அம்மாவின்காலங்கள்.

This entry is part 40 of 49 in the series 19991203_Issue

-வ.ஐ.ச.ஜெயபாலன்


  1.
அம்மா
இத்துருவத்துப்பாலையில்
உன்  மனசானேன்.
இன்று நான் எனது சோகங்களை 
எழுதப்போவதில்லை.
புலம்பலேஒரு கவிஞனின் ஆத்மாவும்
அமர காவியமும் ஆகிவிடுமா ?
மேலும்
நீ  காணவும் கேட்கவும் விரும்புவது 
துயர் மீறி எழுதலையே.
எனது கல் நெஞ்சப் பிஞ்சில்
‘மலையேவரினும் தலையே சும ‘ என
பொறித்தாயே.

  உன்னைஎழுதக் காமுற்றேன் அம்மா.
இது  தாலாட்டாய்
நிலாச்சோற்றுப் பராக்குகளாய்
வினோதக்கதைகளாய்
சொல்லித்தந்த கவிதைகளாய்
நீ  நட்ட தமிழ்.
இன்று உனக்கு விடைதரும் நாட்கள்.
நாளை
தமிழ்உனது பள்ளி அறையாகும்.
    
அம்மா
ஆயிரம்கரங்களால் 
உலகைக்காட்டியவளே.
நீபார்த்ததும்நான் பார்த்ததும் ஒன்று. 
மேலும்அவை வெவ்வேறு.
காலங்களும்இடங்களும் நதிபோல.
கவிதைகள்அங்கு நுங்கும் நுரையுமாய்.
அன்று இராசராசனின் மாலுமிகளும் 
இன்று பாலாவும் முத்துவும் கண்டது 
ஒன்றாவேறா ? 
காலம்தோறும் கவிதைகள் போல
அம்மாநமக்கிடையே
ஒன்றாயும்பலவாயும் உள்ளவற்றை 
    பாடுவேன். 

  அம்மாஈழத் தமிழன்  விதி 
வழியைத்தவறவிட்ட
பேரறியாத்தேசத்துப் பறவை.
ஒரு  வான் இடிந்த புயல் நாளில்
நீ  தோப்பு வைக்க எண்ணிச்
சுமந்தஉயிரின் நறுங்கனியை 
தின்றதது.
எங்கோதுருவத்துக் கரைக் கல்லில்
அதன் பீயில் கிடக்கின்றேன்
என்  கனிகளைச் சுமந்த படி.

  உனது சோகங்களை பிடிக்க 
என்னிடம்வார்த்தைகள் இல்லை.
அது  எப்பவுமே கனவுகளில் முடிகிறது.
அதில்மகிழ்ச்சி முளை கட்டுகிறது.
அது  விலாங்கைப் போல
பாம்புஎன்கிறபோதுமீனாகி விடுகிறது.
நான் தேர்ந்த கடலோடிதான்
கப்பலின்கீழே திரிகிறதோ
திமிங்கிலமாய்உனது  நிழல். 
கிழியக்கிழிய வலைகளை வீசுவேன்.
உடையஉடையப் படகுகளில் 
    தொடர்வேன்.
இதுதான்எனது காவியம்.

  உனது மனசு 
ஆதிக்குடிகளின்கனலும் உமிச் சட்டி. 
அது  உனது தொழுகை
அது  உனது தோழமை
அது  உனது தொன்மம்
அது  உனது வாழும் விழையாட்டு.
அது  உனது விழையாட்டின் வாழ்வு.

  அம்மாஉன்னைவிட 
நான் அதிகம் அறிந்தவனுமல்ல.
காலையில்
புகைத்திரையுள்ளிருந்து
உணவுத்தட்டுகளுடன் நீழும் உன்கை.
அடுப்பங்கரையே
உன்  உலகென்று நானிருந்தால்
வீடு திரும்புகையில் 
உன்  கண் எட்டா ஊர்களில்
நான் களித்த குறும்புகளைச் 
சொல்வாய்கடிவாய்
தேர்ந்துஅறிவுரைப்பாய்.
அசரீரிகளைஈடாய் வைத்தா
எனது காலம் வானொலி பெற்றது.
ஞானக்கண்ணை விற்றா
எனது பிள்ளைகளின் காலம் 
இணையம்கொண்டது. 
என்  காலங்கள் மகிமையானதுமல்ல. 
உனது காலங்கள் இருளானது மல்ல.
அன்றும்இன்றும்
சூரியன்ஒன்றே.
கற்பிக்கும்காலம் 
சுழன்றுதிரும்பி வந்தது 
எனது மகன்களோடு.
    

  2
     
தாயே
உனது முலைப் பாலில்
உயிர்த்ததுஎனது உயிர்.  
உனது தாலாட்டில் முளை எறிந்தது 
எனது அடையாளங்கள்.
நீ  எனது தொன்மங்களின் தாய்.
தமிழ்எனது தாய்த் தொன்மம்.
உன்நாவேஅவளின் 
வற்றாதமுலை.

  அந்தப்பனிகொட்டும் மார்களியின்
பதின்மூன்றம்விடியலின் முன் 
கன்னித்தாயே
ஏதோமூத்திரப் பெருக்கு நோயென 
அஞ்சிஅதிர்ந்தவளே.
‘   பன்னீர்க்குடம் உடைந்தது ‘ என
பிரபஞ்சப்பெருவெடிப்பின் ( ‘Big Bang ‘) 
    போது 
சிவன்சிரித்த சிரிப்புப்போல்
உன்  பாட்டி சிரித்தாளே.

  அந்த அதிகாலையில்
பிரபஞ்சம்அதிர
பிளந்ததுநீ.

  மனசில்நான்.
காதில்நான்.
கண்களில்நான்.
அந்தப்
பூமி நின்ற  தருண முடிவில்  
உன்  கைககளில் உன் பிஞ்சு.

  காலங்களின்மீது எழுதுகிறேன்
உடைந்தஎன் சூரியனே
நான் பிழந்த உன் ஆத்மா.
நான் உனது உயிர்த் துண்டு.
புதுக்கோளாய்சிதறிய உன் 
மனசும்மாமிசமும் நான்.
உனது பூமி.
    
    (- தொடரும்) 
 
 

Series Navigation<< <P>ரேகா ராகவன் கவிதைகள்</P>  பசுவய்யா கவிதைகள் >>