கணினிக்கட்டுரைகள் – 4 – மா.பரமேஸ்வரன்

This entry is part of 10 in the series 20000702_Issue

6. ISDN என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா ?


இதற்கு முன்பு நான் என்னுடைய இணையமும்-கணினிவலையமைப்பும் பற்றிய கட்டுரையில் ISDN என்பதனைப்பற்றி கூறியிருக்கிறேன் இன்று சற்று விரிவாகக் காண்போம்.

இணையத்தில் இரண்டு வகையான இணைப்புகளை நாம் பெறலாம் அவை Dial-up இணைப்பு மற்றும் (Direct)நேரடி இணைப்பு அதாவது அவை ஆங்கிலத்தில் Dial-up Networking and Direct Networking எனப்படும். இவ்விரண்டு இணைப்புகளிலுமே நாம் தொலைபேசிகம்பிகளின் மூலமாக இணையத்தில் உலவுகிறோம் முதல் ஒன்றில் அதாவது Dial-up இணைப்பில் நாம் நம்து கணினியில் இருந்து Web Server என்னும் கணினிக்கு என்களைச்சுழற்றி நமது User name மற்றும் Password ஆகியனவற்றைத் தந்து இணையத்துடனான இணைப்பை வேண்டுகிறோம். 24 மணி நேரமும் இணையத்திலேயே இருக்கும் அந்த Webserver என்னும் கணினி நமது User Name மற்றும் Password ஆகியனவற்றை நன்கு ஆராய்ந்து அவை சரியானவையாக இருந்தால் நம்மையும் இணையத்தில் ஒன்றாக இணைக்கின்றது. இல்லை எனில் இணைக்க முடியாது என்று சொல்லி நம்து வேண்டுகோளை மறுத்துவிடுகிறது.

ஆனால் இரண்டாவது வகையான நேரடி இணைப்பில் அதாவது Direct Networkingல் நமது கணினி மேற்கூறிய இணையப்பரிமாறியுடன்(Webserver) எப்பொழுதுமே, தனியாக இதற்கெனவே பெறப்பட்ட தொலைபேசிப்பினைப்பின் உதவியோடு, இனைக்கப்பட்டிருக்கும்

இவ்விரண்டில், Dial-up இணைப்பில் நாம் இணையத்தில் வலைப்பக்கங்களை மேய்ந்து கொண்டிருக்கும்போது நமது எண்ணுக்கு யாராவது தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றால் அவரால் நம்மைத்தொடர்புகொள்ள முடியாது ஏனெனில் அவர் இவ்வினைப்பு உபயோகத்தில் இருப்பதற்கான சத்தத்தையே கேட்க்க முடியும். ஆனால் இந்த நேரடி இணைப்பில் இந்தவித பிரச்சனைகள் ஏற்படுவது இல்லை. இத்தகைய நேரடி இணைப்பு பெரிய நிறுவனங்கள் தங்களது உள்ளிட வலையமைப்பை இணையத்தோடு இணைத்து அதை தனது நிறுவனத்தில் இருக்கும் அனைத்து கணினிகளிவழியாகவும் பயன்படுத்டும் படி செய்ய பயன்படுத்தப்படுகிறது. (இத்தகைய நேரடி இணைப்பு தனி நபருக்கு தேவையற்றது) நாம் இங்கும் தொலைபேசிக்கம்பியின் வழியே இணைப்பதாலும் பலர் ஒரே நேரத்தில் இணையத்தில் உலவுவதாலும் வேகம் குறைந்துவிட வாய்ப்பிருக்கிறது.

இச்சூழலில் இது போன்ற நிறுவனைங்களை இயக்க பல தொலைபேசி இணைப்புகளும் பெறவேண்டியுள்ளது உதாரணத்திற்கு தொலைபேசி, இணையம், தொலைநகல், மற்றும் பல. ஆக இதனைத்தவிர்த்து இவையனைத்தையும் ஒரே ஒரு பினைப்பில் செய்ய உருவா கக்ப்பட்டதே இந்த ISDN எனப்படும் Integrated Service Digital Network என்பதாகும்.

இத்தகைய பினைப்பில் தொலைபேசிக்கம்பிகள் தவிர Fibre Optics அல்லது Optical Fibres எனபடும் ஒளியிழை கம்பிகளும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் உலோகக்கம்பிகளுக்குப்பதில்லக தகவல்கள் ஒளியின் மூலம் கடத்தப்படுகின்றன. நமது சாதரண கம்பிகளில்(cable) பார்த்தீர்களேயானால் அதின் உள்ளே ஒரு தாமிர அல்லது அலுமினியக் கம்பி இருக்கும் ஆனால் இந்த fibre optics கம்பிகளில் அவை இருக்கமாட்டா.

இத்தகைய இணைப்புகள் ஒரே நேரத்தில் பல தரப்பட்ட தகவல்களை மிக விரைவாக எடுத்துச் செல்லவல்லவை- இவற்றின் ஒரு இணைப்பு பெறப்பட்டால் அதன்மூலம் நாம் இணையம், தொலைபேசி, தொலைநகல் மற்றும் 7 அல்லது 8 தொலைத்தொடர்பு சாதனங்களை ஒரே நேரத்தில் பயன்படுத்தமுடியும். அக்கம்பியில் வரும் தகவல்கள் எந்த எந்த சாதனத்திற்கானவை என்பதைச் சரியாகப்பிரித்துத்தர ISDN Adopter என்னும் கருவி பொருத்தப்பட்டு அதனிருந்து நமது வீட்டில் அல்லது அலுவலகத்தில் உள்ள சாதனங்களுடன் இணைப்பு ஏற்படுத்தப்படும்.

இவ்வொரு இணைப்பில் நீங்கள் இணையத்தில் உலாவும் நேரத்திலேயே தொலைபேசியில் உறையாடவும்,அதேநேரத்தில் வரும் தொலைநகல்களைப் பரிசீலனை செய்யவும் இயலும்,அது மட்டுமல்லாது இதன் மூலம் தகவல் பரிமாற்றம் விரைவானது என்பதால் இனையத் தொலை காட்சிசந்திப்பிற்கு (Video Conferencing) இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

 

 

  Thinnai 2000 July 02

திண்ணை

Series Navigation