யூரேக்கா! (அல்லது) அறிவியலில் படைப்புத் தருணங்கள்

This entry is part [part not set] of 18 in the series 20010513_Issue

சி குமாரபாரதி

யூரேக்கா! யூரேக்கா! – கண்டுபிடித்துவிட்டேன்!. ஆர்க்கிமிடிசு இந்தச் சொல்லை உற்சாகமாகக் கூவிக்கொண்டு குளியல் தொட்டியிலிருந்து வெளியேறி அம்மணமாகவே சைரக்கூஸ் தெரு வழியே ஓடினார் என்பது ஒரு அறிவியல் ஜதீகம். ஒரு உன்னத படைப்பு கணத்தின் அடையாளமாக இந்தச் சொல் நிலைத்துவிட்டது. ஒரு பொருள் பாயத்தில் – உ.ம் நீரில் அமுங்கும் பொழுது அந்தப் பொருளின் கன அளவுள்ள நீரை அது வெளியேற்றுகிறதும், இதன் காரணமாக பொருட்களின் தெரிபடு நிறையானது வெளியேற்றப்படும் நீரின் அதேயளவு நிறையால் குறைகிறது என்பது நேயர்கள் அறிந்ததே. கடலுக்குள் இறங்கும் பொழுது உடல் கனமற்றிருப்பதையுணர்வது இதனால்தான். மன்னரின் முடியிலுள்ள தங்கம் கலப்படமா இல்லையா ? என்பதைக் கண்டுபிடிக்க வழிதேடிக் கொண்டிருந்தவர். ஒரு சீரான வடிவற்ற பொருளின் கன அளவைக் கணக்கிடுவது எப்படி என்பதைக் தெரிந்தால் பின்னர் சுலபமாக பொருளின் அடர்த்தியைக் ( = நிறை/கன அளவு) கணக்கிட்டுக் கொள்ளலாம் என்ற மட்டில் முன்னேறியிருந்தார். இதையறிந்தால் முடியின் அடர்த்தியை கணிக்க முடியும். தங்கத்தின் அடர்த்தியைவிடக் குறைவானதாயிருந்தால் வேறு உலோகங்கள் கலக்கப் பட்டிருக்கின்றன என்றாகிறது. (சோதித்த முடி தங்கமா கலப்படமா ? பொற் கொல்லர் கதியென்ன என்ற கேள்விகளுக்கு விடையை யாரும் எழுதி வைக்கவில்லை).

இம்மாதிரிக் கணங்கள் படைக்கும் வலக்கையின் உடுக்கையொலியைச் சுட்டுகின்றன.

மரபுவழியான சிந்தனைகளின் சாத்தியங்கள் எல்லாம் தீர்ந்தபின்பு ஏற்படும் குறிப்பிடத்தக்க திசை மாற்றம்- குவி முனை நகர்வு. தெளிவு. ஒரே நிறமாகப் பூத்துக் கொண்டிருக்கும் மலர் வனத்தில் காரணம் கூறமுடியாதபடி பிறழ்ந்து ஒரு செடி வேறு நிறம் வேறு அடுக்குகள் கொண்ட பூக்களை வெளியிடுகிறது. Mutation. இதே போன்று அறிவியலில் சிந்தனைத் தடம் முற்றாக மாறும் தருணங்கள் ஆவணப் படுத்தப் பட்டுள்ளன.

இவற்றைத் தருணங்கள் என ஒரு அடையாளமாகச் சொல்லலாமே தவிர, உண்மையில் இவை நீண்ட சிந்தனைச் சங்கிலியின் ஒரு வெற்றிகரமான பிரவசம். ஆக கணத்திற்குப் பின்னால் பல லட்ச கணங்கள்.

