கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -1)

This entry is part [part not set] of 40 in the series 20110522_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“நான் நண்பன் ஒருவனிடம் பேச உட்காரும் போது திருவாளர் பிதற்றுவாய் அழைக்கப் படாமலே மூன்றாவது நபராய் எம்மோடு ஒடிக் கொள்வார். நான் ஒதுக்கினாலும் எப்படியாவது நெருங்கிக் கொண்டு தன் பிதற்றலை எதிரொலித்து எனக்குச் சின மூட்டுவார். அது என் வயிற்றைக் கலக்கிக் கெட்டுப் போன புலாலாகத் தொல்லை கொடுக்கும்.”

கலில் கிப்ரான். (Mister Gabber)

+++++++++++
இசை ஆத்மாவின் நாதம்
+++++++++++

என்னிதயம் கவர்ந்த
வனிதை அருகே அமர்ந்து அவள்
வாய்மொழி கேட்டேன்.
அலையத் தொடங்கும் என் ஆத்மா
யாதும் கனவாய்த் தோன்றும்
வரம்பற்ற
பிரபஞ்ச வெளியில் !
உடலொரு
முடங்கிய சிறை போல் தெரியும் !
என்னரும் காதலி
வழிபடும் மந்திர மொழிகள்
நுழைந்திடும்
என் இதயத்தின் ஊடே !

+++++++++++

இதுதான் இசை நாதம்
என்னரும் நண்பரே !
கேட்டேன் அதைக் காதலியின்
பெரு மூச்சில் !
வாய் மொழியில் அது
வந்தது !
சொல்லியும் சொல்லாத இதழ்களின்
மெல்லோசையில்
எழுந்தது !
என் செவி வாயிலில்
தடம் வைத்த
இசை நாதத்தில் கண்டேன்
என் காதலி இதயம் !

+++++++++++

இசை என்பது
இனிய ஆத்மாக் களின் நாதம் !
அதன் மெல்லிசை
விளையாடும் தென்றல் !
காதல் நாண்களை
மீட்பது இசை நாதம் !
மென்மை யாய் இசை விரல்கள்
நமது உணர்வுக் கதவைத்
தட்டும் போது
விழித்தெழும் முன்னால்
கழிந்து போன
நீண்ட காலப் புதை
நினைவுகள் !

++++++++++++

சோக முறிவு இசை நாதம்
துக்க நினைவுகளை
முன்னிறுத்தும் !
இசையின் மௌன ராகங்கள்
இனிய நினைவையும்
எதிர் நிறுத்தும் !
நாண்களின் சோக நாதம்
நம்மை அழ வைக்கும்
நமக்கினியோர் மரண இழப்பில் !
அல்லது
கடவுள் அளித்த அமைதியில்
களிப்புண் டாக்கும்
நமக்கு !

(தொடரும்)

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 16, 2011)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -4)

This entry is part [part not set] of 42 in the series 20110508_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“நான் பணி செய்யப் போகும் போது திருவாளர் பிதற்றுவாய் என் பின்னால் வருவார் ! என் மூளை உணர்வைக் கிளரிவிட்டுச் செவியில் முணுமுணுப்பான் ! நானதைத் தவிர்க்க முயலும் போது, அவன் கெக்கரித்து மீண்டும் அர்த்தமற்ற வார்த்தைகளை நீரோட்ட வெள்ளம் போல் ஓட விடுவான்.”

கலில் கிப்ரான். (Mister Gabber)

+++++++++++++++
காரணம் (Reasoning)
+++++++++++++++

முதலில் தெரிந்து கொள்
உன் சுய மதிப்பை
அதன்பின் நீ
அழிந்து போக மாட்டாய் !
மூல ஆதாரம் அறிவதே
உனக்கு வழிகாட்டும் ஒளி ! அதுவே.
உண்மைக்
களங்கரை விளக்கு !
வாழ்க்கைத் தோற்றத்துக்கு
மூல ஆதாரம் உணர்வாய் !
அறிவை உனக்கு அளித்துளான்
இறைவன் !
அந்த ஒளியில் நீ
அவனை வழிபடு வதால்
உனக்குத் தெரிந்திடும்
உன் வலுவும் பலவீனமும் !
உன் விழியில் உள்ள தூசி
தொலைவில்
உனக்கே தெரியாது போனால்
பக்கத்து நபர் கண் தூசியைப்
பார்க்க மாட்டாய் !
ஒவ்வோர் நாளும் நீ
உன் மனச் சாட்சியை
உற்று நோக்கு !
குற்றங் களைத் திருத்திடு !
கடமையில் தவறினால்
காரண அறிவும்
கைவிட்டுப் போகும் !
காரண மூலமும்
பொய்யாகிப் போகும் !

(தொடரும்)

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 3, 2011)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -2)

This entry is part [part not set] of 33 in the series 20110424_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“பிதற்றுபவரைப் பார்த்து அவரது பிதற்றலைக் கேட்டு நான் சலிப்படைந்து விட்டேன். அவரை வெறுக்கிறது எனது ஆத்மா. காலை எழுந்து தினச் செய்தித் தாளையோ கடிதங்களையோ படிக்கப் போனால், அவை முழுவதிலும் வெறும் வம்பளப்புகளைத்தான் காண்கிறேன். தொங்கிக் கொண்டிருக்கும் பொருளற்ற வாசகம் அவற்றில் வஞ்சகம் கலந்து எழுதப் பட்டுள்ளன.”

கலில் கிப்ரான். (Mister Gabber)

++++++++++++
காரணம் (Reasoning)
++++++++++++

கவனமாய்க் கேள் !
காரணம்
உதவி யின்றிப் போகும்
உன் கையில்
அறிவின்றிப் போனால் !
உடன் பிறப்புச் சகோதரி
அறிவு இல்லாமை
காரணத் துக்கு
வீடில் லாத வறுமை !
அறிவுக்குக்
காரணம் இல்லாமை
கதவில் லாத வீடாகும் !
காரணம் இல்லாமல் போயின்
காதல், நீதி, நேர்மைக்கு
ஆதார மின்றி முறியும் !

+++++

நீதி, நெறி இல்லாத
கல்வி கற்ற மனிதன்
நிராயுத பாணியாய்ப்
போருக்குச் செல்லும்
வீரனுக்கு ஒப்பா வான் !
போர்ச் சினம்
வாழ்க்கையில் வீணாகும்
அவன் இனத்துக்கு !
தூய்மை யான
நீர்க் குடத்தில் கலந்த
கத்தாழை வித்துப் போலாகும் !
காரணங் களோடு
கல்வி கற்பது
உடலும் ஆத்மாவும்
உறவாடல் போலாகும் !
உடல் இல்லா விட்டால்
ஆத்மா வுக்கு
ஒன்று மில்லை !
வெறும் காற்றாய்ப் போகும் !
ஆத்மா இல்லா விடில்
உணர்வற்ற கூடாகும்
உடம்பு !

(தொடரும்)

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (April 19, 2011)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -1)

This entry is part [part not set] of 46 in the series 20110417_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“சொத்தைப் பல்லைப் “பிடுங்கு” என்று சொன்னால் பல் டாக்டர் உன்னைப் பார்த்து எள்ளி நகையாடுவார். காரணம் நோயை மறைக்கும் பல் டாக்டர் கலைத்திறனை இதுவரை நீ கற்றுக் கொள்ள வில்லை. அழுத்திக் கேட்டால் இப்படிச் சொல்லிக் கொண்டு உன்னை விட்டு ஒதுங்கிச் செல்வார் : “இந்த உலகில் தூய கருத்தியல்வாதிகள் (Idealists) எனப்படும் பல மனிதர் பலவீனக் கனவுகள் உடையவர்.”

கலில் கிப்ரான். (Decayed Teeth)

++++++++++++
காரணம் (Reasoning)
++++++++++++
pandian

காரணம் உன்னிடம் பேசினால்
காது கொடுப்பாய் !
பாதுகாப் புறுதி அது !
அதன் உதவியை நாடு !
அறிவுக்கு
ஆயுதம் அளிக்கும் உனக்கு !
ஆண்டவன்
உனக் களித்த வற்றுள்
காரணத் தைப் போல்
வலுவான கை
வேறு ஒன்றில்லை !
காரணம்
உன்னிடம் பேசும் போது
உதாரணம் நீ அதற்கு
இச்சைக்கு எதிராக !
காரணம்
உனக்கு எச்சரிக்கை மந்திரி
நம்பத் தகும் வழிகாட்டி !
ஞான அறிவூட்டி !
இருளில் ஒளிகாட்டி !
சினம் என்பது ஒளி ஊடே
இருள் போன்றது !
அறிவுக்குக் கதவைத்
திறந்து வை !
காரணம் தெரிந்திடச்
சாளரம் திறந்திடு !
அவசரப் புத்தியைத் தவிர்ப்பாய் !
அவ்வுரைதான் உனக்குச்
செவ்வழி காட்டும் !

(தொடரும்)

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (April 12, 2011)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -5)

This entry is part [part not set] of 39 in the series 20110410_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

நீ அழுத்திக் கேட்கும் போது சிரியன் தேசம் ரொட்டியைச் சொத்தைப் பற்களால் கடித்து ஒவ்வொரு கவளைத்தையும் நச்சு உமிழ் நீரில் கலந்து நாட்டின் வயிற்றில் நோயைப் பரப்பிப் பதில் உனக்குக் கூறுகிறது, “ஆம் ! அவர்கள் தரும் நல்ல மயக்க மருந்துகளையும், சொத்தைப் பல் குழி நிரப்பிகளையும் நாங்கள் தேடிக் கொண்டி ருக்கிறோம்” என்று.

கலில் கிப்ரான். (Decayed Teeth)

+++++++++++++++++++++++
எனக்கில்லை முற்றுப் புள்ளி !
+++++++++++++++++++++++

நான் அறிவேன் இந்த
நளின மணப்பெண்
பூமியை !
இயற்கை எழிலைப் பெருக்க
இந்த மனிதன்
செயற்கை யில் சூட்டும்
எந்த ஓர் ஆபரணமும்
இனித் தேவை இல்லை
இந்த பூமிக்கு !

+++++++++++

குன்றுகளில் மின்னும்
விலைமதிப் பற்ற கற்களும்
கடற்கரை களில்
காணப்படும் பொன் மணலும்,
பரந்த நிலத்தில் தெரியும்
பச்சைப் புல்வெளிகளும்
போதும் என்று கூறுவது
பூமிக்குத் திருப்தி !

++++++++++++

என்றாலும் பூமியின்
சீற்றத்தை
எள்ளி நகையாடி
பேரழிவுக்கும்,
பெருஞ் சினத்துக்கும்
இடையே
தெரியுது எனக்கு :
எதிர்த்துக் கொண்டு
மனிதன் தனது
தெய்வீகச் சக்தியில்
நிற்பது !

+++++++++++

பாபிலோன் அழிவுகள்
இடையே
நித்தியக் கீதம் பாடி
நிற்கிறான்
தூண்போல் மனிதன் !
புவிக்குச் சேர்ந்த வற்றை
பூமியே
எடுத்துக் கொள்ளட்டும் !
ஏனெனில்
நானோர் வளரும் மனிதன்
எனக்கில்லை
இறுதிப் புள்ளி !

(முற்றும்)

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (April 5, 2011)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -3)

This entry is part [part not set] of 42 in the series 20110327_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“அப்படியே அச்சம், அறியாமை, கோழைத்தனம் உள்ள ஏழைக் குடிசைகள் வழியாக அவற்றைப் புறக்கணிக்காமல் பார்க்கப் போய் வருவீர் ! விரைவாய் இயங்கும் விரல்களும் நுட்பக் கருவிகளும் கொண்டு தேசத்தின் சொத்தைப் பற்கள் தோண்டிய குழியை நிரப்பித் தேய்வுகளை மறைத்து வரும் பல் மருத்துவர் வசிக்கும் இல்லத்திற்கும் சென்று வருவீர் !”

கலில் கிப்ரான். (Decayed Teeth)

++++++++++++
பூமியின் சீற்றம் !
++++++++++++

புயலடிப்பு ! இடி இடிப்பு !
தீப்பிடிப்பு ! இவைதான்
புவி காட்டும் சீற்றங்கள் !
மனித இதயத்தில்
மண்டும் வெறுப்பு பொறாமை
தீவினை –
இவற்றுக்கு ஒப்பாகும் !
மக்கள் கூக்குரலும்
இழப்பு அழுகுரலும் அவற்றால்
இன்னலும், விபத்தும்,
இதர எச்சரிக் கைகளும்
எனது மனத்தில்
நினைவு கொணரும்
காட்சிகள் !
காலத்தின் நாடக அரங்கில்
காணும் கூத்துகள் !

++++++++++++

நான் காண்கிறேன் இந்த
மானிடனை !
பூமித் தளமெங்கும் அவன்
எழுப்பிடும்
வரலாற்றுத் தூண்கள்,
கோபுரம், மாளிகை, நகரம்,
கோயில்கள் !
நான் காண்கிறேன் இந்த
பூமியை !
அது கடுஞ் சினமுற்று
அந்தக் கட்டடத்தை எல்லாம்
பெயர்த் தெடுத்துத்
தனது நெஞ்சுக் குள்ளே
புதைத்துக் கொள்ளும்
சீற்றமுடன் !

(தொடரும்)

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (March 22, 2011)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -1)

This entry is part [part not set] of 49 in the series 20110320_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“நீதி மன்றங்களுக்குச் சென்று நேர்மையற்றுக் கைக்கூலி வாங்கிப் பொய்ச் சாட்சி கூறும் மனிதரைப் பார் ! பூனை எலியுடன் விளையாடுவது போல் எப்படி எளிய மனிதரின் உள்ளத்தையும், சிந்தனைகளையும் தம் வசம் வளைக்கிறார் என்பதைப் பார் ! பொய்யும் புரட்டும், சூதும், வஞ்சகமும் உள்ள செல்வந்தர் இல்லத்துக்குச் சென்று பார்”

கலில் கிப்ரான். (Decayed Teeth)

++++++++++++
நித்திய ஞானி
++++++++++++

பூமிக்கு எதிரி பல்லடுக்குத்
தளத்தின் கீழ்
ஒளிந்திருக்கும் மனிதனே !
ஈதர் ஆவிக் கிடையே உள்ளவன் !
அழுதிடும் அன்னையர் அலறலில்
பசித்திடும் மதலையர் குரல்தனில்
பங்கெடுப்பது பூமி !
தனிமச் சிதைப்பும்
மனித அற்பமும் எண்ணும் !
நேற்றைய தினம்
இங்கெல்லாம் குழந்தைகள்
நிம்மதி யாய்த் தூங்கியதை
நினைத்துக் கொள்ளும் !
இல்லமற்று இன்று நகரங்களில்
அல்ல லோடு மாந்தர்
அழுது கொண்டு நிற்பதை
அப்பால் வெறித்து நோக்குவதை
அவ நம்பிக்கை யோடு
கவலை யோடு,
போர் வாழ்வில்
புரண்டு வாழ்வதைக் கண்டு
பூமி மனம் உடையும் !

++++++++++++

நின்று கொண்டி ருக்கும் ஆத்மா
நிலையற்ற சிந்தனையில்
கொன்றழிக்கும் கவலை யோடு
உலக சக்தி களை
ஆட்டிப் படைக்கும்
தெய்வ நியதியின் நீதியைச்
சந்தேகித்து
பூமி முணு முணுக்கும் :
“இந்தப் படைப்புக்களை எல்லாம்
உந்தச் செய்யு மந்த
நித்திய ஞானி
சீறிச் சினந்து
சீரழிவை விளை விக்கும் !
அத்துடன் எதிர் பாரா
பேரெழிலும் உருவாக்கும் !

(தொடரும்)

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (March 15, 2011)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -1)

This entry is part [part not set] of 48 in the series 20110313_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“ஊத்தைப் பற்கள் நிரம்பிய ஒரு நாடு வயிற்று நோயால் நாச மடையும் ! பல நாடுகள் அப்படிச் செரிக்க முடியாத வயிற்று வலியோடு துன்புற்று வருகின்றன. சிரியாவில் சொத்தைப் பற்களைப் பார்க்க விரும்புவோர் கல்விக் கூடங்களில் படிக்கும் மாணவ மாணவிகளைப் பிற்காலப் பொறுப்புக்கு இன்று எப்படித் தயார் செய்கிறார் என்று காணச் செல்லுங்கள்.”

கலில் கிப்ரான். (Decayed Teeth)

++++++++++++
வலுவற்ற மனிதன் !
++++++++++++

வசந்தம் வந்தது !
வாய் திறந்து சிற்றோடைகளும்
ஆறுகளும் முணுமுணுக்க
ஆரம்பித்தன !
பூக்களின் புன்சிரிப்புகள்
பொங்கின !
மனித ஆத்மா திருப்தி யுற்று
மகிழ்ச்சி அடைந்தன !
திடீரெனச் சினமுற்று
இயற்கை
குப்பையைக் கொட்டியது
ஒப்பனை நகரில் !
மனிதன் மறந்தான் இயற்கையின்
சிரிப்பை, செழிப்பை,
பரிவை எல்லாம் !
பயங்கரக்
குருட்டுப் புயல் விசை ஒன்று
ஒரு மணி நேரத்தில்
உருக் குலைத்தது
பல பிறவிகள் மெய்வருந்தி
உழைத்துக் கட்டியதை !
மாசுகளால் கோர மரணம்
மானிடரைப் பீடிக்கும் !
விலங்கி னத்தையும்
சிதைத்துச்
சின்னா பின்ன மாக்கும் !

++++++++++++

நெருப்புப் பற்றி மக்களையும்
சாதனங் களையும்
எரித்துக் கரியாக்கும் !
ஒரு பயங்கர நீளிரவு
எழில் வாழ்வின்
ஒளிமயத்தை எரித்துக்
குப்பைக் கோலச் சாம்பலாக்கும் !
அச்சமூட்டும்
மூர்க்கச் சக்திகள்
அழித்தது மனிதரை !
அவரது குடி இல்லங்களை !
அவரது
அரும்பணிச் சாதனைகளை !
அத்தகைய
அழிவுப் பிரளயத்தில்
பூமியின் மடியில் நின்றான்
தூரத்தில் வலுவிலா
அற்ப மனிதன் வழிபாடுடன்
வெற்று நோக்குடன்
வேதனை யுடன்
கடவுளின் பேராற்ற லுக்கு
அடங்கிக் கொண்டு !

(தொடரும்)

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (March 8, 2011)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு (கவிதை -41 பாகம் -5)

This entry is part [part not set] of 37 in the series 20110306_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“சமூகச் சொத்தைப் பற்களுக்குப் பொன் கவசமிடும் பல்மருத்துவர் பலர் இருக்கிறார். சிரியன் நாட்டு வாசலில் ஊசிப் போய் நாற்ற மடித்துச் சீழ் வடியும் ஊத்தைப் பற்கள் பல நடமாடுகின்றன ! மருத்துவர் அவற்றை அகற்றாது பொன்னிட்டு நிரப்புவார். நோய் இன்னும் அங்கே நிலைத்துள்ளது.”

கலில் கிப்ரான். (Decayed Teeth)

+++++++++
திருமணம்
+++++++++

(சென்ற வாரத் தொடர்ச்சி)

++++++++++++

திருமணம் என்பது
தங்கத்தில் வடித்த சங்கிலித்
தோரணம் !
ஆரம்பம் அதற்குக்
காதலர் கண்ணோக்கு !
நேரும் விளைவு
நித்தியப் பிணைப்பு !
மாசற்ற வானி லிருந்து
காய்கள் பழுத்திடப் பெய்திடும்
தூய மழைப் பொழிவு !
தெய்வீக இயற்கை நிலங்கள்
ஆசிகள் பெறும் !

++++++++++++

ஏனெனில் கண்மணியின்
மான் விழிகள்
ஏவிடும்
கடைக்கண் பாய்ச்சல்
வாலிபன்
இதயத்தில் இடப்படும் விதை !
இள நங்கையர் இடும்
உதடுகளின்
முதல் முத்தங்கள்
வாழ்க்கை மரக் கிளையில்
பூக்கும் மலர்கள் !
திருமணத்தில்
இரு மனங்கள் கூடி
உடன்படும் ஐக்கிய ஒப்பந்தம்
முதல் விதையில் விளைந்த
முதற்கனி !

(முற்றும்)

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 28 2011)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு (கவிதை -41 பாகம் -3)

This entry is part [part not set] of 41 in the series 20110220_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

ஆடிய பல்லுக்கு அருகே தோண்டிய குழியில் மருத்துவர் தூய தங்கத்தால் நிரப்பிப் பெருமிதமோடு கூறினார் : “ஆடிய பல் இப்போது உமது மற்ற பற்களை விட உறுதியாக இருக்கும்.” அதை நான் நம்பிக் கொண்டு பணத்தைக் கொடுத்து அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். ஆனால் அந்த வார முடிவதற்குள் சபிக்கப்பட்ட அந்தப் பல் எனக்கு மறுபடியும் வலி கொடுக்கத் தொடங்கி என் ஆத்மாவின் இனிய கீதங்களை வேதனை அலறலாக மாற்றியது !

கலில் கிப்ரான். (Decayed Teeth)

+++++++++++
முதல் முத்தம்
+++++++++++

அதுவே ஆரம்பத் தருணம்
உள்ளத்தின் மாயத் துடிப்புகள்
கள்ளக் காதலரை
கழித்தல் கூட்டல், கணக்கிலிருந்து
கனவு உலகுக்குத்
தூக்கிச் செல்லும் ! முத்தம்
இரு நறுமண மலர்களின்
ஐக்கியப் பாடு !
மூன்றாம் ஆத்மா ஒன்றைத்
தோன்ற வைப்பதே
நறுமணக்
கூட்டுறவின் நியதி !

++++++++++++

இளங் காதலரின்
முதல் கண்ணோக்கு
தேவதை விதைக்கும் வித்து
மானிட
இதய பூமியில் !
வாழ்க்கை மரக் கிளையின்
முனையில் பூக்கும்
முதல் மலரே
காதலர்
முதல் முத்தம் !

++++++++++++
திருமணம்
+++++++++++++

இங்கே தான்
காதல்
வாழ்வின் அடிச்சுவடியை
எழுதத் துவங்கிறது !
இரவில் தோன்றிப்
பகலில்
பாடி வரும்
இசைக் கீத மாகவும்
புகழ்ப் பாமாலை யாகவும் !
நிகழ்வது இங்குதான் !

(தொடரும்)

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 15 2011)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு கவிதை -41 பாகம் -1)

This entry is part [part not set] of 40 in the series 20110206_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“என் வாயில் சிதைந்த பல்லொன்று தொல்லை கொடுத்து வந்தது. பகலில் ஏனோ தொந்தரவு தரவில்லை. ஆனால் இரவின் அமைதியில், பல் வைத்தியர் தூங்கும் போது, மருந்துக் கடையை மூடிய பிறகு அது வலி கொடுக்க ஆரம்பித்தது !”

கலில் கிப்ரான். (Decayed Teeth)

++++++++++++++
காதல் தீப்பொறி
++++++++++++++

அந்தக் கணத்தில் தான்
வாழ்க்கையின் போதை ஊட்டம்
விழிப் புணர்வி லிருந்து
பிரிக்கிறது !
முதல் எழும் அத்தீப்பொறி தான்
இதய அரங்கில் பற்றி
ஏற்று கிறது ஒளி !
அதுதான்
முதல் மந்திரக் கீதமாய்
இதய வெள்ளி நாண்களில்
மீட்டுகிறது !
அந்தக் கணப் பொழுதில் தான்
ஆத்மாவின் முன்னே
கண்மலரும்
காலத்தின் அணிவகுப்புத் தடங்கள் !
கண்களுக் குள் காட்டும்
காரிருளின் காட்சிகளை,
மனச் சாட்சி யின்
வினைகளை !
அந்தக் கணம் தான்
திறந்திடும் எதிர் காலத்தின்
நிரந்தர ரகசியத்தை !
அவையே மன்மதன் —
காதல் தேவன் தூவிடும்
மோக வித்துக்கள் !
காதல் நிலத்தில் பயிரிட
விதைப்பவை
காதலியின் கண்கள்
அன்புப் பார்வையால் ! பலனை
அறுவடை செய்வது
ஆத்மா !

(தொடரும்)

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 1 2011)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சிந்தனையும் தியானமும் (கவிதை -40 பாகம் -1)

This entry is part [part not set] of 43 in the series 20110117_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“சாத்தான் உன் கண்களைத் திறந்த பிறகு நீ சொர்க்க உலகை மேல்நோக்கிப் பார்த்தாயா ? உன் உதடுகளை விரியன் பாம்பு முத்தமிட்ட பிறகு, நன்னெறி நூலிலிருந்து ஒரு வரியாவது எடுத்து நீ உச்சரித்தாயா ? மரணம் உன் செவிகளை அடைத்த பிறகு வாழ்க்கையின் கீதத்தை ஒரு கணமாவது நீ கேட்டாயா ?

கலில் கிப்ரான். (The Sons of the Goddess & the Sons of the Monkeys)

உயரத்தில் நம்மைத் தூக்கும்
இந்த வாழ்க்கை !
ஓரிடத்தி லிருந்து
வேறோர் இடத்துக்கு நம்மை
ஏற்றிச் செல்லும் !
ஒரு புள்ளியி லிருந்து
அடுத்த புள்ளிக்குத்
நகர்த்தும் ஊழ்விதி நம்மை !
இந்த இரட்டைக்கும்
இடையே
சிக்கியுள்ள நமக்குச்
செவியில் கேட்கின்றன
பயங்கரக் குரல்கள் !
இடையூறு
தடை யீடுகள் மட்டுமே
நம் கண்ணில் படும் !

