப்பசக்தியை விழுங்கி, பல்லாயிரம் மைல் தூரம் கடத்துகிறது! கடற்பகுதியில் ஓரிடத்தில் சூடேறும் போது, அந்தப் பரப்பின் வானில் நீராவி யாவதும், மேகங்கள் கூடுவதும் காணப்படலாம். மிகையான அளவு கரியமிலவாயுவைக் கடலில் வாழும் மீனினங்கள், நீரினங்கள் உட்கொள்கின்றன.

4. பூமியில் நீரோட்டச் சுற்றியக்கம் (Water Cycle):

வாயு மண்டலத்தின் உஷ்ணம் மிகையாகும் போது, நீர் ஆவியாக மாறும் வேகம் அதிகரிக்கும். அதே சமயத்தில் நிலத்திலும், கடலிலும் படிந்துள்ள பனிக்குன்றுகள் உருகும் வேகமும் அதிகரிக்கும். கிரீன்ஹவுஸ் வாயுக்களில் ஒன்று வலுவான நீர்மை ஆவி [Potent Water Vapour] மேகங்களை உண்டாக்குவதால், சூழ்மண்டலம் சற்று குளிர்ச்சி அடைகிறது!

5. மேக மண்டலக் கதிர்வீச்சு:

சூழ்வெளியில் உலவி வரும் மேகங்களின் நடமாட்டம் சரியாகப் புரிந்து கொள்ளப்பட வில்லை! அவை பரிதியின் வெப்பத்தைத் திருப்பி அனுப்பி ஒருபுறம் பூகோளத்தைக் குளிர்ச்சி ஆக்கியும், வாயுக் கோளத்தில் முடங்கி விட்ட நிலத்தின் வெப்பம் வீசப்பட்டு மறுபுறம் உஷ்ணத்தை மிகை ஆக்கியும் வருகிறது.

6. பனிப்பாறை, பனிப் பூக்கள் [Ice & Snow] மீது வெப்ப வீழ்ச்சி:

பளிங்கு வெண்மையாக உள்ள பனிப்பாறை, பனிப் பூக்கள் பரிதியின் வெப்பத்தை விண்வெளியில் திருப்பி அனுப்பி, பூமியைச் குளிரும்படிச் செய்கின்றன. கடல் வெப்பத்தை ஈர்த்துக் கொண்டு, கடற்பனிப் பாறைகள் உருகும். வடகோளத்தின் [Northern Hemisphere] பனிப்பாறைச் சேமிப்புகள் கடந்த 21 ஆண்டுகளாக [1998 அறிக்கை] 10 சதவீதம் உருகி விட்டன. அதே சமயத்தில் தென்கோளத்தில் [Southern Hemisphere] உள்ள அண்டார்க்டிகாவில் குறிப்பிடத் தக்க அளவு பனிப்பாறைகள் எவையும் உருகிட வில்லை!

7. நிலப்பகுதிகளில் வெப்பத்தால் மாறுதல்கள்:

பரிதியின் உஷ்ணம் பூதளத்தில் பட்டுப் பூமிக்குள் புகும்போது, வெப்பமாக மாறி பெரும்பான்மை அளவு மேலெழுகிறது. நிலத்தின் பயன்பாடும், பூகோளப் பண்பாடும் காலநிலை மாறுதலுக்குக் காரணமாகின்றன! மலைத் தொடர்களின் சிகரம் மேகங்களைத் தடுத்து, கீழ்ப்பகுதிகள் வரட்சியான நிழற் பரப்புகளாக ஆக்கப் படுகின்றன! மலைச் சரிவுகள் மழைநீரைக் கீழே வடிய விட்டு மேலும் அந்த நிலப்பகுதியையும், காற்றையும் வரட்சியாக்கி விடுகின்றன. வேனிற் பகுதிக் காடுகள் கரியமில வாயுவை நிரம்ப விழுங்கிக் கொண்டாலும், சந்தை ஆடு மாடுகள் ஆங்கு மேய ஆரம்பித்த பிறகு, அந்த நிலப்பரப்புகள் “மீதேன் வாயுவை” [Methane Gas] உற்பத்தி செய்யும் பூமியாக மாறுகிறது.

8. மாந்தர் குறுக்கீடுகள், தொழிற்துறை வெளிப் போக்குகள்:

சூழ்மண்டலத்தில் ஏற்கனவே இயற்கையாக கிரீன்ஹவுஸ் வாயுக்கள் பரவி யிருப்பினும், மனிதக் குறுக்கீடுகளும், தொழிற் துறையகப் புகைபோக்கிகளும் [CO2, SO2, NO2 etc] மேலும் வாயுக்கள் அளவை மிகுதியாக்குகின்றன. எரிசக்தி தரும் எருக்கள், நிலக்கரி போன்றை எரியும் போது, மிகையாகப் பெருகி வாயுக்களோடு சேர்வது கார்பன்டையாக்ஸைடு. கால்நடை மேய்ச்சல், நெல் விளைச்சல், நிலக்குழிகள் நிரப்பல் ஆகியவை மீதேன் வாயுவின் உற்பத்தியை அதிகமாக்கும்.

முன்னாள் துணை ஜனாதிபதி அல் கோரின் சூழ்வெளிப் பாதுகாப்புப் பணிகள்

1960 ஆண்டுகளில் கல்லூரியில் படித்து வந்த காலம் முதலே அல் கோர் சூடேறும் பூகோளத்தைப் பற்றி ஆர்வமும், வேட்கையும் மிகுந்து, அதைக் கூடியவரைத் தணிக்க வேண்டும் என்னும் குறிக்கோளை தன் வாழ்வின் நெடுங்காலப் பணியாக பின்பற்றி வருகிறார். 2006 மே மாதம் 20 ஆம் தேதி நடைபெற்ற 59 வது அகில நாட்டு வெள்ளித்திரை விழாவில் [International Film Festival] தன் கருத்தை வெளியிடும் திரைப்படம் ஒன்றைக் காட்டினார். ஆளுநர் டேவிஸ் குஜ்ஜன்ஹைம் [Director Davis Guggenheim] தயாரித்த அல் கோரின் சூடேறும் பூகோளம் பற்றியும், சூழ்வெளிக் காப்பு பற்றியும் நிகழ்ச்சிகளுடன் காட்டும் “தவிர்க்கும் வசதியில்லா உண்மை” [The Inconvenient Truth] என்னும் திரைப்படமே அது. ஆயிரம் முறை அப்படத்தை அரங்கேற்றி அல் கோர் பல்லாயிரக் கணக்கான மாந்தருக்கு அறிவுரை புகட்டி உள்ளார். வட அமெரிக்க திரையரங்குகளிலும் அப்படம் காட்டப் பட்டுள்ளது.

