விஞ்ஞானக் கோட்பாடு- தவறென நிரூபிக்கும் தன்மை

This entry is part [part not set] of 50 in the series 20041202_Issue

கார்ல் பொப்பர்


Science as Falsification

by Karl R. Popper

ஐன்ஸ்டானின் தேற்றம் மிகவும் வித்தியாசமானது. உதாரணமாக ஐன்ஸ்டான் கணித்ததும், எட்டிங்டன் நிரூபித்ததையும் எடுத்துக்கொள்ளுங்கள். பெரும் எடையுள்ள பொருட்கள் (உதாரணமாக சூரியன்), எடையுள்ள பொருட்களை ஈர்ப்பது போலவே, ஒளியையும் ஈர்க்கும் என்று அவரது புவியீர்ப்பு சக்தி பற்றிய பொதுத்தேற்றம் கணித்தது. இதன் அடிப்படையில் தொலைதூரத்திலிருக்கும் ஒரு நட்சத்திரத்திலிருந்து வரும் ஒளி சூரியனுக்கு அருகில் வரும்போது அதன் ஈர்ப்பு சக்தியால் தன் நேர்க்கோட்டுப் பாதையிலிருந்து விலகி வரும் என்றும் அதன் அளவு எவ்வளவு இருக்கும் என்பதையும் கணிக்க இயலும். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், சூரியனுக்கு நேர் பின்னே இருக்கக்கூடிய ஒரு நட்சத்திரம் சற்று நகர்ந்து இருப்பது போல காணப்படும் என்று சொல்லலாம். சூரியனின் ஏராளமான ஒளி இருக்கும் போது அவ்வாறு ஒரு நட்சத்திரம் ‘நகர்ந்து ‘ இருப்பது தெரியாது. ஆனால், சூரிய கிரகணத்தின் போது எடுக்கும் ஒளிப்படத்தின் மூலம் அதனைக் காணலாம். அதே இடத்தை இரவில் எடுத்து நட்சத்திரங்கள் எந்த அளவு நகர்ந்து இருக்கின்றன என்பதை வைத்து, கணிக்கப்பட்ட அளவையும் சூரிய கிரகணத்தின் போது எடுக்கப்பட்ட நட்சத்திரத்தின் இட நகர்வின் அளவையும் ஒப்பிட்டு சரி பார்க்கலாம்.

இந்த இடத்தில் மிகவும் ஆச்சரியப்படத்தகுந்த விஷயம் இப்படிப்பட்ட கணிப்பை வெளியிடுவதற்கான தைரியமும் துணிவும். கணிக்கப்பட்ட விளைவு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இல்லை என்றால், அந்த தேற்றம் சுத்தமாக மறுதலிக்கப்பட்டது, தவறென்று நிரூபிக்கப்பட்டது. பரிசோதனையில் காணப்படக்கூடிய விஷயங்களும் தேற்றத்தில் கிடைக்கும் விஷயங்களும் பொருத்தமற்றவையாக இருந்தால், … check and translate …

1919-20 ஆண்டு குளிர்காலத்தின் போது, நான் அடைந்த முடிவுகளை கீழ்வருமாறு எழுதுகிறேன்

1. It is easy to obtain confirmations, or verifications, for nearly every theory – if we look for confirmations.

1. நாம் ஒரு தேற்றத்தின் நிரூபணங்களை மட்டுமே தேடிச்சென்றால், எப்படிப்பட்ட ஒரு தேற்றத்துக்கும் நிரூபணங்களைக் கண்டறிவது எளியது.

2. Confirmations should count only if they are the result of risky predictions; that is to say, if, unenlightened by the theory in question, we should have expected an event which was incompatible with the theory – an event which would have refuted the theory.

2. நிரூபணங்களை எப்போது நிச்சயமாக எடுத்துக்கொள்ளவேண்டுமென்றால், அவை மிகவும் துணிச்சலான தைரியமான கணிப்புகளாக இருந்தால் மட்டுமே. அதாவது சாதாரணமாக பொதுப்புத்தியில் ஒரு தேற்றம் சொல்வதற்கு நேர்மாறான ஒரு விஷயத்தை நாம் எதிர்பார்க்க வேண்டும்,அந்த தேற்றம் பொய்யென ஆக்கப்பட்டுவிடக்கூடிய நிகழ்வை நோக்கி

3. Every ‘good ‘ scientific theory is a prohibition: it forbids certain things to happen. The more a theory forbids, the better it is.

