பூச்சிக்கொல்லி பாதிப்புகள்

This entry is part [part not set] of 48 in the series 20040610_Issue

– அசுரன்


உலக சுகாதார நிறுவனம் உலகம் முழுவதும் 1990ஆம் ஆண்டு குறைந்தபட்சம் 30 இலட்சம் பேர் பூச்சிக்கொல்லிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 20,000 பேர் உயிரிழப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால் 1994 கணக்கீடு 20 இலட்சம் முதல் 50 இலட்சம்பேர் பாதிக்கப்படுவதாகவும் 40,000 பேர் இறப்பதாகவும் சுட்டிக்காட்டுகிறது. ஆசிய பசிபிக் அளவிலான பூச்சிக்கொல்லி எதிர்ப்பு நடவடிக்கைக்குழு பூச்சிக் கொல்லி நச்சால் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 2 இலட்சம்பேர் கொல்லப்படுவதாகத் தெரிவிக்கிறது. மேலும், நாள்தோறும் 68,000 பேர் பாதிக்கப்படுவதாகவும் ஆண்டிற்கு இரண்டரை கோடிபேர் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கிறது.

இச்சூழலில், மிக மிக மோசமானது என வகைப்படுத்தப்பட்டுள்ள பூச்சிக்கொல்லிகள் கூட இந்தியாவில் தொடர்ந்து தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள பல ஆய்வுகளில் தாய்ப்பாலில், மனித உடல் கொழுப்பில், இரத்தத்தில் கலந்துள்ள பூச்சிக் கொல்லியின் அளவை மதிப்பீடு செய்யப்பட்டு, இந்தியர்களின் உடலில்தான் உலகிலேயே அதிகளவு ஆர்கனோ குளோரின் வகை பூச்சிக் கொல்லிகள் உள்ளன என நிரூபிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மீதோமைல் தெளுப்பில் பங்கேற்ற ஆண்களால் உருவாகும் கருவின் கருக்கலைவு வீதம், இறந்து பிறப்பது, குழந்தை இறப்புகள் போன்றவை அதிகமாக இருப்பதை 1992-ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு வெளிப்படுத்துகிறது. அதிகளவிலான பூச்சிக்கொல்லிகளின் பாதிப்புக்கு ஆளானால் தலைவலி, வாந்தி, மயக்கம், சுவாசிப்பதில் சிரமம், பார்வை தெளுவின்மை போன்ற பாதிப்புகளும் இறப்பும் ஏற்படுகிறது. நீண்டகாலம், சிறிதளவு பாதிப்பு ஏற்படுமானால், புற்றுநோய், இனப்பெருக்கக் கோளாறு, நரம்பு பாதிப்புகள் நோயெதிர்ப்பாற்றல் குறைவு போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக, பூச்சிக்கொல்லி பயன்படுத்தும் பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகள் பல்வேறு புற்றுநோய்களுக்கு ஆளாகின்றனர். நரம்பியல் பாதிப்பு என்றால் வெறும் நரம்புத் தள ?ச்சி அல்ல. நினைவாற்றல் குறைபாடு, புத்திசாலித்தனம் குறைவு, நடவடிக்கையில் மாற்றம் போன்றவையும் அடங்கும்.

பரவலாகப் பயன்படுத்தப்படும், பல பூச்சிக்கொல்லிகளால் பிறப்புக் கோளாறுகள், மலட்டுத் தன்மை, கருச்சிதைவு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. கர்ப்பிணிகள் பாதிக்கப்படும்போது கரு ஊனமடைகிறது. குறிப்பாக, பெண்களின் கருவுறல், மகப்பேற்று பிரச்சினைகளுக்கும், பூச்சிக்கொல்லிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இவற்றில், கருச்சிதைவு, இறந்து பிறப்பது, தாமதமாகும் கருவுறல் போன்றவை அடங்கும். இவை தவிர, ஆஸ்துமா, ஒவ்வாமை, இதய நோய்கள், உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. நமது நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் ஆர்கனோ பாஸ்பரஸ் பூச்சிக்கொல்லிகளால் மத்திய நரம்பு மண்டலம் அதிகம் பாதிக்கப்படுகிறது.

இக்கட்டுரைகள் மே 2004 சுற்றுச்சூழல் புதிய கல்வி மாத இதழில் வெளியானவை.

தட்டச்சு: அசுரன் (asuran98@rediffmail.com)

சுற்றுச்சூழல் புதிய கல்வி- மாத இதழ்,

ஆண்டு சந்தா: ரூ. 75 (வெளிநாடுகளுக்கு: US $ 10)

நியூ-எட் பப்ளிகேசன்ஸ்,

ெ ?ச் 2-30, இராணிமங்கம்மாள் காலனி,

திண்டுக்கல்- 624001

தமிழ்நாடு, இந்தியா.

91-451-2461512

Series Navigation

அசுரன்

அசுரன்