+++++++++

எழிலரசி தன்னைக் காட்டுவாள்
நமக்கு அவள்
புகழ் ஆசனத்தின் மேல்
வீற்றிருக்கும் போது !
ஆயினும்
நாமவளை நெருங்குவது
காம இச்சை யால் ! அவளது
தூய்மைக் கிரீடத்தை
அபகரித்து நமது
தீய செயலால் அவள்
ஆடையை
அசுத்தப் படுத்திவோம் !

+++++++++++

காதல் பணிவாக
நம்மருகே உலவு கிறது
ஆயினும்
நாமதை விலக்கி ஓடுவோம்
நடுக்க முடன் !
இருட்டினில் நாம்
ஒளிந்து கொள்வோம் !
அல்லது
அழகினைப் பின் தொடர்வோம்
அவமானப் படுத்த !

+++++++++++

காதல் பாரம் உள்ளத்தை
அழுத்தும் போது
அறிவில் உயர்ந் தவரும்
சிரம் தாழ்த்துவர்.
அழகோ
மென்மை மிகுந்தது
லெபனானில் விளையாடும்
தென்றல் போல் !

(தொடரும்)

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (January 11 2011)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதன் விதிக்குப் பலியானவர் ! (கவிதை -39 பாகம் -1)

This entry is part [part not set] of 41 in the series 20110102_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“கழிந்து போகும் பகலுக்கும், சூழ்ந்து வரும் இரவுக்கும் இடையே உதிரும் நமது வாலிபத்துக்கு வருந்தி, தெரியாத ஒருத்திக்கு ஏங்கிப் பலமுறைக் கரிய வெற்று வானை வெறித்து நோக்கி, மௌனத்தின் முணுமுணுப்பைக் கேட்டு ஒன்றுமில்லாததற்கு எல்லாம் அலறிக் கொண்டு நின்றோம்.

யுகங்கள் கடந்து விட்டன ஓநாய்கள் சமாதிகளுக்குள் அடங்கியதைப் போல் ! ஆனால் இப்போது வானம் வெளுத்து விட்டது. நாம் அமைதியோடு தெய்வீக மெத்தைகளில் ஓய்வெடுக்கலாம். நமது ஆசைகளை அணைத்து நம் எண்ணங்களை, கனவுகளை நிறைவேற்ற வரவேற்கலாம்.”

கலில் கிப்ரான். (The Sons of the Goddess & the Sons of the Monkeys)

+++++++++++++++++++
நீதானா அவன் ?
+++++++++++++++++++

நீ தானா
துன்பத் தொட்டிலில்
தோன்றியவன் ?
இடர்ப்பாட்டின் மடியில்
அடக்கு முறை இல்லத்தில்
வளர்ப் பானவன்
நீ தானா ?
உலர்ந்து போன ரொட்டியைக்
கண்ணீரில் ஈரமாக்கி
உண்பவன் நீ தானா ?
உதிரமும், கண்ணீரும் கலந்த
சகதி நீரைப்
பருகி வருபவன்
நீ தானா ?

+++++++++

பேராசை பிடித்த உனது
நாட்டுத் தலைவன்
காட்டுத் தனமாய்க்
கடமை விதி யென்ற
கட்ட ளைக்குக்
கீழ்ப்படிந்து
மனைவி மக்களைப் பிரிந்து
உடைவாள் ஏந்திப்
போர்க் களத்துக்குப் போகும்
படைவீரன் நீ தானா ?

+++++++++++

நீ யொரு கவிஞனா ?
சகத் தோழர்
அறியாத அன்னியனாய் –
பிறந்த நாட்டில்
தற்காலிய மனித னாகத்
தங்கு பவனாய் –
பிரிவு பட்ட வாழ்க்கையில்
திருப்தி அடைப வனாய் –
தோலும் மையும்
எழுதப் பெற்றதில்
களித்துப் போய்க் –
காலம் தள்ளும் நீயொரு
கவிஞனா ?

+++++++++++

நீ யொரு
சிறைக் கைதியா ?
மனிதனை வஞ்சித்து
நேராக மாற்ற நினைக்கும்
நீசர்கள்
ஓரிருட் டறையில்
உன்னைத் தள்ளி
சிறு குற்றம் ஒன்றுக்குத்
தண்டிக்கப் பட்ட
சிறைக் கைதியா நீ ?

(தொடரும்)

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (December 28 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) வாழ்க்கையைப் பற்றி (கவிதை -38 பாகம் -3)

This entry is part [part not set] of 35 in the series 20101219_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“நாம் ஊமைகளாக மூலை முடுக்குகளில் தெரியாமல் முடங்கிக் கிடந்தோம். ஆனால் இன்று நமது குரல் ஓங்கி வானகமே அதிரும் வண்ணம் முழக்குகின்றது.”

“நாமோர் சிறிய பொறியாக சாம்பல் குவியலில் புதைக்கப் பட்டிருந்தோம். ஆனால் இன்று நாமோ சீறி எழும் தீக் கனலாக வனக் குன்றின் வாசலில் நிற்கிறோம்.”

கலில் கிப்ரான். (The Sons of the Goddess & the Sons of the Monkeys)

+++++++++++++++
ஏகாந்த வாழ்க்கை
+++++++++++++++

என்னரும் சகோதரனே ! நீ
உன் புகழ்ப் பீடத்தின்
மீதமர்ந்து
உன்னைச் சுற்றி யுள்ளோர்
உன் கம்பீரத்தை வாழ்த்தி
தீரச் செயல்களைப் போற்றி
பேரறிவை வியந்து
தேவ தூதருள் ஒருவராய்
உன்னை நோக்கி
வானளாவ முழக்குவதை
நானும் கண்டிருக் கிறேன் !

+++++++++

உன் குடிமக்களைப் பார்த்து நீ
உவப்பதை –
உன்னத வெற்றிகளின்
வெகுமதியை –
உன் உடலுக்கு
நீயே ஆத்மா வென்பதை
நான் உன் முகத்திலே
கண்டிருக்கிறேன் !

+++++++++++

பிற்காலத்தில் மறுபடி நான்
நோக்கிய போது
ஏகாந்தனாய் தனித்து நீ
ஆசனத்தின் அருகில்
நிற்கக் கண்டேன் !
நாற்புறமும் உன் முன்னே
நாடு கடத்தும் கரங்கள்
நீட்டி இருந்தன !
கண்ணுக்குத்
தெரியாத பிசாசுகள் உனக்காகப்
பரிவுக்கும் அருளுக்கும்
இரங்கிப் பாவிப்பது போல்
உனைப் பாதுகாக்க
யாசித்தன
நேசமும் கணப்புத் தழுவலும்
சேர்ந்து !

(தொடரும்)

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (December 14 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) வாழ்க்கையைப் பற்றி (கவிதை -38 பாகம் -1)

This entry is part [part not set] of 39 in the series 20101212_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“நேற்று நமது ஆத்மாவின் ஆலயங்களை நாமிடித்து வீழ்த்தி அவற்றின் சிதைவுகளில் நமது முன்னோருக்குச் சமாதி கட்டினோம். ஆனால் இன்று நமது ஆத்மாக்கள் புனிதப் பலிப்பீடமாய்க் கடந்த காலப் பிசாசுகள் நெருங்காதபடியும் மரித்தோர் எலும்புகள் தொட முடியாதபடியும் மாறிவிட்டன.”

கலில் கிப்ரான். (The Sons of the Goddess & the Sons of the Monkeys)

+++++++++++++++++++
ஏகாந்த வாழ்க்கை
+++++++++++++++++++

என்னரும் சகோதரனே ! நீ
உன் பொன் குன்றின்
மீதமர்ந்து
உல்லாச மாய்ச்
செல்வத்தை அனுபவித்து
களிப்புற்றதை நான்
கண்டிருக்கிறேன் !
பேரளவு சொத்துக்களின்
சேமிப்பில்
பெருமிதம் கொண்டு, நீ
சேர்த்த ஒவ்வொரு
கைப்பிடித் தங்கக் கட்டியும்
பொதுநபர் சிந்தனைக்கும்,
இச்சை களுக்கும்
புலப்படாத
ஓர் இணைப் பென்று
பூரிக்கிறாய் !

+++++++++

என் ஞானக் கண்ணில்
உன்னைத் தெரியுது :
போர்ப் படை
நடத்திச் செல்லும் நீ ஓர்
போர் தொடுப் பாளி !
எதிரிகளின் கோட்டை களை
எல்லாம்
தகர்த்து வீழ்த்துவோன் !
மறுமுறை
நோக்கிய போது
பொன்கட்டிப் பேழைகளை
வீணாக்கி வந்தது ஓர்
ஏகாந்த நெஞ்சு !
தாகத்தில் தவித்தது ஓர்
கூண்டுப் பறவை
தண்ணீர்க் கிண்ணம்
காலி யாகி !

(தொடரும்)

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (December 7 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)(கவிதை -37 பாகம் -4) வாழ்க்கையைப் பற்றி

This entry is part [part not set] of 34 in the series 20101205_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

+++++++++++++++++++++
+++++++++++++++++++++

“நேற்றுவரை போலிப் போதகரையும், சூனியக்காரரையும் மதிப்புடன் போற்றினோம். இன்றோ காலம் மாறி விட்டது. நம்மையும் மாற்றி விட்டது. நாம் இப்போது சூரியனை உற்று நோக்கிக் கடலின் கானங்களைக் கேட்கிறோம். சூறாவளியைத் தவிர வேறு எதுவும் நம்மை அசைப்பதில்லை.”

கலில் கிப்ரான். (The Sons of the Goddess & the Sons of the Monkeys)

+++++++++++++++++++++
ஏகாந்த வாழ்க்கை
+++++++++++++++++++++

ஏகாந்தக் கடலிலே
வாழ்வெனப் படுவது
ஓர் தீவு !
நம்பிக்கை தான் தீவின்
பாறைகள் !
கனவுகள் தான் தீவின்
மரங்கள் !
மலர்கள் தான் தீவின்
தனிமை சுகம் !
நீரோடைகள் தான் தீவின்
தாக எழுச்சி !

+++++++++

எனது சகத் தோழனே !
உனது வாழ்வும்
ஒரு தீவுதான்
மற்ற எல்லாத் தீவுகளும்
மாநிலங் களும்
பிரிந்து போய் உள்ளன
உன் தீவை விட்டு !
உன் கடற்கரை யை விட்டு
அடுத்த தீவுக்கு
எத்தனை கப்பல் ஏகினாலும்
உன் துறைமு கத்தை
எத்தனை கப்பற்படைக் குழுவினர்
தொட்டுச் சென்றாலும்
நீ ஏகாந்தத் தீவில் தான்
நிலைத்தி ருப்பாய்
நிம்மதி யின்றித்
தலை நோவுடன்
இனிய வாழ்வுக்கு ஏங்கி !
உன் சகத் தோழர்
உன்னை அடையாளம் காணார் !
புரிந்து கொள்ளார் !
அனுதாபப் படார் !

(தொடரும்)

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (November 30 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) “என்னை மயக்கியவள்” )(கவிதை -37 பாகம் -3)

This entry is part [part not set] of 34 in the series 20101128_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“நேற்று நாம் வேந்தருக்கு மண்டியிட்டு வந்தனம் செய்தோம் ! சுல்தான்களுக்குத் தலை குனிந்து வணக்கம் தெரிவித்தோம் ! இப்போது நாம் நற்பணியாளர் தவிர வேறு எவருக்கும் மதிப்பு அளிப்பதில்லை. மனித நேயத்துக்கும், அழகுத்துவம் தவிர வேறு எதனையும் நாம் வணங்குவதில்லை.”

கலில் கிப்ரான். (The Sons of the Goddess & the Sons of the Monkeys)

+++++++++++++++++++
ஓடிப் போன என் காதலி
+++++++++++++++++++

(முன்வாரத் தொடர்ச்சி)

+++++++++

வாழ்க்கை என்பதோர் கவர்ச்சி மாது !
வீழ்த்தி விடுவாள் தன் எழிலைக் காட்டி !
விளையாட்டுத் தனத்தைத் தெரிந்தவன்
விலகிச் செல்வான் கவர்ச்சியை உதறி !

+++++++++++

என்னிதயம் நேசித்த
அந்த மாது
ஓடிப் போய் விட்டாள் !
ஏதோ ஓரிடத்துக்கு
குளிர்ப் பிரதேசம் அது !
எவரும் வசிக்க முடியாத
இடம் அது !
வெகு தூரத்தில் உள்ளது !

++++++++

என்னிதயம் காதலித்த
அந்த மாது
“இல்வாழ்க்கை” எனப்படுவது !
எழிலானவள் அவள்
எவரையும்
கவர்ந்து தன்வசம் இழுப்பவள் !
நமது உயிரைப்
பகடை ஆடுபவள் அவள் !
வாக்குறுதி களைப்
காக்காமல்
நழுவிச் செல்பவள் அவள் !

++++++++++

“இல்வாழ்க்கை” என்பது
காதலர் சொட்டும்
கண்ணீரில் குளிக்கும்
ஒரு வனிதை !
அவளது மாயத் துக்குப்
பலியாவோர்
சிந்தும் குருதியில்
ஞானக் குளிப்பு செய்பவள் !
இரவெனும் கரை பூண்ட
வெண்ணிறப் பகல் ஆடை
உடுத்தியள் அவள் !
மனித இதயத்தைக்
காதலனுக்குப்
பணிய வைப்பவள் அவள் !
ஆனால்
தனக்கு மட்டும்
திருமணம் முடிய
மறுப்பளிப் பவள் அவள் !

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (November 22 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)என்னை மயக்கியவள் கவிதை -37 பாகம் -2

This entry is part [part not set] of 29 in the series 20101121_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“நேற்று நாம் உருவக வழிபாட்டுக்கு ஊதுபத்திகளைக் கொளுத்தி உயிர்களைக் கோபப்படும் தெய்வங்களுக்குப் பலியிட்டோம். ஆனால் இன்று நாமே நமக்கு ஊதிபத்தி கொளுத்தி நமக்காகப் பலி கொடுக்கிறோம். ஏனெனில் தெய்வங்கள் எல்லாவற்றிலும் பராக்கிரமும் எழிலும் பெற்றது தனது ஆலயத்தை நமது இதயத்திலே எழுப்பியுள்ளது.”

கலில் கிப்ரான். (The Sons of the Goddess & the Sons of the Monkeys)

+++++++++++++++++++
ஓடிப் போன என் காதலி
+++++++++++++++++++

(முன்வாரத் தொடர்ச்சி)

என் காதல் கண்மணி
எப்படி இருப்பாள் ? உங்கள்
எல்லோரது இதயத்தையும்
ஈர்த்துவிடும் மாது போன்றவள்தான் !
தெய்வம் செதுக்கி யுள்ள
விநோத அழகி அவள் !
வெண்புறா போல் பணிவு
கொண்டவள் !
பாம்பு போல் உத்தி உள்ளவள் !
மயில் போல்
பீடு நடை உடையவள் !
ஓநாய் போல் கொடூரம்
உள்ளவள் !
வெள்ளை அன்னத்தைப் போல்
கவர்ச்சி கொண்டவள் !
கருமை இரவினைப் போல்
அச்சம் ஊட்டுபவள் !
கை மண்ணளவு பூமியும்
அகப்பை அளவு
கடல் நுரையும் கலக்கப் பட்ட
மடந்தை அவள் !

++++++++++

சிறுமியாய் இருக்கும் போதே
அறிமுகம் ஆனவள்
இந்த மாது எனக்கு !
வயல் நெடுவே நான் அவளைப்
பின் தொடர்வ துண்டு !
நகரத்தின் தெரு வழியே அவள்
நடக்கும் போது
பறக்கும் முந்தானியை நான்
பற்றிய துண்டு !
என்னிளம் பருவத்தி லேயே
இந்த மாதைத் தெரியும் !
படித்த நூல்களின் பக்க மெல்லாம்
பாவை முக நிழலைப்
பார்ப்பேன் !
நீரோடையின் சலசலப்பில்
அந்தப் பெண்ணின்
தெய்வீகக் குரலைக் கேட்டேன் !
என் ஆத்மாவின்
இரகசியங் களையும்
என்னிதய அதிருப்தி களையும்
வெளிப்படையாய் அவளிடம்
எடுத்துரைத்தேன் !

(தொடரும்)

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (November 15 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)இயற்கையும், மனிதனும் கவிதை -36 பாகம் -3

This entry is part [part not set] of 34 in the series 20101107_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++++
இயற்கையும், மனிதனும்
++++++++++++++

“நேற்று நமது ரொட்டியில் குருதியைக் கலந்து அதை உண்டோம். நம் குடிநீரில் கண்ணீர்த் துளைகளைக் கலந்து அதை அருந்தினோம். ஆனால் இன்று நாம் காலைக் கன்னிகளின் கைகளிலிருந்து வெகுமதியாக வாங்கத் துவங்கி பழங்காலத்து இனிய வசந்தத்தின் நறுமண ஒயினைக் குடித்தோம்.”

கலில் கிப்ரான். (The Sons of the Goddess & the Sons of the Monkeys)

+++++++++++++++++++
இயற்கை அழிக்கும் மனிதன்
+++++++++++++++++++

புள்ளினம் புலம்புவதைக் கேட்டு
“அழகிய பறவைகளே !
அழுவதின் காரணம் கூறுவீர்”
என்றேன்.
அருகினில் பறவை ஒன்று
கிளை முனையில் அமர்ந்து
பேசியது :
“ஆதாமின் புதல்வர் கோர
ஆயுதங்கள் ஏந்தி
எம்மை எதிரி களாய் எண்ணி
எம்மோடு போர் புரிய
இந்தக் களத்துக்கு
வந்திடும் வேளை இது !
விடை பெற்றுக் கொள்ளும்
ஒவ்வொரு பறவையும் !
மனித ஆவேசத்துக்கு முதலில்
பலியா காமல்
யார் தப்பிப் பிழைப்பார்
என்பதை
யாம் அறியோம் !

++++++++++

யாம் செல்லும் இடமெல்லாம்
எம்மைத் தொடரும்
மரணம் !”
குன்றின் சிகரங் கட்குப்
பின்புறத்தில்
குப்பென எழுந்திடும் பரிதி
வழுக்கிச் சரியும்
உச்சாங் கிளைகளின்
கிரீடத்தில் !
அந்த அழகை வியந்து
என்னைக் கேட்டேன் நான் :
“இயற்கை வடித்த அற்புதத்தை
ஏனழித்து விட்டுச்
சூனிய மாக்க வேண்டும்
இந்த
மானிடக் கும்பல் ?

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (November 1 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -36 பாகம் -2இயற்கையும், மனிதனும்

This entry is part [part not set] of 36 in the series 20101101_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++++
இயற்கையும், மனிதனும்
++++++++++++++

“நேற்று இரவின் பயத்துக்கும், பகலின் இடருக்கும் இடையே நாம் அச்சத்தால் நடுங்கிப் பேய்கள் போல் ஊர்ந்து சென்றோம் ! ஆனால் இன்று புயல் மேவி இடி தோன்றும் மலைச் சிகரத்தை நோக்கிப் பூரிப்போடு நடந்து செல்கிறோம்.”

கலில் கிப்ரான். (The Sons of the Goddess & the Sons of the Monkeys)

+++++++++++++++++++
இயற்கை அழிக்கும் மனிதன்
+++++++++++++++++++

கண்ணீர்க் கறை படிந்த
பூக்களின்
முகத்தைக் கண்டேன் !
முணு முணுக்கும் துயரோசை
காதில் விழக் கேட்டேன் :
“கண்கவர் மலர்களே !
நீவீர் நோவதின்
காரணம் யாது ?”
தலையை மெதுவாய்த் தூக்கி
முணு முணுத்தது ஒரு மலர் :
“மனிதன் வருவான் !
மலர்களைப் பறிப்பான் !
விலைக்கு விற்பான்
அங்காடிக் கடைக்கு !
அழுகின் றோம் அதற்கு.”
அடுத்தோர் மலர் சொல்லும் :
“மாலையில் வாடியதும்
குப்பைக் குவியலில்
தூக்கி எறிவான்
பூக்களை எல்லாம் !
இயற்கை யான
எம்மிடத்தை விட்டுத்
தலைகளைக் கொய்யும்
மனிதனின்
கொடூரக் கைகளுக்கு
நடுக்கம் அடைகிறோம் !”

+++++++++

செத்த பிள்ளைக்குச்
சிந்தை நொந்திடும்
விதவை போல்
நீரோடை ஒன்று அழுவதின்
காரணம் கேட்டேன் :
“நோவது ஏனோ தூய
சிற்றாறே ?”
நீரோடை கூறியது :
“வற்புறுத்தி என்னை நகருக்கு
விற்றார் !
குடிபான நீராய்ப் பணத்துக்கு
வடிவாக் கினார் !
உடல் உறுப்பு கட்குக்
கழுவு நீராய்ப்
பயன் படுத்தினார் !
மாசு படுத்துவர் எமது
தூய்மையை !
நாறிப் போகும் எனது
நற்பெயர் !

(தொடரும்)

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (October 26 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) நேற்று, இன்று, நாளை கவிதை -35

This entry is part [part not set] of 36 in the series 20101017_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++++
நேற்று, இன்று, நாளை
++++++++++++++

“காலம் எத்தகைய வியப்பாக உள்ளது ! நாமெல்லாம் எத்தகைய முரண்பாடு உடையவர் ! காலம் மெய்யாகவே மாறி விட்டது. நம்மையும் காலம் மாற்றி விட்டது. ஓர் எட்டு முன்னடி வைத்து, முகத்தைத் திரையிட்டு, நமக்கு எச்சரிக்கை விடுத்துப் பிறகு உணர்ச்சி ஊட்டி விட்டது காலம் !”

கலில் கிப்ரான். (The Sons of the Goddess & the Sons of the Monkeys)

+++++++++++++++++++
நேற்று, இன்று, நாளை
+++++++++++++++++++

நண்பனிடம் நான் கூறினேன் :
“பார் அந்த மாதை !
சாய்ந்துள்ளாள் அவன் தோள் மீது !
நேற்று என் தோள் மீது
சாய்ந்தி ருந்தாள் அந்த மாது !”
நண்பன் என்னிடம் கூறினான் :
“நாளை சாய்ந்தி ருப்பாள்
என் தோள் மீது
அந்த மாது”

+++++++++

நண்பனிடம் நான் கூறினேன் :
“பார் அந்த மாதை !
அமர்ந்துள்ளாள் அவன் அருகே !
நேற்று அந்த மாது
என்னருகே அமர்ந்திருந்தாள்”
நண்பன் என்னிடம் கூறினான் :
“நாளை அவள் என்னருகே
அமர்ந்திருப்பாள்.”

+++++++++++

நண்பனிடம் நான் கூறினேன் :
“பார்க்க வில்லையா அவளை நீ
அவன் கிண்ணத்தில்
பருகி வருவதை ?
நேற்று என் கிண்ணத்தில்
அவள் பருகினாள் !”
நண்பன் என்னிடம் கூறினான் :
“நாளை அந்த மாது
என் கிண்ணத்தில் பருகுவாள் !”

++++++++++++++

நண்பனிடம் நான் கூறினேன் :
“பார் அவனை நோக்கும்
அந்த மாதின்
காதற் கண்களை !”
நேற்று அப்படித்தான் அவள்
என்னை நோக்கினாள்.”
நண்பன் என்னிடம் கூறினான் :
“நாளை அதுபோல்
என்னை நோக்கும் அவள் கண்கள்.”

++++++++++++++

நண்பனிடம் நான் கூறினேன் :
“காதற் பாடலை
அந்த மாது அவன் காதில்
முணுப்பதைக் கேட்டாயா !
நேற்றவள் அதே பாடலை
முணுமுணுத்தாள்
என் காதில் !”
நண்பன் என்னிடம் கூறினான் :
“நாளை அப்பாடலை என் காதில்
முணுமுணுப்பாள் !”

+++++++++++++++

நண்பனிடம் நான் கூறினேன் :
“பார் அந்த மாது
அவனை அணைத்துக் கொள்வதை !
நேற்றவள் அணைத்தாள்
என்னை.”
நண்பன் என்னிடம் கூறினான் :
“நாளை அணைப்பாள்
என்னை அவள்.”
நான் வியந்தேன் அவளை
“எப்படிப் பட்ட பெண்ணென்று.”
நண்பன் பதில் அளித்தான்
“அப்படி இருப்பதுதான்
அவள் வாழ்க்கை !”

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (October 12 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) பூரணம் அடைவது கவிதை -34 பாகம் -1

This entry is part [part not set] of 39 in the series 20101002_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++++
பூரணம் அடைவது
++++++++++++++

“ஒரு கண்ணுக்கு ஒரு கண் பழிவாங்கப் பட்டால் உலகம் பூராவும் குருடாகிவிடும்.”

கலில் கிப்ரான்.

“முன்னேறு ! ஒருபோதும் நில்லாதே ! ஏனெனில் முன்னேறுவது முழுமை பெற்றது. முன்னேறிச் செல் ! பாதையில் உள்ள முட்களுக்குப் பயப்படாதே ! காரணம் அவை லஞ்சக் குருதியைத்தான் உறிஞ்சும்.”

கலில் கிப்ரான்.

+++++++++++++++++++
பூரணம் அடைதல் எப்போது ?
+++++++++++++++++++

எப்போது பூரணம் அடைவான்
மனிதன் என்று நீ
எனைக் கேட்டாய் சகோதரா !
கேள் எனது பதிலை :
எல்லை யற்ற வெளியிலே
கரை யில்லாக் கடலிலே
முடிவில்லாத் தீயிலே
தடுக்க முடியா ஒளியிலே
மௌனக் காற்றிலே
அல்லது
பாய்ந் தடிக்கும் புயலிலே
இடி முழக்கும் வானிலே
அல்லது
மழை பெயும் சொர்க் கத்திலே
சிரித்தோடும்
சிற்றோ டையிலே
வசந்த காலப் பூ மரத்திலே
வானோங்கும்
மாமலைச் சிகரத்திலே அதன்
ஆழ்குழிப் பள்ளத்திலே
செழித்து வளரும் நிலத்திலே
பாலை வனத்திலே
தான் ஒருவன் என்று
எப்போது உணர்வானோ
அப்போது !