3. எந்த ஒரு அறிவியல் தேற்றமும் இது நடக்ககூடாது என்பதில் தெளிவாக உள்ளது. இது ஒரு சில விஷயங்கள் நடப்பதை ‘தடை ‘ செய்கிறது. (அதாவது இந்த இந்த விஷயங்கள் இப்படிப்பட்ட சூழ்நிலையில் நடக்காது என்று கூறுகிறது) எவ்வளவு அதிகமாக தடை செய்கிறதோ அந்த அளவுக்கு நல்லது. ( அதாவது அந்தத் தேற்றத்தின் படி எதெல்லாம் நடக்காது என்பதை உறுதி செய்கிறதோ, அந்த அளவு அது சிறந்த தேற்றம் ஆகும்.)

4. A theory which is not refutable by any conceivable event is non-scientific. Irrefutability is not a virtue of a theory (as people often think) but a vice.

4. எந்த தேற்றத்தை பொய்யென நிரூபிக்க முடியாதோ, அது அறிவியல் தேற்றம் அல்ல. பொய்யென நிரூபிக்க முடியாதது ஒரு தேற்றத்தின் நல்ல குணாம்சம் அல்ல, அது தீய குணாம்சம்.

5. Every genuine test of a theory is an attempt to falsify it, or to refute it. Testability is falsifiability; but there are degrees of testability: some theories are more testable, more exposed to refutation, than others; they take, as it were, greater risks.

5. தேற்றத்தின் உண்மையான பரிசோதனை அந்த தேற்றத்தை பொய்யென நிரூபிக்கும் முயற்சி, அல்லது அதனை தவறு என்று காட்டும் முயற்சியே. ஒரு தேற்றத்தை பரிசோதனை செய்யும் குணம் அதனை பொய்யென நிரூபிக்க முயலும் குணாம்சம். சில தேற்றங்கள், மற்ற தேற்றங்களை விட, பொய்யென நிரூபிக்க எளிதானவை.

6. Confirming evidence should not count except when it is the result of a genuine test of the theory; and this means that it can be presented as a serious but unsuccessful attempt to falsify the theory. (I now speak in such cases of ‘corroborating evidence. ‘)

6. ஒரு தேற்றத்தை நிரூபிக்கும் தடயங்கள் கணக்கிலெடுத்துக்கொள்ளப்படமாட்டாது. அவை அந்த தேற்றத்தை உண்மையிலேயே பரிசோதனை செய்யும் தடயங்களாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவை எடுத்துக்கொள்ளப்படவேண்டும். இப்போது, அவை இந்த தேற்றத்தை பொய்யென நிரூபிக்கும் முயற்சியின் தோல்வியாக எடுத்துக்கொள்ளப்படவேண்டும்.

7. Some genuinely testable theories, when found to be false, are still upheld by their admirers – for example by introducing ad hoc some auxiliary assumption, or by reinterpreting the theory ad hoc in such a way that it escapes refutation. Such a procedure is always possible, but it rescues the theory from refutation only at the price of destroying, or at least lowering, its scientific status. (I later described such a rescuing operation as a ‘conventionalist twist ‘ or a ‘conventionalist stratagem. ‘)

7. சில பரிசோதனை செய்யத்தக்க தேற்றங்கள், பொய்யென காணப்படும்போது, அந்த தேற்றத்தின் ஆதரவாளர்களால் அதனை தூக்கிப்பிடிப்பது நடக்கிறது. உதாரணமாக, இன்னும் சில உபரி அனுமானங்களை அதில் நுழைத்து, அல்லது அதனை மறுப்பதற்கான வழிகளை அடைத்துவிடும் வழியில் அதனை மறு வாசிப்புக்கு உட்படுத்துவது ஆகிய முறைகளில் இது நடக்கலாம். இப்படிப்பட்ட முறைகள் சாத்தியமென்றாலும், அது ஒரு தேற்றத்தை பொய்யென காட்டுவதிலிருந்து தப்பிக்க வைப்பது பெரும்பாலும் அந்த தேற்றத்தை அழிப்பதிலேயே முடிகிறது. அல்லது அந்த தேற்றத்தை அறிவியல் தேற்றம் என்ற இடத்திலிருந்து இறக்குவதிலேயே நடக்கிறது.

One can sum up all this by saying that the criterion of the scientific status of a theory is its falsifiability, or refutability, or testability.

மேற்கண்டவைகளிலிருந்து சுருக்கிச் சொல்ல வேண்டுமென்றால், ஒரு தேற்றத்தை அறிவியற்பூர்வமானது என்று சொல்லவேண்டுமென்றால், அதனை பொய்யென காட்டுவதற்கான சாத்தியம் இருக்க வேண்டும். அதாவது அதைச் சோதனைக்குட்படுத்தக்கூடிய சாத்தியம், அதை மறுக்கக் கூடிய சாத்தியம் இருக்க வேண்டும்.

2.

இதைச் சில உதாரணங்களால் விளக்கலாம். ஐன்ஸ்டானின் புவி ஈர்ப்புக் கொள்கை தவறன நிரூபிக்கக் கூடிய சாத்தியத்தை உள்ளடக்கி இருந்தது. நம் அளவுகோல்கள் முழுமையாய் அந்தக் கோட்பாட்டை நிரூபிக்கப் போதாதவையாய் இருந்தபோதிலும், அந்தக் கோட்பாட்டை தவறென்று நிரூபிக்கும் சாத்தியம் இருந்தது.

சோதிடம் இந்த சோதனையைப் பூர்த்தி செய்ய இயலாது. சோதிடர்கள் தம்முடைய நிரூபணங்களில் மூழ்கிப் போய் , திசை தவறியதால், தவறெனக் காட்டும் நிரூபணங்களில் சிரத்தை கொள்வதில்லை. தம்முடைய புரிதல்களையும், ஆருடங்களையும் மிக மேம்போக்காகவும், குறிப்பானதல்லாமல் முன்வைத்ததனால், தவறென நிரூபணம் வருகையில், அதை விளக்கலாயினர். தவறென நிரூபணம் ஆவதைத் தவிர்ப்பதற்காக, அவர்கள தேற்றங்களை தவறென நிரூபிப்பதற்கான அடிப்படையை இல்லாமல் செய்து , தெளிவற்று இயங்குகின்றனர். இப்படி தெளிவற்ற நிலையில், நிரூபணங்கள் சுலபம் ஆகிவிடுகின்றன.

நான் தவறென நிரூபிக்கும் சாத்தியக் கூறு பற்றிப் பேசியது, அர்த்தமுள்ளது, முக்கியத்துவம் வாய்ந்தது உண்மை , ஒப்புக்கொள்ளத்தக்கது இவை பற்றியதல்ல. எந்த வாசகங்கள் அல்லது கோட்பாடுகள் விஞ்ஞான பூர்வமானது, எவை விஞ்ஞான பூர்வமற்றது என்பதைப் பற்றியது. எங்கே இவை இரண்டிற்கும் இடையே பகுப்புக் கோடு இடுவது என்பது பற்றியது. எது விஞ்ஞானக் கோட்பாடு, எது போலி விஞ்ஞானம், அப்பாலைத் தத்துவம், மதத்தத்துவம் என்பது பற்றியது. 1928-1929 வாக்கில் இதை நான் ‘பகுத்துக் காண்பதில் உள்ள பிரசினை ‘ (problem of demarcation) என்று இதைக் குறிப்பிடலானேன். தவறென நிரூபிக்கும் தன்மையை நான் விஞ்ஞானக்கோட்பாடுகளுக்கு ஒரு உரைகல் என்பேன்.

http://www.freethought-web.org/ctrl/popper_falsification.html

Series Navigation

கார்ல் பொப்பர்

கார்ல் பொப்பர்