அணுத்திமிரும், ‘அணுஜனநாயகமும் ‘

This entry is part [part not set] of 59 in the series 20031106_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


1

ஒரு ஒழுங்குமுறை அமைப்பு அது கண்காணிக்க வேண்டிய அமைப்பின் கீழ் இருந்தால் அதற்கு எத்தகைய சுதந்திரம் இருக்கும்.உதாரணமாக பங்கு சந்தைகள், பரஸ்பர நிதிகளை கண்காணிக்கும் SEBI (SECURITIES AND EXCHANGE BOARD OF INDIA) தன்னாட்சி கொண்ட அமைப்பு.அதன் நிரவாகத்தில் பங்கு சந்தைகளோ, பரஸ்பர நிதிகளோ குறுக்கிட முடியாது.SEBI ன் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் விதிமுறைகளை மீறும் பங்குச்சந்தைகள்,புரோக்கர்கள்,பரஸ்பர நிதிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். இதில் விதிவிலக்கு கிடையாது.மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பணியும் இத்தகையதுதான்.அது தொழிற்சாலைகள் விதிமுறைகளை மீறும் போது நடவடிக்கை எடுக்க முடியும்.அரசின் பணி தொழிற்வளர்ச்சியை ஊக்குவிப்பதுதான்.அதற்காக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தொழிற்வளர்ச்சிக்கு இடையூறு என்றோ, அது வகுத்துள்ள விதிகள் தொழிற்சாலைகளின் செயல்பாட்டை பாதிக்கிறது என்றோ வாதிட்டு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைதான் செய்யலாம், நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என்று வாதிட்டால் எப்படி இருக்கும். ஒழுங்குமுறை அமைப்புகள் பொது நலனை கணக்கில் கொள்ளவேண்டுமே தவிர குறிப்பிட்ட துறை/தொழிலில் உள்ள அமைப்புகளின் நலனை மட்டுமல்ல.இவையெல்லாம் மிகவும் அடிப்படையான விஷயங்கள்.(1)

AERB ன் அதிகாரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, அதன் பணியினை செயவதற்கு போதுமான வசதிகள், தேவைப்படும் ஊழியர், நிபுணர்கள் ஒதுக்கப்படுவதில்லை. அது அணுசக்தித் துறையிலிருந்து வேறுபட்ட தன்னாட்சி கொண்ட ஒரு அமைப்பாக இல்லை. SEBI பங்கு சந்தைகளின் கட்டுப்பாட்டில் இருந்தால் எப்படி இருக்குமோ அத்தகைய நிலையில் AERB உள்ளது(2).AERB அணுமின் உற்பத்தி,அணு ஆராய்ச்சி மற்றும் அணுத் தொழில்நுட்பம் தொடர்புடைய அமைப்புகள் அனைத்தையும் ஆய்வு செய்ய முடியாது, விதிமுறைகள் மீறப்பட்டுள்ளனவா என்பதை கண்காணிக்க முடியாது. சர்வதேச தரக்கட்டுப்பாடுகள் அமுல் செய்யப்படுகின்றனவா என்பதை உறுதி செய்ய முடியாது.2000த்தில் பிறப்பிக்கப்பட்ட ஒரு உத்தரவு BARC மற்றும் அதன் பகுதிகளை AERB கண்காணிக்க வேண்டியத்தில்லை என்று கூறிவிட்டது. இதில் குறிப்பிடதக்க அம்சம் இந்த உத்தரவின்படி பல ஆய்வுக்கூடங்கள், அணுமின் நிலையங்கள் AERB கண்காணிப்பில் வராது.இதன் முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் எழுதியது : Volume 17 – Issue 13, June 24 – July 07, 2000 Undermining nuclear safety ‘Besides the old power reactors, most of the potentially hazardous nuclear installations are the BARC facilities spread around the country. The Apsara, CIRUS and Dhruva reactors at Trombay, all spent-fuel reprocessing plants and radioactive waste manageme nt facilities, the uranium enrichment plant in Mysore, the large high-activity liquid radioactive waste storage facilities at Tarapur, Trombay and Kalpakkam and the high-risk reactor test facility for nuclear submarine reactor development coming up at Ka lpakkam are all part of the BARC installations now to be self-regulated. Most of these installations were not well-accessible to AERB purview even earlier, because of the clandestine nuclear weapons programme to which they were contributing all along. Al so, the older among these facilities, set up 25 or more years ago, have not been designed, constructed or maintained over the past as per acceptable safety standards.

