ஆராய்ச்சியாளர்கள் மாரடைப்புக்கான முதன்மை ஜீனைக் கண்டறிந்துள்ளார்கள்

This entry is part of 53 in the series 20031127_Issue

பால் ரேசர்


அமெரிக்காவில் இருக்கும் ஐயோவா மாநிலத்தில் இருக்கும் ஒரு பெரிய குடும்பத்தில் அடிக்கடி நடக்கும் மாரடைப்புகளை வைத்து, மாரடைப்புக்கு என்று இருக்கும் ஒரு ஜீனை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

இந்த ஜீன் MEF2A என்று வழங்கப்படுகிறது. இது ரத்தக்குழாய்களின் சுவர்களில் அழுக்கு plaque சேர்வது, அது ரத்த ஓட்டத்தைப் பாதிப்பது, அது மாரடைப்புக்கு இட்டுச் செல்வது போன்ற விஷயங்களில் பங்கு வகிக்கிறது என்று கண்டறிந்துள்ளனர். கிளீவ்லாந்து கிளினிக் என்ற மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் எரிக் ஜே டோபோல் அவர்கள் இந்த ஜீனைக் கண்டறிந்துள்ளார்.

இதுவே முதன் முதல் மாரடைப்புக்கான ஜீன் என்று டோபல் கூறுகிறார். இந்த ஜீனில் ஏதேனும் மாற்றம் (mutation) வந்தால் அவர்களுக்கு மாரடைப்பு வரும் என்பது உறுதி. இந்த ஜீன் உங்கள் உடலில் இல்லாமல் இருந்தால், உங்களுக்கு மாரடைப்பு வராது ‘ என்றும் இவர் கூறுகிறார்.

எல்லாத் தலைமுறைகளிலும் மாரடைப்பு வந்திருக்கும் சுமார் 100 பேர்கள் கொண்ட ஐயோவா குடும்பத்தினரை இவரது குழு ஆராய்ந்தது. இருதய வியாதி கொண்ட இந்த குடும்பத்தினரிடையே, இந்த ஜீனின் சில முக்கியமான பகுதிகள் இல்லை என்பதை இவர் அறிந்தார். இதுவே இந்த ரத்தக்குழாய்கள் தடிமனாக ஆவதற்கும் அடைத்துகொள்வதற்கும் காரணம் என்று அறிந்தார்.

இந்த ஜீன் ஒரு சில புரோட்டான்களை உருவாக்குவதில் பங்கு வகிக்கிறது. அந்த புரோட்டான்கள் மற்ற ஜீன்களை கட்டுப்படுத்துகின்றன. இவை அனைத்தும் மரபணு ரீதியாக இருதய நோய்க்கு அடிகோலுகின்றனவா என்று இன்னும் ஆராய வேண்டும் என்று டோபோல் கூறுகிறார்.

Science: www.sciencemag.org

Series Navigation

பால் ரேசர்