“மனித இனம் டிக்டிக்கென அடிக்கும் காலவெடி [Ticking Time Bomb] ஒன்றின் மீது அமர்ந்துள்ளது! உலக விஞ்ஞானிகளில் பெரும்பான்மையான பேர்கள் எச்சரிப்பது மெய்யானால், நமது பூமி முழுவதையும் பாதிக்கப் போகும் சூறாவளி, புயல், பேய்மழை, பஞ்சம், தொத்து நோய்கள், மரணமூட்டும் வெப்பக் காற்றலைகள், வரம்பற்ற வானிலைகள், காலநிலைகள் போன்று நாமிதுவரை அனுபவப்படாத பயங்கரச் சீர்கேடுகளை, முயன்றால் பத்து வருடங்களில் தவிர்க்க முடியும்!” என்று அப்படத்தில் முக்கியமாகக் கூறுகிறார் அல் கோர்.

(தொடரும்)

************************

தகவல்கள்:

Picture Credits: Time, National Geographic Magazines.

1. Time, Special Report on Global Warming [April 3, 2006]
2. Stop Thermageddon in Our Lifetime [www.thermageddon.com]
3. What is Happening to our Climate? By Samuel Matthews, National Geographic [Nov 1976]
4. The ocean An Era of Discovery National Geographic [Dec 1981]
5. Global Warming from Wikipedia.
6. Climate Change: The Human Influence Analysed By Harry N.A. Priem [Sep 15, 2000]
7. Climate Change: Projected Changes in CO2 & Climate
8. Climate Change: Sea Level Rise Due to Global Warming.
9. Is Our World Warming? By: Samuel Matthews, Senior Assistant Editor National Geographic [Oct 1990]
10 http://www.thinnai.com/sc1014051.html [Author’s Article on Katrina Damage & Evaquation]
11 Stormy Weather: Can We Link to Global Warming By: Jim Motavalli [Nov 11, 2004]
12 A Cold Hard Look at a Telltale Region Arctic By: Peter Spotts, Christian Science Monitor [Nov 18, 2004]
13 Global Warming : Definitions & Debate [http://zfacts.com/p/49print.html
14 Meltdown: Arctic Wildlife is On the Brink of Catastrophe By Steve Connor [Nov 11, 2004]
15 Discovery of Greenpeace Expedition on Greenland By: Dr. Gordon Hamilton [July 22, 2005]
16 Carbon Dioxide [CO2] & Global Warming Potential [Several Internet Reports]
17 Ecological Reports: The Data on Global Warming is Conclusive [Jan 29, 2004]
18 Third World Nears Brunt of Global Warming Impacts By: Paroma Basu [July 11, 2006]
19 Ozone Crisis, The 15 Year Evolution of a Sudden Global Emergency By: Shron L. Roan [1989]
20 Evidence for Global Warming: Degradation of Earth’s Atmosphere; Sea Level Raise; Ozone Holes; Vegetation Response By: Dr. Mitchell K. Hobish [Earth System Science]
21 Warning from Al Gore on Future, “Global Warming Called an Emergency” (June 5, 2005)
22 National Geographic: “Unlocking the Climate Puzzle [May 1998]
23 National Geographic: “Global Warming” Your Vacation May Never Be the Same, The Climate Bomg By: Jonathan Tourtellot [July-Aug 2006]
24 Macleans Magazine: Now with the Weather -Al Gore [May 22, 2006]
25 Pledge to See “An Incovenient Truth” Movie [May 27, 2006]

******************

jayabarat@tnt21.com [July 27, 2006]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

சூடேறும் கோளம், மேலேறும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, ஓஸோன் துளைகள், தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-5

This entry is part [part not set] of 20 in the series 20060721_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

ஓரிடத்தில் எரிமலை கக்கி
உலகெங்கும் பரவும்
கரும்புகைச் சாம்பல்!
ஓஸோன் குடையில்
ஓட்டை விழுந்து,
உருக்குலையும் உயிரினத் தோல்கள்!
துருவப் பனிமலை
உருகிக்
கண்ணீர் நதிகள் ஓடும்!
பருவக் காலநிலை
தாளம் தடுமாறிப்
பெரும்புயல் தாக்கும்,
பேய்மழை அடிக்கும்,
நிலப்பகுதி நீர்மய மாகும்!
உணவுப் பயிர்கள் சேதமாகும்!
மனித நாகரீகம் நாசமடைய,
புனித வாழ்வு வாசமிழக்க
முனைந்து வரும்,
வெப்ப யுகப் பிரளயம்,
வீட்டு வாசலில் நிற்குதடா!

“உலகத்தின் ஜனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக ஏறப் போகிறது! அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன. 15 ஆண்டுகளில் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் ஏதுவு மில்லாமல் காணாமல் போய்விடும்! அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போய் 20 ஆண்டுகளில் வெறும் பூங்காவாக நிற்கும். சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச்சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன! அண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப்பாறைகள் உருகிப் போயின! அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் கரைந்து விட்டன! நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர் மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது! வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும்? அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும்? நமது நாகரீக வாழ்வும், பூகோளமும் மோதிக் கொண்டிருப்பதை மெய்யெனக் கண்டு நாம் சாட்சியம் கூறி நிற்கிறோம்.”