பகற் கனாவில் சிக்கல் தீர்வு

இந்த படைக்கும் வேளைகள் குளியலறையில் மட்டுமே நிகழ்வதில்லை. பகற்கனாவிலும் இத்தருணங்கள் வரலாம்.கெக்கியூலின் பென்சீன் வளையம் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். திறந்த சங்கிலி அமைப்பு வழியிலேயே சிக்கலான சேதன ரசாயன மூலகங்களுக்கு அமைப்பு முறையையை நிறுவினார்கள். ஒரு கரி மூலகம் சில ஜதரசன் அணுக்களுடன் தொடுக்கப்பட்டு நீண்டு செல்லும் அமைப்பு. இம்முறையில் முயன்றும் பென்சீனுக்கு சரியான அமைப்பு ஏற்படாமல் முரண்டு பிடித்தது. பென்சீன் மூலகத்தின் அமைப்பு பற்றி சிந்தித்து அலுத்துவிட்டு கண் அயர்ந்தார் கெக்கியூல்.அவரின் கூற்று ‘எனது மேசையடியில் எழுதிக் கொண்டிருந்தேன்.வேலை ஓடவில்லை. எனது சிந்தனைகள் வெகு தொலைவில் இருந்தன. எனது கண்முன் அணுக்கள் சதிரடிக் கொண்டிருந்தன. அவை பாம்பு போல் நெளிந்து வளைந்து வரிசை வரிசையாக ஆடிக் கொண்டிருந்ததை எனது கண்கள் கண்டன. அந்தோ! திடாரென ஒரு பாம்பு தனது வாலையே கெளவிக் கொண்டு

என் கண் முன்னே சுழன்று சுழன்று கொண்டிருந்தது. என்னைப் பரிகாசம் செய்வது போல்! இடி கேட்டு விழிப்பது போன்று திடுக்கிட்டுடேன். ‘ இந்தப் பகற்கனவால் அருட்டப்பட்டு, மூடிய தொடரில் (பாம்பு தன் வாலைக் கவ்வும்) பென்சீன் வளைய அமைப்பை அறிமுகப் படுத்தினார்.

மரத்துக்குக் கீழும் அறிவியல் அருட்டல்கள் நிகழ்கின்றன. நியூட்டனின் அப்பிள் கதை நேயர்களுக்கு தெரிந்ததே. ஜதீகமாகக்கூட இருக்கலாம். இதுவே தென்னை மரத்துக்கீழே நடந்திருந்தால் தலை (தேங்காய்ச்) சட்னி. பழம் விழுகை காலம் காலமாக நடந்து வரும் இயல்பான சாதாரண நிகழ்ச்சி. ஆனால் விலக்காக நியூட்டனுக்கு இது ஒரு அருட்டல்.

அறிவியல் வரலாற்றில் இப்படியான சிந்தனைத் தேக்கங்களும் பின் புதுத் தடத்தில் திசை மாற்றங்கள் ஏற்படுவன கச்சிதமாகப் ஆவணப்படுத்தப் பட்டுள்ளன.

பெளதீகவியலாளர்களுக்கு விசர் பிடித்திருக்கிறது

அல்லது பெளதீகத்திற்கு பைத்தியம் பிடித்துக் கொண்டிருக்கிறதா ?

19 ம் நுாற்றாண்டின் பிற்பகுதியில் பெளதீகத்தில் பல முரண்பாடுகள் அடுக்கடுக்காகத் தோன்றிக் கொண்டிருந்தன. இவற்றின் ஆரம்பம் ஒளியின் தன்மைகளால் ஏற்பட்டது. இதற்கு முன்னால் கிரகங்களின் நகர்வுகளால் ஒளிவேகம் அண்ணளவாகவே நிறுவப்பட்டது. ஒளியின் அலைத்தன்மை ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த அஸ்திவாரத்தன் மீது மேல் கச்சிதமாக மாக்ச்வெல்லின் மின்காந்த அலைக் கோட்பாடுகள் எழுப்பப் பட்டன. இவை இது காறும் செய்யக்கூடிய பரிசோதனைகள், வானியல் அவதானிப்புகள் ஆகியவை எல்லாவற்றையுமே நேர்த்தியாக விளக்கக் கூடியதாக அமைந்தது. ஊடகங்களினுடாகவே அலைகள் (அதிர்வுகள்) கடத்தப் படுகின்றன. படமுடியும். வான் வெளியிலிருந்து வரும் மின்காந்த அலைகள் எந்த ஊடகத்தினால் கடத்தப் படுகின்றன என்பதுதான் பிரச்சனை. இந்த இடத்தில் அலைத்தன்மை பற்றிய சிறு குறிப்பு வேண்டப்படுகிறது.

அலையென்பது..