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (September 27, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) நமது பூமி கவிதை -33 பாகம் -6

This entry is part [part not set] of 34 in the series 20100926_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++++

நமது பூமி

++++++++++++++

“முடங்கிக் கிடக்கும் பேரளவு அறிவை விடப் பயன்படும் சிறிதளவு அறிவு பெருமளவு தகுதி உடையது.”

“தூரத்தில் உள்ள ஒரு நண்பன் அருகில் இருக்கும் ஒருவனை விட மிக நெருங்கி இருக்கிறான். வெகு தொலைவில் காணப்படும் மலைச் சிகரம் அண்டைப் பள்ளத்தாக்கில் உள்ளதை விடத் தெளிவாகத் தெரிவதில்லையா ?”

கலில் கிப்ரான்.

+++++++++++++++++++
<< நான் இல்லையேல் நீயில்லை புவியே >>
+++++++++++++++++++

பரிதி ஒளி பழுக்க வைத்த
ஒரு கனியா நீ ?
நித்தியத்தில்
நீடித்த
நிலைப் பாட்டில்
கிளைகள் ஓங்கி உயர்ந்த
தனித்துவ ஞானத்தில்
முளைத்த மரமா நீ ?

+++++++++++

அண்ட வெளித் தளத்தின்
உள்ளங் கையில்
காலக் கடவுள் வடித்த
மேலான மணிக் கல்லா நீ ?

+++++++++++

யார் நீ புவியே ?
யார் நீயெனச் சொல் ?
“நான்” என்னும் புவியே
நீதான் !

++++++++++++

என் கண்ணொளி நீ !
என் தெளிவுத் தீர்மானம் நீ !
என் கனவு நீ !
என் அறிவு நீ !
என் வயிற்றுப் பசி நீ !
என் தாகம் நீ !
என் சுகம், துக்கம் நீ !
என் வெறுப்பில் லாமை நீ !
என் விழிப்புணர்ச்சி நீ !
என் கண்ணில் வசிக்கும் எழில் நீ !
என் இதய வேட்கை நீ !
என் ஆத்மாவில் நீடிக்கும்
நித்திய வாழ்வு நீ !

+++++++++++++

“நான்” என்னும் புவியே
நீதான் !
என் வசிப்பு இல்லா தாயின்
இங்கே தோன்றி யிருக்க
மாட்டாய் நீ !

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (September 20, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) நமது பூமி கவிதை -33 பாகம் -5

This entry is part [part not set] of 33 in the series 20100919_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++++
நமது பூமி
++++++++++++++

“நான் நாட்டியம் ஆடவோ, ஊது கொம்பை ஊதவோ, முரசை அடிக்கவோ நீ விரும்பினால், என்னை ஒரு திருமண விருந்துக்கு அழைத்திடு ! இடுகாட்டிலிருந்து என்னை
வெளியே இழுத்துக் கொண்டு வந்திடு !”

கலில் கிப்ரான். (The Narcotics & Dissecting Knives)

+++++++++++++++++++
<< பிரபஞ்சத்தின் மகத்துவம் >>
+++++++++++++++++++

எமது குப்பைக் கழிவுகளை
எல்லாம்
உனது நெஞ்சில் திணிக்கிறோம் !
கதிரடிக்கும் நிலத்தில் கோதுமைப்
பயிர்கள் சேர்ப்பாய் நீ !
கொத்துக் கொத்தாய்த் திராட்சைக்
கொடிகள் வளர்ப்பாய் நீ !
உலோகத் தனிமங்கள்
எடுத்து நாங்கள் செய்வோம்
பல பீரங்கிகள்
வெடி குண்டுகள் ! ஆனால்
எமது தனிமங்களில் நீ
முளைக்கச் செய்வாய்
முல்லையும் ரோஜாவும் !
எத்துணைப் பொறுமை உனக்கு
வையமே !
எத்தகைப் பரிவு உள்ளது
உனக்கு !
கிழக்கு மேற்காய்ப் பிரபஞ் சத்தில்
பயணம் செய்த போது
இறைவன்
பாதத்தால் உண்டான
நீயோர்
அணுத்தூசிக் கோளம் !

+++++++++++

அல்லது தீப்பொறி ஒன்று
நித்திய
உலையி லிருந்து
எறியப் பட்டதா ?
விண்ணைத் தொட்டு விடும்
அண்டக் கிளைகள்
பரப்பிடும் இறைவனின்
மரமாய் வளர
நிலத்தில் போட்ட
நீ ஒரு விதையா ?
அல்லது
பூதங்களின் பூதக் குழல்களில்
ஓடும் இரத்தத்தின்
ஒரு துளியா ?
அல்லது
அவனது நெற்றியில் துளிர்த்த
வேர்வையில் உதித்த
ஓர் முத்தா ?

(தொடரும்)

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (September 13, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -33 பாகம் -4 நமது பூமி

This entry is part [part not set] of 37 in the series 20100912_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++++
நமது பூமி
++++++++++++++

“தீவினையை எதிர்த்துப் போராடும் போது ஒருவன் எல்லை மீறுவது நல்லது ! ஏனெனில் மிதவாதியாக இருந்தால் மெய்ப்பாடுகளை அறிவிக்கும் போது பாதி உண்மையைத்தான் அவன் வெளியிடுகிறான் ! அடுத்த பாதியை பொதுமக்கள் சினத்துக்கு அஞ்சி அவன் ஒளித்து வைக்கிறான்.”

கலில் கிப்ரான். (The Narcotics & Dissecting Knives)

++++++++++++++++++++++++++++
<< புவியின் நியதி >>
++++++++++++++++++++++++++++

கற்றுக் கொண்டேன் :
மக்களின் விதியே உன் சட்டம் !
அறிந்து கொண்டேன் :
மரக் கிளையைத் தன் புயலால்
ஒடிக்காதவன் களைத்து
மரணம் அடைவான்
முடிவிலே !
புரட்சியைப் பயன்படுத்தி
உலர்ந்த சருகுகளை
ஒதுக்காதவன்
மெதுவாகச் சாவான் !

+++++++++++

எத்தகைப் பரிவு உள்ளது
பூமியே உனக்கு !
இல்லாமையில் உழன்ற தற்கும்
எல்லாம் செழித்த தற்கும்
இடையே
இழப்புற்ற குழந்தைகள் மேல்
எத்தகை உறுதி உள்ளது
உனது பாசம் !
உறுமுகிறோம் நாமெல்லாம் !
முறுவல் புரிவாய் நீ !
நிலையற்றோர் நாமெல்லாம் !
நீங்காதது நீ !
தெய்வ நிந்தனை செய்வோம்
நாமெல்லாம் !
புனிதப் பணிக்கு நீ !
அழுக்காக் குவோம் நாமெல்லாம் !
விழுமப் படுத்துவாய் நீ !

++++++++++++

கனவுக ளின்றித் தூங்குவோம்
நாமெல்லாம் !
கனவுகள் காண்பாய் நீ
நித்திய விழிப்பில் ! உன்
நெஞ்சில் நுழைப்போம்
ஈட்டியும் வாளும் !
காயத்தை ஆற்றிக் கொள்வாய்
ஆயிலை ஊற்றி !
எலும்பையும்
எரிந்த மண்டை ஓட்டையும்
விதைக்கிறோம்
நின் நிலத்தின் மீது !
அவற்றிலிருந்து
சைப்பிரஸ் மரங்களை
வளர்ப்பது நீ !

(தொடரும்)

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (September 7, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)நமது பூமி கவிதை -33 பாகம் -3

This entry is part [part not set] of 35 in the series 20100905_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++++
நமது பூமி
++++++++++++++

“பலவீனம், கவலை ஆகியவற்றின் மெய்ப்பாடை விட்டுவிட்டு நமது கிழக்காசியர் வற்புறுத்துவதைக் கண்டு நான் மிகவும் வருந்துகிறேன்.”

“எனது அன்புக்குரிய நாடு பாடுவது மகிழ்ச்சிக்காக இல்லாது, மக்களிடையே பயக் கொந்தளிப்பை உண்டாக்க என்னும் போது நான் வேதனைப் படுகிறேன்.”

கலில் கிப்ரான். (The Narcotics & Dissecting Knives)

++++++++++++++++++++++++++++
<< புவியே உனை நாடினேன் >>
++++++++++++++++++++++++++++

ஒருநாள் தெளிவான இரவின்
அமைதியில்
உனைக் காண வெளியில் வந்தேன்,
என் ஆத்மாவின் கதவையும்
ஜன்னலையும் திறந்து,
இதயத்தில்
இச்சையும் மோகமும் மிகுந்து !
விண்ணை நோக்கி
புன்னகை புரியும்
விண்மீன்களைப் பார்த்த
வண்ணம் நீ
இருந்தாய் ! என்
கால்கட்டுச் சங்கிலியை
கழற்றி எறிந்தேன் !

+++++++++++

என் ஆத்மா குடியிருக்கும் இடம்
உன் சூழ்வெளி ! அதன்
காரணம் நான் அறிந்தேன் !
என் ஆத்மாவின் ஆசைகள்
ஒன்றி யுள்ளன
உன் ஆசைகளில் !
என் ஆத்மாவின் அமைதி
ஓய்வெடுக்கும்
உன் அமைதியில் !
விண்மீன்கள்
உன் உடலில் தெளித்திடும்
பொன் தூசிகளில்
புதைந்திருக்கும் ஆத்மாவின்
பூரிப்பு !

++++++++++++

ஒருநாள் இரவு வானம்
சாம்பல் நிறத்தில்
இருந்த போது
களைத்துப் போனது
என் ஆத்மா !
கவலை யுற்றது
என் ஆத்மா !
உன்னை நாடி வந்தேன்
வெளியில் !
பூத வடிவில் தோற்றினாய்
நீயே !
புயல்களை ஆயுதமாய்ப்
போர்த்திக் கொண்டி ருந்தாய் !
கடந்த காலத்தோடு
நிகழ் காலம்
சண்டை இட்டது !
பழையவை இடத்தைப்
புதியவை
பற்றிக் கொண்டது !
பலவீனரைத் துரத்திக் கொண்டு
வலுத்தவர் வாழ்ந்து
வந்தார் !

(தொடரும்)

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (August 31, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) நமது பூமி கவிதை -33 பாகம் -1

This entry is part [part not set] of 28 in the series 20100829_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++++++++++++++++
நமது பூமி
++++++++++++++++++++++++++

மதக்குருவை ஒரு வாலிபன் புராதனச் சடங்கு ஒன்றைப் பற்றி விளக்கும்படி வினாவும் போது உபதேசி “மதத்தை நம்பிக்கையோடு நோக்காதவன் கண்கள் வெறும் மூடுபனி மூட்டத்தைத்தான் காணும்” என்று அவனைக் கடிந்துரைப்பார்.

கலில் கிப்ரான். (The Narcotics & Dissecting Knives)

++++++++++++++++++++++++++
<< புவியே என்னே உன் நறுமணம் ! >>
++++++++++++++++++++++++++

புவியே ! நீ பலவீன மானவள் !
பலம் உடையவள் ! பணிவு உள்ளவள் !
நிமிர்ந்து நிற்பவள் !
நீ வளைந்து கொடுப்பவள்
நீ அடம் பிடிப்பவள்
மனத் தெளிவும்
இனத்தின் ரகசியம் அறிந்தவள்.
ஆறுகளைத் தேடிச் சென்றேன்
சிற்றோ டைகளின் பின்சென்றேன்
நிலத்தின் ஏற்றத்தில்
நகர்ச்சியில்
நித்திய நிலைப்பகம்
நெறி கூறக் கேட்டேன் !
குன்றுகளில்
நின் பாடல்கள் எதிரொலித்தன
யுக யுகமாய் !
மலைச் சரிவுகளில் கேட்கும்
குடிவாசி மற்றோர் குடிவாசியை
விளிக்கும் குரல் !

+++++++++++

நீயே நித்தியத்தின்
வாயும் அதன் இதழ்களும் !
நீயே காலத்தின்
விரல்களும் நூல்களும் !
நீயே வாழ்வின்
புதிரும் தீர்ப்பும் ஆகும்!
நின் வசந்த காலம்
எழுப்பி விட்ட தென்னை !
ஊதுபத்தி போல் நறுமணம்
ஊர்ந்திடும்
நில வெளியில்
இழுத்துச் சென்றாய் என்னை !

++++++++++++

வேனிற் காலப் பருவத்தில்
வேர்வை சிந்தும்
உழைப்பின் பலனைக் கண்டேன் !
இலையுதிர் காலத்தில்
திராட்சைக் கொடிப் பந்தல்களில்
ஒயின் மதுவாக
உன் குருதி ஓடுவதைக்
கண்டேன் !
உன் குளிர் காலம்
என்னைத் தூக்கிச் செல்லும்
உன் படுக்கைக்கு !
பனித்தளம்
உனது தூய்மையைக் காட்டும் !
மீண்டும் வசந்த காலத்தில்
தோன்றும் நறுமணம் !
கோடையில் அளவற்ற
கொடை உள்ளம் உனக்கு !
அதைப் போல்
இலையுதிர் காலத்திலும் நீயொரு
பெருங் களஞ்சியம் !

(தொடரும்)

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (August 24, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) நமது பூமி கவிதை -33 பாகம் -1

This entry is part [part not set] of 33 in the series 20100822_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++++++++++++++++
நமது பூமி
++++++++++++++++++++++++++

கவிதை -33 பாகம் -1

மகள் ஒருத்தி தாயின் பழக்க வழக்கங்களைப் பின்பற்ற மறுத்தால், அந்தத் தாய் சொல்வாள் : “தாயை விடத் தாழ்ந்து போனவள் மகள். தாயின் தடத்தில் நடக்க வேண்டும்
புதல்வி.”

கலில் கிப்ரான். (The Narcotics & Dissecting Knives)

++++++++++++++++++++++++++
<< புவியே என்னே உன் எழில் ! >>
++++++++++++++++++++++++++

எத்தகை எழிலுடன் உள்ளாய்
புவியே நீ !
எத்தகைப் பெருமிதம் உனக்கு !
எத்தகை பூரணப்
பணிவு மனம் உனக்கு
பரவும் ஒளி மீது !
எத்தகை நேர்மைத் தணிவு
இரவி மீது உனக்கு !
எத்தகை வனப்போடு உள்ளாய்
நிழலில் மூடி !
எத்தகைக் கவர்ச்சி உள்ளது முகத்தில்
மர்மத்தைக்
கவசமாய்க் கொண்டு !

+++++++++++

எத்தகை மன அமைதி அளிக்கும்
புலரும் காலைப் பொழுது
புனையும் கீதம் !
எத்தகைக் கடூர மானவை
உனது புகழ்ச்சிகள் !
எத்தகை பூரணம் உனக்குப்
புவியே !
எத்தகைக் கம்பீரம் உனக்கு !
உனது சமவெளி களின் மேல்
உலவி வந்துளேன் !
உனது மலைச் சிகரங்களில் ஏறி
ஊர்ந்தி ருக்கிறேன் !
உன் பள்ளத் தாக்குகளில்
இறங்கி வந்துளேன் !
உனது குகைகளின்
ஊடே நுழைந் திருக்கிறேன் !

++++++++++++

உனது கனவுகளைக் கண்டேன்
நினது சமவெளிகளில் !
உனது பெருமிதம் கண்டேன்
நினது மலைகளில் !
உனது பேரமைதிக்குச் சான்றானேன்
நினது பள்ளத் தாக்குகளில் !
உனது தீர்மானம் நிறைவேறும்
நினது குன்றுகளில் !
உனது மர்மங்கள் ஒளிந்திருக்கும்
நினது குகைகளில் !

(தொடரும்)

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (August 16, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)ஓ இரவே ! கவிதை -32 பாகம் -4

This entry is part [part not set] of 35 in the series 20100801_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++++++++++++++++
ஓ இரவே !
++++++++++++++++++++++++++

கவிதை -32 பாகம் -4

“தமது மதத் தலைவரின் தகாத செயல்களைத் தவறெனத் தாக்கி எதிர்க்கும் இனப் புரட்சியாளர் மனித நேயமுள்ள, மூடப் பழக்கம் இல்லாத வேறொரு மதத்துக்கு மாறப் போவதாய்ப் பயமுறுத்துவார். ஆனால் அடுத்து நம் காதில் விழுவதென்ன ? சமூக மயக்க மருந்தளிப்பு மூலம் தேசத்தின் மதவாதிகள் இடையனையும் ஆட்டு மந்தை ஆடுகளையும் சமாதானப் படுத்தினர் என்பதுதான்.”

கலில் கிப்ரான். (The Narcotics & Dissecting Knives)

++++++++++++++++++++++++++
<< ஓ இரவே ! >>
++++++++++++++++++++++++++

(சென்ற வாரத் தொடர்ச்சி)

உன் சினத்தைக் காண்கிறேன்
வெல்வெட் மெத்தையில் உறங்கும்
வேந்தர் மீது !
கள்வரைக் காண்கிறேன் !
தூங்கும் சிசுக்களைக் காத்து
விழித்திருக்கும்
உன் கண்முன்னே
மெய்க் காதலர்
கண்ணீர்த் துளிகள் மீது
பொதுவின் மகளிர் பொழியும்
போலிப் புன்னகை
நோக்கி நீ
ஓலமிடுவதைக் காண்கிறேன் !
தீயவரை மிதிக்கும்
உந்தன் பாதமும்
நல்லவர்க் குதவ ஓடும்
உனது வலக் கரமும்
எனக்குத் தெரிகிறது !

+++++++++++

இரவே ! அங்கே
உன்னைக் காண்பேன்
என்னைக் காண்பாய் நீயும் !
பயங்கர மாயினும் நீ
தந்தை போல் தெரியுது எனக்கு !
என்னை
உனது மகவாய்க் கற்பனித்துக்
கனவு காண்பேன் !
நம்பிக்கைத் திரை
நம்மிடையே நீக்கப் பட்டது !
உன் ரகசியங்கள் –
படைப்புகளை என்ன வென்று
உரைத்திடு !
என் இச்சைகள் –
எதிர்பார்ப்புகளை
என்ன வென்று
எடுத்துச் சொல்வேன் நானுனக்கு !
உன் கோரச் செயல்கள்
மாறிடும் இன்சுவைக் கானமாய் !
ஆறுதல் அளித்து நெஞ்சை
பேரமைதி யாக்கும்
பூக்களின் மெல்லிய
முணு முணுப்புக்கு மேலாய் !

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (July 27, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஓ இரவே ! கவிதை -32 பாகம் -2

This entry is part [part not set] of 38 in the series 20100718_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“குருதி ஆறுகள் ஆகிவிடும்
ஒருநாள்
ஒயின் மது ஓடும் நதிகளாய் !
பனித்துளி களாய்ப்
புவித்தளம் மீது பொழிந்த
கண்ணீர்த் துளிகள் விளைவிக்கும்
ஒருநாள்
நறுமணப் பூக்களை !
இருக்கை விட்டுப் பிரிந்த
ஆத்மாக்கள்
ஒருங்கு கூடிப்
புதுத் தொடு வானாய் அமையும்
பொழுது புலர்ச்சியில் !
நியாயத்தையும்,
நீதியின் காரணத்தையும்
அடிமைச் சந்தையில்
விலை கொடுத்து
வாங்கியதாய் உணர்வான்
மனிதன் !
தனக்குள்ள உரிமைக்காக
ஊழியம் செய்து செலவழிப்பவன்
ஒருபோதும் தான்
இழப்ப தில்லை யெனப்
புரிந்து கொள்வான்.”

கலில் கிப்ரான். (The Giants)

++++++++++++++++++++++++++
<< ஓ இரவே ! >>
++++++++++++++++++++++++++

நீயே பரிபூரண அமைதி !
சொர்க் கத்தில்
புத்துயிர் பெற்ற ஆன்மாக்கள்
மர்மங்களை வெளியாக்கும் !
பயனுக்கும் வியப்புக்கும் இடையே
பகற் பொழு தானது
ஆத்மாக் களை
ஆட்டு விக்கும் ஒரு கொந்தளிப்பு !
நீயே நீதிக் களம் ! அது
இழுத்துச் செல்லும்
பலவீனர் கனவுகள்
உறங்கும் குகைப் பொந்துக்கு !
வலுவானவர் நம்பிக்கை யாவும்
ஐக்கியம் அடைவதற்கு !

++++++++++++

நீயே கருணை வேந்தன் !
ஏழைகள் இதயத்தைக் கவர்ந்து
நேச ஆட்சிக்குள்
நெஞ்சங் களைப் புகுத்துவோன் நீ !
காதலர் உள்ளத்தின் இச்சைகள்
அடைக்கலம் அடையும் உனது
உடைக்குள் !
அப்பாவி மக்கள்
உதிர்க்கும் கண்ணீர்த் துளிகள்
உனது பாதங்களை மூழ்க்கி விடும்
பனித்துளிகளாய் !
பசும்புல் வனாந்திர
நறுமணம் கமழும்
உந்தன் உள்ளங்கையில்
அந்நியர் தமது
தாகத்தைத் தீர்க்க எளிதாய்ப்
பாதை காண்பார் !

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (July 12, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஓ இரவே -கவிதை -32

This entry is part [part not set] of 32 in the series 20100711_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“குருதி ஆறுகள் ஒருநாள் ஒயின் மது ஓடும் நதிகளாய் ஆகிவிடும் ! பனித்துளிகளாய் ப் பூமி மீது பொழிந்த கண்ணீர்த் துளிகள் ஒருநாள் நறுமணப் பூக்களை விளைவிக்கும் ! இருக்கை விட்டுப் பிரிந்த ஆத்மாக்கள் ஒன்று கூடிப் பொழுது புலர்ச்சியின் புதுத் தொடு வானாய் அமையும். அப்போது மனிதன் நியாயத்தையும், நீதியின் காரணத்தையும் அடிமைச் சந்தையில் விலை கொடுத்து வாங்கி விட்டதாக உணர்வான். தனக்குள்ள உரிமைக்காக ஊழியம் செய்து செலவழிப்பவன் ஒருபோதும் தான் இழப்ப தில்லை என்று புரிந்து கொள்வான்.”

கலில் கிப்ரான். (The Giants)

++++++++++++++++++++++++++
<< ஓ இரவே >>
++++++++++++++++++++++++++

இரவுக் காதலரே ! நீவீர்
இளங் கவிஞர், பாடகரின்
இதய உணர்வை உசிப்பி விடுவீர் !
ஆன்மாக்கள், மர்மத்தின்
போலித் தோற்றத்தின் இரவே !
புனித நம்பிக்கை, நினைவுகளின்
மோக இரவே ! நீ ஓர்
பூத வடிவில் தோன்றி
மாயமாய்க் குள்ள மாக்குவாய்
மாலை முகில்களை !
காலையில்
ஆலயக் கோபுர மாக்குவாய்
அச்ச மென்னும் ஆயுதம் ஏந்தி
ஒளிநிலவைத்
தலைக் கிரீடமாய் அணிந்து
மௌனத்தை
முகத் திரை யாக்கி !

++++++++++++

ஆயிரம் விழிகளோடு
ஆழமாய் ஊடுருவி வாழ்வினை
ஆய்வு செய்கிறாய் !
ஆயிரம் செவிகளோடு
வாழ்வு அறுந்து
மரணத்தின் முணுமுணுப்பு
அரவத்தைக் கேட்கிறாய் !
சொர்க் கத்தின் விளக்கு
சுடரொளி பாய்ச்சு கிறது
உனது இருட்டறைக்கு !
பகற் பொழுதில் ஒளி வெள்ளம்
மூழ்க்கி விடும் நம்மை
பூமியின்
புரிவற்ற நிலையால் !
நித்திய வாழ்வின் நினைவச்சம்
விழிகளைத் திறந்து
நம்பிக்கை அளிக்கும் முன்பு
நாள் என்பது
நம்மைக் குருடாக்கி ஏமாற்றும்
அளக்கும் கோலோடும்
பருமப்
பரிமாணத் தோடும் !

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (July 5, 2010)

Series Navigationஇவர்களது எழுத்து முறை – 1 – லா.ச.ராமாமிர்தம் >>

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மகா மேதைகள் புவியை விட்டு வெளியே கவிதை -31

This entry is part [part not set] of 34 in the series 20100704_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மகா மேதைகள்

+++++++++++++++++++++++++++++++++
புவியை விட்டு வெளியே
+++++++++++++++++++++++++++++++++

கவிதை -31

“மானிட வாழ்க்கையின் இதயத்திலோ, பிரபஞ்சத்தின் ஆழத்திலிருந்தோ எங்கே படைப்பின் மர்மங்கள் சேமித்து வைக்கப் பட்டுள்ளனவோ ஆங்கே மாமேதைகள் காற்றைப் போல் மேலேறுகிறார். முகிலைப் போல் மிதக்கிறார். குன்றைப் போல் உயர்கிறார். அவரது போராட்டங்களில் பழம் பெரும் பிரச்சனைகள் தீர்வாகக் கொண்டுவரப் படுகின்றன.”

“மனிதனுக்கு அறிவும், திறமையும் இருந்த போதிலும், விருப்பையும், வெறுப்பையும் அவன் இதயம் ஏற்காமல் துயர்ப்பாடுகளைப் பொறுத்துக் கொள்கிறது. மாமேதைகள் தமது குறிக்கோள்களில் வெற்றி அடைவதும் மனிதரது கைகளில்தான் உள்ளது.

