அறிவியல் செய்திகள்

This entry is part [part not set] of 19 in the series 20011125_Issue


ஒவ்வொரு வருடமும், ஆஸ்திரேலியாவில் சூரியக்கார் பந்தயம் நடக்கிறது. சென்ற வெள்ளிகிழமையன்று நடந்த பந்தயத்தில், மேட் டாக் என்ற சூரியக்கார் முதலாவதாக வந்து வெற்றிவாகை சூடியிருக்கிறது.

ஆஸ்திரேலியாவின் தென் முனையிலிருந்து வட முனை வரும் ஓடும் இந்த பந்தயத் தூரத்தில் முழுவதுமாக மேட் டாக் (பைத்திய நாய்) ஓடிய சராசரி வேகம் ஒரு மணி நேரத்துக்கு 66 கிலோமீட்டர்.

பெரும்பாலும் கல்லூரி மாணவர்களே கலந்து கொள்ளும் இந்த பந்தயத்தில் ஈடுபடும் அனைத்து கார்களும் வெறும் சூரிய ஒளியக்கொண்டு மட்டுமே ஓடவேண்டும்.

***

எலும்பு முறிவுக்கு மூலக்கூறு வைத்தியம்

அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள் எலும்பு முறிவுக்கு ஒரு புதுவகை மூலக்கூறு வைத்தியத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இதற்காக சில புதிய மூலக்கூறுகளைக் கண்டுபிடித்து ஒரு அதனை கோலஜன் இழைகளில் பதித்து முறிவுண்ட இடத்தில் வைத்தால், அது அருகாமையிலுள்ள கால்ஸியன் அணுக்களைப்போலவே தன்னை மாற்றிஅமைத்துக்கொண்டு புதிய எலும்பாக வடிவம் மாறுவதை அறிவித்திருக்கிறார்கள்.

இது உண்மையில் இந்த மூலக்கூறுகளால் உந்தப்பட்டு மனித உடல், எலும்பு அமைப்பை இந்த கோலஜன் இழைகளில் உருவாக்குவதையே குறிக்கிறது.

இதுவரை எலும்பு முறிவுக்குச் சிறந்த வைத்தியமாக, ஸ்டெயின்லெஸ் ஸ்டால் கொண்ட எலும்புகளை பொறுத்தி வந்தார்கள். இந்த முறை அதனை மாற்றி, அவரவர் எலும்புகளை அவரவரே தேவையான இடத்தில் உற்பத்திச் செய்து கொள்வதைக் குறித்து, மருத்துவத்தில் பெரும் மாறுதலை உருவாக்குவதாக மருத்துவ அறிஞர்கள் இதனைப் பாராட்டி உள்ளார்கள்.

***

சீனா சந்திரனுக்கு 2005இல் மனிதர்கள் உள்ள பிரயாணத்தை மேற்கொள்ளப்போவதாக அறிவித்திருக்கிறது.

சீனா ஏற்கெனவே விண்துறையில் சிறந்த சாதனைகளை நிகழ்த்தி வந்துள்ளது. அதன் வளர்ச்சியாக சந்திரனுக்கு மனிதப்பயணத்தை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், சீனாவின் விண்கல ஆசைகள் அதிகம் நிறைவேறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 1995இல் அது அனுப்பிய ராக்கெட் வெடித்துச் சிதறி ஒரு கிராமத்தில் இருந்த ஐந்து பேரைக் கொன்றது. இன்னொரு ராக்கெட் 1996இல் கிளம்பும் இடத்திலேயே வெடித்துச் சிதறியது. இன்னொரு முறை சீனா அனுப்பிய விண்துணைக்கோள் தவறான பாதையில் துணைக்கோளை வைத்துவிட்டு 120 மில்லியன் டாலர் பணத்தை வீணடித்தது.

***

ஜப்பானில் புதிதாக வடிவமைக்கப்பட்ட நுண்துகள் தொலைநோக்கி வெடித்துச் சிதறியது.

உலகத்தின் மிகவும் சக்தி வாய்ந்த நுண்துகள் தொலைநோக்கியாக வடிவமைக்கப்பட்ட ஜப்பானின் தொலைநோக்கி, ஒரு விபத்தின் காரணமாக வெடித்துச் சிதறிவிட்டது.

சூப்பர் காமியோகான்டே தொலைநோக்கி போட்டோ மல்டிபிளையர் குழாய்கள் மூலம் நியூட்ரினோ துகள்களை ஆராய வடிவமைக்கப்பட்டிருந்தது.

நவம்பர் 12ஆம்தேதியன்று ஒரு போட்டோ மல்டிபிளையர் குழாய் வெடித்ததில் தொடர்ந்து சங்கிலி வெடியாக அனைத்தும் வெடித்து நாசமாகி விட்டது.

இதுவரை இந்த தொலைநோக்கியின் சாதனைகள் ஏராளமானவை. நியூட்ரினோ ஆஸிலேஸன் என்ற குணத்தை இது அளவிட்டிருக்கிறது.

ஜப்பான் இந்த தொலைநோக்கியை மீண்டும் கட்டுமென்று அறிவித்திருக்கிறது.

Series Navigation

செய்தி

செய்தி