அமைதியான குளத்தில் ஒரு கல்லை இடும் பொழுது, கல்விழுந்த புள்ளியை மையமாகக் கொண்டு, வட்ட வட்ட அலைகள் தொடர்ந்து விரிந்து மெதுவாக முன்னேறிக் கரையை தொடுகிறது. இங்கு நீர் ஊடகம். கல்விழும் தருணம் அவ்விடத்திலிருந்து அக்கணம் வெளியேற்றப் பட்ட நீர், பக்கத்திலுள்ள நீரை தள்ளுகிறது. இதனால் முன்நோக்கி நகரும் இயக்கம் ஆரம்பமாகிறது. இப்படியே சங்கிலித் தொடராக விளைவு ஊடகம் முழுவதும் படருகிறது. இது வெளிமுகமாகச் செல்லும் இயக்கம். ஆனால் மீண்டும் சமநிலை பெறும் பொருட்டு திரும்பவும் பள்ளத்ததை நோக்கி முதலில் வெளியேற்றப் பட்ட நீர் வருகிறது. ஆக வெளி நோக்கிய முன்னேற்றமும் உள் நோக்கிய நகர்வும் அடையாளம் காணப்பட்டது. இந்த இரு முனை நகர்வுகள் தடாகத்து (பாதையிலிருக்கும்) நீரின் ஒவ்வொரு துளிக்கும் ஏற்படுகிறது. கவனித்தீர்களானால் நீர்துளிகளானவை தத்மது தமது குறிப்பிட்ட ஓய்வு நிலைகளிலிருந்து (rest position) மிகக் கொஞ்மாகவே மேலும் கீழும் முன்னும் பின்னும் நகர்கிறது. இந்த நகர்வால் பக்கத்திலுள்ள நீரையும் இதே பரிவுடனான (response) அசைவுக்கு துாண்டுகிறது. இந்த முறையில் நீர் பரப்பில் நீர்த்துணுக்கைகள் எழுந்தும் விழுந்தும் நர்த்தனமாடுகின்றன. ஆனால் ஊடகத்தின் அசைவு ஊஞ்சல் போன்று ஒரு குறிப்பிட்ட வீச்சுக் கொண்டிருக்கிறது. ஆனால் கல்விழுந்து ஏற்படுத்திய அதிர்ச்சியானது (ஒழுங்கீனம் Disturbance) ஊடகம் முழுவதும் பரம்புகிறது. ஊடகம் பரிவாக அதிர அலை ஊடகத்தினுாடாக குடத்தப் படுகிறது.

அலை முன்னேற்றம் என்பது இதுதான். ஒலி ஒளி மின்காந்த அலைகள் அவற்றின் புலங்களில் (உ.ம் மின்புலம், காந்தப்புலம் (fields)) ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப ஊடகத்தில் பரிவான நுண்ணிய அதிர்வுகளாக மாற்றப்பட்டு ஊடகத்துாடாக பயணிக்கிறது. புலங்களில் ஏற்படும் மாற்றங்கள் அலையாக முன்செலுத்தப் (propagate) படுகிறது. அலை கடத்தப் படுகிறது என்று சொல்வோம்.

அலையின் கால வெளிப் பண்புகள்

இங்கு குறிப்பிட்ட விளக்கத்தின் பிரகாரம் அலைக்கு காலம் துாரம் ஆகிய இரு பரிமாணங்கள் இயற்கையாக வந்து சேர்வதைக் காணலாம். இதை சுலபமாக சிந்திக்கும் வழி. கரையில் நின்று கமராவால் படம் எடுத்தால் ஒரு கணத்தில் அலை எப்படியிரும்கிறது எனத் தெரிகிறது. அலையின் மையதிலிருந்து நீளவாட்டில் நீரின் ஒவ்வொரு பகுதியின் ஏற்ற இறக்கங்களை படம் தெரிவிக்கிறது. இது நேரத்தை ஒடுக்கிய (freeze time) ஒரு குறிப்பிட்ட கணத்தில் ஏற்பட்ட வெளிப் பரம்பல். Space distribution.

இனி நீரின் ஒரு பகுதியில் நிற்கும் ஒரு மீனுக்குத் தெரிவதென்ன ? ஒருகணம் ஏறியும் பின்னர் (ஆவர்த்தன நேரத்தைப் பொறுத்து) இறங்கியும் பின் சமநிலைக்கு வந்து பின்னரும் தொடர்ந்து மேலெழும்பவதுமாக – ஒரே இடத்தில் நேரம் செல்லச் செல்ல என்ன நிகழ்கிறது என்ற படம். இது நேரப் பரம்பல் – பண்பு.

