அஜீரண மருந்துகள் உணவு ஒவ்வாமையை அதிகரிக்கலாம்

This entry is part [part not set] of 48 in the series 20040610_Issue


—-

ஆஸ்திரிய ஆய்வாளர்கள் , அஜீரண மருந்துகள் உணவு ஒவ்வாமைஅயை அதிகரிக்கலாம் என்று கணடறிந்துள்ளனர்.

வியன்னா பல்கலைக் கழகத்தின் மருத்துவம் மற்றும் டாக்டர் எரிகா ஜென்சன் ஜரோலிம் இந்த ஆய்வுகளை வெளியிட்டுள்ளார்.

ஒவ்வாமைக்கென உலக அளவில் நடந்த மாநாட்டில் இவர் தன் கண்டுபிடிப்புகளை வெளியிட்டார். அமிலக் குறைப்பு மருந்துகளை உட்கொள்வோரிடத்தில், மற்றபடிக்கு தீங்கு செய்யாத புரோட்டான்கள் ஒவ்வாமைக்குக் காரணமாகின்றன என்று தெரிவித்தார்.

ஜீரணத்திற்கு அமிலமும், பெப்சினும் அவசியம். பெப்சின் புரோட்டானை ஜீரணித்து சக்தியாய் மாற்ற அமிலம் அதிகமுள்ளபோது சுரக்கிறது. அமிலம் குறையும்போது, பெப்சின் சுரப்பு குறைகிறது. இதனால் புரோட்டான் செரிப்பது தடைப்படுகிறது.

ஆஸ்திரிய ஆய்வாளர்கள் எலிகளுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ள உணவுகளை அளித்தனர். சாதாரணமாக இந்த உணவு ஒவ்வாமையை ஏற்படுத்தவில்லை. ஆனால் குடல் புண்ணிற்கான ‘ஒமிப்ரோசோல் ‘ ( ப்ரிலோசெக்) ‘ரானிடிடைன் ‘ ( சாண்டாக்) போன்ற மருந்துகளை உட்கொண்ட எலிகளுக்கு இந்த உணவு ஒவ்வாமையை ஏற்படுத்தியது.

ஹங்கேரி மருத்துவர்களுடன் இணைந்து ஜென்சன் – ஜரோலிம் 153 நபர்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார். இவர்கள் அமிலத்தைக் கட்டுப் படுத்தும் அஜீரண மருந்து உட்கொண்டவர்கள்.

மிருகங்களைக் கொண்டு நடத்தப் பட்ட ஆய்வுகளில் எலிகள் புதிய உணவு வகைகளுக்கே ஒவ்வாமை காட்டின. ஏற்கனவே பழகிய உணவு வகைகளுக்கு ஒவ்வாமை காட்ட வில்லை.

வழக்கமாய்ச் சாப்பிடும் உணவு வகைகளுக்கு உடலில் சகிப்புத்தன்மை உருவாகிவிடுகிறது. பழகாத புதிய உணவு வகைகளை உட்கொள்ளும்போது தான் எச்சரிக்கை தேவை என்கிறார் ஜென்சன்-ஜரோலிம்.

இப்போது 10 சதவீதம் மக்கள் குடல் புண்(அல்சர்), அஜீரணம், மற்றும் வயிற்றுக் கோளாறுகளுக்கான மருத்துவம் பெற்று வருகின்றனர். இவர்களில் பலரும் மருத்துவ ஆலோசனை இல்லாமலே மருந்துகளை உட்கொள்கின்றனர்.

அமிலத்தைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் இப்போது தாராளமாய்க் கிடைக்கின்றன. இதனால் ஒவ்வாமை நோயாளிகள் அதிகரிக்க வாய்ப்புண்டு. இந்த மருந்துகளை சகட்டுமேனிக்குச் சாப்பிடலாகாது என்று மருத்துவர்கள் மக்களிடம் கூற வேண்டும் என்பது ஜென்சன்-ஜரோலிம் கருத்து. இப்படிப்பட்ட மருந்து சாப்பிடுபவர்கள் பழகாத உணவைச் சாப்பிடும்போது எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.


Series Navigation

செய்தி

செய்தி