சூரியனைப் போன்றே இருக்கும் நட்சத்திரம் விருச்சிகத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

This entry is part of 52 in the series 20040108_Issue


விருச்சிகத்தில் 18 Scorpii என்று அழைக்கப்படும் நட்சத்திரம், விருச்சிக மண்டலத்தின் இடது கொடுக்கில் அமைந்துள்ளது. இது சூரியனிலிருந்து 46 ஒளிவருடத் தொலைவில் இருக்கிறது. (அதாவது 6 டிரில்லியன் மைல்கள்) வான்வெளியின் தூரங்களைக் கணக்கிடும்போது இது மிகவும் அருகாமையில் உள்ள நட்சத்திரம்.

வானவியலாளர்கள் வெகுகாலம் சூரியனைப் போன்றே இருக்கும் நட்சத்திரங்களைத் தேடி வந்திருக்கிறார்கள். நம் சூரியனைப் போன்றே இருக்கும் நட்சத்திரங்களில் நம் பூமியைப் போன்ற கிரகங்கள் இருக்க நிறைய வாய்ப்பு உண்டு. இந்த இடங்களே நம் சூரியக்குடும்பத்திற்கு வெளியே இருக்கும் உயிர்களை ஆராய சிறந்த இடங்கள்.

1997இலிருந்து விருச்சிகத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள். இதில் சூரியனைப் போன்றே இருக்கக்கூடிய ஒரு நட்சத்திரம் இருக்க வாய்ப்பை அவர்கள் வெகுகாலமாகவே உணர்ந்திருக்கிறார்கள். சென்ற செவ்வாயன்று, வில்லனோவா பல்கலைக்கழகத்து (பென்ஸில்வேனியா மாநிலம்) வானவியலாளர்கள் இந்த இரண்டு நட்சத்திரங்களுக்கும் இருக்கும் ஒற்றுமையைப் பட்டியலிட்டார்கள்.

இவை இரண்டுமே ஒரே வயதுடையவை. 4 அல்லது 5 பில்லியன் வருடங்கள் வயதானவை. இரண்டுமே ஏறத்தாழ ஒரே எடை கொண்டவை. ஒரே விட்டமும், ஒரே வெப்பமும் கொண்டவை. ஏறத்தாழ தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 25 நாட்கள் எடுக்கின்றன. இவை இரண்டிலும் ஒரே மாதிரியான சூரியப்புள்ளிகள் சுழற்சிகள் இருக்கின்றன.

வில்லனுவா பல்கலைக்கழகத்தின் எட்வர்ட் குய்னான் அவர்கள், இவ்வளவு அருகாமையில் ஒரு சூரியனின் இரட்டைப் பிறவியைக் கண்டறிந்தது விளையாட்டுக்கென்றாலும், இதற்கு அறிவியல்ரீதியில் பயன்களும் உள்ளன. இவ்வளவு அருகாமையில் சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தைக் கண்டுபிடிப்பது, நம் சூரியன் ஒரு சாதாரண நட்சத்திரம் என்பதை ஊர்ஜிதம் செய்கிறது.

——————-

Series Navigation