ஈதர்

வெட்டவெளியானது காற்றோ வேறு ஊடகங்களோ எதுவும் அற்ற வெறும் வெளி. இங்கு எப்படி ஊடகம் என்பது இருக்க முடியும் ? ஆனால் மாக்ச்வெல்லின் கோட்பாடுகள் இந்த ஒரு சிக்கலைத்தவிர மற்றப்படி சரியாகவே இருந்தது. ஆகவே ‘ஈதர் ‘ என்ற ஒரு நுண்மையான ஊடகம் ஒன்று இருப்பதாகக் கொள்வோம் என அரைகுறையாக ஏற்றுக் கொண்டார்கள். அதற்கு மேல் வேறு பரிசோதனைகள் இதற்காக அக்காலத்தில் நிர்மாணிக்க முடியவில்லை. அறிவின் எல்லையில் நின்றிருக்கிறார்கள்.

ஒளியின் வேகம் மைக்கல்சன் – மோர்லேயால் துல்லியமாக (இதற்காக நோபல் பரிசு வாங்கியவர்கள்) நிலத்தில் நடத்திய பரிசோதனைகளால் கணிக்கப் பட்டது.

ஈதர் காற்றும் மைக்கல்சன் மோர்லேயும்

இங்கு ஒரு சிக்கலான கோட்பாடு கூறவேண்டும். பூமியின் சுழற்சி வேகம், இந்த வேகக்கூற்றை ஒளியின் வேகத்துடன் கூட்டவோ அன்றி குறைக்கவோ வேண்டியேற்படுகிறது. அதாவது பரிசோதிக்கப் படும் ஒளியலைகளின் திசையானது பூமியின் வேகத்திற்கு சார்பாக எந்தக் கோணத்தில் அமைந்திருக்கிறது என்பதைப் பொறுத்தே இந்த வேகமாற்றம் நிகழ்கிறது. புகைவண்டி நெருங்கி வரும் போதும் பார்வையாளரை பிரிந்து போகும் பொழுதும் ஒலியில் (மீள்வெண்) ஏற்படும் ஏற்ற இறக்கத்தை போன்றது. இது டொப்ளர் விளைவு Doppler Effect எனகூறப்படும். இதை ‘ஈதர் காற்று ‘ என்று இந்த விவகாரத்தில் குறிப்பிடலாம். விஞ்ஞானிகள் கருதும் ஊடகம் என்ற கோட்பாட்டின் படி இந்தகாற்று இருக்க வேண்டும். ஓரு ஊடகம் இருப்பது என்பதற்கு இது ஒரு குறைந்த பட்ச அடையாளம். ஒரு பொருள் எதிர்படும் பொழுது ஊடகங்கள் அவற்றின் அசைவுகளுக்கு ஒரு விளைவேற்படுத்தல் வேண்டும். ஆனால் பரிசோதனைகள் ஒளி வேகம் மாறிலி என்றே தெரிந்தது. முதலில் இந்த முரண்பாட்டை பரிசோதனையின் திருத்தமற்ற தன்மையால் ஏற்பட்டிருக்கலாம் என்றே கருதினர். ஒளியின் வேகமோ 186,000 மை/செக்கன், பூமியின் வேகம் வெறும் இரட்டைத்தானமே (36 மை/செ ?) ஆகவே இதை பரிசோதனை நேர்த்தியின்மை என கூறமுடியும். ஆனால் மைக்கல்சன் குழு தமது பரிசோதனைச் செம்மையை கணக்கிட்டு ‘ஈதர் காற்று ‘ இல்லை என்பது தவிர வேறு முடிவுக்கு வர முடியாது என நிறுவவே விவகாரம் சூடுபிடித்தது. அதாவது அலைகளின் அடிப்படைத்தன்மை கேள்விக்கு உள்ளயிற்று.

