ரோபோ கப் 2001

This entry is part of 20 in the series 20010805_Issue


இந்த வாரம் ஆரம்பிக்கும் எட்டு நாள் காலபந்தாட்டப் போட்டியில், ஒரு கால்பந்தாட்டப் போட்டியில் இருக்கும் எல்லா விஷயங்களும் இருக்கின்றன. கோல், தடுக்கப்பட்ட கோல், பெனல்ட்டி அட்டை எல்லாமே, ஆனால் தலையால் அடிக்கும் ஹெட்டர் மட்டும் கிடையாது. ஆட்ட முடிவில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்கள் சட்டைகளைக் கிழித்துக்கொண்டு ஓடுவதும் இருக்காது. ஏனெனில், எல்லா விளையாட்டு வீரர்களும் ரோபோக்கள் (இயந்திரமனிதர்கள்). பந்தும் காலபந்தாட்ட பந்து கிடையாது. கோல்ஃப் பந்து. ஆடும் இடம் கால்பந்தாட்ட மைதானம் இல்லை. டேபிள் டென்னிஸ் மேஜை.

ஐந்தாவது வருடாந்தர அனைத்து நாடு ரோபோகப் 2001, அடுத்த வாரம் ஸியாட்டில் நகரில் நடக்கிறது. இது முதல்முறையாக அமெரிக்க நகரில் நடக்கிறது. சுமார் 23 நாடுகளிலிருந்து 111 குழுக்கள் கலந்துகொள்ளுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போட்டியின் நீண்டகால திட்டம் 2050க்குள் முழு சுதந்திரமான இயந்திர மனிதர்கள் மூலம், அனைத்து நாட்டு காலபந்தாட்ட போட்டிகளில், மனிதக்குழுக்களை வெற்றி பெறுவது. ஆனால், அதைவிட இன்றைய முக்கியமான நோக்கமாக, செயற்கை அறிவில் முன்னேற்றத்தையும், இயந்திர மனித ஆராய்ச்சியும் இருக்கின்றன. இதன் மூலம் எதிர்காலத்தில், மனிதர்கள் செய்யமுடியாத ஆபத்தான வேலைகளைச் செய்வதற்கும், இயற்கை அழிவுகளிலிருந்து மனிதர்களைக் காப்பாற்ற இயந்திர மனிதர்களை பயன்படுத்துவதற்கும் உதவும் இந்த ஆராய்ச்சி எனக் கருதுகிறார்கள்.

படத்தில் ஆஸ்திரேலிய மாணவர் வில்லியம் உத்தர் ரோபோகப் போட்டிக்காக தனது சோனி ஐபோ ரோபாட்டைப் பழக்குகிறார்.

Series Navigation