புதிய உயிரினம் பிறப்பதை அறிவியலாளர்கள் கண்ணெதிரே பார்க்கிறார்கள்

This entry is part [part not set] of 48 in the series 20040610_Issue

டேவிட் ஒயிட்ஹவுஸ்


அரிஜோனா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த அறிவியலாளர்கள் ஒரு புதிய உயிரினம் தோன்றுவதை முதன்முதலாக பரிசோதனைச்சாலையில் கண்டறிந்திருக்கிறார்கள்

லாரா ரீட் மற்றும் பேராசிரியர் தெரெஸெ மார்கோவ் ஆகிய இரு உயிரியலாளர்களும் அழுகும் காக்டி செடியின் மீது வாழும் பழத்து ஈக்கள் (fruit flies) எவ்வாறு உயிர்ப்பெருக்கம் செய்கின்றன என்பதை ஆராய்ந்து இந்த கண்டுபிடிப்பைச் செய்திருக்கிறார்கள்

எவ்வாறு ஒரு இனம் இரண்டு இனங்களாகப் பிரிகிறது என்பதையும் அதில் அடிப்படையாக இருக்கும் மரபணு மாற்றங்களையும் ஆராய இந்த ஆராய்ச்சி மிகவும் உதவும்.

இந்த ஆராய்ச்சி Proceedings of the National Academy of Sciences. யில் வெளியிடப்பட்டுள்ளது

ஒன்று இரண்டாகிறது

மிகவும் நெருங்கிய இனங்களான இரண்டு பழத்து ஈக்கள் இனங்களை இந்த ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தார்கள். இவை Drosophila mojavensis and Drosophila arizonae என்ற இனங்கள். இவை ஒரே இனமா அல்லது இரண்டு இனங்களா என்பது பலகாலமாக உயிரியலாளர்களால் விவாதிக்கப்பட்டு வந்தது.

ஆயினும் அரிசோனா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இந்த ஈக்கள் இரண்டு தனித்தனி இனங்களாகப் பிரியும் ஆரம்ப நிலையின் இவை இருக்கின்றன என்பதை கண்டறிந்துள்ளார்கள்.

புது இனம் உருவாவது (இதனை ஆய்வாளர்கள் speciation என்று அழைக்கிறார்கள்) ஒரே இனத்தின் இரண்டு கூட்டங்கள் மற்றதனோடு இணைந்து இனப்பெருக்கம் செய்வதை நிறுத்தும்போது உருவாகிறது.

ஒரே இனத்தின் இரண்டு குழுக்கள் அடுத்ததனோடு இணைந்து மரபணுக்களை மாற்றிக்கொள்வதை நிறுத்தும்போது அவை இரண்டும் தனித்தனி மரபணு வழியில் சென்று தனித்தனி இனங்களாக ஆகிவிடுகின்றன.

speciation என்னும் பிரிதல் எவ்வாறு பரிணாமம் வேலை செய்கிறது என்பதைப் புரிந்துகொள்ள மிகவும் முக்கியமான கூறு. ஆயினும், எந்த சுற்றுச்சூழல் கூறுகள் இவ்வாறு பிரிதலை ஆரம்பிக்கின்றன என்பதை அறிய முடியாமல் உயிரியலாளர்கள் இருந்தார்கள்.

பழத்து ஈக்களில் ஏராளமான மாறிய மரபணுக்கள் (mutant genes )க்கான உதாரணம் இருக்கிறது. இருப்பினும் எவை காரணம் என்றும் எவை பிரிதலினால் உருவான விளைவு என்பதையும் பிரித்தறிய முடியாமல் இருந்தார்கள்.

காட்டில், Drosophila mojavensis மற்றும் Drosophila arizonae ஆகிய ஈக்கள் இனங்கள் ஒருவரை ஒருவர் கலந்து இனப்பெருக்கம் செய்வதில்லை.

பரிசோதனைச்சாலையில் ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக இவைகளை சேர்த்து இனப்பெருக்கம் செய்திருக்கிறார்கள். இருப்பினும் அதில் சில சிக்கல்கள் இருந்திருக்கின்றன.

Drosophila mojavensis பெண்கள் Drosophila arizonae ஆண்களுடன் கூடி ஆரோக்கியமான குழந்தைகளைப் பெறுகிறார்கள். ஆனால் Drosophila arizonae பெண்கள் Drosophila mojavensis ஆண்களுடன் இணைந்து பெறும் குழந்தைகளில் ஆண்குழந்தைகள் மலடுகளாக இருக்கிறார்கள்.

லாரா ரீட் அவர்கள் இப்படிப்பட்ட கலப்பு இனப்பெருக்க குறைபாடுகள் இவை இரண்டும் தனித்தனி இனங்களாகப் பிரிவதன் ஆரம்பக்கட்டம் என்று கூறுகிறார்.

தெற்கு கலிபோர்னியாவைச் சார்ந்த கடலினா தீவைச் சார்ந்த Drosophila mojavensis பெண்கள் Drosophila arizonae ஆண்களுடன் இணைந்து பெறும் ஆண் குழந்தைகள் மலடுகளாக இருப்பதும் இப்படிப்பட்ட ஒரு கருத்தை வலிவு படுத்துகிறது.

கலப்பின ஆணின் மலட்டுத்தனம் தாயின் மரபணுவைச் சார்ந்து இருப்பதால் மரபணு மாற்றம் மிகவும் சமீபத்திலேயே நடந்திருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

கடலினா தீவின் ஏறக்குறைய பாதி பெண் ஈக்களிடம் கலப்பின ஆண் குழந்தைக்கு மலட்டுத்தனம் தரும் மரபணு இருப்பதை ரீட் அவர்கள் கண்டறிந்துள்ளார்.

ஆனால், மற்ற புவியியல் பகுதிகளில் இருக்கும் Drosophila mojavensis பெண்களிடம் ஆராய்ந்து பார்த்ததில் மிகவும் குறைவான அளவே கலப்பின ஆணுக்கு மலட்டுத்தனம் தரும் மரபணு இருப்பதை கண்டறிந்துள்ளார்.

சமீபத்தில் Drosophila mojavensis பழத்து ஈ யின் மரபணுவை முழுவதுமாக பிரித்து அறியும் ஆராய்ச்சியில் எந்த குறிப்பிட்ட மரபணுக்கள் இவ்வாறு speciation என்னும் இனப்பிரிதலில் முக்கியப்பங்கு வகிக்கின்றன என்பதை கண்டறியமுடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கைகொள்கிறார்கள்

http://news.bbc.co.uk/2/hi/science/nature/3790531.stm

Series Navigation

டாக்டர் டேவிட் ஒயிட்ஹவுஸ்

டாக்டர் டேவிட் ஒயிட்ஹவுஸ்