விஞ்ஞானியைப் போல் சிந்திப்பாயாக

This entry is part [part not set] of 26 in the series 20020428_Issue

கென்னி ஃபெல்டர்


ஒரு கதை சொல்லி விஞ்ஞானச் சிந்தனையைப் புரியலாம்.

இந்தக் கதையால் அறியப்படுவது யாதெனில் விஞ்ஞானிகள் சிந்திக்கு முறை எப்படி என்பதாகும். முதலில் கதை பிறகு கதை சொல்லும் சேதி

ஒரே ஒரு காலத்திலே , குகைவாசி ஒருவன் இருந்தான் . அவன் பெயர் நரேஷ். ( கல்லு மண்ணு என்று அவன் பெயரை நான் சொல்லவில்லை என்று கவனியுங்கள். என் கொள்கைப்படி.) நரேஷ் ரொம்ப நல்ல புத்திசாலி. ஆனால் இயற்கையின் விதிகள் பற்றி அவனுக்கு ஏதும் தெரியாது. இது தெரியாமல் எப்படி வளர்ந்து பெரியவனானான் என்று கேட்காதீர்கள் . அது ஒரு சோகக்கதை, கதையின் முடிவில் வரும் சேதிக்கு அது தேவையில்லை.

எங்கே இருந்தேன் ? ஓகோ, சரி, ஒருநாள் நரேஷ் காட்டில் நடந்து போய்க்கொண்டிருந்தான். குகைவாசியில்லையா பயங்கரப் பசி அவனுக்கு. ஒரு கல்லை எடுத்துக் கடித்துச் சோதித்தான். ஊகும் இது சாப்பிட லாயக்கில்லை. காலையில் தான் கல்லைச் சாப்பிட்டாயிற்றே என்று கல்லைப் போட்டு விட்டான். டொம் என்று கல் அவன் காலிலேயே விழுந்தது. இது ரொம்ப முக்கியமான பகுதி, கவனியுங்கள் : கல்லை விட்டான் காலில் விழுந்தது.

(விஞ்ஞானம் ஆரம்பித்து விட்டதா ? ஊகும், சும்மா நரேஷ் கல்லைப் புண்ணாக்கிக் கொண்டது தான் மிச்சம். ஒரே ஒரு முறை தானே அவன் காலில் அடி பட்டது. இதனால் வேறு எதற்கும் தொடர்பில்லாமல் இருக்கலாம். விஞ்ஞானத்தில் ஒரு விஷயம் மட்டும் தெரிந்திருந்தால் ஒன்றும் தெரியவில்லை என்று தான் அர்த்தம். (இந்த வாக்கியம் கணிதத்தில் என்றால் சிலர் புருவம் உயர்த்துவார்கள் , ஆனால் நாம் கணிதம் பற்றிப் பேசவில்லை. விஞ்ஞானம் பற்றிப் பேசுகிறோம். அதனால் அகோ வாரும் பிள்ளாய் வந்து அமர்ந்து கதையைக் கேளும்.))

நரேஷ் நடந்து கொண்டே இருந்தான். இன்னும் பசி தீரவில்லை. இன்னொரு கல்லை எடுத்துக் கடித்து கீழே போட்டான். காலில் விழவில்லை ஆனலெளம், அது காலின் பக்கத்தில் தான் விழுந்த – நேர் கீழே. நரேஷின் மூளையில் மின்னல்கள். இது ஒரு சீரான ஒழுங்கில் (pattern) இருக்கிறது என்று ஐயம் அவனுக்கு. விஞ்ஞானபூர்வமானவன் என்றால் அவன் இப்படி யோசித்திருப்பான்.

தேற்றம் (கோட்பாடு அல்லது theory) 1 : நான் கல்லை விட்டால் , அது கீழே விழுகிறது.

ஆனால் நரேஷ் தான் நல்ல புத்திசாலியாச்சே.. அவன் தன் கோட்பாட்டை சோதித்துப் பார்க்க விரும்பினான். இன்னொரு கல்லை எடுத்து க் கொண்டான். தன் குகைவாசிமொழியில் உரக்கச் சொன்னான் : ‘நான் இந்தக் கல்லை விட்டால் அது கீழே விழும். ‘ விட்டன், தப்பாமல் விழுந்தது. இங்கே தான் தன் முதுகில் தானே தட்டிக் கொண்டான் நரேஷ். அவன் ஒரு விஷயம் எப்படி நடக்கும் என்று புரிந்து கொள்ள ஆரம்பித்துவிட்டான். (Prediction) ஊம், இது தான் கண்டுபிடிப்பின் ஆரம்பம்.