அமெரிக்கன் செனட்டர் அல் கோர் [Al Gore, American Former Senator/Vice President (June 5, 2005)]

1974 ஆம் ஆண்டில் காலி·போர்னியாவின் பல்கலைக் கழகத்தின் இரண்டு ரசாயன வல்லுநர், ஷெர்வுட் ரோலாண்டு, மாரியோ மொலினா ஆகியோர் முதன்முதலில் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் “குளோரோ புளுரோ கார்பன் கூட்டுகள்” [Chloro Fluro Carbon (CFC) Compounds] மெதுவாக சூழ்வெளி வாயு மண்டலத்தை அண்டி, 15 மைல் உயரத்தில் பரவிய மிருதுவான ஓஸோன் பாதுகாப்புக் குடையைச் சிதைப்பதாகக் கண்டறிந்தார்கள். அவரது கோட்பாடு மெய்யென்று 1976 இல் நிரூபிக்கப் பட்டு, உலக நாடுகளில் உற்பத்தியாகும் CFC கூட்டுகள் நிறுத்தமாகிப் பில்லியன் டாலர் பெருமான ரசாயனத் திரவ/வாயுக் கூட்டுகள் பாதிக்கப் பட்டுள்ளன.

ஷாரன் ரோவன் விஞ்ஞான எழுத்தாளி [Sharon Roan, Author of the Book: “Ozone Crisis” (1989)]

“பூகோளத்தில் வாழும் மாந்தர்கள் புறக்கணிக்கப்பட வேண்டிய ஒரு மாபெரும் அசுரச் சூழ்மண்டலச் சோதனையை [CFC Production] அமைதியாகச் செய்து வருகிறார்கள்! அந்த சோதனை தவிர்க்கப் பட்டிருக்கலாம். அதற்குப் பதிலாக அதன் பாதிப்புகளைத் தாங்கிக் கொண்டு அடுத்து 150 ஆண்டு காலம் வாழலாம்.”

ஷெர்வுட் ரோலாண்டு, மாரியோ மொலினா [Sherwood Rowland & Mario Molina]

1990 ஆண்டில் பிரென்ச், ரஷிய விஞ்ஞானிகள் அண்டார்க்டிகாவின் தென்துருவத்தில் 1.5 மைல் நீளமான பனித்தண்டைத் தோண்டி எடுத்து 400,000 ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் தோன்றி மாறிய நான்கு பனியுகங்களின் கரியமில வாயுவை [CO2 in Four Ice-Age Cycles] ஆய்ந்தனர். அந்தச் சோதனையில் உஷ்ணம் ஏற, ஏற கரியமில வாயுவின் கொள்ளளவு படிப்படியாகக் குறைந்து [மூன்றில் ஒரு பங்கு] வந்திருக்கிறது என்று அறியப்பட்டது. காரணம் மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்கள் CO2 உடன் மாறி யிருக்க முடியும் என்று எளிதாகக் கருத வழி யிருக்கிறது. அந்த அரியக் கண்டுபிடிப்பு 1896 ஆண்டு விட்ட முன்னறிப்பை உறுதிப் படுத்தியுள்ளது.

பூகோளச் சூடேற்ற விளக்கமும் விவாதமும் [Global Warming Definitions & Debate]

ஆர்க்டிக் வட்டாரத்தைத் துணைக்கோள் கண்காணித்த உளவுகள், பூகோளச் சூடேற்றம் மெய்யானது என்று நிரூபித்ததுடன், அடுத்து வரும் 100 ஆண்டுகளில் முந்தைய காலத்தை விட 8 மடங்கு வேகத்தில் வெப்பச் சீற்றம் ஏறி வருகிறது என்றும் எடுத்துக் காட்டியுள்ளன! கடற்பனி உருகுவதால் கடல் மட்டம் உயராது. காரணம், கடற்பனிக் குன்றுகள் கடலில் மிதக்கின்றன. ஆனால் கிரீன்லாந்தின் நிலப்பகுதிப் பனிக் குன்றுகள் முழுதும் உருகினால் கடல் மட்டம் 7 மீடர் வரை [சுமார் 25 அடி] ஏறிவிடலாம் என்று அஞ்சப் படுகிறது! ஆனால் அவ்விதம் பனிக்குன்றுகள் யாவும் கிரீன்லாந்தில் உருக 1000 ஆண்டுகள் கூட ஆகலாம்!

மார்க் ஸெர்ரீஸ் [Mark Serreze, University of Colorodo]

பூகோளக் காலநிலைப் போக்கை மனிதரின் சீர்கேடான செயல்கள் மாற்றிக் கொண்டு வருகிறது! கரியமில வாயு, மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களின் கொள்ளளவு பூமண்டலக் காற்றில் மிகையாகும் போது, பூமியின் காலநிலையில் சூடேறுகிறது! கடந்த நூற்றாண்டில் கிரீன்ஹவுஸ் வாயுக்களும், மற்ற மனிதச் செயல்களும் புரிந்த காலநிலை மாறுபாடுகளும், வருங்காலத்தில் நிகழப் போகும் எதிர்பார்ப்புகளும் மனித இனத்துக்குத் தீங்கிழைக்கப் போகும் மெய்யான பிரச்சனைகள்!

அமெரிக்கன் பூதளப் பௌதிகக் குழுவகம் [American Geophysical Union (Dec 2003]

