வயிற்றுப்போக்கு மூளை வளர்ச்சியைப் பாதிக்கிறது.

This entry is part [part not set] of 55 in the series 20031211_Issue


சிறுவயதில் அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுவது பிற்காலத்தில் அவர்களது மன வளமையைப் பாதிக்கிறது என்று ஆராய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

விர்ஜினியா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் பிரேஜிலில் இருக்கும் குப்பம் ஒன்றில் நூற்றுக்கணக்கான குழந்தைகளை அவர்கள் 14 வயதாகும் வரை ஆராய்ந்து இந்த கண்டுபிடிப்பைச் செய்துள்ளனர்.

சிறுவயதில் அடிக்கடி வயிற்றுப்போக்கால் அவதிப்பட்ட குழந்தைகள் 10 வயதில் மன வளர்ச்சி குன்றி இருந்ததை கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆய்வுமுடிவுகள் வெப்பநாடுகளின் மருத்துவம் மற்றும் உடல் நலம் குறித்த அமெரிக்க அமைப்பினால் ( American Society for Tropical Medicine and Hygiene) வெளியிடப் பட்டுள்ளன.

அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுவது உடல் வளர்ச்சியைப் பாதித்து வளர்ந்தபின்னரும் உடல் வலிமை அற்றதாக இருப்பது முன்பே தெரிந்தது. ஆனால், மன வளர்ச்சிக்கும் வயிற்றுப்போக்குக்கும் இடையேயான தொடர்பு இப்போது கண்டறியப்பட்டுள்ளது.

தலைமை ஆராய்ச்சியாளர் டாக்டர் ரிச்சர் குவெரண்ட் அவர்கள், ‘ஐந்து, ஆறு அல்லது எட்டு அதற்கும் மேலான தடவைகள் குழந்தைகள் தண்ணீர் வற்றும் வரைக்கும் வயிற்றுப்போக்கு செல்ல அனுமதிக்கக்கூடாது.

மூன்றாம் வகுப்பில் அந்தக் குழந்தை எவ்வாறு செயல்படும் என்பது அந்தக்குழந்தை எத்தனை முறை இரண்டு வயதுக்குள் வயிற்றுப்போக்கில் இருந்திருக்கிறது என்பதை வைத்துத்தான் ‘ என்று கூறுகிறார்.

ஏன் வயிற்றுப்போக்கு இப்படிப்பட்ட விளைவுகளை கொண்டிருக்கிறது என்பது அறியாத விஷயம். இருப்பினும், சிறு குழந்தை சமயத்தில் மூளைக்கும் உடலுக்கும் தேவையான பொருட்களை வயிற்றுப்போக்கு சமயத்தில் பெற முடியாதது இவ்வாறு மூளை வளர்ச்சியைப் பாதிக்கிறது என்று கூறுகிறார்.

அப்படிப்பட்ட உணவுச் சத்துக்கள் என்னவாக இருக்கும், அந்த சமயத்தில் கொடுக்க வேண்டிய உணவு இந்த விளைவை குறைக்கும் என்பது தொடரும் ஆராய்ச்சி.

இது குழந்தைகளுக்கு மட்டுமான தீவிரமான பிரச்னை அல்ல,

வயிற்றுப்போக்கில் அவதிப்படும் குழந்தைகள் வளர்ந்ததும் அவர்களது செயல்படு திறன் சாதாரண மற்றவர்களை விட 10 சதவீதம் குறைவு என்றும் கண்டறிந்துள்ளார்கள்.

Series Navigation

செய்தி

செய்தி