கலில் கிப்ரான். (The Giants)

+++++++++++++++++++++++++++++++++
<< புவியை விட்டு வெளியே >>
+++++++++++++++++++++++++++++++++

சினத்தோடு, தீவிரமாய்ப்
புவியை விட்டு வெளியே
புவிமண் நீங்குகிறது !
நளின மோடு உன்னத மாய்
நடந்து வருகிறது
புவி மீது புவிமண் !
ஆலயங்கள்,
மாட மாளிகைகள்,
கூட கோபுரங்கள் கட்டப் படும்
புவிலிருந்து
புவி மண்ணை எடுத்து !
வையக மனிதர்
வையகத்தில் பின்னிக் கொள்வார்
தமது
விதிகள், சட்ட திட்டங்கள்
கோட்பாடு
மரபுக் கதைக ளோடு !
புவி களைத்துத்
தவியாய்த் தவிக்கும் கனவுகள்
அவிழ்ந்து போய் !

++++++++++++

புவியின் கூரிய விழிகள்
உறக்கத்தில் மூடி
நேரிய முறை தவறி
ஓய்வெடுக்கும் !
அப்போது
புவிமண் உரைக்கும் புவியிடம் :
“நான்தான் கருப்பப்பை
நான்தான் புதையல் சமாதி
நான் கருப்பப் பையாகவும்
நான் சமாதி நிலையிலும்
நீடிப்பேன்
அண்டக் கோள்கள்
அழியும் வரை
பரிதி
எரிந்து போய்
சாம்பலாகும் வரை !

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (June 29, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) என்னைப் பற்றி – போதை மருந்துகளும் பிளக்கும் கத்திகளும் கவிதை -29 பாகம் -3

This entry is part [part not set] of 31 in the series 20100613_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) என்னைப் பற்றி – போதை மருந்துகளும் பிளக்கும் கத்திகளும்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++

போதை மருந்துகளும் பிளக்கும் கத்திகளும்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கவிதை -29 பாகம் -3

“வாழ்க்கையில் நேரும் துயரையும், துக்கத்தையும் மட்டுமே அறிவித்துக் கட்டுப்பாட்டை மீறும் மனிதன் அவன் என்று சிந்தனையாளர் என்னைப் பற்றிச் சொன்னால் நான் ஆச்சரியப்படுவதற்கில்லை.”

“விழித்துக்கொள்வது ஒரு நேர்மைப் பண்பானால், தணிவு உணர்வு (Modesty) நானதை ஏற்றிக் கொள்வதைத் தடுக்கும். ஆனால் அது ஓர் நேர்மைப் பண்பாடில்லை. அது மேன்மையடைய உறுதி உடையோர்க்கு உடனே உதிக்கும் ஓர் மெய்ப்பாடு. உண்மையைப் பற்றி பேச வருகையில் தணிவு உணர்வு ஒரு வஞ்சகமாகும்.”

கலில் கிப்ரான். (Narcotics & Dissecting Knives)

+++++++++++++++++++++++++++++++

<< என்னைப் பற்றி >>

+++++++++++++++++++++++++++++++

கிழக்காசிய இனத்தவர்

விலக்க விரைகிறார்

பலவீனம், துயர்ப்பாடு

எனப்படும்

உலக மெய்ப் பாட்டை ! அதற்கு

மனம் வருந்து கிறேன் !

எனது தேசம் பாடுவது

மன மகிழ்ச்சி யால் இல்லை !

நிலநடுக்க அச்சத்தில்

உளம் உடைந் துள்ளது !

தீயவை மீது தொடுக்கும்

போரானது

தீவிரமாய் இருத்தல் சிறப்பு !

சத்தியத்ததை அறிவிக்கும்

சான்றோர்

புத்தி மென்மை யானால்

சத்தியம் சரி

பாதியாகி விடும் !

மறு பாதி

மறைந்து போகும்

மக்கள் சினத்துக்கு

அஞ்சியே !

+++++++++++++

செத்த சதை தன்னை

வெறுப்பது என்

சித்தம் !

அதன் முடை நாற்றம்

அடி வயிற்றைக் கலக்கும் !

அதற்கு

இனிப்புப் பண்டம் வழங்கி

நட்புடன் நான்

பணி புரிய மாட்டேன் !

எனினும் எதிர் வரும்

இடிமோ தலுக்கு

இடம் மாற்றிக் கொள்வேன்

இனிய புன்னகை

ஒன்றை !

நியாய மான நீதிபதி,

நேர்மை யான வழக்கறிஞர்,

உபதேசிப் பதைப் பின்பற்றும்

ஒரு குரு நாதர்,

தன்னை நோக்கும் கண்போல்

தாரத்தை நோக்கும்

கணவன் – இவரை நீ எனக்குக்

காட்டுவா யானால்,

தீவிர வாதத்தை வளைத்து

மிதவாத மாக்கு !

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:

The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html

http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (June 8, 2010)

Series Navigationஏ.தேவராஜன் 2 கவிதைகள் >>

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) என்னைப் பற்றி -போதை மருந்துகளும் பிளக்கும் கத்திகளும் -கவிதை -29 பாகம் -2

This entry is part [part not set] of 23 in the series 20100606_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

என்னைப் பற்றி
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
போதை மருந்துகளும் பிளக்கும் கத்திகளும்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கவிதை -29 பாகம் -2

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“மகனே ! மதக்குரு மதத்தை ஒரு நன்னம்பிக்கையாக நோக்க வில்லை யென்றால் அவர் சூழ்ந்திருக்கும் மூடுபனி, புகை மூட்டத்தைத் தவிர வேறு எதனையும் காணப் போவதில்லை.”

“கிழக்காசியர் (The Orient) விரும்பத் தகாத ஒழுக்கப் பலவீனத்தில் மூழ்கி இயற்கையாக வருவது போல் தோன்றும் ஒரு நோய்வாய்ப் பட்டுள்ளார். அப்படிப்பட்டப் பண்புள்ள ஒருவன் பூரணம் அடையாதவன் என்று கருதப்படுகிறான். தெய்வீகக் கொடையான பூரணத்துவம் (Perfection) பெறத் தகுதியற்றவன் அவன்.”

கலில் கிப்ரான். (Narcotics & Dissecting Knives)

+++++++++++++++++++++++++++++++
<< என்னைப் பற்றி >>
+++++++++++++++++++++++++++++++

என் ஆத்மாவை நான்
பன்முறைக் கேட்டுள்ளேன் :
“போதை மருந்தைப்
புறக்கணித்து
புத்துணர்ச்சி பெற்று விழித்தெழும்
புரட்சிக் காரரில் நானும்
ஒருவனா ?”
இரு பொருளில்
பதில் அளிக்கும் என் ஆத்மா :
என் பெயரும்
என் விதிமுறை களும்
இகழப் படும் போது
விழித்துள்ளேன் நான் என்றும்
குழிக் கனவுகளில்
விழுந்து விடாதவர்
குழுவைச் சேர்ந்தவன் என்றும்
உறுதி மொழி
அளிக்கப் பட்டது !
ஊளை யிடும் ஓநாய்களும்
பாடும் குயில்களும்
காணப் படும்
பூக்கள் நிரம்பிய
காட்டுப் பாதையில்,
கல்லும் முள்ளும் மேவி
ஒடுங்கிய
பாதையில் நடந்து
வலுவுற்ற இதயம் பெற்ற
குழுவைச் சேர்ந்தவன் நான்
என்றும்,
உறுதி யானது !

(தொடரும்)

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 24, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆலயத்தின் வாசலில் = கவிதை -28 பாகம் -3

This entry is part [part not set] of 26 in the series 20100516_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

நேற்று ஆலயத்தின் வாசலில் நின்று வருவோர் சிலரைப் பார்த்துக் காதலின் மர்மத்தையும், அதன் மகத்துவத்தையும் பற்றிக் கேட்டேன். அப்போது சோகமும் விடுதலை உணர்வும் கொண்ட முகத்தோடு என்னைக் கடந்து சென்ற முதியவர் ஒருவர் பெருமூச்சோடு கூறினார் : “காதல் என்பது நமக்கு ஆதி முதல்வன் அளித்த ஓர் இயற்கைப் பலவீனம்.”

ஆனால் உடல் முறுக்கேறிய ஒரு வாலிபன் அதைத் திருத்தி, “காதல் நமது கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் ஒன்றாய்ப் பிணைப்பது,” என்று கூறினான்.

பிறகு துக்க முகத்தோடு வந்த ஒரு பெண் பெருமூச்சுடன் “காதல் கரு விரியன் பாம்பு கொட்டி மரணம் விளைவிக்கும் ஒரு விஷம் !” என்று உரைத்துச் சென்றாள்.

கலில் கிப்ரான்.

+++++++++++++++++++++++++++++++
<< காதல் வனிதை >>
+++++++++++++++++++++++++++++++

ஆரம்ப காலத்தின்
ஆதி மூலமாய்,
ஆக்கிய விளைவு களாய்க்
காட்டும்
அந்த உணர்ச்சி எது ?
பிறப்பையும், இறப்பையும் கனவாய்ச்
சிறப்பாகத் செய்து வரும்
அந்த விழிப்பாளி யார் ?
விந்தை யானது
இந்த வாழ்வை விட !
ஆழ்ந்து போவது
அந்த இறப்பை விட !

++++++++++++++

உரைப்பீர் நண்பரே !
காதலின் விரல் நுனி
ஆத்மா வைத் தழுவாதவர்
உங்களில் யாரேனும் உள்ளரோ
வாழ்க்கையின்
உறக்கத் திலிருந்து
உயிருடன் விழித் தெழாமல் ?
இதயம் நேசிக்கும்
காதற் கன்னியின் கூக்குரலுக்கு
தாய் தந்தை யரைப்
புறக்கணிக் காதவர்
உங்களில் யாரென்று
உரைப்பீரா ?

+++++++++++++++

உங்கள் ஆத்மா தேர்ந் தெடுத்த
ஒரு பெண்ணைச் சந்திக்க
யார் உங்களில்
தூரமாய்த் திரைகடல் ஓடிப்
பயணம் செய்யா தவர் ?
பாலை வனத்தைக் கடக்காதவர் ?
எல்லா வற்றுக்கும்
உயர்ந்த மலைச் சிகரத்துக்கு
ஏறிச் செல்லாதவர் ?
நறுமண மூச்சும்,
இனிய குரலும், மென்கரங்களும்
ஆத்வாவைப் பற்றிய
வனிதை யைத் தேடி
வையத்தின் விளிம்புக்கு ஓடாத
வாலிப இதயம் எது ?

++++++++++++++

எந்த ஒரு மனிதன் தான்
இதயம் தன்னை
நறுமணப் புகையாய்
எரிக்காமல்
இருக்கிறான்
இறைவன் முன்னே,
அவனது
ஆழ்ந்து உருகிடும்
வழிபாட் டைக் கேட்டு
இறைவன்
வரம் அளிக்க வரும்
தருணத்தில் ?

(தொடரும்)

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 10, 2010)

Series Navigationவிஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தொன்று >>

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆலயத்தின் வாசலில் கவிதை -28 பாகம் -2

This entry is part [part not set] of 21 in the series 20100509_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“உங்கள் ஆத்மா தேர்ந்தெடுத்த ஒரு பெண்ணைச் சந்திக்க உங்களில் யார் தூரமாகத் திரைகடல் ஓடிப் பயணம் செய்யாதவர், பாலைவனத்தைக் கடக்காதவர், எல்லாவற்றுக்கும் உயர்ந்த மலைச் சிகரத்துக்கு ஏறிச் செல்லாதவர் ?”

கலில் கிப்ரான்.

+++++++++++++++++++++++++++++++
<< ஆலயத்தின் வாசலில் >>
+++++++++++++++++++++++++++++++

என் ஆத்மாவைப் பற்றும்
மறைந்துள்ள
அந்த முரட்டு மென் கரங்கள்
யாருடைவை ?
என்னிதயத்தில் நிரம்பி வழியும்
கசப்புள்ள களிப்பும்
இனிப்புள்ள வலியும்
கலந்திருக்கும்
ஒயின் மதுபானம் எது ?
உறக்கத்தைக் கலைத்து
இரவின் அமைதியில்
என் தலையணை மேல் சுற்றும்
பறவையின்
இறக்கைகள் யாவை ?

++++++++++++++

அறிந்து கொள்ள முடியாது
சிந்திக்க வைத்து
அளவுக்கு மிஞ்சிய
உணர்ச்சியில்
வெறித்து நான் நோக்கிடும்
கண்காணா
அந்த மாயப் பொருள் யாது ?
எந்தன் பெரு மூச்சில்
இருப்பது துயரம் !
எழில் மயமாகும் அது
புன்னகையின் எதிரொலியாய் !
பூரிப்பை விட அது
பொலிவானது !

+++++++++++++++

என்னைக் கொன்ற பின்பு
காலை விடிவு வரை
என்னை உயிர்த்திட வைத்து
என் இல்லத்தை
ஒளிமயத்தால் நிரப்பும்
காணாத ஓர் வல்லமைக்கு
நான் ஏன் சரண் அடைவேன் ?
காதலென்று நாம் சொல்வது
யாதென்று தெரியுமா ?
யுக யுகமாய்
நமது உள்ளுணர்வில்
புகுந்து கொண்டு
மறைந் திருக்கும் அந்த
மர்மம் என்ன ?

(தொடரும்)

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 3, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆலயத்தின் வாசலில் கவிதை -28 பாகம் -1

This entry is part [part not set] of 29 in the series 20100502_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“வாழ்க்கை இரண்டு பாதியாய்ப் பிரிக்கப்படும். ஒன்று உறைந்து முடங்கிப் போவது. மற்றொன்று எரிந்து மலர்வது. எரிந்து மலரும் பாதியே காதல் உணர்ச்சி.”

எனக்கு வலு வளித்திடு இறைவா !
எரியும் ஒளி மயத் துக்கு !
எனக்கு உண வளித்திடு இறைவா !
புனிதத் தீ மயத் துக்கு !

கலில் கிப்ரான்.

+++++++++++++++++++++++++++++++
<< ஆலயத்தின் வாசலில் >>
+++++++++++++++++++++++++++++++

தீயின் புனிதத் தால் எனது
வாய் இதழ்களைத்
தூய்மை யாக்கிக்
காதல் உணர்வைப் பற்றி
ஓத விரும் பினேன் !
வரவில்லை சொற்கள்
வாயி லிருந்து !
காதல் துளிர்த்த போது
வாய்ச் சொற்கள்
வீணாய்ப்
போயின மழுங்கி !
இதய நாதம்
மௌன கீத மானது !

++++++++++++++

என்னிடம் கேட்டாய்
இனிய காதலைப் பற்றி !
அதன்
மர்மத்தை –
மாயத்தைக் கூறுவேன்
உறுதியாய் !
காதல் கவச ஆடை
என்னைப்
போர்த்திக் கொண்டதால்
காதலின்
போக்கை அறியவும்
அதன் நற்பயன்
நோக்கவும் விழைகிறேன் !
யாரெனக்கு
பதில் அளிப்பார்
எனக்குள்
இருப்பதைக் கேட்டால் ?

+++++++++++++++

என் உள்ளத்தைப் பற்றிச்
சொல்வீரா ?
என் ஆத்மா வைப் பற்றி
தெரிய வேண்டும்
எனக்கு !
யாரெனக்கு
என் இதய த்தின்
இயக்கம் பற்றி விளக்க
இயலும் !
தின்று வருகுது என்னை !
என் மன உறுதியைக்
கொன்ற ழிக்குது !
என் உள்ளத்தின்
உள்ளே
எரிந்து கொண்டிருக்கும்
இந்த
நெருப்பு தான் என்ன ?

(தொடரும்)

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (April 26, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இடிக்கப்பட்ட ஆலயங்கள் கவிதை -27 பாகம் -2

This entry is part [part not set] of 30 in the series 20100425_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“எனது ஆளுமையில் காதலை நான் புரிந்து கொள்வதற்கும், வாழ்க்கையின் அழகுத்துவத்தைச் சுவைப்பதற்கும் தடை அரண்கள் இருந்தன. ஆனால் நான் உன்னைக் கண்ட போது காதல் விழிப்புற்று அந்தத் தடை அரண்களைத் தகர்த்து விட்டன ! பரிதியின் கீழ் நான் வாழ்ந்த வந்த வாழ் நாட்களை எல்லாம் கர்வமாகக் கருதி வருந்தினேன்.”

கலில் கிப்ரான்.

+++++++++++++++++++++++++++++++
<< இடிக்கப்பட்ட ஆலயங்கள் >>
+++++++++++++++++++++++++++++++

மனிதன் கூறினான் :
“மன்னன் மிக்க பேரறி வாளன் !”
தேவதைகள் கூறின :
“மந்த மானது மன்னன் அறிவு”
ஆனால் பூரிப்படைந்தன
தேவதைகள்
நானுனைக் கண்ட போது
எனதினிய காதலி !
காதல் கீதம் பாடின
உனக் காகத் தேவதைகள்
மனிதர் யாரும் எனது
கீதத்தைக்
கேளாத போதிலும் !

++++++++++++++

ஒளியூட்டும் காதல் எனக்கு
பணிவு மனநிலை
எய்தினேன்
பழங்குடி மரபினர்
முன்னால்
என் இனத்தவர் முன்னால் !
அஞ்சுபவர் அவரெல்லாம்
எனது இராணுவ
வல்லமைக்கு !
மரணம் வந்த போது
சிதைவு ஆயுதங்கள் யாவும்
புதைக்கப் பட்டன
பூமியில் !
ஏகினேன் நான்
காதலை ஏந்திக் கொண்டு
கடவுளிடம் !

+++++++++++++++

மற்றோர் தேவதை சொல்லும் :
மலர்கள்
உயிரையும் நறுமணத் தையும்
மண்ணுலகில்
அடைவது போல்
ஆத்மாவும்
ஈர்த்துக் கொள்ளும்
ஞானத் தையும் வலுவையும்
பலவீனமும் முறிவுகளும்
மண்டிய
பிண்டத்தி லிருந்து !

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (April 20, 2010)

Series Navigationஐஸ்லாந்தின் பூத எரிமலைப் புகை மூட்டம் ஐரோப்பிய வான்வெளிப் போக்குவரத்தை முடக்கியது(கட்டுரை -1) >>

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இடிக்கப்பட்ட ஆலயங்கள் – கவிதை -27

This entry is part [part not set] of 28 in the series 20100418_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

நித்தியமான நேசத்தைத் தவிர
மற்றொன்றை மனம்
பற்றிக் கொள்வ தில்லை !
காரணம்
நித்தியம் போலிருப்பது
நேயமே !

கலில் கிப்ரான்.

+++++++++++++++++++++++++++++++
<< இடிக்கப்பட்ட ஆலயங்கள் >>
+++++++++++++++++++++++++++++++

உனக்கு நான் கட்டி
முடித்த ஆலயங்களை எல்லாம்
இடித்துப் போட்ட
தகர்ப்பு மிச்சங்கள் இவை
எனதருமைக் காதலி !
உனது உல்லாச வாழ்வுக்கு
நான் அமைத்த
செல்வ மாளிகையின்
சிதைந்த செங்கற்கள் இவை !
எளியவரைக்
இறுக்கிப் பிழிந்து
ஆடம்பர வாழ்க்கைக் கென்னை
அர்ப்பணித்து
உயர்ந்த பெரு நாட்டுக்கு
எடுத்துச் சொல்ல
எதுவும்
காணப் படவில்லை !

++++++++++++++

எனது நகரைக் கைப்பற்ற
உதவி செய்த
போர் யந்திரங் களை எண்ணி
ஆழ்ந்து சிந்தனை செய்
அருமைக் கண்மணி !
எனது வாழ்வுப் பணி எல்லாம்
வீணடித்த
காலத்தைச் சிந்தித்துக்
கருத்தில் வை கண்மணி !
நான் ஏற்படுத்திய
மாபெரும் சாம் ராஜியத்தை
கால மறதி
மூழ்க்கி விட்டது கண்மணி !
உனது அருங் காதல்
ஆக்கிய
அணுக்களைத் தவிர
அனைத்தும்
சிதைந்து விட்டன கண்மணி !
ஆயினும் உனது
அழகத்துவ நல்வினைகள் யாவும்
பிழைத்துக் கொண்டன !

+++++++++++++++

ஜெருசலத்தில் நான்
உருவாக்கினேன் ஓர் ஆலயத்தை !
குருக்கள் கோயிலைப்
புனிதப் படுத்தினர் !
ஆயினும்
அதனை அழித்தது காலம் !
ஆனால்
காதலுக்கு நான்
கட்டிய
என்னிதய பீடத்தைக்
காத்தது கடவுள்
அழிவின் ஆற்றல்கள் அதைச்
சிதைக்காமல்
நீடிக்க வைத்து !

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (April 13, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) பேச முடியாத விலங்கு ! கவிதை -25 பாகம் -1

This entry is part [part not set] of 24 in the series 20100326_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

பேச இயலாத ஒரு விலங்கின் பரிதாபப் பார்வைக்கு ஓர் அர்த்தம் உள்ளது. அதை ஒரு ஞானிதான் உண்மையாக அறிகிறான்.
ஓர் இந்தியக் கவிஞர்.
+++++++++++

கலில் கிப்ரான் சொல்கிறார் :

குப்பைக் குவியலில் நோய்வாய்ப்பட்டு தோலில் கொப்பளங்களோடு நாய் ஒன்று சாம்பல் மேல் கிடப்பதைக் கண்டேன். அத்தமிக்கும் பரிதியை வெறித்து அங்குமிங்கும் பார்க்கும் அந்த நாயின் கண்கள் நாய் பட்ட இன்னல்கள், ஏமாற்றங்கள், அவமானத்தைக் காட்டின.

எனக்குப் புரிந்தது இது :

++++++++++++

மானிடா ! எனக்கு வந்த நோயால்
நானிடர்ப் படுவது
உனது முரட்டுத் தனத்தால்
ஓயாத தண்டிப்பால் !
காயப் படுத்தும்
உன் பாதத்தை விட்டு
ஓடி வந்து
இங்கு நான் அடைக்கலம்
புகுந்துள்ளேன் !
குப்பையும் சாம்பலும்
மென்மைத் தனமுடவை
உன் நெஞ்சைக் காட்டிலும் !
இந்தச் சிதைவுக் கூளங்கள்
மானிட ஆத்மாவை விட
வேதனை குறைப்பவை எனக்கு !
தலை இடாமல்
நீ வெளியேறு
நியாய மற்ற கொடுங்கோல்
ஞாலத்தை விட்டு !

++++++++++++++

நானொரு நொந்த பிறவி !
ஆதாமின்
புதல்வனுக்கு ஊழியம் செய்தவன்
நம்பிக்கை யோடும்
நேசத்தோடும் !
நான் மனிதனின்
நன்னம்பிக் கைக்குப்
பாத்திர மானவன் !
பாதுகாப்பேன் நான் அவரை
பகல் இரவெல்லாம் !
கவலைப் படுவேன்
அவன் இல்லாத வேளையில் !
வரவேற்பேன்
வாலாட்டி
வாசலில் கால் வைத்ததும் !
தட்டிலி லிருந்து
தவறிக்கீழ் விழுந்த ரொட்டித்
துண்டுகள்
திருப்தி தரும் எனக்கு !
பற்களி லிருந்து விழுந்த எலும்பின்
அற்பத் துணுக்குகள்
போதும் எனக்கு !
வயதாகி நோய்ப்பட்ட என்னை
ஓட்டினான்
வீட்டை விட்டு
காட்டுமிராண்டிக் கூட்டம்
காலால் மிதித்திட !

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (March 23, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சூரியனுக்குக் கீழே கவிதை -24 பாகம் -2

This entry is part [part not set] of 31 in the series 20100319_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“எதிர்காலத்தை நோக்கி எண்ணற்ற மானிடர் இயற்கை அன்னை இதயத்தை வேண்டி வழிபாடு செய்து கொண்டிருக்கிறார். அவரது முகங்கள் காலை ஒளிச்சுடரில் குளிக்கக் காத்திருந்து சத்தியத்தின் விடிவுக்காகக் கிழக்கை நோக்கித் திரும்பியுள்ளன.

தற்போதையச் சுவர் அமைப்புக்குப் பின்னிருந்து, மானிடக் கீதங்களைக் கேட்டேன். வழிபாட்டு ஆரம்பத்தை அறிவிக்க அழகு மயக் கோயிலில் ஆலய மணியின் ஓசையைக் கேட்டேன். ஆலய மணிகள் உணர்ச்சி வெண்கலத்தில் வார்க்கப் பட்டவை. மனித இதயத்தின் புனித பீடத்து மேல் சீராக மிதக்க ஏற்றப் பட்டவை.

நகரம் இடிந்து போனதுதான் எனக்குத் தெரிகிறது. அறியாமையில் மனிதர் தோல்வி அடைந்து, ஞான ஒளி வெற்றி பெற்றதைச் சொல்ல ஆங்கே எதுவும் இருக்கவில்லை !”

கலில் கிப்ரான்

(எதிர்காலத்தை நோக்கி ஒரு கண்ணோட்டம்)
+++++++++++

இப்போது நீ
புரிந்து கொள்வாய் !
அறியாமை, தீயவை, ஏதேட்சை
அதிகாரம்,
ஆகியவை நேர்ந்திட உள்ளன
காரணங்கள் !
நேர்மையின் விளைவு,
நியாய நெறியின்
பழமான
அழகுத் துவம் தான்
பிரதி பலிக்கும்
ஞானத்தை !

++++++++++++

இப்போது நீ
அறிந்து கொள்வாய் !
துன்பமும் வறுமையும்
தூய்மைப் படுத்தும்
உலக மாந்தர் நெஞ்சை,
இலகுவாய்
குலாவி வாழ்வதைத் தவிர
தகுதியாக
வேறொன் றையும் பிரபஞ்சத்தில்
பலமற்ற நமது உள்ளம்
பாரா திருப்பினும் !