During this writer ‘s tenure as AERB Chairman, the BARC management refused outright to comply with the procedures and corrective actions ordered by the AERB on the basis of its Safety Issues Document on DAE Facilities of 1995. The matter was heatedly deb ated in early-1996 at one of the meetings of the Atomic Energy Commission (AEC), held to review the document. The Cabinet Secretary and the Finance Secretary strongly defended the AERB ‘s authority and the need for it to oversee the safety aspects of the BARC ‘s operations, while the current Secretary of the DAE and the then Director of BARC strongly opposed it as interference in BARC operations. At that meeting, thanks to the firm stand taken by the two non-DAE Secretaries, both seasoned bureaucrats who understood the serious negative implications of weakening the regulatory body, the AERB ‘s directives were approved for implementation and the BARC was asked to comply fully with the stipulations. But whether any corrective action has since been initiated at all by the BARC on the serious safety deficiencies pointed out in the 1995 AERB document is not known. After the April 25 order, no one outside of the BARC will ever know the answer to this or even the right to know. ‘

கல்பாக்கத்தில் நடந்த விபத்து குறித்து Frontline Volume 20 – Issue 17, August 16 – 29, 2003 The Kalpakkam `incident ‘ T.S. SUBRAMANIAN கட்டுரையில் கல்பாக்கத்தில் உள்ள reprocessing plant AERB கட்டுப்பாட்டில் இல்லை என்பது தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்த விபத்தை நிர்வாகம் எப்படி கையாணட்து, ஏன் இது நிகழ்ந்தது என்பது குறித்தும் கட்டுரையில் தகவல்கள் உள்ளன. இது குறித்து வெளியான தகவல்கள் முழுமையானவை என்று கூறமுடியாது. ஏனெனில் Another office-bearer pointed out: ‘If I talk to you, I can be booked under the Official Secrets Act. ‘

இதுதான் யதார்த்தம். இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சிக்கென ஒதுக்கப்பட்டும் தொகையில் ஒரு குறிப்பிடதக்க பங்கு அணுசக்தித் துறை, INDIAN SPACE RESEARCH ORGANISATION என்ற இரு அமைப்புகளுக்கு ஒதுக்கப்படுகிறது. அணுசக்தித் துறையின் செயலர் ஒரு விஞ்ஞானி.அது மட்டுமல்ல்ல இத்துறை குறித்த முக்கிய முடிவெடுப்பவர்களில் பெரும்பான்மையோர் இத்துறையில் உள்ள/அது சார்ந்த விஞ்ஞானிகள்தான். இந்திய அணுசக்தித்துறையின் தோற்றம், செயல்பாடுகள் குறித்து எழுதியுள்ள தீரேந்திர சர்மா, இட்டி அபிரகாம் உட்பட பலர் முன்வைத்துள்ள விமர்சனங்களில் முக்கியமான ஒன்று இதன் நடவடிக்கைகள் Official Secrets Act போன்ற சட்டங்களால் பாதுகாக்கப்படுவதால், இதன் செயல்பாடுகள் குறித்து எந்த ஒரு வெளி அமைப்பும் ஆராய்வது தடுக்கப்படுகிறது. AERB ஏன் முழு அதிகாரம் கொண்ட அமைப்பாக இல்லை. அதன் பரிந்துரைகளை ஏற்பதில் என்ன சிக்கல்.அதுவும் விஞ்ஞானிகளை கொண்ட அமைப்புதானே ?. தொழில்நுட்ப ரீதியாக விபத்துகள் தவிர்க்கமுடியாது என்றால் அப்புறம் எதற்கு இத்தனை விதிகள், ஒழுங்குமுறை திட்டங்கள். யாரை ஏமாற்ற. இந்தியாவின் அணுசக்தித் துறையின் எத்தனை அமைப்புகள் IAEA ன் விதிகளை பூரணமாக பின்பற்றுபவை, கதிரியக்கம் குறித்த அளவுகோல்களின் படி நிர்வகிக்கப்படுபவை.கோபாலகிருஷ்ணன் தன் கட்டுரையில் அமெரிக்காவில் உள்ள நிலைப் பற்றி கூறுகிறார்

If, in India ‘s new-found but questionable nuclear weapon status, the intention is to regulate the safety of military installations separately, it can still be done with some degree of transparency and without forgoing the principles of unbiased oversight . In the United States, all nuclear facilities are overseen by a Defence Nuclear Facilities Safety Board (DNFSB), whose members are distinguished independent experts drawn from outside the government. The DNFSB is responsible for overseeing independently and from the outside all activities in the nuclear weapon complexes of the Department of Energy (DoE). In the normal course, the DNFSB submits its recommendations to the Secretary, DoE. But in case its reviews show a severe or imminent potential threat to public health and safety, it is required by law to submit its recommendations directly to the U.S. President and the Secretaries of Defence and Energy.

The DNFSB is answerable to the Congressional Committees on Atomic Energy, where it cannot withhold any information under the cover of the Official Secrets Act, and it even has to conduct open public hearings.

Will Dr. Chidambaram and the DAE assure the citizens of this country that the Internal Safety Committee of the BARC will also meet all similar requirements ? If so, let him start by revealing to the public who the members of his internal committee are. An d, in the process, if he would like to browse through the bio-data of the chairman and members of the DNFSB of the U.S., he is welcome to visit the Website www.dnfsb.gov. While Chidambaram refuses to divulge the membership of the BARC internal safety com mittee, the Americans do not find it necessary to hide such information on DNFSB from anyone, even from Dr. Chidambaram.

இந்தியாவில் ஏன் இவ்வாறு இல்லை.வல்லரசான அமெரிக்காவில் இது சாத்தியம் ஆனால் இந்தியாவில் முடியாது என்றால் அதற்கு என்ன பொருள்.ஒரு வேளை இதுதான் ‘அணுஜனநாயக ‘மோ ?.

2

நான் இரண்டு கட்டுரைகளை மட்டுமே மேற்கோள் காட்டியுள்ளேன். Christian Science Monitor ல் வெளியான ஒரு கட்டுரையில் கூறப்படுகிறது Leaks at India ‘s nuclear-power plants: cause for concern ? V. K. Shashikumar October 11, 2002

The fact that India ‘s nuclear regulator acknowledges that reactors in India are not operated to the standards of reactors in the US and Europe is not much of a surprise, ‘ says Christopher Sherry, research director of the Safe Energy Communication Council in Washington. ‘But it is very disturbing. ‘

Today, the country has 14 nuclear power reactors including two at KAPS. Most are modeled after a design first built in Shippingport, Penn. in 1957, and considered by experts to be the most cost-effective way to produce electricity through nuclear energy.

However only three of those nuclear reactors fall under International Atomic Energy Agency (IAEA) standards. The rest – which were built with local technology – are accountable only to national standards set by the AERB.

AERB எப்படி செயல்பட அனுமதிக்கப்படுகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.எனவே இந்திய அணுசக்தி துறை நானே சகலமும் என்று செயல்படுவதில் ஆச்சரியமில்லை.இந்தத் தகவல்களையும் ஜெயபாரதன் எழுதியுள்ளதையும் வாசகர்கள் ஒப்பிட்டுப் பார்க்கலாம். அதிகாரம் இல்லாத அமைப்பில் ஆட்கள் மட்டும் இருந்து என்ன பயன்.AERB ஒரு கண்துடைப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.என் பதிலில் EPW தலையங்கத்தினையும் குறிப்பிட்டிருந்தேன்.அதில் எழுப்பட்டுள்ள விஷயங்கள் குறித்து ஜெயபாரதன் மெளனம் சாதிப்பது ஏன். அவுட்லுக்கில் வெளியான கட்டுரை குறித்து ஞாநி தன் கட்டுரையில் எழுதியள்ளார். http://www.thinnai.com/pl0918034.html outlook இணையதளத்தில் (www.outlookindia.com) ஆனந்த் கட்டுரைகளை படிக்க முடியும்.State of the World அறிக்கை ஒவ்வொரு ஆண்டும் வெளிவருவது. worldwatch institute வெளியிடும் அறிக்கை இது.இது தவிர இவ்வமைப்பு பல வெளியீடுகளை கொண்டுவருகிறது. (www.worldwatch.org) இன்னொரு முக்கியமான இணையதளம் http://www.antenna.nl/wise/

திசைகளில் வெளியான பொருட்செல்வனின் கட்டுரை(http://www.thisaigal.com/julyo3/uniessay1.html), வெங்கட் ரமணனின் வலைப்பதிவுகளில் அணுசக்தித்துறை குறித்த குறிப்புகள் – இவற்றையும் வாசகர் கவனத்திற்கு தர விரும்புகிறேன். ஜெயபாரதன் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.இன்று இணையம் உட்பட பல வழிகளில் வாசகர்கள் தகவல்களைப் பெறமுடியும், அவர் எழுதியுள்ளதையும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள முடியும்.எனவே ஏதோ தன்னைவிட்டால் யாருக்கும் எதுவும் தெரியாது, தெரிந்துகொள்ள முடியாது என்ற நினைப்பில் எழுதினால் அவர் எழுத்தின் நம்பகத்தன்மைதான் கேள்விக்குள்ளாகும்.அவர் வெறும் அறிவியலை மட்டும் மையமாக வைத்து எழுதினால் அதில் பிரச்சினையில்லை. ஆனால் அறிவியல் கட்டுரை என்ற பெயரில் அணுசக்திதுறைக்கு வக்காலத்து வாங்கும் கட்டுரைகள் எழுதும் போது அது பிரச்சாரம்,அதில் பல அம்சங்கள் தவிர்க்கப்படுள்ளன என்பதை என் போன்ற வாசகர்கள் கண்டு கொள்ள முடியும்.உதாரணமாக அவர் எழுதியுள்ள அணுத்துறை நெறிப்படுக்கு முழுப்பூரண ஆணைக்குழுவை நாடும சூழ்மண்டலவதிகள் (http://www.thinnai.com/sc1030031.html) என்ற கட்டுரையில் AERB குறித்து அவர் எழுதியுள்ளதையும்,நான் மேற்கோள்காட்டும் கட்டுரைகள் தரும் விபரங்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.கோபலகிருஷ்ணன இந்தியாவின் அணுமின் திட்டம் குறித்து எழுதியுள்ள கட்டுரையில்(3) This article is intended as an objective analysis of the Indian nuclear program, and it is not meant for making a case for or against nuclear power in India. No in-depth analysis of the economics of nuclear power in India is attempted, due to a lack of realistic cost data on many aspects of this program and for the sake of brevity of this article என்று குறிப்பிடுகிறார். எனவே இந்தக் கட்டுரையில் என்ன எதிர்பார்க்கவேண்டும் என்பது தெளிவாகிறது.இந்தக்கட்டுரையை படிக்குமாறு வாசகர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.அவரது கருத்துகள் குறித்து மாறுபட்டஅபிப்பிராயங்கள் இருக்கலாம்.இக்கட்டுரை ஒரு ஒட்டுமொத்த பார்வையை முன்வைக்கிறது, எனவே முக்கியமானது.கோபாலகிருஷ்ணன் அணுமின்சக்தி தேவையில்லை என்று வாதிட்டதில்லை, நானறிந்த வகையில்.இந்தியாவிற்கு அணுமின்சக்தி தேவை என்று கருதுபவர்கள் கூட பாதுகாப்பு விதிகள், கதிரியிக்க அளவு குறித்து அக்கறை காட்டுவதும், அது குறித்து கருத்து தெரிவிப்பதும் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றுதான்.உதாரணமாக ஹிந்துவும்,பிரண்ட்லைனும் அணுசக்தித் துறையின் சாதனைகள் குறித்து பல முறை எழுதியுள்ள போதும் கோபாலகிருஷ்ணன் முன்வைக்கும் கருத்துக்களையும் வெளியிடுகின்றன.

ஜெயபாரதன் புரிந்து கொள்ள மறுப்பது இத்தகைய விமர்சனங்களையும், விவாதங்களையும், அவற்றின் தேவையையும்.

(அணுத்திமிர்- இது கவிஞர் அறிவுமதியின் வார்த்தை)

(1)பல துறைகளில்/நாடுகளில் இந்த ஒழுங்குமுறை எப்படி செயல்படுகிறது, அமைப்புகளுக்கும், அரசுகளும் எப்படி பொது நலனைக்காக்கின்றன அல்லது காக்கதவறுகின்றன, இதில் அறிவியல்/நிபுணத்துவம் என்ன பங்கு வகிக்கிறது என்பது குறித்து பல நூல்கள்/அறிக்கைகள் உள்ளன.உதாரணமாக

Regulating Medicines in Europe: Competition,expertise,and public health – John Abraham,Graham Lewis-Routledge-2000

The Fifth Branch: Science Advisors as Policymakers -Sheila Jasanoff-Harvard University Press-1990

Governing Molecules:Discursive Politics of Genetic Engineering in Europe and United States-Herbert Gottweis-M.I.T Press-1998

Safe Food:Bacteria, Biotechnology and Bioterrorism-Marion Nestle-University of California Press-2003

regulatory science குறித்தும் விரிவான ஆய்வுகள் உள்ளன.

(2) DR A. GOPALAKRISHNAN ‘Set AERB Free ‘ . The AERB, he says, should never be subservient to the AEC, ‘because that ‘s a bit like the SEBI being subservient to the BSE ‘. Outlook Jul 10, 1996 கூறியுள்ளது இங்கு ஒப்பிடத்தக்கது.

(3) EVOLUTION OF THE INDIAN NUCLEAR POWER PROGRAM -A. Gopalakrishnan-Annual Review of Energy and the Environment-Nov 2002, Vol. 27, pp. 369-395

Series Navigation