யுனைட்டட் லினக்ஸ் விண்டோசுக்கு மாற்றாக வருமா ?

This entry is part of 23 in the series 20020602_Issue

யுவான் நோபிள்


சமீபத்தில் நான்கு லினக்ஸ் நிறுவனங்கள் இணைந்து யுனைட்டட்லினக்ஸ் என்ற மென்பொருளை கட்டுவதற்கு ஒப்பந்தம் எழுதியிருக்கின்றன.

பல மென்பொருள் அமைப்பாளர்களும், வியாபார நிறுவனங்களும் கொடுத்த விமர்சனத்துக்கு பதில் போல, ஒன்றுபட்ட ஒரு லினக்ஸ் மென்பொருளை உருவாக்க இந்த நிறுவனங்கள் முன் வந்துள்ளன.

SuSE, Caldera, Turbolinux and Conectiva என்ற நான்கு லினக்ஸ் நிறுவனங்களும், ஒரு பொதுவான ஆதார மென்பொருள் அமைப்பை 2002ஆம் ஆண்டு இறுதிக்குள் தருவதாக வாக்களித்திருக்கின்றன. இது மென்பொருள் உருவாக்குபவர்களுக்கு மட்டுமல்ல, வன்பொருள் உருவாக்குபவர்களுக்கும் ‘பொதுவான லினக்ஸ் ஒத்துப்போகும் ‘ என்ற சான்றிதழை தங்கள் வன்பொருள்களுக்குக் கொடுக்கப் பயன்படும்.

ஆனால், இந்த யுனைட்டட் லினக்ஸ் குழுவில் முக்கியமான லினக்ஸ் நிறுவனமான ரெட்ஹேட் இல்லை என்பதை பார்க்கலாம்.

இந்த நான்கு நிறுவனங்களும் ரெட் ஹேட் நிறுவனத்தையும் தங்கள் குழுவில் சேர அழைப்பிதழ் அனுப்பியிருக்கின்றன.

தற்போதைக்கு லினக்ஸ் கணினி இயங்குதள மென்பொருள் முக்கியமாக சர்வர் எனப்படும் இணையக் கணிணிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த துறையில் இருக்கும் இன்னொரு முக்கியமான நிறுவனம் ஸன் மைக்ரோஸிஸ்டம்ஸ். மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் இந்த துறையில் அதிக பகுதியைப் பிடிக்க முயன்றுவருகிறது.

Series Navigation