++++++++++++++

இப்போது நீ
கண்டு கொள்வாய் !
ஆன்மா வானது
ஒளியை நோக்கியே விரையும்
உலக இடர்கள்
விலக்கி விட்டாலும் !
ஆயினும்
அறிவுக்குப் புலப்படாத
கரங்கள் பிடித் துள்ள
கைப் பொம்மையே
மனிதன் என்னும்
உனது பொன் மொழிகளை
உரைக்க வேண்டும்
திரும்பத் திரும்ப !

+++++++++++++++

வேலி யில்லா அரங்கத்தில்
விளையாடும்
சாலமன் ஆன்மாவே !
ஞானச் செல்வரின் கண்கள்
காணும் படி வருவாய் !
சூனியக் காட்சியும் துயரும்
நிறைந்த பாதையில்
நடக்கக் கூடா தென்று நீ
அறிவுரை புகட்டு !
ஒரு வேளை இதுவே
நீ செய்ய நினைக் காத
ஒரு தவறுக்குப்
பரிகார மாய்
இருந்து விடலாம் !

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (March 17, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சூரியனுக்குக் கீழே கவிதை -24 பாகம் -1

This entry is part [part not set] of 31 in the series 20100312_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“நான் சூரியனுக்குக் கீழ் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளையும் கண்டுவிட்டேன். எல்லாம் வெறும் பகட்டு ஒப்பனைகள் ! ஆன்மாக்களின் வெறுப்புக் கொந்தளிப்புகள் !”

எக்லெஸியாஸ்டஸ் (Ecclesiastes, Hebrew Bible)

“மரணமே ! பட்டப் பகலில் நீ வீர நடை போட்டுச் செல்கிறாய். விடியாது இருள் மண்டிய இரவில் நின்று நாங்கள் உன்னை விளிக்கிறோம். எங்களின் கூக்குரல்கள் கேட்க வில்லையா உன் காதில் ? செத்துப் போனோரின் ஆன்மாக்களை எங்கள் தூதர்களாய் உன்னிடம் நாங்கள் அனுப்பினோம் ! அவரது வேண்டுகோளை நீ நிறைவேற்றினாயா ?

எங்கள் கூக்குரல் எல்லாம் சேர்ந்து தெய்வ லோகத்தில் கேட்கட்டும். ஆயினும் மரணம் எம்மை எள்ளி நகையாடி அந்திப் பொழுதில் செந்நிறத்தை நோக்கிச் செல்கிறது.”

கலில் கிப்ரான்

(லெபனானில் முதல் உலகப் போரின் சமயத்தில் ஏற்பட்ட பஞ்சத்தை பற்றி)

+++++++++++

கோலாகல அரங்கத்தில் உலாவும்
சாலமன் ஆன்மாவே !
அண்ட சரா சரங்களின் கிழிந்த
ஆடையை அகற்றிய நீ
இன்னல், பலவீனத்தில்
உதித்துள்ள
இச்சொற்களை இங்கே விட்டு
ஏகினாய் !
இன்னும் சிறைப் பட்டுள்ள
அவ்வித உடல்களை
நீ அவல
நிலைக்குத் தள்ளினாய் !

++++++++++++

இந்த மனிதப் பிறப்புக்கு
ஓர் அர்த்தம்
இருப்பதை நீ அறிவாய் !
மரணம் நமக்கு அதைச் சற்றும்
மறைப்ப தில்லை !
ஆயினும்
மனித இனம்
எப்படி அடையும்
ஒப்பிலா ஞானம்
ஆத்மா
புவிப் பிடிகளி லிருந்து
விடுதலை பெறாது ?

*************

உனக்கு இப்போது புரியும்
ஆன்மாவின் வெறுப்புக் கொந்தளிப்பால்
வாழ்க்கை
வடிவாக வில்லை யென்று !
பரிதியின் கீழே
நிகழ்பவை யாவும்
பகட்டு ஒப்பனைகள் அல்ல !
வாழும் மானிடம்
எல்லாம் சத்தியத்தை நோக்கிச்
செல்லும் !
எப்போதும் செல்லும் !
உன்னத ஞானமாய்
எண்ணி
துயர்ப்படும் மாந்தர் நாம்
வையக விதி முறைகளில்
கைதிகள் ஆனோம் !
ஆயினும் அவை யெல்லாம்
நல் மனதை இருட்டடித்து
நம்பிக்கை உணர்வை
அடைத்து விடும்
மடைக் கதவுகள் !

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (March 10, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) கவிதை -23 பாகம் -1 ஆத்மாக்களின் உணர்வுப் பரிமாற்றம்

This entry is part [part not set] of 26 in the series 20100212_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

"இரவின் அடர்ந்த காரிருளில் மரணம் மெல்ல நடந்து வருகிறது. நாங்கள் யாவரும் அதன் பின்னால் நடக்கிறோம். அது திரும்பி நோக்கும் போது நூற்றுக் கணக்கான ஆத்மாக்கள் பாதையின் இருபுறமும் தடம் புரண்டு கீழே விழுகின்றன ! விழுந்திடும் ஒரு நபர் விழிப்பதில்லை மீளா உறக்கத்திலிருந்து ! நடந்திடும் மாந்தர் நெஞ்சில் பயமுடனும் பின்னால் மரிக்கப் போகும் உறுதியுடனும் மடிந்தோருடன் சேர்ந்திடத் தொய்வு நடை போடுகிறார். மாலையின் மங்கிய செவ்வான வெளிச்சத்தின் தூரத்தில் மரணம் வெற்றி நடை போடுகிறது !

கலில் கிப்ரான்
(லெபனானில் முதல் உலகப் போரின் சமயத்தில் ஏற்பட்ட பஞ்சத்தை பற்றி)

+++++++++

விழித்தெழு என் காதலி !
விழித்தெழு !
ஏழு கடல் தாண்டி
என் ஆத்மா வரவேற்கும்
உன்னை
தனது இறக்கைகளைப்
பொங்கும் அலைகள் மீது
அனுப்பி !

விழித்தெழு ! என் காதலி !
அமைதி யானது
அமுக்கி விட்டது
புரவிகள் போட்ட
பாத நடைகளின்
அரவத்தை,
பயணிகளின் படபடத்த
படி நடை
எட்டு வைப்புகளை !

தூக்கம் மெல்லத் தழுவிடும்
மானிட ஆன்மாக்களை
நான் தனியே
விழித்துள்ள போது !
உறக்கம் சூழ்ந்திடும் வேளை
என்னை
விழித்திட வைக்கும்
மோகம் !

உன்னருகே இழுத்திடும் காதல்
என்னை !
ஆயினும் தள்ளிடும் என்னைத்
தூரமாய்
மன உலைச்சல் !
மறதிப் பிசாசு ஒளிந்து
பயமூட்ட
படுக்கை விட்டெழுந்தேன்
அருமைக் காதலி !

பக்கத்தில் வைத்தேன் எனது
புத்தகத்தைப் படிக்காது.
நூலின் வார்த்தைகள் எல்லாம்
கவலையால்
ஊமையாய்ப் போயின !
விழிக்குத் தெரிந்தவை
வெளிறிய
வெற்றுத் தாள்களே !

விழித்தெழு என் காதலி !
விழித்தெழு
என் சொல் கேட்பாய் !
என் சொல் கேட்பாய் !

*************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 9, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆத்மாக்களின் உணர்வுப் பரிமாற்றம் கவிதை -23 பாகம் -2

This entry is part [part not set] of 32 in the series 20100220_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“இரவின் அடர்ந்த காரிருளில் ஒரு சகோதரன் தன் சகோதரனைக் கூப்பிடுகிறான். தந்தை மகனை விளிக்கிறார். தாய் சேய்களை அழைக்கிறாள். அப்போது பசிக் கொடுமை அனைவரையும் சமமாகச் சித்திரவதை செய்கிறது.

ஆனால் அதே சமயத்தில் மரணத்துக்குப் பசி இல்லை, தாகமில்லை ! மரணம் எமது ஆத்மாவை விழுங்கி எமது குருதியைக் குடித்து, எம்மைக் கிழித்துப் போடுகிறது ! அதன் கோரப் பசி மட்டும் திருப்தி அடைவதே இல்லை !

கலில் கிப்ரான்
(லெபனானில் முதல் உலகப் போரின் சமயத்தில் ஏற்பட்ட பஞ்சத்தை பற்றி)

எனக்குக் கேட்கிறது நீ சொல்வது
என் கண்மணி !
உனது அழைப்பைக் கேட்டேன்
கடலுக்கு அப்பால் !
உடலைத் தொடும்
உன் மெல்லிறக்கை உணர்ந்தேன் !
படுக்கையை விட்டு
பசும்புல் தளத்தில் நடந்தேன் !
இரவின் பனித்துளிகள்
ஈரமாக்கும் என் பாதங்களை
அங்கியின் விளிம்பை !
இங்கு நிற்கிறேன்
ஆல்மண்டு மரப் பூக்களின்
கீழாக நானுனது
ஆன்மாவின்
அழைப்பைக் கேட்டு !

வாய் திறந்து பேசு என்னோடு
என் கண்மணி !
லெபனான் மலைப் பகுதியி லிருந்து
என் மீது வீசும் காற்றை
உன் மூச்சு வலுமை ஆக்கட்டும் !
பேசு என்னோடு
என் செவியைத் தவிர வேறு
எவர் காதிலும் விழாது !
எல்லோரையும் ஒன்றாய்
ஓய்வெடுக்க
இழுத்துப் போய் விட்டது
இரவு !

வெண்ணிலவின்
வெண்மைத் துகில் போர்த்தி
லெபனான் நாட்டையே
வான மண்டலம்
மூடி விட்டது என் கண்மணி !
தொழிற்சாலை வெளியேற்றும்
புகை மூட்டம் எழும்பி
வான் வெளி யாவும்
இரவு நிழலாய்
அங்கி போல் போல் மூடிப்
பரவியுள்ளது
அடர்த்தி யாக !
மரணத்தின் மூச்சு வீசி
நரகமாய்
நகர அரங்கு
நாசமாய்ப் போகும்
என் கண்மணி !

*************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 15, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -7

This entry is part [part not set] of 34 in the series 20100206_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“இரவின் அடர்ந்த காரிருளில் நாங்கள் ஒருவரை கூப்பிட்டுக் கொண்டு உதவிக்குக் கூக்குரல் இடுகிறோம். மரணம் தன் இறக்கைகளை எம்மீது போர்த்திக் கொண்டு அதன் இரும்புக் கரங்கள் எமது ஆத்மாக்களை பாதாளக் கொந்தளிப்பில் தள்ளுகின்றன !

இரவின் அடர்ந்த காரிருளில் மரணத்தின் கை ஓங்கி வருகிறது. அதன் பின்னால் நாங்கள் முணுமுணுப்போடு செல்கிறோம். எங்களில் யாரும் இந்த ஊழ்விதி ஊர்வலத்தை நிறுத்திட வலுவும் இல்லை. எமக்கு ஊக்கம் அளித்திட ஒரு நம்பிக்கை ஆறுதலும் இல்லை.”

கலில் கிப்ரான்
(லெபனானில் முதல் உலகப் போரின் சமயத்தில் ஏற்பட்ட பஞ்சத்தை பற்றி)

+++++++++

<< ஆத்மாவின் உபதேசம் எனக்கு >>

கவிதை -22 பாகம் -7

++++++++++++

என் உள்ளத் துடிப்பு உணர்ச்சியே
அவரது உள்ளத் துடிப்பும் !
எனது மன திருப்தியே
அவரது இதய திருப்தியும் !
எனது வாழ்க்கைப் பயணமும்
அவரது யாத்திரையை
ஒத்ததுவே !
அவர் பாபம் செய்தால்
நானும் பாபம் செய்தவன்தான் !
என் மனம் அதில்
தானும்
ஈடுபட்டுப்
பீடுடன் மகிழ்ந்திடும்
அவர் செம்மையாய் வினை
புரிந்தால் !
மென்மேலும் அவர்
முன்னேறினால்
நானும் அவருடன் உயர்வேன்
அவர் யாவரும்
முடங்கிப் போனால் நானும்
சோம்பி
அடங்கிப் போவேன் !

++++++++++++++

ஆத்மா என்னிடம் சொல்லும் :
“கையில் ஏந்திச் செல்லும்
ஒளி விளக்கு
மெய்யாய்
உன்னுடைய தில்லை !
நீ பாடும் கீதம்
உன்னிதயம் இசைத்த தில்லை !
விளக்கை நீ ஏந்தினாலும்
ஒளி இல்லையே
உன்னிடம் !
நாண்கள் முறுக்கிய
வீணையாய் நீ ஆயினும்
வீணையை
நீ மீட்பவன் இல்லை !”

++++++++++++++

போதிக்கும் என் ஆத்மா
சோதரரே !
அறிவுரை புகட்டும் அதிகமாய் !
என் ஆத்மாவும்
உனக்கு மிகையாய்க் கற்பிக்கும் !
ஏனெனில் நீயும்
நானும் ஒரே இனத்தவர் தான் !
நம்மிடையே
ஒருவித வேற்றுமை இல்லை
உன் உள்ளத்தின் உள்ளே
நீ இரகசியத்தை
ஒளித்துள்ள போது நானும்
உரக்கக் கூறுவேன்
என்னுள்ளத்தில் உள்ளதை !
ஆயினும்
உனது இரகசியத்தில்
உள்ளது
ஒருவித நேர்மையே !

*************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 2, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -6

This entry is part [part not set] of 31 in the series 20100128_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“என்னருமைக் காதலி ! தேசத்தின் வரலாறு தனிப்பட்ட குடிமக்களின் வாழ்க்கையைப் போன்றதுதான். நம்பிக்கையில் மலர்ந்து, அச்சத்தில் பின்னிய வாழ்க்கை பேராசையால் தாக்கப்பட்டு, மன முறிவால் தாழ்ச்சி அடைகிறது.”

கலில் கிப்ரான் (மனித ஐக்கியம்) (Union)

+++++++++

<< ஆத்மாவின் உபதேசம் எனக்கு >>

கவிதை -22 பாகம் -6

++++++++++++

மரங்கள் வசந்த காலத்தில்
மலர்களை
விரிக்கு மென உணர்கிறேன் !
வேனிற் காலத்தில் அவை
கனிகளைக் காய்த்துக் கொட்டும்
புகழை எதிர்பார்க் காது !
இலைகளை
எல்லாம் உதிர்க்கும் மரங்கள்
இலையுதிர் காலத்தில் !
அமணமாய் நிற்கும் மரங்கள்
குளிர் காலத்தில்
பழிப்புக்கு எவ்விதப்
பயமும் இல்லாமல் !

++++++++++++++

ஆத்மா எனக்குப் போதித்து
அறிவு புகட்டும் :
ஆ·பிரிக்கக் குள்ளனும் அல்லன்
நான் பூத வுடல்
அசுரனுக்குத் தாழ்ந்தோனும் அல்லன் !
என் ஆத்மா போதிப்பதற்கு
முன்னே
மனித இனத்தை
இரண்டாய்க் கண்டேன் !
பரிதாபப்படும்
பலவீன மானவன் ஒருத்தன் !
பின்பற்றும்
அல்லது எதிர்த்திடும்
வல்லமை பெற்றவன் ஒருத்தன் !

++++++++++++++

இப்போது கற்றுக் கொண்டேன் :
ஒரே மூலக்கூறுகளே நான்
அதுபோல்
ஒரே வித மூலகங்களால்
உருவாக்கப் பட்டவன் என்று !
எனது தோற்ற மூலாதாரமே
அவரது மூலா தாரமும் !
என் உள்ளத் துடிப்பு உணர்ச்சியே
அவரது உள்ளத் துடிப்பும் !
எனது மன திருப்தியே
அவரது இதய திருப்தியும் !
எனது வாழ்க்கைப் பயணமும்
அவரது யாத்திரையை
ஒத்ததுவே !

(தொடரும்)

*************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (January 26, 2010)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -5

This entry is part [part not set] of 35 in the series 20100121_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“உனது விழிகளில் சோகத்தைக் காண்கிறேன் என்னருமைக் கண்மணி ! நீ என்னருகில் உள்ள போது துயர் அடைகிறாயா ? எனது புதல்வரும் புதல்வியரும் மீண்டும் வருவாரா என்று நான் துயரடைய என்னை விட்டு விட்டுக் கடல் தாண்டிப் புலம்பெயர்ந்து போய் விட்டார் !”

கலில் கிப்ரான் (மனித ஐக்கியம்) (Union)

+++++++++

<< ஆத்மாவின் உபதேசம் எனக்கு >>

கவிதை -22 பாகம் -5

++++++++++++

என் ஆத்மா போதிப்பதற்கு
முன்னே உணர்ந்தேன்
நடந்து சென்ற போதெல்லாம்
இடமெனக்குத்
தூரமாய்த் தெரிந்தது !
இப்போது
எனக்குத் தெரிகிறது :
எந்த இடத்தில் வசித்தேனோ
அந்த இடத்தில்
கிடைத்தன எல்லாம் !
நடந்து வந்த தொலைவில்
அடங்கின
அனைத்துத் தூரங்களும் !

++++++++++++++

ஆத்மா அறிவூட்ட
ஆலோசனை கூறும் எனக்கு :
பிறர் தூங்கும் வேளை நீ
விழித்திரு வெனச் சொல்லும் !
பிறர் வேலை செய்யும்
தருணத்தில் நீ
உறக்கத்தில்
சரண் அடை யெனக் கூறும் !
என் ஆத்மா உரைப்பதற்கு
முன்பு நான் என்
உறக்கத்தில் காணேன்
பிறரது கனாக்களை !
அதுபோல்
அவரும் என் உள்ளொளியைக்
காண வில்லை !

+++++++++++++++++

இப்போது நான்
எனது கனவுகளின்
கப்பலில்
செல்வ தில்லை அவர்
காணாத சமயத்தில் !
அவரும் தமது உள்ளொளியில்
வானுயர ஏறுவ தில்லை
நானவர் விடுதலையில்
ஆனந்தம்
அடையாத போது !
ஆத்மா எனக்குப் போதிக்கும் :
பிறர் உன்னைப்
புகழும் போது நீ
பூரிப்படை யாதே !
பிறர் உன்னைப் பழிக்கும் போது
வருத்தம் அடையாதே !
ஆத்மா அறிவுரை கூறுவதற்கு
முன்பு என் பணிகள்
பயனற்றவை என்று நான்
ஐயமுற்றேன் !

(தொடரும்)

*************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (January 19, 2010)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -4

This entry is part [part not set] of 26 in the series 20100115_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“நைல் நதிக் கரையில் அமைந்துள்ள அரண்மனைகளும், ஆலயங்களும் உனது புகழை வெளிப்படுத்தும். அங்குள்ள பெண்தலைச் சிங்கச் சிற்பம் (Sphinx) உன் உன்னத்தை அறிவிக்கின்றது. உனது பரிவும், பாசமும் இனிமையானது. உன் உள்ளத்தில் குடியிருக்கும் நம்பிக்கை எத்தகைய அற்புதமானது ! நீ எனக்கு அனுப்பிய வாலிபர் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்தெழுந்து வந்தவர் போல் காணப்படுகிறார். நீ அளித்த மனிதர் எனது மக்களின் பலவீனத்தை வெல்லும் மன ஊக்கம் கொண்டவர். அவரை விடச் சிறந்த அறிவாளர். அவரது அறிவைச் செழிக்க வைக்கும் மேதைகள்.”

“நான் அனுப்பிய விதைகளை நீவீர் பூக்களாக மாற்றினீர். பிஞ்சுச் செடிகளை மரங்களாக உயர்த்தினீர். ரோஜா மலர்களும், மல்லிகைப் பூக்களும், சைப்பிரஸ் மரங்களும், தேக்கு மரங்களும் கொண்ட நீ ஒரு புதிய பசும்புல் நிலம் !”

கலில் கிப்ரான் (மனித ஐக்கியம்) (Union)

+++++++++

<< ஆத்மாவின் உபதேசம் எனக்கு >>

கவிதை -22 பாகம் -4

++++++++++++

என் ஆத்மா போதிப்பதற்கு
முன்பு நான்
எந்தக் குரலுக்கும் பதில்
தந்திலேன்
எனக்குத் தெரிந்த ஓர்
அழுகுர லுக்குத் தவிர !
பளிங்கு போல்
எளிய
பாதைகளில் நடந்திலேன் !
இப்போது
தெரியாதது ஒன்று
புரவி யாகி
அதன் மீது நான் அமர்ந்து
தேடிச் செல்கிறேன்
தெரியாததை !

++++++++++++++

பசும் புல் நிலமானது
ஏணியாக
மாறிப் போனது !
ஏறிச் சென்றேன் அதன் மேல்
சிகரத்துக்கு
அதைப் படிகளாக்கி !
ஆத்மா என்னிடம்
சொல்லும் :
நேற்று என்றோ அல்லது
நாளை என்றோ
கால நேரத்தைக்
குறிப்பிட்டுக் கணிக்காதே
பரிமாணம் என்று !

++++++++++++++

என் ஆத்மா உரைப்பதற்கு
முன்பு நான்
சென்றதினி மீளாதென
நினைத்தேன் !
கடந்த காலம் ஓர் மைல்
கல்லென்றும்
எதிர்காலத்தைக்
கைக்கொள்ள முடியா தெனவும்
கற்பனை செய்தேன் !
இப்போது உணர்கிறேன்
இன்றைய பொழுதே
எல்லாக் காலத்துக்கும் அடங்கும் !
இன்றைய தருணத்தில்
எதிர்பார்த்த விருப்புகளும்
இயக்கப் பணிகளும்
மெய் உருவாக்கமும்
கைகூடும் நமக்கு !
இங்கு, அங்கு, அப்பால் என்று
நாட்டுக்கு
எல்லைக் கல் வைக்காதே
என்று ஆத்மா வற்புறுத்தி
எனக்கு உபதேசிக்கும் !

(தொடரும்)

*************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (January 12, 2010)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) < ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -3

This entry is part [part not set] of 24 in the series 20100108_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“ஓ இஸ்தாரின் மகனே ! [Greek Goddess, Ishtar or Ashtart (Astarte)] உலக ஞானிகள் கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும் உன் ஞானத்தைத் தெளிவாக அறியவும், அதன் சமிக்கைகளை ஆய்ந்து விளக்கவும் திரளாக வருகிறார்.

உலகக் கல்வி மேதைகள் உனது அழகு அமுதில் போதை அடையவும், உன் குரல் மாயையில் மயங்கவும் எல்லா அரசாங்க நாடுகளிலிருந்தும் வருகிறார்.

நைல் நதிக் கரையில் அமைந்துள்ள அரண்மனைகளும், ஆலயங்களும் உனது புகழை வெளிப்படுத்தும். அங்குள்ள பெண் தலைச் சிங்க சிற்பம் (Sphinx) உன் உன்னத்தை அறிவிக்கின்றது.”

கலில் கிப்ரான் (மனித ஐக்கியம்) (Union)

+++++++++

<< ஆத்மாவின் உபதேசம் எனக்கு >>

கவிதை -22 பாகம் -3

++++++++++++

என் ஆத்மா உபதேசித்து
அறிவைப் புகட்டும் :
மறுபிறப் பில்லா
மனிதப் பிறவியின்
மனதைத் தொடு என்று !
எனது ஆத்மா
தெளிவு படுத்தும் எனக்கு :
நாம் தொடுபவை
எல்லாம்
நமது இச்சைகளால்
எழுந்தவை !

+++++++++++++++

இப்போது என் விரல்கள்
ஊடுருவி
மூடுபனியாய் மாறிப்
புலப்படாத ஒன்றுடன்
கலப்பாகி
பிரபஞ்சக் காட்சி தரும் !
எனது ஆத்மா
அறிவூட்டும் எனக்கு :
மல்லிகைப் பூக்கள் அல்லது
ஊது பத்திகள் வீசும்
வாசனை எதையும்
நுகராதே என்று !
என் ஆத்மா
எனக் குபதேசம் செய்வற்கு
முன்பு
பூந்தோட்டப் பூக்கள்
நறுமணச் சிமிழ்கள் தரும்
வாசனை யாவும் நுகர
ஆசையோடு இருந்தேன்

++++++++++++++

இப்போது நான் நுகர்வேன்
இறைவ னுக்கு
அர்ப்பணம் செய்யாத
ஊது பத்தியின்
நறுமணத்தை !
இதுவரை வான்வெளியில்
மிதக்காத
நறுமணப் புகையை
நிரப்புவேன் என் நெஞ்சத்தில் !
புலப்படாத ஒன்றும்
எதிர்பாராத அபாயமும்
என்னைத் தாக்கிடும் போது
“தயார் நான்” என்று
தைரியமாய்
தாங்கிடச் சொல்லும்,
எனக்கு அறிவு புகட்டும்
என் ஆத்மா !

(தொடரும்)

*************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (January 5, 2010)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -2

This entry is part [part not set] of 26 in the series 20100101_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

Life Plunges into the Ocean

ஓ இஸ்தாரின் மகனே ! [Greek Goddess, Ishtar or Ashtart (Astarte)] வாலிபரிடையே எத்தனை நளினமாய் இருக்கிறாய் ! எத்தனை உன்னதமானது உன் மீது நான் கொண்ட வேட்கை ! எனது நேசம் உனது பிரமிட் போல் உறுதியானது. எத்தனை யுகங்கள் வந்தாலும் அழிக்காது எனது நேசத்தை. புனித தேக்கு மரங்கள் போல் என் நேசம் உறுதியானது.

கலில் கிப்ரான் (மனித ஐக்கியம்) (Union)

+++++++++

<< ஆத்மாவின் உபதேசம் எனக்கு >>

கவிதை -22 பாகம் -2
++++++++++++

என் ஆத்மா
எனக்கு அறிவுரை கூறும்
முன்பு
நான் அழகுமயம் கண்டேன்
புகைத் தூண்களுக் கிடையில்
நடுங்கும்
ஒளிச்சுடர் போல் !
பின்பு
புகை மறைந்து போனதால்
நெருப்பைத் தவிர
தெரிவது எதுவு மில்லை !

