மரபணு மாற்றப்பட்ட பருத்தி செடிகளும் பருத்திப் புழுவும் உலக விவசாய நிறுவனங்களின் ஆயுதங்களாகின்றன

This entry is part [part not set] of 31 in the series 20020623_Issue


மரபணு பொறியாளர்களால் ஒரு அமைதியான போர் அமெரிக்காவின் அரிஜோனா மாநிலத்தின் பருத்தி வயல்களில் தொடங்கப்பட்டிருக்கிறது.

ஒரு ரகசிய இடத்தில், இங்கு, சிவப்பு போல்புழுக்கள் (pink bollworms Pectinophora gossypiella) மரபணு மாற்றப்பட்டு காட்டில் விடப்பட்டு, அவை எவ்வாறு நடந்துகொள்கின்றன என்பது ஆராயப்பட்டுவருகிறது.

இவைதான் முதன் முதல் மரபணு மாற்றப்பட்ட பூச்சிகள் காடுகளில் விடப்படுவது. இந்த பரிசோதனை வெற்றிகரமானால், இந்த பூச்சிகள் இன்னும் மாற்றப்பட்டு இவை பரந்த வெளிகளில் விடப்படும். இவைகள் குட்டிகளைப் போடும், ஆனால் எந்தக் குட்டியும் உயிர்வாழாது.

அதாவது, இந்த குலத்தை அழிக்க இவைகளையே மாற்றி அனுப்பியிருக்கிறார்கள். இங்கேதான் பொறியியலாளர்களுக்கு இடையேயான போட்டி வருகிறது.

இப்படிப்பட்ட மரபணு மாற்றப்பட்ட பூச்சி மாண்ஸாண்டோ நிறுவனத்துக்கு கெட்ட செய்தி. இந்த வேதிபொருள் நிறுவனம் ஏற்கெனவே மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகளை ஏராளமான விலைக்கு விற்றுவந்திருக்கிறது. பருத்தி விதைகள் ஏராளமான விலை என்று ஏற்கெனவே விவசாயிகள் புலம்பி வருகிறார்கள்.

மாண்ஸாண்டோ நிறுவனத்தின் மரபணு மாற்றப்பட்ட பருத்தியை போல்புழு சாப்பிடாது.

இந்த போல்புழுவின் லார்வா பருத்திக்குள் வளர்ந்து அதனை சாப்பிட்டு அழிக்கிறது. வளர்ந்த பூச்சி பட்டாம்பூச்சி போல பெரிதாக, சாம்பல் பழுப்பில் 15-20 செமீ நீளம் இறக்கையுடன் இருக்கும். இவைகள் எகிப்து, சீனா, பிரேசில் நாடுகளில் இருக்கும் பருத்திக்கு சுமார் 20சதவீதம் வரை நஷ்டம் உண்டுபண்ணுகின்றன.

ஆகவே, விவசாயிகள் மரபணு மாற்றப்பட்ட பூச்சியை ஆதரிக்கிறார்கள்.

இப்போதைக்கு, விவசாயிகள் வேதிப்பொருட்களை தூவுவதன் மூலம் பூச்சிகளைக் கொல்கிறார்கள். அல்லது இந்தப் பூச்சிகளை கதிரியக்கத்தில் வைக்கிறார்கள். கதிரியக்கம் இந்தப் பூச்சிகளை மலடாக்குகிறது.

ஆனால், இந்த வழிமுறைகள் விலை அதிகமானவை. இதைவிட விலை குறைந்த வழி, இந்த பூச்சியின் ஜீன்களை மாற்றி, இந்த பூச்சிகளை மலடாக்குவது. அரிசோனாவின் பீனிக்ஸ் நகரத்தில், இந்தப் பூச்சிகள் மாற்றப்பட்டு, வலைக்குள் விடப்பட்டு பரிசோதிக்கப்படுகின்றன. அவை உயிர்வாழ்கின்றனவா, அப்புறம் அவை குட்டிகளை உருவாக்குகின்றனவா என்று பரிசோதிக்கப்படுகின்றது.

ஈயிடமிருந்து ஒரு ஜீனை இந்த போல்புழுவின் ஜீனுக்குள் அனுப்பி இவைகளை மலடாக்குவது. இந்த மரபணு மாற்றப்பட்ட இந்த பூச்சிகள் சாதாரண வாழ்க்கை வாழும், ஆனால் குட்டிகள் வராது.

இது வேலை செய்தால், விவசாயிகள் மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகளை மாண்ஸாண்டோ நிறுவனத்திடமிருந்து வாங்க வேண்டாம். இவை வேலை செய்தாலும், அவை பாதுகாப்பானதா ?

இந்த பரிசோதனையில் ஈடுபட்டிருக்கும் அறிவியலாளர்கள், பாதுகாப்பானது என்றே கூறுகிறார்கள்.

இதை எதிர்ப்பவர்கள், இந்த பூச்சிகள் புழுக்கள் தங்கள் உடலில் இருக்கும் மாறுதலை மண்ணில் இருக்கும் பாக்டாரியாக்களுக்குச் செலுத்தலாம் என்றும், அப்படி பாக்டாரியாவும் மாறினால் எதிர்பாராத விளைவுகள் எதிர்பாராத வழிகளில் செல்லலாம் என்றும் எச்சரிக்கிறார்கள்.

கடினானது என்னவென்றால், எந்த வழிகளில் எந்த விளைவுகள் நடக்கும் என்று சொல்ல எந்த ஆதாரமும் இல்லை.

ஒரு புறம், விலை குறைந்த பருத்தியின் அபாரமான பலன்கள். அமெரிக்க விவசாயிகளுக்கு மட்டுமல்ல, மெக்ஸிகோ, இந்தியா போன்ற நாடுகளில் இருக்கும் ஏழை விவசாயிகளுக்கும் இது பயன் தரும். மற்றும் இந்த பருத்தியை வாங்கும் ஏராளமான உலக மக்களுக்கும் இது பயன் தரும்.

மறுபுறத்திலோ, சுற்றுச்சூழல் இதனால் அழிந்தால் அந்த நஷ்டம் மிகவும் மிகவும் அதிகமானதாக இருக்கலாம்.

இதெல்லாம், எந்த வகையில் அமெரிக்க விவசாயத்துறை இதனை மேலாண்மை செய்கிறது என்பதையும், எப்படிப்பட்ட பரிசோதனைகளை வடிவமைக்கிறது என்பதையும் பொறுத்தது. அமெரிக்க விவசாயிகளிடமிருக்கும் அரசியல் பலம் காரணமாக இந்த பூச்சிகள் அனுமதிக்கப்படலாம்.

***

http://news.bbc.co.uk/hi/english/sci/tech/newsid_2053000/2053884.stm

Series Navigation

செய்தி

செய்தி

மரபணு மாற்றப்பட்ட பருத்தியை பயிர் செய்ய இந்தியா அரசாங்கம் அனுமதி அளித்திருக்கிறது.

This entry is part [part not set] of 32 in the series 20020407_Issue


இந்தியாவின் சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டாளர்கள், மரபணு மாற்றப்பட்ட பருத்தியை இந்தியாவில் வியாபார ரீதியில் உற்பத்தி செய்ய அனுமதி அளித்துள்ளார்கள். Genetic Engineering Approval Committee (GEAC), சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒரு பகுதி. மரபணு மாற்றப்பட்ட பயிர்களை வியாபார ரீதியில் உற்பத்தி செய்ய இந்த அமைச்சகத்தின் அனுமதி தேவை.

இந்த வருடம் குஜராத்தின் விவசாயிகள் பருத்தியை பரந்த அளவில் பயிர் செய்துள்ளார்கள். பிடி பருத்தியை பயிர் செய்த இடங்கள் தவிர மற்ற இடங்களில் விளைச்சல் மிகவும் குறைவாக உள்ளது. விவசாயியை ஏதேனும் காப்பாற்ற முடியுமெனில் இந்த பருத்திதான் என்று பல விவசாயிகள் கூறுகிறார்கள்.

‘ஜிஈஏசி இந்த பிடி பருத்தியை சில கட்டுப்பாடுகளுடன் உபயோகிக்க அனுமதி அளித்திருக்கிறது ‘ என்று ஜிஈஏசி-இன் சேர்மன் ஏ.எம்.கோகலே குறிப்பிட்டார். பிடி பருத்தி என்பது பாஸில்லஸ் துரிஞ்சினிஸிஸ் பருத்தி என்பதன் சுருக்கம்.

இது பற்றிய கட்டுப்பாடுகள் இன்னும் வரும் என்றும் கூறினார்.

அரசாங்கம் இதுவரை ஆராய்ச்சி நிறுவனங்களையும், சில தனியார் நிறுவனங்களையுமே இது போன்ற மரபணு மாற்றப்பட்ட பயிர்களை உபயோகிக்க அனுமதித்து வந்தது.

மஹாராஷ்டிரா ஹைப்ரிட் சீட் கம்பெனி என்ற நிறுவனம் அமெரிக்க நிறுவனமான மாண்ஸாண்டோவுடன் இணைந்து இந்த பிடி பருத்தி சம்பந்தமாக நிறைய பயிர்ப் பரிசோதனைகளை நடத்தி வருகிறது.

இந்தியா உலகத்திலேயே அதிக அளவு பரப்பளவில் பருத்தியை விதைக்கிறது. ஆனால் ஒரு ஹெக்டேருக்கு சுமார் 300 கிலோகிராம் பருத்தியையே அது சராசரியாக உற்பத்தி செய்கிறது. உலக சராசரி சுமார் 650 கிலோகிராம் பருத்தி ஒரு ஹெக்டேருக்கு.

சரத் ஜோஷி என்ற கிஸான் கோ-ஆர்டினேஷன் கமிட்டியின் தலைவர், ‘உலகமயமாதலின் விளைவாக, இந்திய விவசாயமும் உலகத்தரம் உள்ளதாக ஆகவேண்டிய கட்டாயம் இருக்கிறது ‘ என்று கூறுகிறார்.

‘கடந்த காலத்தவறுகளை இந்திய அரசாங்கம் திருத்தும் அதே வேளையில், விவசாயம் மீது விதித்துள்ள ஏராளமான கட்டுப்பாடுகளையும் இந்திய அரசாங்கம் தளர்த்த வேண்டும் ‘ என்று சரத் ஜோஷி கோருகிறார்.

சென்ற அக்டோபரில், சுற்றுச்சூழல் இயக்கத்தினர் கோரிக்கையின் காரணமாக, சுமார் 10000 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த இந்த மரபணு மாற்றப்பட்ட பருத்திப் பயிர்களை அரசாங்கம் அழிக்க உத்தரவிட்டது. அதே நேரத்தில், பிடிபருத்தியின் மீது இருக்கும் கட்டுப்பாடுகள் மார்ச் 2002இல் எடுக்கப்பட்டுவிடும் என்றும் கூறியது.

விவசாயிகள் பிடி பருத்தி பூச்சிகளுக்கு எதிர்ப்பு சக்தி உள்ளவையாகவும், அதிக உற்பத்தி தருபவையாகவும் இருப்பதை அறிந்திருக்கிறார்கள்.

பிடி பருத்திக்கு ஆதரவான வாதம் இது : குறிப்பாக தென் இந்தியாவில் பூச்சிகள் பருத்திப் பயிரை அழிப்பது வழமுறையாய் இருந்து வருகிறது. வருடத்திற்கு 1600 கோடிரூபாய் அளவில் பூச்சிக் கொல்லிகள் பயன் படுத்தப் படுகின்றன. பருத்தி விதைக்கப்படும் வயல் பரப்பளவு இந்தியாவின் மொத்தப் பரப்பளவில் ஐந்து சதவீதம் தான். ஆனால் மொத்த பூச்சிக்கொல்லி உபயோகத்தில் 50 சதவீதம் அளவு பருத்தி பயிரிடும் நிலத்தில் பயன்படுத்தப் படுகிறது. அதில்லாமல் பூச்சிகள் பூச்சிக் கொல்லிகளுக்குப் பழகிவிட்டதால், அவற்றின் அழிவு விகிதமும் குறைந்து வருகிறது. பாஸிலஸ் துரிஞ்சினஸ் என்ற பாக்டாரியாவிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு மரபணு பருத்தி விதையில் கலக்கப்படுவதால், இந்த பிடி பருத்திப் பயிர்கள் பூச்சிகளுக்குத் தப்பக் கூடும். பூச்சிக் கொல்லிகளின் உபயோகம் குறையும். இதனால் உழவர்களின் உடல்நலமும் பாழாகாது. உற்பத்தித் திறனும் 23 சதவீதத்திலிருந்து 88 சதவீதம் கூடுதல் ஆகலாம்.

பி டி பருத்தியின் ஒரு குறைபாடு இது : இதை விதைக்கும் போது, பூச்சிகளுக்குப் புகலிடமாக , 20 சதவீதம் நிலத்தில் பிற பருத்திவகைகள் விதைக்கப் பட வேண்டும். மகரந்தம் பரவுதலைத் தடுக்க ஐந்து வரிசை பிடி பருத்தி நட்டால் ஒரு வரிசை பிற பருத்தி வகைகள் விதைக்கப் பட வேண்டும். இந்த முறையில் பயிரீடு நடக்கவில்லையென்றால் மூன்று வருடம் மேற்கொண்ட சோதனை முயற்சி தோல்வியில் முடியும். குறைந்த நிலம் கொண்ட உழவர்களுக்கு இது சாத்தியமில்லை. இவர்களே பெரும்பான்மையினர்.

இதற்கு பெரும் எதிர்ப்புத் தெரிவிப்பவர் புஷ்பா எம் பார்கவா. இவர் செல் அண்ட் மாலிக்யூலர் பயாலஜி இன்ஸ்டிட்யூட் – இன் முன்னாள் இயக்குனர் இவர். மூன்றுவருட சோதனை முயற்சி என்பது போதாது என்பது இவர் வாதம். உயிருள்ள தாவரவியல் மாதிரிகளை, அவற்றின் முழு பாதிப்பு என்னவென்று தெரியாமல் உலவவிடுவது தவறு என்கிறார். மான்ஸாண்டோ போன்ற பன்னாட்டுக் கம்பெனியின் தொழில் நுட்பத்தை இறக்குமதி செய்வது தேச நலனுக்கு எதிரானது என்கிறார் அவர். இது பற்றி ஆழமான விவாதம் தேவை.

Series Navigation

செய்தி

செய்தி

மரபணு மாற்றப்பட்ட பருத்தியை விற்க இந்திய அரசாங்கம் அனுமதி

This entry is part [part not set] of 19 in the series 20011210_Issue


இந்திய அரசாங்கம் வெகு விரைவிலேயே மரபணு மாற்றப்பட்ட பருத்தியை விற்க அனுமதி தரப் போவதாக அறிவித்திருக்கிறது.

உயிர் தொழில்நுட்ப பிரிவின் தலைவரான திருமதி மஞ்சு சர்மா இதை தெரிவித்ததோடு, இதற்கான தேதியை நிர்ணயிக்கவில்லை என்பதையும் கூறினார்.

ஒரு வருடமாக பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டுவரும் இந்த மரபணு மாற்றப்பட்ட பருத்தியின் பரிசோதனை முடிவுகள் சரியானவையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த பயிர் பரிசோதனை விளைச்சல்கள் சுமார் 40 இடங்களில் தேசமெங்கும் நடத்தப்பட்டு வருகின்றன. முக்கியமான மஹாராஷ்டிரா குஜ்ராத் போன்ற மாநிலங்களில்.

இந்த மரபணு மாற்றப்பட்ட பருத்தி, பருத்தி போல்புழுவுக்கு எதிர்ப்புச்சக்தி மிகுந்தது. இந்த போல்புழு இந்தியப்பருத்தியை நாசம் செய்யும் முதல் எதிரி.

இந்த புழுவினால், இந்திய விளைச்சல் வளர்ந்த நாடுகளின் விளைச்சலை ஒப்பிடும்போது மிகவும் குறைவாக ஆகிறது.

இந்தியா மற்ற எந்த நாடுகளை விடவும் அதிகமான பரப்பளவில் பருத்தியை விளைக்கிறது. ஆனால், ஒரு ஹெக்டேருக்கு இந்தியப்பருத்தியின் விளைச்சல், மற்ற எந்த நாட்டு பருத்தியின் விளைச்சலை விட மிகவும் குறைவு.

இந்த அரசாங்க ஆராய்ச்சி, சுற்றுச்சூழல் குழுவினரால் மிகவும் எதிர்க்கப்படுகிறது. குழுக்கள் இது போன்ற பரிசோதனைகளுக்கும் உற்பத்திக்கும் 10 வருடம் தடை போடப்பட வேண்டும் எனக் கோரி வருகின்றன. இந்த அறிவிப்பு இவர்களை இன்னும் கோபமுறுத்தலாம்.

Series Navigation

செய்தி

செய்தி