முன்னுரை: பரிதியின் வெப்பநிலைச் சீராகச் சுற்றிலும் நிலைபெறப் பிரம்மாண்டமான ஒரு வாயுக் கோளம், எப்போதும் பூமிக்குக் குடைபிடித்து வருகிறது! வாயுக் குடையில் வாயுக்களின் கொள்ளளவுக் [Volume] கூடிக் குறையும் போது, பூமியில் படும் பரிதியின் உஷ்ணமும் ஏறி, இறங்குகிறது! அந்த வாயு மண்டலத்தில் இயற்கை ஊட்டியுள்ள வாயுக்களைத் தவிர, புதிதாகப் பூமியிலிருந்து கரியமில வாயு [Carbon Dioxide] போல் வேறு வாயுக்களும் சேர்ந்தால் வாயுக்களின் திணிவு [Density] மிகையாகிறது! வாயுக்களின் திணிவு அதிகமாகும் போது, பரிதியின் வெப்ப சேமிப்பும் மிகுந்து, அதன் உஷ்ணமும் கூடுகிறது. அந்தச் சீர்கேடுதான் “கிரீன்ஹௌஸ் விளைவு” அல்லது “கண்ணாடிக் கோட்ட விளைவு” [Greenhouse Effect] என்று குறிப்பிடப் படுகிறது. அந்த உஷ்ணப் பெருக்கால் கடல் நீரின் வெப்பம் அதிகரிக்கிறது! அந்த வெப்ப எழுச்சியால் துருவப் பகுதியில் உறைந்திருக்கும் பனிப்பாறைகள் உருகிக் கடல் மட்டம் உயர்ந்து, கடற்கரைப் பகுதிகள் உப்பு நீரில் மூழ்கி நிலவளம் பாழ்படும். அல்லது சி.எ·ப்.சி [Chloro Fluoro Carbons (CFC)] போன்ற பூமி வாயுக்கள் மேலே பரவிப் பாதுகாப்பாய் உள்ள ஓஸோன் பந்தலில் துளைகளைப் போட்டால், பரிதியின் தீய புறவூதாக் கதிர்கள் பூமியில் பாய்ந்து சேதம் விளைவிக்கும்.

21 ஆம் நூற்றாண்டின் முடிவில் கிரீன்ஹவுஸ் வாயுக்களின் பெருக்கத்தால், பூகோளத்தின் உஷ்ணம் 6 டிகிரி F ஏறிவிடும் என்று உலக உடல்நலப் பேரவை மதிப்பிடுகிறது! அதனால் பேரளவு வெள்ளங்கள், பஞ்சம், வெப்ப அலைகள் [Heat Waves] எழுலாம் என்றும் பேரவை கூருகிறது. உலக உடல்நலக் கண்காணிப்புப் பேரவை [World Heath Organization (WHO)] சமீபத்தில் உளவறிந்து வெளியான ஓர் அறிவிப்பின்படி, மனிதத் தூண்டல் மாறுதல்களால் ஏற்பட்டச் சூழ்வெளிக் காலநிலைப் பாதிப்புகளால் மாந்தருக்கு நேரும் 5 மில்லியன் மாறுபட்ட நோய்களில் 150,000 நபர் ஒவ்வோர் ஆண்டும் மரணம் அடைகிறார் என்னும் அதிர்ச்சியான தகவல் கிடைத்துள்ளது! சூடேறிய சூழ்வெளியின் வெப்ப அலைகளாலும், நாட்டில் புயலடித்துப் பேய்மழைகள் பெய்து வெள்ளக்காடாய் ஆவதாலும் மாந்தருக்குத் துர்நீரால் பல்வேறு தொற்று நோய்கள் பீடிக்கின்றன வென்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்!

சூடேறும் பூகோளம் பற்றி முன்னாள் துணை ஜனாதிபதி அல் கோர்

பல்லாண்டுகள் பொய்யென ஒதுக்கணிக்கப்பட்ட பூகோளச் சூடேற்றமும், சூழ்வெளி ஓஸோன் வாயுக் குடையில் இழப்பும் தற்போது அகில நாடுகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது! ஓஸோன் பிரச்சனையைத் தீர்க்க அகில நாடுகள் கூட்டு ஒப்பந்தம் செய்து பெருத்த மாறுதல்கள் புரிய முனையும் போது, அமெரிக்கா தீவிரப் பங்கு எடுத்துக் கொள்ளாமல் வாளா விருக்கிறது! ஓஸோன் குறைபடுகளால் தீங்கு நேர்வதைக் காட்டும் போது மக்கள் புனைகதையாகப் புறக்கணிக்காமல் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக (1979-1989) நம்மைப் பாதித்த மாபெரும் அந்த ஓஸோன் சிக்கலுக்கு தீர்வு பெறுவது, மானிடருக்குப் பெரும் சவாலாகப் போகிறது! அமெரிக்காவில் ஓஸோன் பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு காண, சில ரசாயனப் பண்டங்களை உற்பத்தி செய்யக் கூடாதென்று கருத காங்கிரஸ் பேரவை முன் வந்திருப்பது வரவேற்கத் தக்கது. அவை ஓஸோனை விழுங்கும் “குளோரோ புளோரோ கார்பன்ஸ்” [Chloro Fluro Carbons (CFC)]

ஷாரன் ரோவன் விஞ்ஞான எழுத்தாளியின் எண்ணங்கள்

1974 ஆம் ஆண்டில் காலி·போர்னியாவின் பல்கலைக் கழகத்தின் இரண்டு ரசாயன வல்லுநர், ஷெர்வுட் ரோலாண்டு, மாரியோ மொலினா ஆகியோர் முதன்முதலில் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் “குளோரோ புளுரோ கார்பன் கூட்டுகள்” [Chloro Fluro Carbon (CFC) Compounds] மெதுவாக சூழ்வெளி வாயு மண்டலத்தை அண்டி, 15 மைல் உயரத்தில் பரவிய மிருதுவான ஓஸோன் பாதுகாப்புக் குடையைச் சிதைப்பதாகக் கண்டறிந்தார்கள். அவரது கோட்பாடு மெய்யென்று 1976 இல் நிரூபிக்கப் பட்டு, உலக நாடுகளில் உற்பத்தியாகும் CFC கூட்டுகள் நிறுத்தமாகிப் பில்லியன் டாலர் பெருமான ரசாயனத் திரவ/வாயுக் கூட்டுகள் பாதிக்கப் பட்டுள்ளன. ஓஸோன் வாயுக் குடை பரிதியின் தீவிர புறவூதா கதிர்களை [Ultra Violet Rays] வடிகட்டி, பூதளத்தில் மானிடருக்கு தோல் புற்று நோய்கள் வராமல் தடுக்கும்.

ஓஸோன் வாயுக் குடையில் 1% கொள்ளளவு குன்றினால், புறவூதாக் கதிர்கள் மிகையாகி மெலனோமா வில்லாத புற்றுத்தோல் நோய் [Non-melanoma Skin Cancer] 5%-6% கூடலாம் என்று எதிர்பார்க்கப் பட்டது. 1985 ஆம் ஆண்டில் திடீரென்று ஏதோ காரணத்தால் அண்டார்க்டிகாவின் வானில் ஏறக்குறையப் பாதியளவு ஓஸோன் மாயமாய் மறைந்தது! 1988 இல் அதுபோல் ஜன நெருக்கமான வடபுறக் கோளத்தின் [Northern Hemisphere] வானில் 3% ஓஸோன் குன்றி விட்டதாக விஞ்ஞானிகள் கண்டறிந்தார்கள்! 1987 ஆம் ஆண்டில் 85% CFC கூட்டுகள் உற்பத்தி நிறுத்தப்பட வேண்டும் என்று அகில நாட்டு ஒப்பந்தம் தயாரானது.

(தொடரும்)

************************

தகவல்கள்:

Picture Credits: Time, National Geographic Magazines.

1. Time, Special Report on Global Warming [April 3, 2006]
2. Stop Thermageddon in Our Lifetime [www.thermageddon.com]
3. What is Happening to our Climate? By Samuel Matthews, National Geographic [Nov 1976]
4. The ocean An Era of Discovery National Geographic [Dec 1981]
5. Global Warming from Wikipedia.
6. Climate Change: The Human Influence Analysed By Harry N.A. Priem [Sep 15, 2000]
7. Climate Change: Projected Changes in CO2 & Climate
8. Climate Change: Sea Level Rise Due to Global Warming.
9. Is Our World Warming? By: Samuel Matthews, Senior Assistant Editor National Geographic [Oct 1990]
10 http://www.thinnai.com/sc1014051.html [Author’s Article on Katrina Damage & Evaquation]
11 Stormy Weather: Can We Link to Global Warming By: Jim Motavalli [Nov 11, 2004]
12 A Cold Hard Look at a Telltale Region Arctic By: Peter Spotts, Christian Science Monitor [Nov 18, 2004]
13 Global Warming : Definitions & Debate [http://zfacts.com/p/49print.html
14 Meltdown: Arctic Wildlife is On the Brink of Catastrophe By Steve Connor [Nov 11, 2004]
15 Discovery of Greenpeace Expedition on Greenland By: Dr. Gordon Hamilton [July 22, 2005]
16 Carbon Dioxide [CO2] & Global Warming Potential [Several Internet Reports]
17 Ecological Reports: The Data on Global Warming is Conclusive [Jan 29, 2004]
18 Third World Nears Brunt of Global Warming Impacts By: Paroma Basu [July 11, 2006]
19 Ozone Crisis, The 15 Year Evolution of a Sudden Global Emergency By: Shron L. Roan [1989]
20 Evidence for Global Warming: Degradation of Earth’s Atmosphere; Sea Level Raise; Ozone Holes; Vegetation Response By: Dr. Mitchell K. Hobish [Earth System Science]
21 Warning from Al Gore on Future, “Global Warming Called an Emergency” (June 5, 2005)
22 National Geographic: “Global Warming” Your Vacation May Never Be the Same, The Climate Bomg By: Jonathan Tourtellot [July-Aug 2006]

******************

jayabarat@tnt21.com [July 20, 2006]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

சூடேறும் கோளம், மேலேறும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-4

This entry is part [part not set] of 33 in the series 20060714_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

தாரணி எங்கும்
நீர், நிலம், நெருப்பு,
வாயு, வான மாகிய பஞ்ச பூதங்கள்
ஆயுதங்களாய் மாறிக்
கோர வடிவத்தில்
பேரழிவு செய்யும்!
எங்கெங்கு காணினும்
பொங்கும் புகை மூட்டம்!
வடதுருவப் பனிமலைகள் உருகிக்,
கடல் மட்டம் ஏறும்!
பருவக் காலநிலை மாறிப்
பெரும்புயல் அடிக்கும், பேய்மழை இடிக்கும்,
நிலப்பகுதி நீர்மய மாகி மக்கள்
புலப்பெயர்ச்சி செய்ய நேரும்!
மனித நலம், உயிரினம், பயிர்வளப்
புனிதம் சிதைக்கும்
சூட்டு யுகப் பிரளயம்,
வீட்டு முன் வந்து நிற்குதடா!

1979 ஆண்டு முதல் துருவப் பனிப்பாறைகள் ஒவ்வோர் ஆண்டும் 1 சதவீதக் கொள்ளளவு வீதத்தில் உருகி வருகிறது.

“2500 எண்ணிக்கைக்கு மேற்பட்ட விஞ்ஞானிகள் மீறிச் செல்லும் உஷ்ணம் தாக்கிப் பாதிக்கப்படும் உலக அரங்குகளில் விளையப் போகும் தீங்குகளைத் தெளிவாக உளவி ஆராய்ந்திருக்கிறார்கள். அவரது ஆய்வுகளில் ஏறிடும் உஷ்ணத்தால் மாந்தருக்கும் மற்றப் பயிரின உயிரினங்களுக்கும் ஏற்பட விருக்கும் பேரிழப்புகள், பேரிடர்கள் விளக்கப்பட்டு, வெப்பச் சீற்றத்தின் பாதிப்புகளை எவ்விதம் தவிர்க்கலாம் அல்லது குறைக்க முற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது! வெப்பச் சீற்றம் என்பது நம்மைப் பாதிக்கப் போகும் ஒரு மெய்நிகழ்ச்சி என்பதும் உறுதியாக்கப் பட்டது! அந்த பேராபத்திற்கு மனிதரின் பங்களிப்பு உண்டு என்பதும் தெளிவாக்கக் கூறப் பட்டிருக்கிறது.”

உள்நாட்டுக் காலநிலை மாறுபாட்டு அரங்கம் [Intergovernmental Panel for Climate Change (IPCC) April 2, 2001]

“பல்வேறு பணித்துறைக் காலநிலை கண்காணிப்பாளர் உலக நாடுகளில் ஒன்று கூடித் தமது நிதிவளம், நேரம், ஆக்க உணர்வு அனைத்தையும் திரட்டி, எவ்விதத் தடையின்றி நீண்டகாலப் போராட்டத்தைத் துவக்க வேண்டும். ஏனென்றால் நாமெல்லாம் காலநிலைக் கோளாறு நரகத்தின் வாயிலில் வெகு சீக்கிரம் கால்வைக்க நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.”

ராஸ் கெல்பிஸ்பான் [Ross Gelbspan (July 31, 2002)]

“1880 ஆண்டுக்குப் பிறகு நீண்ட காலப் பூகோளச் சூடேற்றத்தால் அட்லாண்டிக் கடல்நீர் உஷ்ணம் 0.5 C மிகையாகி யிருக்கிறது. அரை டிகிரி உஷ்ணம் உலகக்கடல் வெள்ளத்தில் ஏறினாலும், ஹரிக்கேன் பேராற்றல் அல்லது பேரழிவுக் குறியிலக்கம் [Hurricane Energy Index or Destructive Index] 0.97 யிலிருந்து 1.90 ஆகி [96% மிகை] 2003 ஆண்டில் ஏறக்குறைய இரட்டிப்பாகி விட்டது!”

தேசீயக் கடல், சூழ்வெளி ஆணையகம் [(NOAA) US National Oceanic & Admospheric Administration]

“நியூ ஆர்லின்ஸ் நகரம் ஹரிக்கேன் கேட்ரீனா தாக்குதலால் மக்கள் வாழத் தகுதியற்று, அரை மில்லியன் பேர் வெளியேறக் கட்டளை யிடப்பட்டு புலப்பெயர்ச்சியான பிறகு 50,000-100,000 நபர்கள் பிடிவாதமாய் வெளியேற மனமின்றி நீர் மூழ்கிய இல்லங்களில் தங்கி அடைபட்டு விட்டார்கள்.”

நகராட்சி அதிபர்: ரே நாகின் [Ray Nagin, New Orlean’s Mayor]

“3000 ஆண்டுகளாகக் கனடாவின் வடகோடி ஆர்க்டிக் பகுதியில் துருத்திக் கொண்டிருந்த ஒரு பூதகரமான பனிக்குன்று, கடந்த ஈராண்டுகளாகப் பூகோளச் சூடேற்றத்துக்குப் புதிய சான்றாக உடைந்து கடலில் சரிந்து கரைந்து விட்டது. ஆர்க்டிக் பகுதியின் மிகப் பெரும் பனியுடைப்பு எனக் கருதப்படும் அந்த புராதன பனிமதில் சிதைவுக்கு, நூறாண்டு காலமாகப் படிப்படியாய் ஏறிய வெப்ப மிகுதியும், 1960 ஆண்டு முதல் விரைவாக எழுந்த வெப்பப் பெருக்கமுமே முக்கிய காரணங்கள் என்று ஆய்வாளர் கூறுகிறார்!”

ஆன்டிரூ ரெவ்கின் [Andrew Revkin, The New York Times (23 September 2003)]

1990 ஆண்டில் பிரென்ச், ரஷிய விஞ்ஞானிகள் அண்டார்க்டிகாவின் தென்துருவத்தில் 1.5 மைல் நீளமான பனித்தண்டைத் தோண்டி எடுத்து 400,000 ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் தோன்றி மாறிய நான்கு பனியுகங்களின் கரியமில வாயுவை [CO2 in Four Ice-Age Cycles] ஆய்ந்தனர். அந்தச் சோதனையில் உஷ்ணம் ஏற, ஏற கரியமில வாயுவின் கொள்ளளவு படிப்படியாகக் குறைந்து [மூன்றில் ஒரு பங்கு] வந்திருக்கிறது என்று அறியப்பட்டது. காரணம் மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்கள் CO2 உடன் மாறி யிருக்க முடியும் என்று எளிதாகக் கருத வழி யிருக்கிறது. அந்த அரியக் கண்டுபிடிப்பு 1896 ஆண்டு விட்ட முன்னறிப்பை உறுதிப் படுத்தியுள்ளது.

பூகோளச் சூடேற்ற விளக்கமும் விவாதமும் [Global Warming Definitions & Debate]

ஆர்க்டிக் வட்டாரத்தைத் துணைக்கோள் கண்காணித்த உளவுகள், பூகோளச் சூடேற்றம் மெய்யானது என்று நிரூபித்ததுடன், அடுத்து வரும் 100 ஆண்டுகளில் முந்தைய காலத்தை விட 8 மடங்கு வேகத்தில் வெப்பச் சீற்றம் ஏறி வருகிறது என்றும் எடுத்துக் காட்டியுள்ளன! கடற்பனி உருகுவதால் கடல் மட்டம் உயராது. காரணம், கடற்பனிக் குன்றுகள் கடலில் மிதக்கின்றன. ஆனால் கிரீன்லாந்தின் நிலப்பகுதிப் பனிக் குன்றுகள் முழுதும் உருகினால் கடல் மட்டம் 7 மீடர் வரை [சுமார் 25 அடி] ஏறிவிடலாம் என்று அஞ்சப் படுகிறது! ஆனால் அவ்விதம் பனிக்குன்றுகள் யாவும் கிரீன்லாந்தில் உருக 1000 ஆண்டுகள் கூட ஆகலாம்!

மார்க் ஸெர்ரீஸ் [Mark Serreze, University of Colorodo]

பூகோளக் காலநிலைப் போக்கை மனிதரின் சீர்கேடான செயல்கள் மாற்றிக் கொண்டு வருகிறது! கரியமில வாயு, மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களின் கொள்ளளவு பூமண்டலக் காற்றில் மிகையாகும் போது, பூமியின் காலநிலையில் சூடேறுகிறது! கடந்த நூற்றாண்டில் கிரீன்ஹவுஸ் வாயுக்களும், மற்ற மனிதச் செயல்களும் புரிந்த காலநிலை மாறுபாடுகளும், வருங்காலத்தில் நிகழப் போகும் எதிர்பார்ப்புகளும் மனித இனத்துக்குத் தீங்கிழைக்கப் போகும் மெய்யான பிரச்சனைகள்!

அமெரிக்கன் பூதளப் பௌதிகக் குழுவகம் [American Geophysical Union (Dec 2003]

முன்னுரை: சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு கடைசிப் பனியுகம் உலகைத் தொட்டுக் கடந்து போனது. நமது பூமியின் காலநிலை வரலாறு கடும் பனிப்பாறைப் படுகையிலும், பிறகு சுடும் வெப்பப் பாலை வனங்களிலும் எழுதப் பட்டுள்ளன! மனித நாகரீகத் தொடக்கமே 10,000 ஆண்டுகளுக்குப் பின்னால்தான் வளர்ச்சி அடைந்து வந்திருப்பதாக அறியப்படுகிறது! ஒவ்வொரு காலநிலை யுகமும் தனது வரலாற்றுத் தடங்களைக் கடற்படுகை ஆழத் தட்டுகளில் பதிவு செய்திருப்பதைத் தற்போது மாதிரிகள் எடுத்து விஞ்ஞானிகள் ஆராய்ந்துள்ளார்கள். பனிப்பாறையில் பதுங்கிக் கிடக்கும் ஆக்ஸிஜென் வாயுவின் அளவு, பனிப்பாறை உருவான காலத்து உஷ்ணத்தைக் காட்டுகிறது. பனிபடிந்து பாறையாகும் சமயத்தில் உஷ்ண ஏற்றத் தணிவுக்கு ஏற்ப ஆக்ஸிஜென் அளவு பாறையில் சேமிக்கப் படுகிறது. கீரின்லாந்தின் பூர்வீகப் பனிப்பாறைகளைத் துளையிட்டு மாதிரிகளை எடுத்து, உயரப் பகுதித் துண்டுகளில் உள்ள ஆக்ஸிஜென் அளவைக் கணக்கிட்டு கடந்த 100,000 ஆண்டுகளாகப் பூமியில் காலநிலை வேறுபாடு வரலாறுகளை எழுதி யுள்ளார்கள்!

பரிதியின் வெப்பநிலைச் சீராகச் சுற்றிலும் நிலைபெறப் பிரம்மாண்டமான ஒரு வாயுக் கோளம், எப்போதும் பூமிக்குக் குடைபிடித்து வருகிறது! வாயுக் குடையில் வாயுக்களின் கொள்ளளவுக் [Volume] கூடிக் குறையும் போது, பூமியில் படும் பரிதியின் உஷ்ணமும் ஏறி, இறங்குகிறது! அந்த வாயு மண்டலத்தில் இயற்கை ஊட்டியுள்ள வாயுக்களைத் தவிர, புதிதாகப் பூமியிலிருந்து கரியமில வாயு [Carbon Dioxide] போல் வேறு வாயுக்களும் சேர்ந்தால் வாயுக்களின் திணிவு [Density] மிகையாகிறது! வாயுக்களின் திணிவு அதிகமாகும் போது, பரிதியின் வெப்ப சேமிப்பும் மிகுந்து, அதன் உஷ்ணமும் கூடுகிறது. அந்தச் சீர்கேடுதான் “கிரீன்ஹௌஸ் விளைவு” அல்லது “கண்ணாடிக் கோட்ட விளைவு” [Greenhouse Effect] என்று குறிப்பிடப் படுகிறது. அந்த உஷ்ணப் பெருக்கால் கடல் நீரின் வெப்பம் அதிகரிக்கிறது! அந்த வெப்ப எழுச்சியால் துருவப் பகுதியில் உறைந்திருக்கும் பனிப்பாறைகள் உருகிக் கடல் மட்டம் உயர்ந்து, கடற்கரைப் பகுதிகள் உப்பு நீரில் மூழ்கி நிலவளம் பாழ்படும். அல்லது சி.எ·ப்.சி [Chloro Fluoro Carbons (CFC)] போன்ற பூமி வாயுக்கள் மேலே பரவிப் பாதுகாப்பாய் உள்ள ஓஸோன் பந்தலில் துளைகளைப் போட்டால், பரிதியின் தீய புறவூதாக் கதிர்கள் பூமியில் பாய்ந்து சேதம் விளைவிக்கும்.

சூழ்வெளியில் பேரளவுக் கரியமில வாயுவின் சேமிப்பு:

கிரீன்ஹவுஸ் வாயுக்கள் காற்றில் சேமிப்பாகிப் பூகோளத்தின் உஷ்ணம் ஏறுவது போன்ற காலநிலைக் கோளாறுகள் ஆமை வேகத்தில் நிகழ்ந்து மெதுவாக மாறி வருபவை. அவற்றில் குறிப்பிடத் தக்க வாயு, மின்சாரம், நீராவி உற்பத்தி நிலையங்களுக்குப் பயன்படும் நிலக்கரி எரு எரிந்து உண்டாகும் கரிமிலவாயு [CO2]. மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களில் ஒன்று மீதேன் வாயு [Methane Gas]. அது கழிவுப் பதப்படுப்பு சாலைகளிலும் [Waste Treatment Plants] தொழிற்சாலை வினைகள், வெப்பத் தணிப்பு முறைகள் வெளிவிடும் ஹாலோகார்பனிலும் [Halo-Carbons] உண்டாகுகிறது. அனைத்து கிரீன்ஹவுஸ் வாயுக்களையும் CO2 வாயுச் சமனில் [CO2 Equivalence] கூறினால், 2003 ஆண்டில் மட்டும் அனைத்துலக CO2 வாயுச்சமன் எண்ணிக்கை: 2692. அதாவது 2002 ஆம் ஆண்டு CO2 வாயுச்சமன் எண்ணிக்கையை விட 10.6% மிகையானது என்று ஒப்பிடப் படுகிறது!