+++++++++++++++

என் ஆத்மா போதித்து
எனக்கு
அறிவு புகட்டும் :
எழுந்திடும்
மானிடக் குரலைக் கேட்க !
அதை என் நாக்கும்
குரல்வளையும்
உதடுகளும் கூட
உச்சரிக்க மாட்டா !

++++++++++++++

என் ஆத்மா போதிப்பதற்கு
முன்பு எனக்கு
ஒன்றும் கேட்க வில்லை
மக்கள்
அலரு வதைத் தவிர
ஆர வாரிப்பைத் தவிர !
ஆனால் இப்போது
ஆர்வ மோடு கவனிப்பேன்
மௌனத்தில் பாடும்
யுக யுகமாய்ப்
பாராயணம் செய்த குழுப்
பாட்டுகளை,
வானத்தில்
காணாத கடவுளை
அறிவிக்கும்
இரகசியக் கீதங்களை !

++++++++++++++

என் ஆத்மா போதித்து
அறிவித்தது எனக்கு
ஒயின் அருந்திட :
அழுத்தம் அடையாத ஒயினை
குவளையி லிருந்து
ஊற்றி
இதழ் சுவைக்காத
ஒயினை !

+++++++++++++

என் ஆத்மா போதிப்பதற்கு
முன்பு
எனது தாகம்
ஒரு மங்கிய
தீப்பொறி போல்
இருந்தது
சாம்பல் அடியில் மறைந்து
ஒருவாய் நீர் குடித்தால்
அணைந்து விடும்படி !
ஆனால் இப்போது
என் தாகமே எனக்குக் குவளை
என் பாசமே எனக்கு ஒயின்
என் தனிமையே
எனக்கு உணர்ச்சி ஊட்டி !
ஆயினும்
நீடித்த இந்தத் தாகத்தில்
இருப்பது
நித்தியமான பூரிப்பு !

(தொடரும்)

*************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (December 28, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -1

This entry is part [part not set] of 29 in the series 20091225_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

Fig. 1
Kahlil Gibran Paintings
Love Triangle with One Woman & Two Men

“வாலிபம் ஓர் எழிலான கனவு. அது வீசும் சுடரொளியில் கண்களை இருட்டடிக்கும் ஒரு தூசியை வைக்கும் நூல்கள். எப்போது வாலிபக் கனவுடன் அறிவைப் பின்னி நமக்கு ஞானக் களிப்பூட்டும் ஒரு நாள் வருமோ ? எப்போது மனித நேயம் நூலாக இருந்து, வாழ்க்கையே ஒரு பள்ளிக் கூடமாக அமைந்து, இயற்கை மனிதனுக்குக் குருவாக வரும் ஒரு நாள் வருமோ ? வாலிபத்தின் பூரிப்பான குறிக்கோள் அந்த நாள் வரும்வரை நிறைவேறாது. வாலிபத்தின் ஆர்வ வேட்கையை நாம் மிகவும் சிறுத்துப் பயன்படுத்துவதால், ஆன்மீக பீடத்தை நோக்கி நடக்கும் நமது பயணம் ஊர்ந்து செல்கிறது !

கலில் கிப்ரான் (சிந்தனையும், தியானமும்) (Thoughts & Meditations)

+++++++++

<< ஆத்மாவின் உபதேசம் எனக்கு >>

கவிதை -22 பாகம் -1

+++++++++

இது என் ஆத்மாவின் உபதேசம்
எனக்கு ! மாந்தர்
வெறுப்பதை நேசிப்பாய் என்று
அறிவு புகட்டும் !
அவமதிப்பு பெற்ற
மனிதனை
ஆதரிப்பாய் என்று
அறிவுரை சொல்லும் !

+++++++++++++++

என் ஆத்மா வழிகாட்டும் எனக்கு !
காதல் பெருமைப் படும்
காதலிக்கும் ஒருத்தியை மட்டுமின்றி
காதலிக்கப் படும்
கண்ணாளன் மீதும் !
ஆத்மா உபதேசிக்கும் முன்பே
காதல் குடியிருக்கும்
என்னிதயத்தில்
இரு கம்பங்களை இணைக்கும்
மெல்லிய நூலிழை போல்

++++++++++++++

ஆயினும் காதல் இப்போது
ஆரம்பமே அதன் முடிவென்றும்
அதன் துவக்கத்தில் முடிவு
உள்ள தென்று காட்டும்
ஓர் ஒளி வளையம் ஆனது !
அனைத்து மனித இனத்தையும்
அது சூழ்ந்து கொள்ளும் !
மெல்லக் கரங்கள் நீட்சி யாகி
எல்லா இனத்தையும்
இறுக அணைத்துக் கொள்ளும் !

++++++++++++++

என் ஆத்மாவின் ஆலோசனை
எனக்கிது !
தோலுக்குள் மறைந்து கிடக்கும்
வனப்பையும், வடிவையும்
வண்ணத் தையும்
எண்ணிப் பார்ப்பாய் என்று
புகட்டும் அறிவு !
புத்தி கூறும் எனக்கு :
மக்கள்
அழகீனம் என்று சுட்டுவதை
வழிபட்டுத்
தியானம் புரியச் சொல்லும்
உண்மைக் கவர்ச்சியும்
களிப்பும்
வெளிப்படும் வரை !

(தொடரும்)

*************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (December 22, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மழை பாடும் கீதம் >> கவிதை -21 பாகம் -2

This entry is part [part not set] of 30 in the series 20091218_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

Fig. 1
Kahlil Gibran’s Paintings
The Miserable Family

“புவியாதிக்க ஆணையில் மனித இனத்தின் ஏகாதிபத்தியச் சங்கிலிகளில் கட்டிப் புழுதிக் குகையில் சிறைப்பட்டு மனிதன் இழந்து விட்ட இதயம் நான். காணும் நீர்த் துளிகளைச் சிந்திக் காலியான கண்களும், கட்டப்பட்ட நாக்கும் மனித இனம் மறந்து போய் மரித்தவை.

இந்த வார்த்தைகள் நான் கேட்டவை. காயப்பட்ட இதயத்தின் நீர்த்துவிட்ட குருதி ஆற்றிலிருந்து அவை வெளியேறியதை நான் கண்டேன்.

இன்னும் சொல்லப்படுகிறது : ஆனால் கண்ணீர்க் குளமான விழிகளும், வீறிட்டழும் ஆத்மாவும் நான் பார்ப்பதையும் கேட்பதையும் தடுத்து விட்டன !”

கலில் கிப்ரான் (உள்ளொளி) (Vision)

+++++++++

<< மழை பாடும் கீதம் >>

கவிதை -21 பாகம் -2

மண்ணுக் குயிரைப் போல்பவன் நான்
மதி கலங்கிய மூலகங்களின்
அடித்தடத்தில்
தொடங்கியது நான் !
மரணத்தின் பயண இறக்கைகளில்
முடிவாக
மடிவதும் நான் !

+++++++++++++++++

கடலின் இதயத்தி லிருந்து
விடுபட் டெழுவது நான் !
காற்றில் உயர்ந்து ஏறுவது நான் !
வரட்சி யான
வயல்களைக் கண்டால்
கீழிறங்கி அணைப்பது நான் !
கிளை மரங்கள் மீதும்
மலர்கள் மீதும்
பல்லாயிரம் தடவைகள்
பாய்வதும் நான் !

+++++++++++++

மென்மையான என் விரல்களால்
ஜன்னல்களைத் தொடுவேன்
மெதுவாக !
அறிவிக்கப் படும் எனது
வருகை யானது
வரவேற்கப் படும் ஒரு கீதம் !
எல்லா ருக்கும் கேட்கும்
ஆயினும்
உணர்ச்சி உள்ளவர் மட்டும்
புரிந்து கொள்ள முடியும் !

++++++++++++++

காற்றில் இருக்கும் கனல் என்னைத்
தோற்று விக்கிறது !
நன்றிக்குப் பதிலாக
நான் வெப்பத்தை அழிக்கிறேன்
ஆணிடம் ஈர்த்த
ஆற்றலைக் கைக்கொண்டு
ஆடவனையே மடக்கும்
ஆயிழை போல் !

+++++++++++++++

கடல்விடும் பெரு மூச்சு நான் !
வயல்களின் புன்னகை நான் !
வானத்தின் விழித்துளிகள் நான் !
காதலும் அது போல
அன்புக்கடல்
ஆழத்தி லிருந்தெழும் பெருமூச்சுகள் !
ஆத்மாவின்
வண்ண நிலத்தி லிருந்தெழும்
புன்முறுவல் நான் !
நித்திய சொர்க்கத்தின்
நினைவி லிருந்து சொட்டும்
கண்ணீர்த் துளிகள் !

*************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (December 15, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மழை பாடும் கீதம் >> கவிதை -21 பாகம் -1

This entry is part [part not set] of 31 in the series 20091211_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“வாழ்க்கை நதியின் முடிவில் அழகுத்துவத்தின் தெய்வீகத் தளத்தில் மனிதர் ஆக்கிய சிறைக் கூண்டு விதிகளில் நான் மாட்டிக் கொண்டேன். கடவுள் அளித்த விடுதலைக் கொடையை நான் அனுபவிக்காதபடி தடுக்கப் பட்டு, அழகுமயப் படைப்பின் நடுவில் புறப்பணிப் பட்டேன் ! மனித நியதிப்படி என் காதலுக்கும் தாகத்துக்கும் விழிப்புணர்வு தரும் அழகுத்துவம் ஒவ்வொன்றும் அவமதிப்பாகக் கருதப்படுகிறது ! நான் வேட்கையுறும் நல்வினை எல்லாம் மனிதர் விதிப்படி தேவையற்றவை.”

கலில் கிப்ரான் (உள்ளொளி) (Vision)

+++++++++
Fig. 1
Kahlil Gibran Paintings
The Music Man

<< மழை பாடும் கீதம் >>

கவிதை -21 பாகம் -1

விண்ணி லிருந்து தெய்வங்கள்
புள்ளிகளாய் விடுகின்ற
வெள்ளி
இழைச் சாரல் நான் !
இயற்கை
வயலையும் நிலத்தையும்
வளப்படுத்தி வனப்பாக்கும்
எனைப் பற்றி !

+++++++++++++++++

நளின முத்துக்கள் நான் !
புலரும் காலைப் புதல்வி
பூங்காவைப்
பொலி வாக்க
இஸ்தார்* அழகியின்
கிரீடத்தில் பறித்தவை !

+++++++++++++

மலைகள் நகைக்கும் நான்
அழுதிடும் போது !
மலர்கள் பூரிக்கும் நான்
பணியும் போது !
வையம் மலர்ந்திடும் நான்
வளப்படுத்தும் போது !

++++++++++++++

நிலமும் முகிலும் காதலர் !
இருவருக்கும் இடையே
நானொரு
கருணைத் தூதுவன் ! நான்
வயலின் தாகம் தணிப்பவன் !
முகிலின் தவிப்பைத்
தீர்ப்பவன் !

+++++++++++++++

எனது வருகையை அறிவிப்பது
இடி முழக்கம் !
எனது புறப்பாட்டை
உனக்குப் புலப்படுத்துவது
வான வில் !

*************
*Ishtar, the Assyrian Venus
*************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (December 8, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << புன்னகையும், கண்ணீரும் >> கவிதை -20 பாகம் -2

This entry is part [part not set] of 25 in the series 20091204_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

Fig. 1
Kahlil Gibran Paintings
The Suppressed Womenfolk

“கடவுள் தன்னிடமிருந்து ஓர் ஆன்மாவை வெளியாக்கி அதை ஓர் எழில் மாதாக உருவாக்கினார். . . . . அவளுக்குப் பரிவை அளித்தார். அந்தப் பரிவும் அவளுக்குப் புவிப் பொருட்களின் மீது ஏற்பட்ட வேட்கைப் பெருமூச்சில் நிரந்தரமாய் நீங்கி விட்டது ! அவளுக்கு இனிமையை அளித்தார். அந்த இனிமையும் அவளுக்கு எப்போது முகத்துதி மீது முதலில் மோகம் ஏற்பட்டதோ அப்போது அவளைப் புறக்கணித்தது !

நேர்மையான பாதையில் வழிநடத்த வானிலிருந்து அவளுக்கு ஞானத்தைக் கொடுத்தார் கடவுள். அதை அவளது இதயத்தினுள்ளே காண இயலாதவற்றைக் காணும் ஒரு கண்ணை வைத்து அனைத்து உயிரினம் மீதிலும் பந்த பாசத்தையும் உண்டாகச் செய்தார். . . மேலும் அவளுக்குக் கடவுள் குழப்பத்தின் நிழலாக ஓர் அங்கியைப் போர்த்தினார். அதுவே வாழ்க்கையின் காலைப் பொழுதாகவும், ஒளி விளக்காகவும் அமைந்தது.”

கலில் கிப்ரான் (படைப்பு)

+++++++++

<< புன்னகையும், கண்ணீரும் >>

கவிதை -20 பாகம் -2

இரவு வரும் வேளைப்
பூவிதழ்கள்
மூடிக் கொண்டு
தூங்கி விடும் காதலுடன் !
காலை விடிந்ததும்
முத்தமிட்டுக்
கதிரவனை வரவேற்க
கண்விழிக்கும் பூவிதழ்கள் !
முகில் கூட்டம் அவற்றின் மீது
புள்ளிகள் வைக்கப்
புகுந்திடும் !
பிறகு உறுதியாய் நீங்கும் !
பூக்களின் வாழ்க்கை
நமக்கு அளிப்பது
நம்பிக்கை, அமைதி, திருப்தி மற்றும்
புன்னகையும் கண்ணீரும் !

+++++++++++++++++

நீர் வளம் மறையும் ஆவியாகி !
மலை உச்சிகளின் மீதும்
பாதாளத்தின் கீழும் பனியாகிப்
படிந்திடும் முகிலாகி !
தென்றலைச் சந்திக்கும் போது
நிலத்தின் மீது மழையாய்ப் பொழிந்து
நீரோடை யுடன் கலந்து
கடலை நோக்கிப் பாதையில்
கானமிசைத் தோடும் !
முகிலின் வாழ்க்கை
விடைபெறும் ஒரு போக்கு !
புன்னகை கண்ணீருடன்
மீள் சுழலும் வாழ்வு !

+++++++++++++

இவ்விதம் ஆன்மா நீங்கிடும்
உடலை விட்டு ! முகிலைப் போல்
கடந்து செல்லும்
உலோகவியல் உலகை விட்டு
துயர்க் குழியைத் தாண்டி
பூரிப்பு மலைகளுக் கப்பால்,
மரணத் தென்றல் சந்திக்கும் வரை
மறுபடியும்
பிறந்தகம் நோக்கிச் செல்லும் !
நித்திய அன்புக்கடல்,
அழகுத்துவம் !
அவையே கடவுள்
இருப்பிடம் !

************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (December 1, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << புன்னகையும், கண்ணீரும் >> கவிதை -20

This entry is part [part not set] of 29 in the series 20091129_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

Self Portrait of
Kahlil Gibran

“கடவுள் தன்னிடமிருந்து ஓர் ஆன்மாவை வெளியாக்கி அதை ஓர் எழில் மாதாக உருவாக்கினார். அந்த அழகியின் மீது நளினத்தையும் பரிவையும் பொழிந்தார். அவள் கைகளில் ஆனந்தக் கிண்ணதைக் கொடுத்துக் கூறினார், “நீ கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் மறந்தால் ஒழிய இந்தக் கிண்ணத்திலிருந்து அருந்தாதே.” கடவுள் அடுத்தோர் துயர்க் கிண்ணத்தைக் கொடுத்து, “இந்தக் கிண்ணத்தைக் குடி ! அப்போதுதான் உன் பூரித்த வாழ்வுப் பொழுதுகள் ஓடிப்போன காரணத்தை நீ அறிந்திடுவாய், ஏனெனில் சோகம்தான் நீண்ட காலம் சுற்றிக் கொள்கிறது.” என்று மொழிந்தார்.

கலில் கிப்ரான் (படைப்பு)

+++++++++

<< புன்னகையும், கண்ணீரும் >>

கவிதை -20

பல்வேறு அதிசயக்
கொடைகளுக்கு ஈடாக
என்னிதயப் புன்னகையை
மாற்றிக் கொள்ள
வேட்கை இல்லை எனக்கு !
என் வேதனைச் சுயநினைவு
விளித்து அமைதிக்காக
எனது கண்ணீர்த் துளிகளை
மாற்றிக் கொள்ளவும்
ஏற்பில்லை எனக்கு !
எனது ஆர்வ நம்பிக்கை இது :
இப்புவியில்
என் வாழ்வு பூராவும்
புன்னகையும்
கண்ணீர்த் துளிகளும்
என்றென்றும்
பின்னியே இருக்கும் !

+++++++++++++++++

கண்ணீர்த் துளிகள்
என்னிதயத்தைப் புனிதப் படுத்தும்.
வாழ்வின் புதிரை
இரகசியத்தை
வெளிப் படுத்தும் !
புன்னகை என் சகாக்கள்
நெருங்கிவர
என்னைக் கவர்ந்து செல்லும் !
உடைந்து போன உள்ளங்களை
இணைத்தி விடும்
எனது கண்ணீர்த் துளிகள் !
என் உயிர் வாழ்வுக்கு
இனிப்புச்
சின்னமாகும் எனது
புன்னகை !

+++++++++++++

அன்பு மயத்தின் மீதெனக்கு
தீராப் பசி !
அழகுத்துவம் மேல் எனக்கு
ஆறாப் பசி !
இப்போது தெரிகிறது
எனக்கு
கொள்ளைச் சொத்து ஒன்றைக்
கொண்டவர்க்கு
இன்னலைத் தவிர வேறு
எதுமில்லை !
என் ஆன்மா வுக்குக்
காதலர் விடும் பெருமூச்சுகள்
அமைதி அளிக்கும்
கம்பிகள் முறுக்கிய
யாழிசைக்
கருவியை விட !

************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (November 24, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -1 (மரணம் விடும் அழைப்பு)

This entry is part [part not set] of 38 in the series 20090820_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

Fig. 1
Kahlil Gibran’s Paintings
“The Polygamy Man”

“மனித இனத்தார் உடம்பின் கூண்டைக் கட்டி அமைப்பதில் கூட்டாக உழைத்து, ஆன்மீக ஆலயத்தைத் தகர்ப்பதில் ஒன்று படுகிறார் !”

“உமது இதயங்கள் இரவு பகலின் இரகசியங்களை மௌனமாய் அறிகின்றன. ஆனால் உமது செவிகள் உமது இதயங்களின் ஓசைகளைக் கேட்கத் தாகமுறுகின்றன.”

கலில் கிப்ரான்

+++++++++

<< மரணத்தின் அழகு >>

கவிதை -15 பாகம் -1
(மரணம் விடும் அழைப்பு)

தூங்கிப் போக விடுவீர் என்னை
ஏங்கிக் கிடக்கும் காதலில் என் ஆத்மா !
ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும் நான் !
இராப் பகலாய் அருட் கொடைகளை
என் ஆன்மா பெற்றுக் கொண்டுள்ளது !
மெழுகு வத்திகளை ஏற்றி வைத்து
ஊதுபத்திகள் எரிந்து நறுமணம் பரப்பட்டும்
எனது படுக்கையைச் சுற்றிலும் !
மல்லிகை இலைகளை ரோஜா மலர்களை
என் உடம்பின் மீது பரப்புவீர் !
இரசாயனம் பூசி வாசனைத் திரவம் தெளிப்பீர்
எனது பாதங்களில் ! மேலும் வாசிப்பீர்
மரணத்தின் கை என் நெற்றியில் எழுதியிருப்பதை !

++++++++++

களைத்து விட்டன திறந்த என் கண்கள் !
தூக்கத்தின் கையணைப்பில் நான் ஓய்வாக வேண்டும்
வீணையின் வெள்ளி நாண்கள் நடுங்கி
அமைதி அடையட்டும் எனது ஆன்மா !
மெதுவாய் நிற்கும் என் இதயத்தைச் சுற்றிச்
சங்கிலும் புல்லாங் குழலிலும் முகத்திரை நெய்திடு !
கடந்ததை நம்பிக்கையுடன் பாடு என் கண்களில்
விடிவுக் காலம் புலர்வதைக் காணும் வரை !
அதன் மந்திரப் பொருள் : எனது நெஞ்சம்
இளைப்பாறும் இந்தப் பஞ்சு மெத்தையில் என்பது !

++++++++++

உலரட்டும் உமது கண்ணீர் என்னரும் தோழரே !
மலர்களைப் போல் உமது தலைகள் நிமிரட்டும் !
கிரீடத்தைக் கீழ் வைத்து விடிவை வரவேற்பீர் !
என் மெத்தைக்கும் முடிவில்லா எல்லைக்கும் இடையே
தோரண விளக்குத் தூண் போல் நிற்கும்
மரண மணப் பெண்ணை உற்று நோக்குவீர் !
நிறுத்திக் கொண்டு உமது நெடு மூச்சை, அவளது
இறக்கையின் சலசலப்பை என்னுடன் கேட்பீர் !

++++++++++

அருகே வந்தெனக்கு நீவீர் விடைகொடுப்பீர் ! உமது
முறுவல் இதழ்களால் தொடுவீர் என் விழிகளை !
சிறுவரின் பூக்கரங்கள் என் கைகளைப் பற்றட்டும் !
முதியோர் தம் கரங்களை என் நெற்றியில் வைத்து
ஆசீர் வாதம் வழங் கட்டும் எனக்கு !
என்னிரு கண்களில் கடவுளின் நிழலை
கன்னியர் காணட்டும் என்னை நெருங்கி !
என் மூச்சுடன் முந்திடும் கடவுளின் உயில்
எதிரொலிப் பதைக் கன்னியர் கேட்கட்டும் !

+++++++++++

(தொடரும்)

************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (August 17, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு காதலனின் அழைப்பு >> கவிதை -14 பாகம் -3 (முன் பாகத் தொடர்ச்சி)

This entry is part [part not set] of 44 in the series 20090813_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

Fig. 1
Kahlil Gibran’s Paintings
“Man Climbing over Man

“மனித இனம் என்பது பூர்வீக முடிவின்மையிலிருந்து (எதிர்கால) முடிவின்மை நோக்கி ஓடும் ஓர் ஒளி நதி !”

“பொழுது புலர்வதை ஒருவர் இரவின் பாதையைத் தவிர வேறு வழியில் அடைய முடியாது.”

“நினைவில் வைத்துக் கொள்வது ஒருவிதச் சந்திப்பு போல்வது. மறந்து போவது ஒருவித விடுதலை போன்றது.”

கலில் கிப்ரான் (பைத்தியகாரன்)

+++++++++

<< ஒரு காதலனின் அழைப்பு >>

கவிதை -14 பாகம் -3
(முன் பாகத் தொடர்ச்சி)

பிரதிபலிப்பாய் எனக்குள்ள நீ இன்று எங்கிருக்கிறாய் ?
இரவின் மௌனத்தில் நீ விழித்திருக் கிறாயா ?
தெரிவிக்கும் தூய தென்றல் என் இதயத்தின்
பரிவுத் துடிப்பு ஒவ்வொன் றையும் உனக்கு !

உனது நினைவில் என் முகத்தைத் தடவு கிறாயா ?
எனது வசீகர முகப்பு எனதில்லை இனிமேல்
தனது நிழலைத் துக்கம் கடந்து போன காலத்தில்
இனிய முகத்தின் மேல் இறக்கிய காரணத்தால் !

உன்னழகை எதிரொளித்து உதடுகள் உலர்ந்தன !
என் கண்களைக் கரித்தன எனது பெரு மூச்சுகள் !
இன்ப மூட்டின இதழ்களுக்கு நீ இட்ட முத்தங்கள் !

என் அன்பே ! எங்கே நீ இருக்கிறாய் ?
என் அழுகுரல் கேட்கிறதா கடலைத் தாண்டி ?
என் தேவையை நீ புரிந்து கொள்கிறாயா ?
என் பொறுமையின் உன்னதம் தெரியுதா உனக்கு ?

எந்த ஆன்ம உணர்வும் உள்ளதா சூழ்வெளியில்
இந்த வாலிபன் விடும் மரண மூச்சின் மேல் ?
எந்தன் புகாரை உனக்குச் சொலும் தேவதை களுக்கு
இடையே ரகசியத் தொடர்பு எதுவும் இருக்கிறதா ?

எங்கிருக்கிறாய் என் அழகுத் தாரகையே ?
என்மேல் சாபம் இட்டது வாழ்வின் இருட்டடிப்பு !
என்னை வென்று விட்டது துன்ப மயம் !
புன்னகையை மிதக்க விடு தென்றல் காற்றில்
புத்துயிர் ஊட்டுமது என்னை வாழ வைத்து !
நறுமணத்தை ஊதி விடு தென்றல் காற்றில்
தருமெனக்கு நீண்ட வாழ்வு அதன் சுவாசிப்பு !

எங்கே நீ இருக்கிறாய் என் அன்பே ?
இந்தக் காதல் எத்தகை உன்னதம் பெற்றது !
இந்த வாழ்வில் எத்துணைச் சிறியவன் நான் !

************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (August 10, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << என்னை விலக்கி விடு >> கவிதை -13 பாகம் -2 (முன் கவிதைத் தொடர்ச்சி)

This entry is part [part not set] of 39 in the series 20090716_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

Fig. 1
Kahlil Gibran Paintings
“The Blind Love”

“நான் சுதந்திரச் சுய மனிதனாக இல்லாமல் ஒரு வாலிப இளைஞனாக இருப்பதை வெறுத்து வெகுண்டெழுகிறேன்.”

