உலகின் அதி பழமையான டைனசோர் முளையம்.

This entry is part [part not set] of 29 in the series 20050902_Issue

ஏ.எம். றியாஸ் அஹமட்


(A.M. Riyas Ahamed, University of Witwatersrand, Johannesburg)

உலகின் இதுகாலவரை அறியப்பட்டுள்ள டைனோசோர் முளையங்களில்; (embryos) அதி பழமையான முளையங்கள் தென் ஆபிாிக்காவின் விற்ஸ் பல்கலைகழகம், கனடா ரொரன்றோ பல்கலைக்கழகம் என்பனவற்றின் கூட்டுமுயற்சியினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உலகில் இதுகால வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தரைவாழ் விலங்குகளின் முளையங்களிலும், அமினியன் விலங்குகளின் முளையங்களிலும் இதுவே மிகப் பழமையானதாகும்.

(படம்-01) முட்டையினுள் உள்ள உயிர்ச் சுவடாக்கப்பட்ட முளையம்

வுிற்ஸ் பல்கலைக்கழக Bernard Price Institute of Paleontological Research (BPI) ஐச் சேர்ந்த கலாநிதி. மைக் றாத்தின் கருத்துப்படி, இந்த முளையங்கள் ஜ_ராசிக் காலப் பகுதிக்கு முந்திய காலப்பகுதியைச் சேர்ந்ததாகும். இதன் வயது 190 மில்லியன் ஆண்டுகளாகும். அறியப்பட்ட பெரும்பாலான டைனசோர் முளையங்கள் கிறிற்றாசியஸ் காலத்தைச் சேர்ந்த, அதாவது 100 மில்லியன் வருடங்களுக்கும் குறைவான (80 தொடக்கம் 65 மில்லியன் வருடங்கள்) வயதைக் கொண்டனவாகும். இதற்கு உதாரணமாக தாராவாத்துச் சொண்டு டைனசோர்களின் முளையங்களைக் கூறலாம். இந்த முளையங்களைப் பற்றியும், அதன் கூர்ப்பு முக்கியத்துவம் பற்றியும், கடந்த ஜ_லை 29 யில் மற்றும் நான்கு துணையாசிாியர்களுடன் மைக் றாத் International Journal of Science என்னும் சஞ்சிகையில் ஒரு கட்டுரையை பிரசூித்துள்ளார்.

(படம்-02) ஓவியர் மீளுருவாக்கம் செய்த முட்டைக்குள்ளிருக்கும் முளையம்;

இந்த முளையங்களானது suaropodomorph இற்கு முந்நிய Massospondylys carrinatus என்ற டைனோசோாினது முளையங்களாகும். இந்த வகையான டைனோசோர்களின் என்புக்கூடானது தென் ஆபிாிக்காவில் மிகவும் பொதுவாகவும், சிறிய குட்டிகளினதிலிருந்து, ஒரு முழுவுடலி வரைக்குமான அளவுகளில் கிடைக்கக் கூடியதாகும். சில நேரங்களில் இதன் நீளம் 5 மீற்றராகவும் காணப்படும். பொதுவான உயிர்ச்சுவட்டு டைனசோர் முளையங்களின் இனத்தை அடையாளங் காண்பது என்பது மிகவும் சிக்கலானதும், அாிதானதுமான விடயமாகும். இந்த வகையில், இது டைனசோாியியலில் ஒரு மிகவும் முக்கியமான கண்டுபிடிப்பாகும்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், தென் ஆபிாிக்காவின், Free State என்ற மாகாணத்தில், வடகிழக்குப் Golden Gate of Highland தேசிய பூங்காவில், காலம் சென்ற பேராசிாியர் ஜேம்ஸ் கிச்சிங் இந்த முளையங்களைக் கொண்ட டைனோசோர்களின் ஏழு முட்டைகள் கொண்ட ஒரு முட்டைத் தொகுதியைக் கண்டுபிடித்தார். இந்த ஏழு முட்டைகளில், இரு முட்டைகளில் முளையங்கள் வெளித்தொிந்தவாறு இருந்தன. இந்த முளையங்களில் ஒரு முளையம், மிகவும் தெளிவாகவும், உட்பக்கம் சுருண்டும் காணப்பட்டது. இது பொாிக்கும் நிலையில் குஞ்சு முட்டைக்குள் சிக்குப்பட்டதைக் காட்டுகின்றது. இந்த முளையங்கள் மிகவும் மென்மையான என்புகளையும், முட்டைக்குள் மிகவும் சிக்கலான நிலையில் சுருண்டு கிடக்கவும் காணப்பட்டன. இந்த முளையங்களை ஆராயக் கூடிய, அதற்கான சிறப்புத் தோ;ச்சிகளையும், தகுதிகளையும் கொண்ட நிபுணர்களின் பற்றாக்குறை காலணமாக அந்த முட்டைகள், கண்டுபிடிக்கப்பட்ட நாளிலிருந்து, விற்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வுகூடத்தின் அலுமாாியில் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. பின்னர் 2000ம் ஆண்டு, கனடா, ரொரன்றோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிாியர் றொபட் றீஸ்இ அந்த முட்டைகளை கனடாவிற்கு எடுத்துச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார்.

