காசநோய்க்கு எதிராக அதிகப்படியான வேலை

This entry is part [part not set] of 23 in the series 20021007_Issue

அதிகப்படியான வேலையும், அதிகப்படியான பணமும் இன்றி, காசநோயை மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நாடுகளில் ஒழிப்பது கடினம் என்று நிபுணர


நோயை ஒழிக்க ஒதுக்கப்பட்டிருக்கும் பணத்தைவிட இன்னும் சுமார் 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவை என்று உலக சுகாதார நிறுவனம் World Health Organisation கணக்கிட்டிருக்கிறது

2005க்குள் உலக சுகாதார நிறுவனம் சுமார் 70 சதவீத காசநோயை கண்டறியவும் அதில் 80 சதவீதத்தை குணப்படுத்தவும் திட்டமிட்டிருக்கிறது.

இந்த வேலையை மேற்குறிப்பிட்ட பணம் இல்லாமல் முடிக்க முடியாது.

டாக்டர் யோங் வோக் லீ அவர்கள் உலக சுகாதார நிறுவனத்தில் இயக்குனராக பணிபுரிகிறார். ‘இந்த பணத்தட்டுப்பாடு நிச்சயம் நம்மால் அடைக்க முடிந்த விஷயம். டிபி என்னும் இந்த காசநோய் குணப்படுத்தக்கூடிய வியாதி. உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கும் காசநோய் தடுப்பு முறை சரியான முறை. இதுவே உலகெங்கும் இருக்கும் காசநோயை தடுக்கக்கூடிய சரியான முறை. இதை சரியான நேரத்தில் தடுக்க வேண்டுமெனில் உடனே செயலில் இறங்க வேண்டும் ‘ என்று இவர் கூறுகிறார்.

‘ஏழை நாடுகளில் இருக்கும் ஹெச்ஐவி நோயோடு இணைந்து இந்த நோயும் பரவுவதால் ஆபத்து இரண்டு மடங்கானது. ‘ என்றும் கூறுகிறார்.

இது போல காசநோயால் மிகவும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் நாடுகளில் பங்களாதேஷ், பிரேசில், சீனா, இந்தியா, கென்யா, தென்னாப்பிரிக்கா, தாய்லாந்து ஆகியவை அடக்கம்.

2000த்தில் திட்டமிடப்பட்ட குறியளவில் முழுமையையும் அடைந்திருக்கிறார்கள். இந்த வருடத்தில், 84 சதவீத நோயாளிகள் குணப்படுத்தப்பட்டார்கள். இது சென்ற வருடத்துக்கு நிச்சயமான முன்னேற்றம். ஆனால், காசநோய் பாதிப்பில் சுமார் 30 சதவீத நோயாளிகளையே கண்டறிந்தார்கள். இது பல நோயாளிகள் கண்டறியாத காசநோயால் பாதிக்கப்பட்டு மருந்து பெறாமல் இருப்பதைக் குறிக்கிறது. டிபி என்னும் இந்த தொத்து நோய், நுரையீரலை பாதிக்கிறது. மிகவும் முற்றிய நிலையில், உடலின் நோய்த்தடுப்பு அமைப்பை பாதிக்கிறது.

இதற்கு பொதுவாக உபயோகிக்கும் மருந்து ஆண்டிபயாடிக்ஸ் கலவை. இது பல மாதங்கள் எடுத்துக்கொள்ளவேண்டிய மருந்து. ஆகவே, நோயாளிகள் முழுமையாக மருந்து எடுத்துக்கொண்டார்களா என்பதை சரிபார்ப்பதிலேயே பல பணம் செலவாகிறது.

Series Navigation

அதிகப்படியான வேலையும், அதிகப்படியான பணமும் இன்றி, காசநோயை மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நாடுகளில் ஒழிப்பது கடினம் என்று நிபுணர

அதிகப்படியான வேலையும், அதிகப்படியான பணமும் இன்றி, காசநோயை மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நாடுகளில் ஒழிப்பது கடினம் என்று நிபுணர