“நீயே உனக்கு ஒரு முன்னோடி ! நீ எழுப்பிய கோபுரங்கள் உன் பூதகரமான சுயத்துவ அமைப்பின் அடித்தளம் ! மேலும் அந்த சுயத்துவ உணர்வே ஓர் அடித்தளமாகவும் உள்ளது.”

“நீ எனது சகோதரன். நாமிருவரும் ஒரே உலகளாவிய புனித ஆன்மாவுக்குத் தோன்றிய புதல்வர்கள், ஒரே களி மண்ணில் உருவான ஒரே உடலின் சிறைக் கைதிகளாய் இருப்பதால் என்னைப் போன்றவன் நீ. வாழ்க்கையின் பிரிவுப் பாதைகளில் மூடுபனிக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் மெய்ப்பாடுகளைப் புரிந்து கொள்ள எனக்குதவும் துணைவன் நீ. நீ மனித இனத்துவன் சகோதரா ! நான் உன்னை நேசிக்கிறேன்.”

கலில் கிப்ரான்

+++++++++

<< என்னை விலக்கி விடு >>

கவிதை -13 பாகம் -2
(முன் கவிதைத் தொடர்ச்சி)

பயமுறுத்த வேண்டாம்
என்னைக்
காட்டுச் சிங்கங்கள்
பள்ளத்தில் ஊறும்
பாம்புகள் பெயரைச் சொல்லி !
காரணம் என் ஆத்மா
தாரணியில்
அஞ்சுவ தில்லை
எதற்கும் !
தீயவை பற்றி அறிவிக்கும்
எச்சரிப்பை
ஏற்றுக் கொள்ளாது
தீயவை
என்னை நெருங்கும்
முன்னே !

அவசியம் யில்லை உனது
அறிவுரை
என்னைப் பழிப்போனே !
என் இதயம்
திறந்து கொண்டது
பேரிடர்களால் !
என்னிரு கண்கள்
கழுவப் பட்டன
நீர்த்துளிகளால் !
இதய மொழிப்
பாடத்தை
நான் கற்றுக் கொண்டது
என் தவறுகளால் !

நாட்டை நீங்குதல் பற்றி
நமக்குள் பேச்சு வேண்டாம் !
ஏனெனில்
மனச் சாட்சியே
எனக்கு நீதிபதி !
நிரபராதி யென்றால்
காப்பாற்றி அது
நியாயம் அளிக்கும் எனக்கு !
குற்றவாளி நானெனில்
குடி வாழ்வைத்
தவிர்க்கும் என்னைத்
தண்டித்து !

காதல் முன்னேறிச் செல்லும் !
பச்சைக் கொடி
காட்டும் அழகத்துவம் !
இன்பச் சங்கை ஊதும் என்
இளமை வாலிபம் !
என்னைப் பழிப்போனே !
எனது மனது நெகிழ்ச்சிகளைக்
கலைக்காதே !
என் பாதையில் நடக்கிறேன் !
வழி முழுதும்
செழிப்பாய் உள்ளது
ரோஜாவும் கற்கண்டும்
நிரம்பி
மாசில்லாத் தென்றலின்
வாசனை யோடு !

செல்வம் சேர்க்கும் வழியும்
செல்வாக்கைப் பெறும்
போக்கும் நீவீர்
போதிக்க வேண்டாம் !
ஏனெனில்
எனது ஆத்மா
கொடைப் பூரிப்பில்
நிறைந்து போய் உள்ளது
இறைவன்
கீர்த்தி யோடு !

என்னிடம் இவற்றைப் பேசாதீர்
மனிதரைப் பற்றியும்
மாந்தர் விதிகளைப் பற்றியும்
வேந்தர்
அரசாட்சி பற்றியும் !
ஏனெனில்
இந்த வையகமே
எனக்குப் பிறந்த பூமி !
எல்லா மனிதரும் எனக்குச்
சகோதரர் !
என்னை விட்டு அகல்வீர்
ஏனெனில்
ஒளி காட்டும்
என் பரிவு நோவுதலைப்
பறித்துச் செல்கிறீர்
தேவை யற்ற
குறிப்புரை களோடு !

(தொடரும்)

************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (July 13, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) என்னை விலக்கி விடு – கவிதை -13 பாகம் -1

This entry is part [part not set] of 39 in the series 20090709_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

Fig. 1
Kahlil Gibran Paintings
“I Will Get You from the Heaven”

அழகுத்துவம்* என்பது ஒருவர்
ஆத்மாவை ஈர்ப்பது !
எடுத்துக் கொள்ள விரும்பாது
ஈவதற்குக் களிப்புறுவது !

கலில் கிப்ரான் (அழகுத்துவ சிம்மாசனத்தின் முன்னே)

*(Beauty) – அழகுத்துவம்

“நேற்று இந்தக் கலியுகத்துக்கு எதிராய்ப் புகார் செய்து அஞ்சினோம் ! ஆனால் இன்றதைத் தழுவிக் கொண்டு நாம் காதலிக்கிறோம்.”

கலில் கிப்ரான்

“இன்பம் என்பது வேரைச் செழிப்பாக்கும் ஒரு கொடி, புறத்தே எழாமல் இதயத்தின் உள்ளே உருவாகி வளர்வது.”

கலில் கிப்ரான்

+++++++++

<< என்னை விலக்கி விடு >>

கவிதை -13 பாகம் -1

என்மேல் பழிசுமத்து வோனே
என்னை விலக்கிச் செல்
நம் காதலை முன்னிட்டு !
உன் ஆத்மாவும்
என் ஆத்மாவும் ஐக்கிய மாகி
ஒன்றாய் இருந்தவை
அன்னையின் பரிவு
ஆன்மாவோ டிணைந்ததை
முன்னிட்டு ! அந்தப்
பின்னலே
உன் இதயத்தை
மெய்யாக
நெய்யும் அன்போடு !
என்னை விலக்கிச் செல்
அழுகின்ற
என் இதயத் தோடு !

எந்தன் கனவுக் கடலில்
உந்திச் செல்ல வேண்டும் நான் !
பொறுத்திரு நாளை வரை
ஏனெனில் நாளைக்கு
நீ சுதந்திர மாய்ச் செய்யலாம்
நினைத்தபடி !
துளைத் தென்னை நீ
உளவு செய்வது சரி யில்லை !
அது வெறும் நிழலாய்
ஆன்மா வுடன் நடக்கும்
சமாதி நிலையை நோக்கி !
மேலும்
குளிர்ந்து போன
திண்ணிய
மண்ணுலகைக் காட்டும் !

என்னுள்ளே சிற்றிதயம் ஒன்று
இருக்கிறது !
விடுவித்துச் சிறையி லிருந்து
அவனை
வெளியே நீக்கி விட
விழைகிறேன் !
உள்ளங் கையில் நிறுத்தி
அவனை
உளவ வேண்டும் ஆழமாய்
இரகசி யத்தைக்
கறந்து வர !
இறைவன் அளித்த
தன்னம்பிக்கை என்னும்
பழி பீடத்தில்
இரகசியக் குருதியைப்
பொழியும் முன்
குறிவைத்து அம்புகளை
ஏவாதே
அவன் மீது !
இல்லையெனில் அஞ்சி
ஏகிடுவான்
கண் காணாது !
அழகுத்துவமும் காதலும்
அவனாக
மாய நளினம் அடையும்
அத்தருணம் !

எழுகிறது இளம் பரிதி !
இன்னிசை பாடுது குயில் !
நறுமணம் வீசுது
புல்லிலை
விண்வெளியில் !
விடுபட்டெழ வேண்டும்
நான் எனது
குற்ற உறக்கத்தை விட்டு !
கட்டிப் போடாதே
என்னைப்
பழிப்போனே !

(தொடரும்)

************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (July 6, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் கீதம் கவிதை -12 பாகம் -2

This entry is part [part not set] of 28 in the series 20090702_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

காதல் கீதம்

கவிதை -12 பாகம் -2
(முன்பாகத் தொடர்ச்சி)

Fig. 1
Kahlil Gibran Paintings
(The Human Bondage &
Crucifixion)

“எத்தகைய மனிதர் ! எத்தகைய மனிதர் ! “உன்னத மனிதன்” (Nietzsche’s Superman) என்னும் தலைப்புப் பெயர் மூலம் அவர் தரணி முழுவதும் தனியாகப் போராடினார். முடிவில் உலகம் அவரைக் கட்டாயப் படுத்தி அவரது காரணத்தை நீக்கினாலும், அவர் தளராது முழக்கம் செய்தார். அவர் குள்ளருக்கு மத்தியில் பைத்திய ஞானியாக, ஆனால் பித்துப் பிடிக்கும் உணர்வில்லாத ஓர் உன்னத மனிதராகவே மரணம் அடைந்தார்.”

கலில் கிப்ரான். (உலக வேதாந்தி நியட்சேயைப் பற்றி)

“கலில் கிப்ரான் கிழக்கு நாடுகளின் ஆன்மீகச் சிந்தனையைக் காட்டி மேற்கத்தைய நாடுகளுக்கு எதிராகப் புரட்சி முழக்கம் செய்தார். அதே போல் அவர் முன்பு கிழக்கு நாடுகளின் பிற்போக்குத் தன்மைகளை எதிர்த்து மேலை நாடுகளின் மறுமலர்ச்சிகளில் தனது மன ஈடுபாட்டை உணர்த்தினார்.”

(கிழக்கு மேற்கு நாகரீகம் பற்றி கலில் கிப்ரான்)

<< காதல் கீதம் >>

கவிதை -12 பாகம் -2
(முன்பாகத் தொடர்ச்சி)

முறுவலித்தேன் ஹெலினாவின் முன்னே
தருவாடாவை அழித்தவள் அவள் !
ஆயினும் கிளியோ பாத்ரா வுக்கு
முடிசூட்டினேன் !
குடிகொள்ளும் சமாதானம்
நைல் நதிப் பகுதியில் !

இன்று எடுத்துக் கட்டி
நாளை
இடித்துத் தள்ளும்
கடந்த
யுகங்களைப்
போன்றவன் நான் !

படைத்து அழித்திடும் ஒரு
கடவுளைப் போன்றவன் நான் !
ஊதாப் பூவை விட
உன்னத இனிமை கொண்டவன் !
ஆவேச மாக அடிக்கும்
புயலை விட
அபார மூர்க்கன் நான் !

அன்புப் பரிசுகள்
என்னைக் கவர்வன அல்ல !
பிரிவுத் துயர் என்னை
வருத்துவ தில்லை !
வறுமைப் பிணி என்னை
துரத்துவ தில்லை !
பொறாமை எனக்கு விழிப்பூட்டி
நிரூபிக்க வில்லை !
பித்துப் பிடிப்பதி ருப்பது
முத்திரை யிடாது
என் இருக்கையை !

மெய்ப்பாடு எதுவெனத்
தேடிச் செல்வோரே !
நானே சத்தியம் !
தேடி அடைந்தெனைக் காக்கும்
உனது மெய்ப்பாடு
எனது நடைமுறைக்கு
வழி அமைக்கும் !

************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (June 29, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << காதல் கீதம் >> கவிதை -12 பாகம் -1

This entry is part [part not set] of 37 in the series 20090625_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

Fig. 1
Kahlil Gibran’s Paintings
“Man’s Superior Standing”

“சொர்க்கத்தின் ஆட்சிமுறை உபதேசிக்கப் படலாம் என்பதற்கும், மனிதன் அந்த அழகுணர்வை, நன்னெறியை, மெய்ப்பாட்டைத் தன் உள்ளத்திலே உணரலாம் என்பதற்கும் அவர் மரித்தார். உலக வரலாற்றிலே ஆற்றல் மிக்க மகத்துவம் பெற்றவர் ஏசுக் கிறிஸ்து.”

கலில் கிப்ரான்.

“அவர் பலவீனம் உள்ளவர் இல்லை. வலு மிக்கவராய் இருந்தார்; இப்போதும் அவர் வலுவோடு இருக்கிறார். ஆனால் மாந்தர் நெஞ்சுறுதியின் உண்மைத் தகுதியை அறிய மறுக்கிறார். ஏசு கிறிஸ்து அஞ்சி வாழும் ஒரு பிறவியாக வசிக்க வில்லை. புகார் செய்தோ அல்லது வேதனை யுற்றோ ஒருபோதும் அவர் சாக வில்லை. ஒரு வழிகாட்டித் தலைவனாய் வாழ்ந்தார். ஓர் அறப்போர் தீரராய்ச் (Crusader) சிலுவையில் அடிக்கப்பட்டார். அவரைச் சித்திரவதை செய்தவரும், கொலை செய்தவரும் அஞ்சும்படி அவரது வீர மரணம் இருந்தது. ஏசு நாதர் இறக்கைகள் இழந்த ஒரு பறவையில்லை ! மற்றவரின் வளைந்த இறக்கைகளை முறித்த அவர் ஓர் அவேசப் புயல் அடிப்பு ! ஏசு இந்த உலகுக்கு வந்தார், மனித இதயத்தை ஓர் ஆலயமாக்க, மாந்தர் ஆத்மாவை ஒர் சன்னிதியாக்க, மேலும் மனதை ஓர் அறிநெறிக் குருவாக்க !

கலில் கிப்ரான்.

<< காதல் கீதம் >>

கவிதை -12 பாகம் -1

காதலிக்கு விழிகள் நான் !
ஆத்மாவுக்கு ஒயினும் நான் !
இதயத்துக்கு ஊட்டமும் நான் !
நானொரு ரோஜா மலர்
காலைப் பொழுதில்
கண் திறக்கும் என் இதயம் !
என்னை முத்தமிட்டுக்
கன்னிப் பெண்
தழுவிக் கொள்வாள்
தன் மார்போடு !

அரண் இல்லம் நான் மெய்யான
அதிர்ஷ்டத் துக்கு !
இன்பத்திற்கு ஆரம்ப கர்த்தா !
சாந்தத் துக்கும்
சமாதானத் துக்கும் மூல கர்த்தா !
அழகின் இதழ்களில் மலரும்
மென் முறுவல் நான் !
இளம் பருவம்
எனை ஆட்கொளும் போது
வினை மறந்து
அதன் முழு வாழ்வு
உறுதிப்படும்
இனிய மெய்க் கனவாய் !

கவிஞனின் மனப் பூரிப்பு நான்,
கலைத்துவனின்
காவிய வெளிப்பாடு நான் !
இசைத்துவனின்
இதய உட்கிளர்ச்சி நான் !

குழைவோடு தாய் ஒருத்தி
கொஞ்சிடும்
குழந்தை மனதில்
குடியுள்ள புனிதக்
கோயிற் சன்னிதியே நான் !
இதயக் குமுறலுக்கு
அபயப் பட்டதாய்த் தெரிந்தேன் !
தேவைப்படும் ஒன்றைப்
புறக்கணித்தேன் !
பூரணமாய் நிரம்பினாலும் மேலும்
தேடிப் போகுது
ஓடி என் இதயம்
இச்சை மிகுந்து !
சூனிய மான வாய்ப் பேச்சைப்
புறக்கணிக்கும்
என் ஆசை மனம் !

ஆதாமுக்கு ஈவ் நங்கை மூலம்
அறிமுக மானேன் !
புலங் கடத்தப் பட்ட
அவனுக்கு
நிலமே சொந்த மானது !
என்னை நானே
மேலும் அறிமுகம் செய்தேன்
சால மனுக்கு !
நானருகில் இருக்கையில்
ஞானம் பெற்றான்
ஆன்ம சாலமனும் !

(தொடரும்)

************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (June 22, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)<< மனிதனின் கானம் >> (முதற் பாகத் தொடர்ச்சி)கவிதை -11 பாகம் -2

This entry is part [part not set] of 36 in the series 20090618_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

Kahlil Gibran Paintings
“The Uphill Battle of Women”

“என் குறிக்கோள், என் மன நிறைவு இரண்டும் எனக்குக் கடவுள். நேற்று நான் உன்னவன், நாளைக்கு நீ என்னவன். உந்தன் மூல வேரில் இந்த பூமியிலே உதித்தவன் நான். வானத்தில் இருக்கும் என் மலர் நீ. நாம் இருவரும் ஒருங்கே பரிதியின் முன் வளர்ந்து வருகிறோம்.”

கலில் கிப்ரான். (உள்ளொளி) (Vision)

“வாழ்வுக் கோளத்தில் சீரிசைப்பாடு (Rhythm) இல்லாமல் நடுங்கும் ஒரு மனிதத் துண்டம் என்று என்னைப் பற்றி நேற்றுத்தான் சிந்தித்தேன். இப்போது அறிகிறேன் : நான்தான் அந்த வாழ்வுக் கோளம் என்று. வாழ்வு முழுவதிலும் உள்ள சீரிசைப்பாட்டுத் துண்டங்கள் யாவும் இயங்குவது என்னுள்ளேதான்.”

கலில் கிப்ரான்.

<< மனிதனின் கானம் >>
(முதற் பாகத் தொடர்ச்சி)

அற்புத வித்தைக் காரரிடம் உரை யாடினேன் !
அஸ்ஸிரியா குருக்களிடம் தர்க்கம் செய்தேன் !
பாலஸ்தீன் மதஞானியர் அறிவாழம் கண்டேன் !
மேலும் மெய்ப்பாடு தேடுகிறேன் ஆயினும் நான் !

இந்திய சாந்தத்தில் ஆத்ம ஞானம் சேமித்தேன் !
அரேபிய நாட்டின் பூர்வத்தை நான் உளவினேன் !
காதில் விழுந்த தெல்லாம் நான் செவி மடுத்தேன் !
ஆயினும் செவிடன் நான், மற்றும் ஒர் ஊமை !

கொடுங்கோல் ஆளுநரின் கடும்பிடியில் துன்புற்றேன் !
படையெடுத்த மூர்க்கருக்கு அடிமையாய் நான் உழன்றேன் !
பயங்கர ஆட்சி திணித்த பசியால் அவதி யுற்றேன் !
ஆன்ம வலு சிறிதெனக் குள்ளது ஆயினும் இன்று
அதை வைத்துப் போரிடுவேன் நான் அனுதினமும் !

நிரம்பிடும் என்மனது ! சூன்ய மாகும் என்னிதயம் !
முதுமையுறும் என்னுடல் ! குழந்தை யாகும் என்னுள்ளம் !
இளமையில் வளரும் என்னிதயம் ஒருவேளை, ஆயினும்
கிழவனாக வழிபடுவேன் ! கடவுளை மீளடைய முனைகிறேன் !
பூரணம் அடைந்திடும் அப்போதுதான் என்னிதயம் !

நானிங்கி ருக்கிறேன் ஆதி காலம் முதலே !
நானின்றும் வாழ்ந்து வருகிறேன் வையகத்தில் !
நானிங்கி ருப்பேன் உலக முடிவு வரை !
ஏனென்றால் இடர்மிக்க என்வாழ்வில் விடிவில்லை !

(தொடரும்)

************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (June 15, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மனிதனின் கானம் >> கவிதை -11 பாகம் -1

This entry is part [part not set] of 36 in the series 20090611_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

Kahlil Gibran Paintings
“Human Bow & Arrow”

“நேற்று அருளோடும் மகிழ்வோடும் குடிமக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஓர் அரசனைப் போல் ஆடு மேய்க்கும் இடையனாக ஆனந்தமாய் இருந்தேன் நான் ! இன்று நானறிந்த வாழ்வின் எழில் மயத்திலிருந்து என்னைக் களவாடி விட்ட வையகச் சொத்துக்களின் பிடியில் நான் மாட்டிக் கொண்ட ஓர் அடிமை !”

கலில் கிப்ரான்.

“மனித இனம் இந்த மண்ணின் பொன்னிலும் பொருளிலும் இச்சை வைக்கிறது ! ஆனால் நானோ எப்போதும் காதல் ஒளிப்பந்தம் (Torch of Love) ஒன்றைக் கையேந்தத் தேடுகிறேன் ! அது என்னைத் தீயில் குளிப்பாட்டித் தூய்மையாக்கி என் இதயத்திலிருந்து கொடிய விலங்கினத்தை அறுத்து விடும்.”

கலில் கிப்ரான்.

<< மனிதனின் கானம் >>

நானிங்கி ருக்கிறேன் ஆதிகாலம் முதலே !
நானின்னும் உயிரோ டிருக்கிறேன் இங்கே !
நானிங்கி ருப்பேன் உலக முடிவு வரை !
ஏனெனில் இடர்மிகும் என்வாழ்வில் விடிவில்லை !

எல்லை யற்ற வான் மீதுநான் திரிந்தேன் !
தொல்லை யற்ற நல்லுலகில் நானுயர்ந்தேன் !
சொர்க்கத்தின் கோட்டை வழியே நான் மிதந்தேன் !
ஆனாலும் நானிங்கு எடை போட்டால் சிறைக் கைதி !

கன்பூசியஸ் சொற் பொழிவை நான் கேட்டேன் !
களஞ்சியப் பிரம்ம ஞானத்தைச் செவி மடுத்தேன் !
புத்தரோடு அமர்ந்தேன் போதி மரத் தடியில் !
ஆயினும் நானிங்கு அறிவிலா மதத் துரோகி !

ஜெகோவா மோசஸ் சந்தித்த செனாய் மேல் ஏறினேன் !
ஜார்டனில் நாஸரீன் செய்த விந்தைகள் கண்டேன் !
மகமது நபி வந்த போது மடினாவில் நான் இருந்தேன் !
ஆயினும் நானிங்கு குழம்பிய ஒரு சிறைக் கைதி !

பாபிலோன் வல்லமைக்குச் சாட்சியாய் இருந்தேன் !
எகிப்தின் பெரும்புகழை நான் படித் தறிந்தேன் !
ரோமாபுரி போர்த் திறனை நான் வியந்தேன் !
ஆயினும் சாதனைகள் ஈனும் ஆறாத் துயர்களை
ஆரம்பப் போதனைகள் எனக்கு விளக்கிக் காட்டும் !

(தொடரும்)

************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (June 8, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << காதலில் ஏகாந்தம் >> கவிதை -10 பாகம் -2

This entry is part [part not set] of 27 in the series 20090604_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

Kahlil Gibran Paintings
“Les Miserables”

“எனது உயிர்வாழ்வு மலர்ச்சியில் காதல் முடிவு நிகழ் காலத்தை கடந்த காலத்துக்கும், எதிர்காலத்துக்கும் இணைப்பாக்கி உள்ளது.”

கலில் கிப்ரான்.

காதலைப் பற்றிப் பேச வரும் போது புனிதக் கனலில் வாயிதழ்களைத் தூயப் படுத்தினேன். ஆனால் வாயைத் திறந்து பேசப் போனால் வாய் அடைத்துக் கொண்டது.”

கலில் கிப்ரான்.

<< காதலில் ஏகாந்தம் >>

காதல் ஆசீர்வதித்துக்
கடவுள் மதிப்பளிக்கும் என்
ஆத்மா
அடிமை ஆக்கும்
என் இதயத்தைக்
கைப்பற் றியவள் நீ !
நேற்றுக் கவலை யின்றி
இருந்தேன்
இந்த மண்ணில்
அமைதி யாக வாழ்ந்து !
ஆயினும்
இப்போது நான் இதய மின்றி
அடைப் பட்டுப் போன
சிறைக் கைதி !

என் எழில் அரசி !
நான் இவ்வுலகில் பிறந்தது
ஏனென்று அறிந்து கொண்டேன்
நானுனை அடைந்த போது !
நீ ஓர் இளவரசி என்று நான்
கண்டுபிடித்த வேளை
என் ஏழ்மையை நோக்கினேன் !
ஆன்மாவை
இரகசியமாய் வழிநடத்திக்
காதல் உணர்வானது
காசினி வழக்கங்களை
மறந்து விடும் இடத்தில்
மனிதனுக்குத் தெரியாமல்
ஓர் இரகசியத்தைக்
கடவுள் வைத்துள்ளது என்று நான்
கற்றுக் கொண்டேன் !
உற்று நானுன் கண்களை
நோக்கிய போது
இப்பாதை இதயத்தின்
சொர்க்க புரிக்கு வாசலுக்கு
வழி திறக்கு மென்று
நான் அறிவேன் !

நீ யிருக்கும் உச்ச நிலைக்கு
நானிருக்கும் துச்சை நிலைக்கு
ஒப்பிட்டால்
பூதமும் புழுவும்
போராட் டத்தில் ஒருங்கே
பூட்டப் பட்டுள்ளதைக் கண்டு
இந்தப் பூமி
எனக்குத் தாயக மில்லை
என்று நான் உணர்கிறேன் !

கன்னியர் நேற்று உன்னைச்
சூழ்ந்திருக்கக் கண்டேன்
ரோஜாவைச் சுற்றிய
பசுமைச் செடி கொடி போல !
எனது கனவுக் காட்சிகளின்
உள்ளொளி
இறங்கி வந்தது
சொர்க்க புரியிலிருந்து
என்னை நோக்கி !
உன் பிதாவின் பெரும் புகழை நான்
எண்ணிடும் வேளை
ரோஜாவைப் பறித்த
எந்தன் கைகள்
சிந்திடும் இரத்தம்
ஒளிந்த முட்கள் குத்தி !
என் கனவுகள் சேமித்தவை
இழந்து போயின
விழித்தெழும் வேளை !

************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (June 2, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << காதலில் ஏகாந்தம் >> கவிதை -10

This entry is part [part not set] of 31 in the series 20090528_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

Kahlil Gibran’s Paintings
“The Plunge Together”

“உன் தோல்விகளை எடைபோட்டு உனக்கு நியாயம் அளிப்பது, முரணான போக்குகளுக்குக் காரணம் பருவக் காலங்கள் என்று குற்றம் சாட்டுவதை ஒத்தது.”

கலில் கிப்ரான்.

“கடவுளின் அழகுமயக் களத்திலே, வாழ்வு நதிக்கரை ஓரத்திலே மனிதன் ஆக்கிய விதிக் கூண்டின் சிறைக்குள் நான் அடைக்கப் பட்டேன்.”