2003 ஆம் ஆண்டில் உதாரணமாக பிரிட்டனில் 300,000 வீடுகளுக்கு மின்சார ஆற்றல் பரிமாற நிலக்கரி எரிசக்தி பயன்பாட்டால் 1810 மில்லியன் கிலோகிராம் CO2 வாயு “கிளாஸ்கோ ஸ்மித் கிளைன் கம்பேனியால்” [Glaxo Smith Kline] வெளியானது! பிரிட்டன் விமானப் போக்குவரத்தில் 614 மில்லியன் கிலோ மீடர் பயண தூரத்தை ஒப்பிட்ட போது, 2002 ஆம் ஆண்டில் 91.5 மில்லியன் கிராம் CO2 வாயு வெளியானதாக 2003 இல் கணக்கிடப் பட்டது. அதே கம்பெனியின் விற்பனைச் சரக்குகள் 50 நாடுகளுக்கு விமான, வீதி வாகனங்கள் மூலமாக அனுப்பியதில் 12.6 மில்லியன் கிராம் CO2 வாயு வெளியேறி சூழ்வெளியில் கலந்துள்ளது என்றும் அறியப்படுகிறது!

உலக உடல்நலக் கண்காணிப்புப் பேரவையின் கூற்று

21 ஆம் நூற்றாண்டின் முடிவில் கிரீன்ஹவுஸ் வாயுக்களின் பெருக்கத்தால், பூகோளத்தின் உஷ்ணம் 6 டிகிரி F ஏறிவிடும் என்று உலக உடல்நலப் பேரவை மதிப்பிடுகிறது! அதனால் பேரளவு வெள்ளங்கள், பஞ்சம், வெப்ப அலைகள் [Heat Waves] எழுலாம் என்றும் பேரவை கூருகிறது. உலக உடல்நலக் கண்காணிப்புப் பேரவை [World Heath Organization (WHO)] சமீபத்தில் உளவறிந்து வெளியான ஓர் அறிவிப்பின்படி, மனிதத் தூண்டல் மாறுதல்களால் ஏற்பட்டச் சூழ்வெளிக் காலநிலைப் பாதிப்புகளால் மாந்தருக்கு நேரும் 5 மில்லியன் மாறுபட்ட நோய்களில் 150,000 நபர் ஒவ்வோர் ஆண்டும் மரணம் அடைகிறார் என்னும் அதிர்ச்சியான தகவல் கிடைத்துள்ளது! சூடேறிய சூழ்வெளியின் வெப்ப அலைகளாலும், நாட்டில் புயலடித்துப் பேய்மழைகள் பெய்து வெள்ளக்காடாய் ஆவதாலும் மாந்தருக்குத் துர்நீரால் பல்வேறு தொற்று நோய்கள் பீடிக்கின்றன வென்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்!

உலக உடல்நலப் பேரவை மின்கணனியில் பூகோளச் சூடேற்ற மாடல்களை வடித்து [Computer Model-Based Forecasts] நமக்கு விட்டுள்ள எச்சரிக்கைகள் பின்வருமாறு:

1. 2000 ஆண்டுகளில் பூகோளச் சூடேற்றத்தால் கணிக்கப்பட்ட உடற்பாதிப்பு நோக்காடுகள், 2030 ஆ ஆண்டுகளில் இரட்டிப்புக்கு மேலான எண்ணிக்கையில் பெருகிக் காணப்படலாம்!

2. 2080 ஆண்டுகள் வரை கடற்தளப் பகுதிகளில் பெய்யும் பேய்மழைகளால் பெரும் வெள்ள அடிப்புகள் 200 மில்லியன் மாந்தரைத் தாக்கி, 2005 ஆண்டில் நியூ ஆர்லியன்ஸ் நகரில் ஏற்பட்டது போன்ற புலப்பெயர்ச்சி பிரச்சனைகளை உண்டாக்கும்!

3. 2100 ஆண்டுக்குள் காலி·போர்னியாவில் வெப்பச் சூட்டால் சாகும் மாந்தரின் மரண எண்ணிக்கை இரு மடங்குக்கு மேலாகும்!

4. 2050 ஆண்டுக்குள் அமெரிக்காவின் கிழக்குத் திசை மாநிலங்களில் ஓஸோன் இழைப்பால் ஏற்படும் அபாயத் தீங்குகள் 60% மிகையாகும்.

(தொடரும்)

************************

தகவல்கள்:

Picture Credits: Time, National Geographic Magazines.

1. Time, Special Report on Global Warming [April 3, 2006]
2. Stop Thermageddon in Our Lifetime [www.thermageddon.com]
3. What is Happening to our Climate? By Samuel Matthews, National Geographic [Nov 1976]
4. The ocean An Era of Discovery National Geographic [Dec 1981]
5. Global Warming from Wikipedia.
6. Climate Change: The Human Influence Analysed By Harry N.A. Priem [Sep 15, 2000]
7. Climate Change: Projected Changes in CO2 & Climate
8. Climate Change: Sea Level Rise Due to Global Warming.
9. Is Our World Warming? By: Samuel Matthews, Senior Assistant Editor National Geographic [Oct 1990]
10 http://www.thinnai.com/sc1014051.html [Author’s Article on Katrina Damage & Evaquation]
11 Stormy Weather: Can We Link to Global Warming By: Jim Motavalli [Nov 11, 2004]
12 A Cold Hard Look at a Telltale Region Arctic By: Peter Spotts, Christian Science Monitor [Nov 18, 2004]
13 Global Warming : Definitions & Debate [http://zfacts.com/p/49print.html
14 Meltdown: Arctic Wildlife is On the Brink of Catastrophe By Steve Connor [Nov 11, 2004]
15 Discovery of Greenpeace Expedition on Greenland By: Dr. Gordon Hamilton [July 22, 2005]
16 Carbon Dioxide [CO2] & Global Warming Potential [Several Internet Reports]
17 Ecological Reports: The Data on Global Warming is Conclusive [Jau 29, 2004]
18 Third World Nears Brunt of Global Warming Impacts By: Paroma Basu [July 11, 2006]

******************

jayabarat@tnt21.com [July 13, 2006]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா