மின் காகிதம் உருவாக்கத்தில் மிகப்பெரிய முன்னேற்றம்.

This entry is part [part not set] of 19 in the series 20011210_Issue


மின் காகிதம் என்றால் என்ன என்பதை முதலில் அறிய வேண்டும்.

மின் காகிதம் என்பது காகிதம் போலவே இருக்கும் பிளாஸ்டிக். இந்த பிளாஸ்டிக் காகிதத்தில் மை இல்லாமலேயே மின்சாரத்தின் மூலமாக மட்டுமே அதில் எழுத்துக்களையும் படங்களையும் தோற்றுவிப்பது. (அதாவது காகிதம் வடிவில் இருக்கும் தொலைக்காட்சியை கற்பனை செய்யுங்கள்)

மேலே காணப்படும் வடிவம் 256 வகையான கறுப்பு வெள்ளை படம் சுமார் 5 செமீ சதுரத்தில் ஒரு மின்சார காகிதத்தில் உருவாக்கப்பட்ட வடிவம். இதை உருவாக்கியவர்கள் பிலிப்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தினர்.

மேற்கண்ட வடிவம் ஆக்டிவ் மேட்ரிக்ஸ் தொழில்நுட்பம் மூலம் (லாப்டாப் கணினிகளில் உபயோகப்படுத்தும் தொழில்நுட்பம்) இந்த வடிவமைப்பு செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால் இந்த காகிதம் வளையும் பிளாஸ்டிக் மூலம் செய்யப்பட்டிருக்கிறது. லாப்டாப் கணினிகளில் விலையுயர்ந்த சிலிக்கான் மூலம் செய்யப்படுகிறது. பிளாஸ்டிக்கால் செய்யப்படுவதால், இதனை அதிக அளவில் குறைந்த விலையில் செய்ய முடியும்.

‘இது மிகவும் குறைந்த விலையில் செய்யக்கூடிய விஷயம். ஏனெனில் இதனை செய்வதற்கு கலவைகொண்டு செய்யலாம். விலையுடர்ந்த வெற்றுவெளிகளை உருவாக்க வேண்டிய அவசியமில்லை ‘ என்று கூறுகிறார் பிலிப்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் கோயன் ஜோஸ்.

மின் காகிதம் செய்வதில் விலை மட்டுமே முக்கியமல்ல.

பரவலாக விற்கக்கூடிய மின் காகிதம் மிகக்குறைந்த மின்சார சக்தியில் இயங்கக்கூடியதாக இருக்க வேண்டும். பெரிய செய்தித்தாள் அளவுக்குச் செய்யப்பட முடிய வேண்டும். பல வெளிச்ச நிலைகளில் எல்லாவற்றிலும், இதிலிருக்கும் எழுத்துக்கள் தெளிவாகத்தெரிய வேண்டும். பல முறை உபயோகப்படுத்தினாலும் நைந்து போகக்கூடாது.

பிலிப்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்துள்ள மின் காகிதம் அதிக தெளிவாகவும், மிகக்குறைந்த மின்சார சக்தியை கொண்டும் வேலை செய்கிறது.

இந்த காகிதத்தின் பரப்பை விரிவு செய்வதற்காக இப்போது வேலை செய்ய ஆரம்பிப்பார்கள் என்று ஜோஸ் கூறுகிறார்.

இது வளையக்கூடியதாக இருக்கவேண்டும். காண்பிக்கப்பட்ட மாதிரிக்கு பின்னால் கடினமான கண்ணாடி துணை இருக்கிறது.

‘ஆனால் செய்து முடிப்பதற்கு அதிகத் தடைகள் இருக்கும் என்று எதிர்பார்க்க வில்லை ‘ என்று கூறுகிறார் ஜோஸ்.

Series Navigation

செய்தி

செய்தி