மரபணு மாற்றப்பட்ட பருத்தியை விற்க இந்திய அரசாங்கம் அனுமதி

This entry is part of 19 in the series 20011210_Issue


இந்திய அரசாங்கம் வெகு விரைவிலேயே மரபணு மாற்றப்பட்ட பருத்தியை விற்க அனுமதி தரப் போவதாக அறிவித்திருக்கிறது.

உயிர் தொழில்நுட்ப பிரிவின் தலைவரான திருமதி மஞ்சு சர்மா இதை தெரிவித்ததோடு, இதற்கான தேதியை நிர்ணயிக்கவில்லை என்பதையும் கூறினார்.

ஒரு வருடமாக பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டுவரும் இந்த மரபணு மாற்றப்பட்ட பருத்தியின் பரிசோதனை முடிவுகள் சரியானவையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த பயிர் பரிசோதனை விளைச்சல்கள் சுமார் 40 இடங்களில் தேசமெங்கும் நடத்தப்பட்டு வருகின்றன. முக்கியமான மஹாராஷ்டிரா குஜ்ராத் போன்ற மாநிலங்களில்.

இந்த மரபணு மாற்றப்பட்ட பருத்தி, பருத்தி போல்புழுவுக்கு எதிர்ப்புச்சக்தி மிகுந்தது. இந்த போல்புழு இந்தியப்பருத்தியை நாசம் செய்யும் முதல் எதிரி.

இந்த புழுவினால், இந்திய விளைச்சல் வளர்ந்த நாடுகளின் விளைச்சலை ஒப்பிடும்போது மிகவும் குறைவாக ஆகிறது.

இந்தியா மற்ற எந்த நாடுகளை விடவும் அதிகமான பரப்பளவில் பருத்தியை விளைக்கிறது. ஆனால், ஒரு ஹெக்டேருக்கு இந்தியப்பருத்தியின் விளைச்சல், மற்ற எந்த நாட்டு பருத்தியின் விளைச்சலை விட மிகவும் குறைவு.

இந்த அரசாங்க ஆராய்ச்சி, சுற்றுச்சூழல் குழுவினரால் மிகவும் எதிர்க்கப்படுகிறது. குழுக்கள் இது போன்ற பரிசோதனைகளுக்கும் உற்பத்திக்கும் 10 வருடம் தடை போடப்பட வேண்டும் எனக் கோரி வருகின்றன. இந்த அறிவிப்பு இவர்களை இன்னும் கோபமுறுத்தலாம்.

Series Navigation