ஆக நரேஷ் நடந்து போய்க்கொண்டே இருந்தான் . குழந்தைத் தனமான சந்தோஷத்துடன், ஒவ்வொரு கல்லாய் எடுத்துப் போட்டுக் கொண்டே இருந்தான். அவன் ஒரு சிறு கிளையை எடுத்து போட்டான். ஆச்சரியம், அதுவும் கீழே விழுந்தது. பிறகு இலை, குச்சி,பூனை என்று கைக்குக் கிடைத்ததையெல்லாம் போட்டுக் கொண்டே இருந்தான். முன் போலவே அவன் ஹேஷ்யங்கள் உண்மையாய் ஆயின. இன்னும் நிரம்ப நம்பிக்கையுடன் இரண்டாவது கோட்பாட்டிற்குத் தாவினான்.

தேற்றம் (கோட்பாடு அல்லது theory) 2: எந்தப் பொருளைப் போட்டாலும் அது கீழே விழும்.

நரேஷிடம் இருந்தது ஒரே ஒரு கோட்பாடு தான் என்பதைக் குறித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் முதல் கோட்பாடு உண்மை என்றாலும் இனிமேல் தாவையில்லை. இரண்டாவது கோட்பாட்டில் முதல் கோட்பாடு அடக்கம் ஆயிற்றே. குகை விஞ்ஞானிக்கு ஒரே சந்தோஷம் . ஒரு கோட்பாட்டை வைத்து பல விஷயங்களைப் புரிந்து கொண்டாயிற்றே. குகை விஞ்ஞானிகள் தம்முடைய கண்டுபிட்ப்புகளை சுவரில் அல்லவா செதுக்க வேண்டும் ? வேலை கம்மியாயிற்றே.

துள்ளிக் கொண்டிருந்த குகைவிஞ்ஞானி, ஒரு மரத்தில் பலூன் ஒன்று இருக்கக் கண்டான். பலூனை எடுத்துப் போட்டான். அவன் கோட்பாட்டை நிரூபிக்க இன்னொரு உதாரண சோதனை என்று அவனுக்கு மகிழ்ச்சி. பலூன் பறந்தது. அது மெலே விழுந்தது!

அவனுக்குப் பெரிய விஞ்ஞானச் சிக்கல். அவனுடைய எதிர்பார்ப்பு முதல் முறையாய்ப் பொய்யாயிற்று. ஒரு நல்ல விஞ்ஞானியைப் போல, இது ஏதோ சந்தர்ப்பம் சரியில்லை என்று என்ணினான். இதுவரை அவன் கோட்பாடு தோற்கவில்லையே. ஆனால் அடுத்த பலூனும் மேலே விழுந்தது. சாட்சியங்களை மறுக்கவோ, கண்டு கொள்ளாமல் விடவோ முடியாது. யாரோ கொண்டுவந்து மரத்தில் கட்டிய பலூன்கள் அவனுடைய கோட்பாட்டிற்கு சவால் விடுகின்றன. ம்ம்ம்.

நரெஷிற்கு இரண்டு வழிகள் இருந்தன. அவன் தன் கோட்பாட்டைச் செற்றுச் செம்மை செய்யலாம்.அல்லது கோட்பாட்டைத் தூக்கியெறிந்துவிட்டு, புதிதாய்ச் சோதனைகளைத் தொடங்கலாம். நூற்றுக்கணக்கான முறை அவன் கணக்குத் தப்பவில்லை. இப்போது பொய்த்து விட்டது. குகை விஞ்ஞானிகளுக்கு தம்முடைய ஒரு கோட்பாட்டை தூக்கியெறுவது என்றால் பிடிக்கது. கல்லில் செதுக்கியதில்லையா ? ரொம்பக் கஷ்டம். இதனால் நரேஷ் எப்போது பொருள் கீழே விழுகிறது, எப்போது பொருள் மேலே விழுகிறது என்று துல்லியமாய் எழுதி வைக்கலானான். ரொம்ப காலம் கழித்து நரேஷின் வழித் தோன்றல் ஒரு ஆள் செதுக்கியத் இது :

தேற்றம் (கோட்பாடு அல்லது theory) 3 : காற்றைவிட லேசான பொருட்கள் மேலே விழுகின்றன. காற்றைவிட கனமான பொருட்கள் கீழே விழுகின்றன.

