டைனசோர்கள் பறவைகளைப் போல சுவாசித்தன

This entry is part [part not set] of 30 in the series 20050715_Issue

ராபர்ட் ராய் ப்ரிட்


பெரும்பாலான தொல்லின ஆராய்ச்சியாளர்கள் இன்றைய பறவைகள் முன்னாள் டைனசோர்களிலிருந்து பரிணாமம் அடைந்தவை என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், அந்த டைனசோர்கள் எந்த அளவுக்கு இன்றைய பறவைகளை இத்திருக்கின்றன என்பது பற்றி பல கேள்விகள் இருக்கின்றன.

டைனசோர்கள் வெப்பரத்த உடையவைகளாகவும், வேகமுடையவைகளாகவும், தந்திரமான மாமிச உண்ணிகளாகவும் இருந்தனவா அல்லது மெதுவாக நகர்பவையாகவும் மடத்தனமாகவும் இருந்தனவா என்பது நிபுணர்கள் இன்னமும் விவாதிக்கும் ஒரு விஷயம்.

டைனசோர்களின் எலும்புகளை ஆராய்ந்த ஒரு புதிய ஆராய்ச்சி, சுராசிக் பார்க் படத்தில் வந்தது போன்று வேகமுடையவையாக இருந்தன என்று காட்டுகிறது.

மாமிசம் சாப்பிடும் டைனசோர்கள் மிகவும் சிக்கலான அமைப்புள்ள நுரையீரல்களைக் கொண்டிருந்தன என்பதும், அந்த அமைப்பு இன்றைய பறவைகளில் இருக்கும் நுரையீரலை ஒத்திருக்கின்றன என்பதும் ஒஹையோ பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பாட்ரிக் ஓக்கான்னர் அவர்கள் தலைமையில் ஆராய்ச்சி செய்த குழுவால் கண்டறியப்பட்டுள்ளது. டெரோபோட் டைனசோர்கள் என அழைக்கப்படும் இரண்டு கால்களால் நடக்கும் டைனசோர்கள் பறவைகள் போன்ற கால்களுடனும், தங்கள் எலும்புகளுக்குள் காற்றை அழுத்தி அனுப்பு எடைகுறைவானதாக இருந்தனவென்றும், இது இன்றைய பறவைகளை ஒத்திருக்கிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த முப்பதாண்டுகளில் பறவைகளே இன்றைய டைனசோர்கள் என்ற கொள்கையை தீவிரமாக சிந்தித்து வந்திருக்கிறார்கள். 1996இல் sinosauropterx சினோசாரோப்ட்ரெக்ஸ் என்ற பறவைகள் போல பல அங்கங்களும் கொண்ட நன்றாக பாதுகாக்கப்பட்ட ஒரு டைனசோரின் மீதங்கள் கண்டறியப்பட்ட போது உறுதி செய்யப்பட்டது.

இன்னும் பல ஆராய்ச்சிகள் டிரெக்ஸ் வளர்ந்த பின்னால், உடலெங்கும் மீன் போன்று சிதில்கள் கொண்டு இருந்தாலும், அதன் குஞ்சுகள் இறக்கைகள் கொண்டவையாக இருந்தன என்பதை உறுதி செய்திருக்கின்றன.

இருப்பினும், தொல்லின ஆராய்ச்சியாளர்கள், (paleontologists) முதலைகள் போன்று குளிர்ரத்தமுடையவை என்று டைனசோர்களை கருதி வந்தார்கள். ஊர்வன (reptile)வற்றின் எளிய இதயம் மிகவும் குறைவான ஆக்ஸிசனையே ரத்தத்துக்கு அனுப்புகிறது. இது பறக்க போதுமானதல்ல.

நவீன கம்ப்யூட்டர் டோமோகிராபி (CT) scans மூலம் டைனசோர் இதய எலும்புகளை ஐந்து வருடங்களுக்கு முன்னால் பார்த்தபோது, அவற்றில் நான்கு பகுதிஉள்ள இதயம் பாலூட்டிகளைப் போன்றும், பறவைகள் போன்றும் இருந்தது கண்டறியப்பட்டது.

இந்த வருடம் ஒரு அரிதாக கிடைத்த டிரெக்ஸின் மென்திசுக்களைஆராய்ந்தபோது அது ஆஸ்டிரிச் கோழியின் மென்திசுக்களை ஒத்து இருந்ததும் அறியப்பட்டது.

வெப்பரத்தமா குளிர்ரத்தமா ?

ஒரு பறவையின் காற்றுப்பை அமைப்புகள் அதன் உடலெங்கும் அமைந்துள்ளன. அந்த காற்று நுரையீரலுள் இரண்டு முறை செலுத்தப்படுகிறது. இது மிகவும் துல்லியமான சுவாசிக்கும் அமைப்பை உருவாக்குகிறது.

மிகவும் சிக்கலான இதயங்களுடன் கூடிய இந்த உயர்ந்த சுவாசிக்கும் அமைப்பு பறவையின் மெடபாலிஸத்தை அதிகரித்து அதனை வெப்பரத்த உயிரியாக ஆக்குகிறது. அதாவது தங்களது உடலின் தட்பவெப்பத்தை கட்டுப்படுத்தும், ஒரே சீராக வைக்கும் ஒரு அமைப்பை இவைகள் கொண்டிருக்கின்றன.

ஊர்வன குளிர் ரத்தப் பிராணிகள். இவைகளின் சுற்றுச்சூழலின் தட்பவெப்பத்தின் மூலம் தங்களது உடலின் தட்பவெப்பத்தை கட்டுப்படுத்த விழைக்கின்றன.

டைனசோரின் சுவாசிக்கும் அமைப்பு இன்றைய பறவைகளின் சுவாசிக்கும் அமைப்பு போலவே இல்லாமல் இருந்தாலும், ‘அது நிச்சயம் ஒரு முதலையின் அமைப்பு போன்றதல்ல என்பது தெளிவு ‘ என்று ஓ ‘கானர் கூறுகிறார்.

டைனசோர்களின் அமைப்பு இதனால் வெப்பரத்தமுடையது என்றும் கூறிவிட இயலாது. விவாதம் தொடரும்போது, மறைந்துவிட்ட இந்த உயிரிகளின் அமைப்பும் ரத்தமும், குளிர்ரத்த அமைப்புக்கும் வெப்ப ரத்த அமைப்புக்கும் இடையே இவை இருக்கலாம் என்று சிந்திக்கிறார் ஓ ‘கானர்.

—-

Series Navigation

ராபர்ட் ராய் ப்ரிட்

ராபர்ட் ராய் ப்ரிட்