செவ்வாயின் சந்திரன் (துணைக்கோள்) ஃபோபோஸ்

This entry is part of 55 in the series 20041111_Issue


ஐரோப்பா அனுப்பிய செவ்வாய் விரைவு ஊர்தி (Mars Express spacecraft) என்ற விண்கலம், செவ்வாயின் மிகப் பெரிய துணைக்கோளான ஃபோபோஸ் துணைக்கோளை துல்லியமாகப் படம் பிடித்து அனுப்பியிருக்கிறது. ஃபோபோஸ் துணைக்கோளிலிருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவிலிருந்து இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது

இந்த சந்திரனில் இருக்கும் பல பள்ளங்களையும், இதன் மத்தியிலிருந்து வட துருவம் வரைக்கும் செல்லும் கோடுகளையும் அதன் தோற்றங்களைப் பற்றியும் விளக்க முயன்றுவந்திருக்கிறார்கள்.

ஃபோபோஸ் சந்திரன் மெல்ல மெல்ல செவ்வாய்க்கிரகத்துள் விழுந்துவிடும் பாதையிலேயே சென்று கொண்டிருக்கிறது. இன்னும் சில கோடி வருடங்களுக்குப் பின்னர் அது செவ்வாயில் விழுந்துவிடும்.

27 கிலோமீட்டர் நீளமும் 19 கிலோமீட்டர் அகலமும் உடைய இந்த சந்திரன் செவ்வாயைச் சுற்றி வரும் இரண்டு சந்திரன்களில் பெரியது. (ஃபோபோஸ் என்றால் பயம் என்று கிரேக்கத்தில் பொருள்)

இதனைவிட சிறிய சந்திரனான டெய்மோஸ் Deimos போபோஸின் அளவில் பாதி உள்ளது. இது செவ்வாயைச் சுற்றி இன்னும் பெரிய சுற்றுப்பாதையில் சுற்றி வருகிறது.

போபோஸ் ஒரு நாளைக்கு மூன்று முறை செவ்வாயைச் சுற்றி வருகிறது. இது செவ்வாயின் தரைக்கு மிக அருகாமையிலேயே சுற்றி வருவதால், இது எளிதில் கண்ணுக்குப் புலப்படாது.

போபோஸ் தோன்றிய விதம் பற்றி மூன்று தேற்றங்கள் இருக்கின்றன. ஒரு தேற்றம், இந்த துணைக்கோள் செவ்வாய் கைப்பற்றிய ஒரு அஸ்ட்ராய்டு asteroid கல் என்று கூறுகிறது. கரி அடிப்படையுள்ள கோண்ட்ரைட் அஸ்ட்ராய்டுகளைப் போன்று இதுவும் சி-டைப் கல்லால் ஆனது.

இன்னும் சில அறிவியலாளர்கள், முன்பு இருந்த பெரிய ஒரு சந்திரன் உடைந்து இந்த இரண்டு சந்திரன்கள் உருவாகியிருக்கலாம் என்றும் கருதுகிறார்கள்.

—-

Series Navigation