இப்போதும் ஒரே கோட்பாடு போதும். மூன்றாவது கோட்பாட்டில் ஒன்றும் இரண்டும் அடக்கம்.

நான் இந்தக் கதையை மேன்மேலே நீட்டிக் கொண்டே போகலாம். உதாரணமாக நீரில் இருப்பவன் இந்தப் பரிசோதனைகளை நடத்தினால், தான் இருக்கும் இடம் என்று ஒன்றைச் சேர்த்துக் கொண்டு கோட்பாடுகளை உருவாக்கலாம். இதை மெள்ள நீட்டிக் கொண்டு போனால, நியூட்டனின் புவியீர்ப்புச் சக்தி வரையில், பிறகு ஐன்ஸ்டான் பொதுச் சார்புக் கொள்கை என்று போகலாம் . அங்கிருந்து எங்கே போவொம் என்று என்னால் கற்பனை கூடப் பண்ணிப் பார்க்க முடியவில்லை. ஆனால் இது வெறும் கதை தான் இதனால் இதன் சேதியைச் சொல்லி விடலாம்.

செய்தி 1 : விஞ்ஞானத்தில் இரண்டு முறைகள உள்ளன ஒன்று பொதுமைக் கோட்பாடு.(Deduction) இன்னொன்று தனிமைக் கோட்பாடு.(Induction)

பொதுமைக் கோட்பாடு என்பது : பொதுவான விஷயங்களிலிருந்து தனித்த விஷயங்களுக்கு நகர்வது. தனிமைக் கோட்பாடு என்பது தனித்த விஷய்ங்களிலிருந்து ஒரு பொதுவான கோட்பாட்டிற்கு நகர்வது. பொதுமைக் கோட்பாடு ரொம்ப செளகரியம் . சரியான படி செய்தால் எப்போதுமே ஒரே பலனைப் பெறலாம். ஆனால் தனிமைக் கோட்பாடு அப்படியல்ல. எவ்வளவு தரம் பண்ணினாலும், நிச்சயமான பலன் என்று சொல்ல முடியாது.

இருந்தாலும் கூடத் தனிமைக் கோட்பாடு தான் விஞ்ஞானத்தின் அடிப்படை. (நான் கதை எழுதியதற்கும் காரணம் இதுவே. என் குறிப்பிட்ட கதையைக் கொண்டு , பொதுவான விஷயங்களை விளக்கலாம் இல்லையா ? நம் செய்திகள் இப்போது Induction மூலமாய்ப் பெறப்பட்டவை.)

செய்தி 2 : எல்லோருக்கும் தம் கோட்பாடுகள் சரியாய் இருக்கவேண்டும் என்று விருப்பம். அதனால் ஹேஷ்யங்களைச் சொல்லியபடியே விஞ்ஞானிகள் , அந்த ஹேஷ்யங்கள் சரியாய் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் ஹேஷ்யங்கள் பொய்த்துப் போகும்போதுதான் உண்மையான கல்வி கிடைக்கிறது. தம் ஹேஷ்யங்கள் பொய்த்துப் போகும் போது , அதை ஒப்புக் கொள்ளவும் மறுக்கிறார்கள் விஞ்ஞானிகள். பாவம் , விஞ்ஞானிகளும் மனிதர்கள் தானே.

செய்தி 3 : தப்பு என்று நிரூபிக்கப் பட்டாலும் சோதனை பயனுள்ளதே. ஆனால் ஒவ்வொரு கோட்பாடும், தவறென்றாலும் வரவேற்கத் தக்கதே. அதன் அபயன் அதன் தவறைத் தொடர்ந்து சிந்திப்பதில் உள்ளது. 19-ம் நூற்றாண்டு பெளதீகம் பலவாறாய்த் தவறுஎன்று நிரூபிக்கப் பட்டாலும், அந்த விஞ்ஞான அடிப்படையில் தான் கரும், பாலங்களும் , ராக்கெட்டுகளும் கட்டப் படுகின்றன.

செய்தி 4 : விஞ்ஞானத்தின் ஈர்ப்பினால் சாப்பிடக் கூட மறந்து , லயித்துப் போவது வழக்கம். எனவே நரேஷ் கதையை முடித்துக் கொள்வோம்.

Series Navigation

கென்னி ஃபெல்டர்

கென்னி ஃபெல்டர்