கலில் கிப்ரான்.

“கடவுளைப் பற்றி நீ அறிய விழைந்தால் புதிர்களை விடுவிக்கும் ஓர் தீர்வாளியாய் இருக்காதே. உன்னைச் சுற்றிலும் உற்று நோக்கு. கடவுள் குழந்தைகளோடு விளையாடுவதை நீ காண முடியும்.”

கலில் கிப்ரான்.

<< காதலில் ஏகாந்தம் >>

என்னருமைக் காதலி !
உன்னைப் பின்பற்றிச் செல்கிறேன்
என்ன தேடுகிறாய்
என்னிடத்தில் ?
கனல் பற்றிய உன் பாதையில்
இணையாக நடந்துள்ளேன்
உன்னோடு !
கண்களைத் திறந்த போது
காரிருள் தவிர வேறெதையும்
காண வில்லை !
தடுமாறின
என் வாய் உதடுகள் !
மற்றவர் இடர்ப்படும் சொற்களை
மட்டும் சொல்ல நீ
விட்டு வைத்தாய் !

என் கண்மணி !
உன் இனிய இருக்கைக்கு
தாகமுற
என் இதயத்தைத்
தவிக்க வைத்தாய் !
ஏனெனில்
நான் பலவீனன் !
நீயோ பலசாலி !
ஆயினும் ஏன் நீ
என்னோடு
போராடி வருகிறாய் ?

அப்பாவி மனிதன் நான் !
நேர்மை யான மாது நீ !
ஆயினும்
நீ ஏன் என் மீது
ஆதிக்கம் செலுத்து கிறாய் ?
உயிரோடு நான் வாழ
உதவியாய் இருப்பவள் நீ !
ஆயினும்
நீ ஏன் என்னைக்
காயப் படுத்துகிறாய் ?
எனக்கு உறுதி அளிப்பவள் நீ
ஆயினும் என்னை ஏன்
பலவீனப் படுத்துகிறாய் ?
வழிகாட்டி நீ எனக்கு !
ஆயினும்
ஏனிந்த இருண்ட காட்டில்
என்னை நீ
புறக்கணித்துப் போனாய் ?

உனது கருணைப் பாதத்தின்
அருகில் உள்ளேன் !
உனது பாதை விட்டு
வேறு
வீதியில் நடந்திலேன் !
உன் மன உறுதியும்
அதற்கு
என் கீழ்ப் படிதலும்
உன் இறக்கை களால்
திறந்த தளத்தில்
வண்ணம் பூசி
உவப்பூட்டும்
என் ஆத்மா வுக்கு !

ஆறுகள் விரைந் தோடும்
காதலி யான
கடலை நோக்கி !
பூக்கள் புன்னகை புரியும்
காதலன்
ஆதவனை நோக்கி !
முகிலினம் கீழிறங்கி வரும்
முறைப் பெண்
மலைப் பள்ளம் நோக்கி !
நதிகள் கேள்விப் படா
என்னை !
பூக்கள் அறியா
என்னை !
முகிலினங்கள் தெரியா
என்னை !

ஏகாந்தி ஆகினேன்
என் காதல் வாழ்விலே !
தன் பிதாவின் காவல்
சேனையாள் என்ப தையோ
மாளிகையின்
கூலியாள் என்பதையோ
ஒப்புக் கொள்ளாது
நானிங்கு இருப்பதையும்
தானே அறியாமல்
போனவள்
என்னருமைக் காதலி !

(தொடரும்)

************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (May 25, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)<< மனித விதிக்கூண்டில் சிறை >> கவிதை -9

This entry is part [part not set] of 24 in the series 20090521_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

Fig. 1
Kahlil Gibran’s Paintings
“The Divine World”

“நீ வாய் திறந்து பேசுவாய், உன் சிந்தனையோடு நீ அமைதி அடையாத போது ! நீ வாய் இதழ்களோடு பொழுதுபோக்காக வாழ்வாய்த் திசைமாறி, உன் இதயத்தோடு நீ தனிக் குடித்தனம் நடத்த முடியாத போது !”

கலில் கிப்ரான்.

“உன்னகத்தே உள்ள கால வரம்பில்லாமை வாழ்வின் கால எல்லையற்ற தன்மையை உணர்ந்திடும் ! அது அறிவது : நேற்றென்பது இன்றை தின நினைவின்றி வேறில்லை ! நாளை என்பது இன்றைய தினக் கனவின்றி வேறில்லை !”

கலில் கிப்ரான்.

“தோல்வி ! என் படுதோல்வி ! மரணமற்ற மன உறுதி ! நீயும் நானும் புயலோடு சேர்ந்து கொண்டு நகைப்வோம் ! இருவரும் சேர்ந்து நமக்குள் மரித்துப் போனவைக்குப் புதை குழிகளைத் தோண்டுவோம் ! சூரிய வெய்யிலில் நாம் உறுதியுடன் நிற்போம் ! அபாய மனிதராய் நாம் ஆகிவிடுவோம்.”

கலில் கிப்ரான்.

<< மனித விதிக்கூண்டில் சிறை >>

எழி மயத்தின் அரங்கிலே
வாழ்க்கை
நதிப் போக்கின் வரம்பிலே
மானிடத்தின்
விதிக் கூண்டிலே
கைதி யாக உள்ளேன் !
ஆக்கப் படைப்பின் நடுவில்
அழகு மயத்திலே
விலக்கப் பட்டு
மரணம் அடைந்தேன்.
காரணம்
கடவுள் அளித்த
கொடைகளை
அனுபவிக்க நான்
தடைசெயப் பட்டதால் !

எல்லா வித எழில் மயங்களும்
எனக்குள் தூண்டும்
காதலையும் மோகத்தையும்
இழிவாகக் கருதுவது
மனிதனின் கோட்பாடு !
நான் இச்சையுறும் ஒவ்வொரு
நல்வினையும்
உன்னத மில்லை
என்பது
மனிதனின் நியாயப்பாடு !

புவி அடக்கச் சங்கிலியால்
கட்டப் பட்டு,
மரித்துப் போய்,
நாக்கு முடியப் பட்டு
சூனிய விழிகளில்
கண்ணீர்த் துளிகளோடு
சிரிக்கும்
மனித இனத்தால்
மறக்கப் பட்டு
மனித இதயம் இழக்கப் பட்டு
மானிடக் கட்டளையில்
சிறைப் பட்டேன்
துர்நாற்றக்
குகைக் குள்ளே !

குருதி இழையாய் ஓடும்
காயப் பட்ட
அந்த இதயத்திலே
இந்த வார்த்தைகள் வெளிவரக்
கேட்டேன் !
மிகையாகச் சொல்லினும்
என் ஈர விழிகள்
காட்சியைத் தடுத்தன !
வருந்தி அலறிடும் ஆத்மா
கேட்பது
நிறுத்தம் ஆனது !

மன ஒளி (From the Article Vision)

(தொடரும்)

************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (May 18, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << பூவின் கானம் >> கவிதை -8

This entry is part [part not set] of 32 in the series 20090512_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

Kahlil Gibran’s Paintings
“Man with Two Women”

செல்வம் ! நேர்மையற்ற காதலுக்கு மூலமானது ! போலி வெளிச்சத்தைத் தேடுவது ! எதிர்பார்ப்புச் செல்வீகத்தை (Fortune) நோக்கி ஓடுவது ! நச்சு நீர்க் கிணறு ! முதிய வயதின் இல்லாமைப் பரிதவிப்பு (Desperation) !

கலில் கிப்ரான்.

நீ மகிழ்ச்சியுடன் உள்ள போது உன் நெஞ்சுக்குள் ஆழ்ந்து சிந்தித்துப்பார் : உனக்குத் துக்கம் எது கொடுத்துவோ அதுதான் உனக்கு உவகை அளித்துள்ளது என்பதைக் காண்பாய்.

உன் மனம் நோகும் போது மறுபடியும் உன் இதயத் துள்ளே நீ நோக்கு : மெய்யாக உனக்கு மகிழ்ச்சி அளித்ததே உன்னை அழ வைத்திருக்கிறது என்பதை நீ அறிவாய்.

கலில் கிப்ரான்.

<< பூவின் கானம் >>

இயற்கையின் குரலாய் மீண்டும்
உரைக்கப் படும்
நான் ஒருவித வார்த்தை !
நீல நிற வானக் கூடாரத்தி லிருந்து
பச்சைக் கம்பளத்தின் மேல்
வீழும் தாரகை நான் !
குளிர் காலம் கருத்தரித்த
மூலங்களில்
நானொரு பெண் மகவு !
வசந்த காலம்
பெற்றெடுத்த பிள்ளை !
வேனிற் காலத்தின் மடியில்
வளர்ந்து வந்தது !
இலையுதிர் காலப் படுக்கையில்
உறங்கியது !

பொழுது புலர்ந்ததும் என்னைத்
தழுவுது தென்றல்
ஒளி உதயத்தை அறிவிக்க !
பறவை இனத்தோடு
சேர்கிறேன்
பரிதி ஒளிக்கு மாலையில்
விடை கொடுக்க !

சமவெளி எங்கும்
எமது எழில் மய நிறங்கள்
அலங்கரிக்கும் !
வாசனைத்
தென்றலில் நறுமணம்
வீசி வரும் !

உறக்கம் என்னை
அணைத்திடும் வேளையில்
இரவின் விழிகள்
என்னைக்
கவனமாய்க் காத்திடும் !
காலையில்
கண்விழிக்கும் போது நான்
காண்பது
பகலின் ஒற்றைக் கண்
பரிதியை !

பனித்துளியே ஒயினாகும்
எனக்குப் பருகிட !
பறவை இனத்தின் குரல்களே
எனக்குக் கேட்கும் !
புல்லின் அசைவுக்கு
இணையாகப்
புரிவது நான் நடனம் !

காதலரின் வெகுமதி நான் !
கல்யாண
மலர் வளையம் நான் !
ஒரு கணத்து மகிழ்வுக்குத்
தரப்படும்
நினைவுப் பரிசு நான் !
இறந்தவருக்கு இருப்பவர் தரும்
இறுதிக் கொடை !
துயரிலும்
எனது பங்குண்டு !
மகிழ்விலும்
எனது பங்குண்டு !

மேல்நோக்கி மட்டும் பார்க்கிறேன்
வான் ஒளியை !
ஒரு போதும்
கீழ்நோக்கிப் பார்த்திடேன்
என் நிழலை !
மனிதன் கற்க வேண்டும்
இந்த ஞானத்தை !

(தொடரும்)

************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (May 11, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் கீதம் >> கவிதை -7

This entry is part [part not set] of 27 in the series 20090507_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

Kahlil Gibran’s Paintings
“Harmony at the Peak”

“நீவீர் உமது மூதாதையப் பிதாக்களின் மூலம் ஒரு பூர்வீகக் கனவை, ஒரு கானத்தை, ஒரு தீர்க்க தெரிசனத்தைப் பரம்பரையாகப் பெற்றுள்ளீர் என்று நான் நம்புகிறேன். அதை ஒரு நன்றிக் கொடையாக நீவீர் பெருமையாக அமெரிக்காவின் மடியில் சமர்ப்பிக்கலாம்.”

கலில் கிப்ரான்.

“தோல்வியே ! என் தோல்வியே !
ஒளிவீசும் என்வாள், இரும்புக் கவசம் !
உன் விழிகளில்
என் வாசிப்பு இவை :
முடி சூடப்பட வேண்டு மானால்
அடிமைப் பட வேண்டும் !
புரிந்து கொள்ளப் படுவதற்குத்
தரை மட்டத்துக்கு
இறங்கி வர வேண்டும் !
பற்றிக் கொள்ள எதையும் முழுப்
பக்குவம் பெற வேண்டும் !
பசித்துத் தின்ன
பழம் போல் கனிந்து பூமியில்
விழ வேண்டும்.”

கலில் கிப்ரான்.

<< ஆத்மாவின் கீதம் >>

என் ஆத்மாவின் ஆழத்தில்
வார்த்தை யில்லாக்
கீதம் ஒன்று
என் இதயத்தின் வித்தில்
வாழ்ந்து வருகிறது !
தாளின்
மையிலே கலந்திட
மறுக்கிறது !
கருணைக்குக் கவசமாக
கண்ணாடி உடை போர்த்திக்
காணும்படி
கானம் இயங்கி வந்தாலும்
உதடுகளில் ஏனோ
ஒலிக்க முடிய வில்லை
என்னால் !

எப்படி மூச்சு விடுவது
அப்பாடலை ?
வையத்தின் ஈதரில் கூடக்
ஐக்கியம்
அடையலாம் அது வென
ஐயுறுவேன் !
எவரிடம் நானதைப் பாடிக்
காட்டுவது ?
வெறுப்போர் செவிகளில்
விழுந்து விடாமல்
அக்கானம்
என் ஆத்மாவின்
இல்லத்திலே
குடிபுகுந்து கொண்டது !

ஞானக் கண்களில்
நானதை நோக்கிய போது
நிழலுக்கு நிழலாய்க்
காண்கிறேன் அந்தக் கானத்தை !
விரல் நுனிகள்
தொடும் வேளை உணர்கிறேன்
கானத்தின் அதிர்வுகளை !
ஏரியின் நீர்
ஒளி விண்மீன்களை
பிரதி பலிப்பது போல் எனது
கரங்களின் செய்கைகள்
கானத்தின் இருப்பை
அறிவிக்கும் !
உதிரும் ரோஜாவின் ரகசியத்தை
ஒளிப் பனித்துளிகள்
தெளிவாக்குவது போல் என்
கண்ணீரும் காட்டி விடும்
கானத்தை !

தியானம் இயற்றிய கானம் அது
மௌனத்தில் அச்சானது
முரண்பாடு தவிர்த்தது
மெய்ப்பாடு சூழ்ந்து கொண்டது
மீண்டும் மீண்டும் வருவது
என் கனவுகளில் !
அன்பு மயம் புரிந்து கொள்வது !
ஒளிந்துள்ளது விழிப்போடு !
ஆத்மா பாடியது !

காதல் கீதம் அது !
கெயினோ* ஈசாவோ*
அதைப் பாடக் கூடுமோ ?
மல்லிகை மணத்துக்கும் மிஞ்சிய
நறுமணக் கானம் அது !
எந்தக் குரல்
ஆட்கொள்ள முடியும்
அந்தக் கீதத்தை ?

கானம் இதய அரணுக்குள்
கட்டுப் பட்டது
கன்னியின் ரகசியம் போல் !
கயிறுகள் அதை
அதிர்வுகள் செய்யா !
கடலின் சிங்கக் குரலையும்
குயிலின் கானத்தையும்
உடன்பட வைப்பது யார் ?
புயலின் ஓலத்தையும்
மழலையின் மூச்சையும்
ஒப்பு நோக்குவது யார் ?
நெஞ்சுக் குரிய மொழிகளைக்
கூச்சலிடத்
துணிவது யார் ?
எந்த மானிடன்
சொந்தக் குரலில் பாடத்
துணிவான்
இறைவன் கீதத்தை ?

++++++++++

கெயின்* ஈசாவ்* (Cain & Esau)
பைபிள் கதா நாயகர்

(தொடரும்)

************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (May 4, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)<< கவிஞன் யார் ? >> (தொடர்ச்சி) கவிதை -6 பாகம் -2

This entry is part [part not set] of 24 in the series 20090430_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

Kahlil Gibran Paintings

The Super Mother

“இப்பெரும் (அமெரிக்க) தேசத்தை உருவாக்கிய மூலப் பிதாக்களிடம் நீங்கள் இப்படிச் சொல்லலாம் என்று நான் நம்புகிறேன், “இதோ நான் ஒரு வாலிபன், லெபனானிலிருந்து வந்த இளமை மரம் ! ஆயினும் எனது வேர் ஆழமாக இங்கு நுழைந்துள்ளது ! பயன்தரும் பழக்கனிகளை அளிக்க வல்லது.”

கலில் கிப்ரான்.

மலைச் சரிவுகளில் ஓங்கி உயர்ந்து வளர்ந்த வெண்ணிற மரங்களின் குளிர்ந்த நிழலில் அமர்ந்து பசுமைப் புல்வெளிகளில் அமைதியையும், மனச் சாந்தியும் பெறும் போது உன்னிதயம் மௌனமாய்ச் சொல்லட்டும் : “கடவுள் காரணத்துடன் படைத்துள்ளது என்று.”

புயல் அடிக்கும் போது, அசுரக் காற்று காட்டு வனத்தை அசைக்கும் போது, இடியும் மின்னலும் வான் மீது பேராதிக்கம் செலுத்தும் போது உன்னிதயம் அச்சமோடு சொல்லிக் கொள்ளட்டும் : “கடவுள் ஆங்காரத்தோடு உலவுகிறது என்று.”

கலில் கிப்ரான்.

<< கவிஞன் யார் ? >>
(தொடர்ச்சி)

ஈதோ இவன்தான் கவிஞன் !
இந்தப் பிறப்பில்
புறக்கணிக்கப் படுபவன்
மக்களால் !
வரவேற்கப் படுவான்
புவிக்கு
விடை கூறிப்
புறப்படும் போது,
மேலோ கத்தில் தனது
கால்களை வைக்க
மீளும் போது !

ஈதோ இவன்தான் கவிஞன் !
புன்முறுவல் தவிர வேறு
ஒன்றைக் கேளாதவன் !

ஈதோ இவன்தான் கவிஞன் !
அழகிய வாய்மொழிகள்
நிரம்பி
அதி உயரத்தில் எழும்
ஆன்மீகச் சிந்தனை வாதி !
ஆயினும்
அவனது ஒளிக்கதிர்
தம் மீது விழாமல்
தவிர்த்துக் கொள்வர்
புவிமக்கள் !

எதுவரைத் தூக்கத்தில் மனிதர்
ஒதுங்கிக் கிடப்பார் ?
காலப் போக்கின் அதிர்ஷ்டத்தால்
பெரும் புகழ் பெற்ற
மனிதரைத்
தொடர்ந்து போற்றுவது
எதுவரை ? மனிதரின்
ஆன்மீக எழில் மயத்தைக் காணத்
தூண்டும் கவிஞனை,
அமைதிக்கும், அன்பு மயத்துக்கும்
அடையாள மானவனைப்
புறக்கணிப்பது
எத்தனை
வருடங்கள் நீடிக்கும் ?

அறிவிலி கட்டு
ஒளியூட்டி,
ஒளிப் பாதைக்குத்
திசைகாட்டி
எரிந்து தின்னப் படும்
மெழுகு வர்த்தியாய்
உருகிப் போவோனை
ஒதுக்கி
இன்னல்கள் சூழ்ந்திட
வாழ்வோனைப்
பேணா
மனித இனம்
எதுவரை
மரித்தோரை மதித்து
வசிப்போரை மறக்கும் ?

கவிஞனே ! நீ
இந்த வாழ்வுக்கு உயிர் !
கடின இடர்கள்
இடைப் புகுந்தும்
முடிவில்
வென்று மீண்டவன் !

கவிஞனே !
நீ ஒரு நாள்
இந்த இதயங்களை
எல்லாம் கட்டுப் படுத்தி
ஆட்சி செய்வாய் !
எல்லை யற்றது
உந்தன் பேரரசு !

கவிஞனே ! சோதிப்பாய்
உந்தன்
முட் கிரீடத்தை !
மொட்டு
மலரோடு உள்ள
வெற்றி மாலை ஒன்று
அதனுள்
மறைந்து கிடப்பதைக்
காண்பாய் நீ !

(தொடரும்)

************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (April 27, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << கவிஞன் யார் ? >> கவிதை -6 பாகம் -1

This entry is part [part not set] of 30 in the series 20090423_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

Fig. 1
Kahlil Gibran’s Paitings
Envy

உன்னிதயம் ஓர் எரிமலையாக இருக்குமேயானால் அதிலிருந்து பூக்கள் மலரும் என்று எப்படி நீ எதிர்பார்க்கலாம் ?”

“அழ முடியாத அறிவு, புன்னகை சிந்தாத வேதாந்தம், குழந்தைகள் முன் பணியாத உன்னதம் ஆகியவற்றிலிருந்து நீ விலகி நில்.”

“விடுதலை இல்லாத வாழ்வு ஆன்மா இல்லாத உடம்பை ஒத்தது.”

“ஆன்மா ஆழ்ந்து செழிப்புறுவதைத் தவிர நட்பில் வேறெந்தக் குறிக்கோளும் இருக்கக் கூடாது.”

கலில் கிப்ரான்.

<< கவிஞன் யார் ? >>

இந்த உலகிற்கும் எதிர்கால உலகிற்கும்
இணைப்புப் பாலம் அவன்.
தாகமுற்ற ஆத்மாக்கள்
தண்ணீர் குடிக்க வந்திடும்
தூய நீர் ஊற்று அவன்.
எழில் நதி நீர் பாய்ச்சிப்
பசித்தோர் பசி அடக்கும்
பழங்கனி காய்க்கும் மரம் அவன்.

இன்னிசைக் கானம் பாடி
மனத்தாழ்வை ஒழிக்கும் வானம் பாடி !
விண்வெளி முகம்
முழுதும் நிரம்பும் வரை
அடிவான் மீது
மேலும் கீழும்
தோன்றும் வெண்முகில் அவன்.
பின்பு ஒளியை அனுமதிக்க
வாழ்வுத் தள மலர்கள் மேல் படிந்து
இதழ்களை விரிப்பான் !

தெய்வம் அனுப்பிய தேவன் அவன்
மெய்யான உபதேசம்
செய்திட வந்தவன்.
இருள் வெல்லாத
ஒளிச்சுடர் விளக்கு !
புயல் அணைக்காத ஒளி விளக்கு.
காதல் தேவதை
எண்ணை ஊற்றி
இசைக் கீதம் ஏற்றிய தீபம் !

ஏகாந்த வாதி அவன் !
பரிவோடு
எளிய உடை
உடுப்பவன் அவன் !
உள்ளெழுச்சி தனைத்
தூண்டி விட
இயற்கை மடி மீது
அமர்பவன் அவன் !
ஆத்மீகம் வரவேற்கக்
காத்திருந்து
இரவு மௌனத்தில்
தியானிப் பவன் !

தனது இதயத்தில்
விதைகளை நட்டு வைத்து
வன வயல்களில் பரிவு விதை
விதைப்பவன்.
மனித இனம் அவற்றை
அறுவடை செய்யும்
தமக்குணவாய் ஊட்டித்
தான் வளர்வதற்கு !

(தொடரும்)

************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (April 21, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)<< வாழ்க்கையின் விளையாட்டுக் களம் >> கவிதை -5 பாகம் -2

This entry is part [part not set] of 26 in the series 20090416_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

சுதந்திர மனிதர் நாம் !

சுதந்திர மனிதர்கள் நாம் !
கிழக்கையோ மேற்கையோ
தழுவியோர் அல்லர் !
எல்லைக் கோடுகள் நமது
இதயத்தில் இல்லை !
சிலுவை, பிறை நிலவை
வழிபடுவோர் இல்லை !
ஏசுவையோ புத்தரையோ
நேசிப்போர் இல்லை !
யூதர் மீதோ, இஸ்லாமியர் மீதோ
பேதமை இல்லை !
சுதந்திர மனிதர்கள் நாம் !

கலில் கிப்ரான் (From “A Chant of Mystics” & Other Poems 1921)

நான் ஏகாந்தத்தைத் தேடினேன், போலி அறிவைத் (Spectre of Knowledge) தமது கனவுகளில் கண்டு கொண்டு அவரது குறிக்கோளை அடைந்து விட்டதாக நம்பிடும் சுயநல வாதிகளிடமிருந்து என்னை மறைத்துக் கொள்ள !”

கலில் கிப்ரான் (From A Treasury of Kahlil Gibran 1951)

<< வாழ்க்கையின் விளையாட்டுக் களம் >>

ஒரு மணி நேரமே
ஒதுக்கப் பட்டது
பலவீனரின்
களவு போன சமத்துவத்தைப்
பற்றி நாம்
கவலைப் படுவதற்கும்
மனம் நோவ தற்கும் !
பேராசையும்
பெரும் பதவி மோகமும்
நிரம்பிய
நூறாண்டை விட அது
பாராட்டத் தக்கது !

அந்த மணி நேரத்தில்தான்
எந்தன் இதயம்
சுத்த மானது
துக்கத்தைச் சூடாக்கி
காதல் விளக்கேற்றி
கதிரொளி வீசிக் கொண்டு !
அந்த நூற்றாண்டில் தான்
மெய்ப்பாடைத் தேடும்
வேட்கை
மேதினியின் நெஞ்சுக்குள்
மேவியது !

அந்த மணி நேரத்தில்
வேரிட்டன
ஓங்கி உயர்வ தெல்லாம் !
அந்தத் தருணம் தான்
மௌன தியானத்தின்
மணிக் கணக் கானது
தியான வேளை,
பிரார்த்தனை வேளை
புதிய யுகத்தின்
நன்னெறி வேளை !

அந்த நூற்றாண்டு தான்
நீரோ மன்னன் வாழ்க்கை
மண் பொருள்
மூலமாய்த் தன்னையே
அர்ப்பணிக்கும் !

யுக யுகமாய்
நாடக அரங்கில்
காட்சி தரும்
வாழ்க்கை இதுதான் !
ஏட்டில் பதிக்கப் பட்டது
நூறாண் டுகளாய் !
புதிராய்ப் பல்லாண்டுகள்
நீடித்தது !
பாக்களாய் அதனைப் பாடியது
பல நாட்களாய் !
ஒரு மணி நேரத்தில்
உன்னத மானது !
ஆனால் அத்தருணம்
முடிவில்லாத
மாணிக்கக் கல்போல்
நிலை பெற்றது
மதிப்புடன் !

++++++++++++++

(தொடரும்)

************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (April 13, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா