கணினிக்கட்டுரைகள் – 4 – மா.பரமேஸ்வரன்

This entry is part of 8 in the series 20000625_Issue

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர


1957 களில் சோவியத் அரசு தனது ஸ்புட்னிக் என்னும் செயற்கைகோளை விண்ணில் ஏவி, வெவ்வேறு இடங்களுக்கு உடனுக்குடன் தொடர்புகொள்வதற்கான செயற்கைகோள் சார்ந்த ஒரு தொலைத்தொடர்புவலை அமைப்பை ஏற்படுத்தியது. இதனைக்கண்டு அதிர்ந்த அமெரிக்க அரசின் பாதுகாப்புத் துறை, ARPA அதாவது Advanced Research Projects Agency என்ற ஒரு புதிய அமைப்பை உறுவாக்கி, அதனிடம் கணினி சார்ந்த தகவல் தொடர்பு வலையமைப்பை ஒன்றை ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக்கொண்டது.

கணினியை ஒரு கணக்குப்போடும் எந்திரமாகவெ பாவித்துவந்த அக்காலத்தில் அதனை ஒரு அதிவிரைவுத்தகவல் பரிமாற்ற சாதனமாக்கும் தனது நீண்ட நெடிய ஆராய்ச்சியில் இறங்கியது ARPA அமைப்பு. வெவ்வேறு இடங்களில் உள்ள கணினிகளை ஒன்றாக இணைப்பதற்கான கேட்பாடுகள் வடிவமைக்கப்பட்டன, தொலைதுரக் கணினிகளை தொலைபேசிக்கம்பிகள் வழியாக இணைப்பதற்கான வழிமுறைகளும் ஆராயப்பட்டன நீண்ட ஆராய்ச்சியின் விளைவாக 1968 ஜூன் மாதம் ARPA தனது ஆராய்ச்சியின் முடிவான ARPANET என்னும் கணினி வலையமைப்பினை அரசின் பார்வைக்குக் கொண்டுவந்தது.

இவ் ARPANET வலையமைப்பின் சிறப்பம்சங்கள் யாதெனில் இது வெவ்வேறு இடங்களில் உள்ள கணினிகளை வெவ்வேறு வழிகளில் ஒன்றாக இணைக்கிறது அதனால் ஒரு பகுதியில், இணைப்பில் ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டாலோ, அல்லது போர்க்காலங்களில் ஒருபகுதி வலையமைப்பே துண்டிக்கப்பட்டாலோ பிற பகுதி எந்த விதப்பதிப்பும் இன்றி தகவல் தொடர்புக்குப்பயன்படும். ஏதோனும் ஒரு வழியை நம்பிக்கொண்டிருக்கவேண்டியது இல்லை.

(நம்முடைய இணையமும் அவ்வாறே! உலகின் ஒரு பகுதியே அழிந்து பட்டாலும் மற்றொரு பகுதி எந்த வித பாதிப்பும் அடையாமல் தன்னுடைய கடமையை ஆற்றிக்கொண்டிருக்கும். இதற்குக்காரணம் இணையத்தில் பயன்படுத்தும் TCP/IP போன்ற கோட்பாட்டு மென்பொருள்களும், Router போன்ற சாதனங்களும் தகவல் பொட்டலங்களை அனுப்பும் போது பாதைகள் பாதிப்படையாமல் இருக்கின்றனவா என்று பார்த்துவிட்டே அனுப்புகின்றன எனவே அப்பொட்டலங்கள் பாதிக்கப்பட்ட உலகப்பகுதிக்குள் சென்று காலங்கடத்தும் வாய்ப்பே இல்லை)

அடுத்ததாக இவ்வமைப்பு வெவ்வேறு வகையைச்சார்ந்த, வேறுபட்ட அமைப்பில் உருவாக்கப்பட்ட அதாவது நாம் பயன்படுத்தும், IBM வகைத் தனிக்கணினிகள் APPLE MAC வகைக் கணினிகள், MAINFRAME, அதிவிரைவுக்கணிகள்(SUPER COMPUTER) மற்றும் MINIக்கணினிகள் போன்ற கணினிகளையும் ஒன்றாக இணைத்து அவற்றிற்கு இடையிலும் தகவல்களைச் செலுத்தும் வல்லமை உடையதாக அமைக்கப்பட்டது இதனை ஆங்கிலத்தில் Machine Independant என்று கூறுவது உண்டு.

அதுமட்டுமல்லாது இது வேறுபட்ட வினைக்கலன்கள்(Operating System)பயன்படுத்தப்படும் கணினிகளயும் வெற்றிகரமாக இணைக்கும்படியும் உறுவாக்கப்பட்டது. இதனை ஆங்கிலத்தில் Platform Independant என்று கூறுவது வழக்கம்.

இத்தகைய ARPANET முதலில் அமெரிக்க இராணுவத்தில் பயன்படுத்தப்பட்டாலும், பின்பு ஆராய்ச்சிக்கான தகவல்களை பரிமாறிக்கொள்ளும் பொருட்டு அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு இடையே ஒரு வலையமைப்பை ஏற்படுத்தி அதைத்தம்மோடு ஒன்றாக இணைத்துக்கொண்டது- பின்னர் இது வியாபார நோக்கில் அமெரிக்க நிறுவணங்களை தம்மோடு இணைத்துப் பின்…….உலகமெல்லாம் பரவி இணையம் என்னும் பெயரில் வழங்கப்படலாயிற்று.

இப்பொழுது இவ்விணையம் யாருக்குச்சொந்தம் ?

குறிப்பிட்ட யாருக்கும் சொந்தமல்ல, அந்தெந்த நாடுகளின் இணையத் தொடர்பை அந்தெந்த நாடுகளே கவணித்துக்கொள்கின்றன, மற்ற நாடுகளுடனான அந்நாட்டின் தொடர்பை அவ்விரு நாடுகளும் ஒழுங்குபடுத்திக்கொண்டுள்ளன இருந்தாலும் வலைத்தளங்களின் பெயர், தகவல் பரிமாறும் கணினிகளின் IP முகவரி போன்றவை தனிச்சீர்மை(unique) பெற்றவையாதலால் அவை உலகளவில் ஒழுங்குபடுத்தப்படுகின்றன

அதற்காக The Internet Corporation for Assigned Names and Numbers மற்றும் Internet Assigned Numbers Authority போன்ற உலகலாவிய ஒழுங்குபடுத்தும் அமைப்புகள் செயல்பட்டு அவற்றை நெறிப்படுத்துகின்றன.

 

 

  Thinnai 2000 June 25

திண்ணை

Series Navigation