இப்படியான முழுமுதல் (Absolute) ஊடகம் ஒன்று சாத்தியமில்லை என்பதை சுலபமாக ஏற்றுக் கொள்ளத் தடைகள். முதலாவது மாக்ச்வெல்லின் அலைக் கோட்பாடுகளின் பின் இயற்கையை அறிந்து வருகிறோம் என்ற தன்நம்பிக்கை வளர்ந்து கொண்டு வரும் வேளை, இந்த சிக்கலையிட்டு ஒரு மிகவும் நேர்தியான (elegant) கோட்பாட்டை கைவிட மனமும் வரவில்லை. அதற்கு மாற்றாக ஒரு கோட்பாடு உருவாகும் வரை புறநடைகள் என ஏற்பாடு செய்து ஒட்டுப் போட்டுக் கொண்டிருந்தனர்.

ஒளியின் அலை/துகள தன்மைகள்

ஒளி அலையாக இருக்காது துகள்களே என்ற நியூட்டன் காலத்து எழுந்த போட்டோன் கோட்பாடு மீண்டும் பரிசீலனைக்கு வந்தது. ஏனெனில் துகள்கள் வெளிக்கூடாக வருவதற்கு ஊடகம் தேவையில்லை. இந்த ஒவ்வாமையை விளக்கி மேற் செல்ல பல குயுக்தியான புறநடைகளை – exceptions உருவாக்கினார்கள். ஆனால் மேலும் மேலும் பல விரிசல்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. இங்குதான் அயன்சுதைன் வருகிறார். ஆனால் இப்படியான புறநடைகளின் தேவையின்றி ஒரு சில அடிப்படைச் சட்டங்களை மாற்றி பல பிரச்சனைகளை ஒரேயடியாகத் தீர்த்தவர் அயன்சுதைன்.

சார்பியல் தத்துவம்

அயன்சுதைன் தீர்வுகள் பெளதிகத்தை செப்பனிட்டதுடன், பின்னால் வந்த

விஞ்ஞானிகள் ‘ஏன் இவ்வளவு குழம்பினோம். இதை யோசிப்பது அவ்வளவு கடினமல்லவே ‘ என்பதாக உணர்ந்திருக்கிறார்கள். அதுவரை உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவானது obvious என நம்பப்பட்ட சில பெளதீக ‘பொது நம்பிக்கைகளுக்கும் ‘ பொது அறிவு என்று நாம் கருத்தில் கொண்டவற்றிற்கும் common sense அறைகூவல் ஏற்பட்டது. இதைப்பற்றி காமோவ் என்ற விஞ்ஞானி 1920ல் கூறியது ‘திடாரென பெளதீகத்திற்கு விசர் பிடித்துக் கொண்டு வருகிறது அல்லது பெளதீகவியலாளர்களுக்கு விசர் பிடித்திருக்க வேண்டும் ‘.

அணுவியல் துறை வளர்ச்சி வரலாறு கூறும் முன் இந்த விஷயத்தை கையாண்டிருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது. மீண்டும் வேறொரு முறை வேறு கோணத்தில் முயற்ச்சிப்போம்.

நான் சொல்ல வருவது. ஆர்கிமீடிசு, நியூட்டன் அயன்சுதைன் ஆகியோரின் தீர்வுகள் ஆச்சர்யமான முறையில் மிக எளிமையானவை. நேர்த்தியானவை Elegant. ஆனால் மிகவும் அடிப்படையானவை.

வாழ்வில் அருட்டல் சமயங்கள்

கவிஞர்களுக்கும் பொறிதட்டும் நேரங்கள் உண்டா என்பதை அவர்களைத்தான் கேட்கவேண்டும். ஆனால் வால்மீகி ராமாயணம் பற்றி ஒரு ஜதீகம். வேடனின் அம்பால் வீழ்த்தப் பட்ட ஆண் கிரவுஞ்சப் பறவையின் சோடியின் சோககீதத்தால் அருட்டப்பட்டு அதை அடிநாதமாகக் கொண்டு காவியத்தை புனைந்தாராம்.

வாழ்க்கையில், மற்றைய துறைகளில் இந்த சிந்தனைத் தடம் அடிப்படையாக மாறும் தருணங்கள் வரையறுக்கப் பட்ட முறையில் வெளிச்சமாவதில்லை. முதலாவது கியரில் பாரத்தை ஏற்றிக் கொண்டு மலைப்பாதையில் செல்லும் எனக்கு இப்படி பொறி தட்டும் கணங்கள் இருப்தாகத் தெரியவில்லை. மன இரைச்சலின் மட்டம் குறைந்தால் கொஞ்சம்

தெளிவு – அவ்வளவே. குறிப்பாகக் காரணம் கூற முடியாததும், ஆனால் தனக்கே யுரித்தான குதர்க்கமான தர்க்கங்களுடன் எண்ணங்கள் ஒன்றையென்று பற்றி சங்கிலித் தொடராக வெளியேறிக் கொண்டிருப்பதைத்தான் இரைச்சல் என்று குறிப்பிடுகிறேன். இந்த எண்ண உற்பத்தி வேகம் தணியும் பொழுதுதான் தெளிவு.

‘எப்பொழுதுமே இந்த வலக்கை உடுக்கையொலி அதிர்ந்து கொண்டுதானிருக்கிறது. ஆனால் இரைச்சலில் எங்களுக்கு கேட்பதில்லை ‘ என்பதாகவும் சிலர் கூறுகிறார்கள். அதை அப்படியே விடுகிறேன். ஆனால் இந்த படைப்பாற்றல் பற்றி பல வகையில் இப்போ முகாமை முறைகளில் பேசப்படுகிறது. இதை பக்கவாட்டு (பக்கவாதம் அல்ல) சிந்தனை lateral thinking, creative thinking என்ற ரீதியில் சொல்லிச் சொல்லியே

கோடாஸ்வரரானவர் Edward De Bono. இன்னமும் நான் படிக்கவில்லை.

‘பூமி (ஒரு வகையில்) தட்டையானது! ‘ – கலீலியோ

இந்த மிலேனியத்தின் விஞ்ஞான வளர்ச்சியின் ஒரு மைல் கல் கலீலியோவின் பூமியையும் அண்டங்களைப் பற்றிய கோட்பாடுகள். பூமி தட்டையானது அல்ல அது உருண்டை என்பதை பல கணிப்புகளுடன் சரியாகவே அனுமானித்தார். பூமி உருண்டை வடிவானது என இப்போ நாங்கள் ஒத்துக் கொண்டாலும், பெரும் பாலும் அதை தட்டையாகவே இப்பொழுது கூட பாவனை செய்கிறோம். இந்தப் பாவனையில் நாளாந்த நன்மைகள் உண்டு. உதாரணமாக வீடு கட்ட பிளான் போடவோ, றோட்டு போட நில அளவை செய்யும் பொழுதோ இந்த அண்ணளவு பிரமாணம் கயிறடித்து சாலை அமைக்கிறோம். தவிரவும் நம்மில் எத்தனை பேர் பூமி உருண்டையானது என்னும் நினைப்பில் கார் சைக்கிள் ஓட்டுகிறோம். ஆக உலகம் தட்டையானது என்று சொல்வது அவ்வளவு முட்டாள்தனமாகாது.

ஆனால் பூமி உருண்டையானது என்பதைச் சொன்ன கலீலியோ பட்டபாடு கொஞ்சமல்ல. கத்தோலிக்க திருச்சபை அக்காலத்தில் பூமி தட்டையானது என்பதை குரங்குப் பிடியாக பிடித்துக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. பின்னால் இது ஒரு ஒத்து கொள்ளப்பட வேண்டிய உண்மையானது தெரிந்ததே. இந்த சித்தாந்த மாற்றங்கள் திருச் சபையின் ஆன்மீக செல்வாக்கை குறைக்கவில்லை என்பதைப் பார்க்கும் பொழுது எதற்காக தேவையில்லாத விஷயங்களில் தலை நுழைத்தார்கள் என்பது ஆச்சர்யமாயிருக்கிறது. அன்றைய சந்தர்ப்பத்தில் அப்படி யொரு கெளரவ நிலைப்பாடு.

சில உண்மைகள் நாங்கள் உள்வாங்கிய பொது அறிவு-சாதாரண புலன் வழி அனுமானங்களுடன் கும்பியுணர்வுடன் common sense & gut feel முரண்பட்டாலும், அதை எங்களுக்கு விடுக்கப் படும் அறைகூவலாக எடுத்துக் கொள்கிறோம். ஏற்றுக் கொள்வதால் எங்கள் ஈகோவுக்கு கொஞ்சம் அடியைத் தவிர வேறு இழப்புகள் எதுவும் நேர்வதாக தெரியவில்லை.ஆனால் நாம் அவற்றை காலா காலத்தில் ஏற்றுக் கொள்வதில்லை. புத்திசாலித்தனம் என்பதே இவற்றை தருணத்தில் புரிந்து கொள்ளுதல் தானோ. ஏதோ ஒரு நிலைப் பாட்டடை எடுத்துக் கொண்டு அலவாங்கில் கட்டிய மாடு போல் அதற்குள் நின்று உழலுகிறோம். இன்றும் எங்களின் பல பிரச்சனைகள் இப்படியானவையே.

மேற்கூறிய உதாரணம் மனித இயல்பு குறித்து பொதுமையானது. நான் கலீலியோ கதையை உதாரணமாகச் சொன்னது அவர் சென்ற மிலேனியத்தின் கணக்கிலெடுக்ப்பட வேண்டிய 10 பேருள் ஒருவர்.

இனி கலீலியோவின் வாக்கு மூலத்தின் ஒரு பகுதி.

‘எனறாலும் அது இயங்குகிறது! ‘

‘பூனிதமான லார்ட் கார்டினல்களே!புளோரன்சு நகர் வாசியும், காலம்சென்ற வின்சென்சியோ கலீலியையின் மகனும், 70 வயது நிரம்பியவனும் கலீலியை கலீலியோவான நான், இத்தால் என் கண்முன் உள்ள திருநுாலைத் தொட்டு சத்தியம் செய்து கூறிக் கொள்வது என்ன வென்றால், சூரியன் நிலையானது, பூமி சூரியனைச்சுற்றி வலம் வருகிறது என்ற பொய்யான கருத்துக்களை நான் கை விடுகிறேன். இனி ஒரு நாளும் அந்த உண்மையற்ற பொய்யான கோட்டாட்டை ஆதரித்து பேசமாட்டேன், கற்பிக்க மாட்டேன்… தவறினால் அதற்குரிய தண்டனையை அனுபவிக்கச் சித்தமாயுள்ளேன் என உறுதியளித்து சத்தியம் செய்கிறேன். ‘ இந்த குற்ற ஒப்புதலுக்குப் பிறகும் அவர் தடுப்புக் காவலில் வைக்கப் பட்டார். நீண்ட குற்ற ஒப்புதலை அளித்த பின்பும் அவர் ‘ எப்பூர் சீ மூவே ‘ ‘என்றாலும் அது இயங்குகிறது! ‘ என்று சொன்னார் என்றொரு கதையும் உண்டு.

விண்வெளியுகத்திற்கு பின்னர், பூமி உருண்டையானது என்பதை நேரடிப் புலன்களால் உணர முடிந்தது. சிறுவனாக இருந்த காலந் தொட்டு ஏதோ ஒரு வழியாக உலகம் உருண்டை என்பதை கற்பிதம் செய்திருந்தேன். ஆனால் இது ஒரு தெளிவில்லாத சமுசயம் கலந்த படிமம். இந்தக் கற்பிதங்களையும் விட மிகவும் தெளிவாக matter of fact ஆக விண்கலப் படங்கள் அமைந்திருந்தன. அப்போலோ செயஸ் வீனஸ் சகாப்தத்திற்கு பின்னர் தகவல் தொடர்பு செய்மதிகள் பவனி வந்துி, டிவி பிம்பங்கள் உடனுக்குடன் ஒரு கண்டத்திலிருந்து பிறிதொரு மூலைக்கு ஒளிபரப்பாகியது. இந்த வெகுசன தொடர்பு புவியூர் Global Village என்னும் ஒரு பதத்தை பாவனைக்கு கொண்டுவந்தது. இந்த படிமத்தை பல விதமாக குறிப்பிடலாம். ஆனால் எப்படிச் சொன்னாலும் கலை கலாச்சாரம் ஆகிய துறைகளில் ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டம் – உலகளாவிய பார்வை ஏற்பட்டுக் கொண்டு வருகிறது. இப் படியான பார்வை தொன்று தொட்டு அறிஞர்கள் மட்டத்தில் இருந்ததுதான். வித்தியாசம் இது

இப்போ வெகுசன மட்டத்திற்கு வந்திருக்கிறது என்பதுதான்.

Series Navigation