(படம்-03) இந்த முட்டைகளைக 1977ல் கண்டுபிடித்த பேராசிாியர் ஜேம்ஸ் கிச்சிங் ஆய்வில்.

இந்த முளையங்களானது ஆதிகால டைனசோர்களின் வளர்ச்சி மற்றும் விருத்தி போன்றவற்றை அறிதலில் முக்கிய பங்காற்றுவதாயிருக்கின்றது. இந்தக் கண்டுபிடிப்பானது, Massospondylus யின் குஞ்சு பொாித்ததிலிருந்து முழுவுடலியாகும் வரையான விபரமான வளர்ச்சி பற்றிய மீளுருவாக்கத்திற்கு அடிகோலுகின்றது. இதுவே டைனசோர்களில் முதலாவதான நிகழ்வாகும். இந்த ஆய்வுக் குழுவின் தலைவரான பேராசிாியர் றீஸ் குறிப்பிடுகையில், வழமையாக டைனசோர்களின் இளம் பருவங்களும், முழுவுடலிப் பருவங்களும் உடைந்த நிலையில், எலும்புகள் இணைக்கப்படாத நிலையிலேயே எலும்புப் படுக்கைகளிலிருந்து கண்டுபிடிக்கப்படுவது வழக்கம். எனவே இந்த வகையான டைனசோர் உயிர்ச் சுவடுகள் உண்மையான வளர்ச்சி பருவங்களை குறிக்க மாட்டாது.

இந்த Massospondylus யினது வளர்ச்சிப் பாதையிலிருந்து, இது வசதியீன, அவலட்சண தோற்றத்தைக் காட்டும், சிறிய வாலுள்ள, சமாந்தரமாக வைக்கப்பட்டுள்ள தலையும், நீண்ட முன்னங் கால்களையும், பொிய தலையையும் கொண்ட ஒரு விலங்காகும் என அறிய முடிகின்றது. இந்த விலங்கு வளரும் போது, அதன் கழுத்தானது மற்றைய எஞ்சிய உடல் பாகங்களைவிட வேகமான வளர்ச்சியையும், முன்னங்கால்களும், தலையும் மந்த கதியுடையு வளர்ச்சியையும் காட்டுகின்றன. எனவே விலங்கு வளரும்போது உடல்பாகங்களின் விகிதாசாரம் மிகவும் பேறுபடுகின்றது. அதாவது மிகவும் சிறிய அவலட்சண தோற்றத்திலிருந்து, அசாதாரண தோற்றமுடைய, சமாந்தர நிலையில் வைக்கப்பட்ட மிகவும் நீண்ட கழுத்தையும், தடித்த, கட்டையான பொிய வாலையும், மிகவும் சிறிய தலையையும், குறுகிய முன்னவயவங்களையும், நீண்ட பின்னவயவங்களையும் கொண்ட விலங்காக மாறுகின்றது.

(படம்-04) மேலேயுள்ள பகுதியில் முழுவுடலி (Massospondylus) யின் மண்டையோடும், கீழேயுள்ள பகுதியில் முட்டையுடன் முளையத்தையும் காணலாம்.

Massospondylus பார்ப்பதற்கு பொிய அவையவங்களைக் கொண்டது, நான்கு கால் நடையைக் கொண்ட சிறிய sauropaud ளரயசழிரயன 11போன்று தென்படுகின்றது. இந்த முளையங்களில் நன்கு விருத்தியடையாத பற்கள் காணப்படுகின்றமை, முட்டை பொாிக்கும் ஆரம்ப நிலையையே குறிக்கின்றது. இதனது மொத்த உடம்பை நோக்கும் போது “குஞ்சு பொாித்தலுக்கு” பேற்றோார் பராமாிப்பு தேவைப்படுதலையும், சிலவேளைகளில் பொாித்து வெளிவந்ததிற்குப் பின்னரும் தேவைப்படுதலையும் குறிக்கின்றது. இந்த அனுமானிப்பு சாியென்றால், இதுவே பெற்றார் பராமாிப்பு பற்றிய தகவலைத் தரும் உலகின் மிகப்பழைய உயிர்ச் சுவடாக இருக்கும். இந்தக் கண்டுபிடிப்பானது டைனசோர்களின் கூர்ப்பு, மற்றும் அதனுடைய ஆதி வாழ்க்கை பற்றிய ஆய்வுகளுக்கு புதிய கதவைத் திறந்துவிட்டிருக்கின்றது.

நன்றி (Acknowledgement):

இந்த கட்டுரைக்கு தேவையான தகவல்களையும், புகைப்படங்களையும் தந்து உதவிய, விற்ஸ் பல்கலைக்கழக, (BPI) ஐச் சேர்ந்த Dr. Mike Raath அவர்களிற்கு எனது நன்றிகள்.

riyasahame@yahoo.co.uk

Series Navigation

ஏ.எம். றியாஸ் அஹமட்

ஏ.எம். றியாஸ் அஹமட்