இந்திய தட்பவெப்ப துணைக்கோள் விண்ணுக்குச் செலுத்தப்பட்டுள்ளது

This entry is part [part not set] of 30 in the series 20020917_Issue


இந்தியா வெற்றிகரமாக, மெட்சாட் என்னும் மெட்ராலஜிகல் சாடலைட் என்னும் தட்பவெப்ப துணைக்கோளை விண்ணுக்குச் செலுத்தியிருக்கிறது. இது வெற்றிகரமாக, புயல்களையும், சூறாவளிகளையும் முன்கூட்டியே கண்டறிய உதவும்.

மெட்சாட் என்னும் இந்த 1000 கிலோ எடையுள்ள விண்கோள், சிரிஹரிகோட்டா விண்தளத்திலிருந்து ஐ.எஸ்.ஆர்.வோ வினால் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இன்னும் வரப்போகும் தட்பவெப்ப, தொலைத்தொடர்பு, ஒளிபரப்பு ஆகிய விஷயங்களுக்காக கட்டப்படும் துணைக்கோள்களுக்கு முன்மாதிரியாக இந்த துணைக்கோள் அனுப்பப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இருக்கும் இந்திய துணைக்கோள்கள், தொலைத்தொடர்பு, ஒளிபரப்பு ஆகிய விஷயங்களையும் கவனித்துக்கொண்டு, தட்பவெப்பத்தையும் அறியும் வேலையைச் செய்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு மெட்சாட் அனுப்பப்பட்டிருப்பது, அந்த இந்திய துணைக்கோள்களின் வேலைப்பளுவைக் குறைக்கும் என ஐ.எஸ்.ஆர்.வோ நிறுவனம் கூறுகிறது.

ஜியோஸ்டேஷனரி ட்ரான்ஸ்பர் சுற்றுப்பாதை என்னும் பாதையில் இருக்கும் துணைக்கோளை இந்தியா அனுப்புவது இதுவே முதல் முறை.

இந்த துணைக்கோள், பூமியைச் சுற்றிவரும். இதன் அருகாமை தூரம் 250 கிமீட்டராகவும், தொலைவுத்தூரம் 36,000 கிமீட்டராகவும் இருக்கும்.

இந்த பிஎஸ்எல்வி ராக்கெட் இதுவரை செய்த ராக்கெட்டுகளிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.

இதன் மூலம் வெகுவாக பணம் வரக்கூடிய துணைக்கோளை அனுப்பும் வியாபாரத்தில் முன்னணி இடத்தைப் பிடிக்க இந்தியா முயலும்

Series Navigation

செய்தி

செய்தி