மழை விரும்பும் மழலை

This entry is part of 33 in the series 20110424_Issue

ச. மணி ராமலிங்கம்


ஆயிரம் முறை
அன்னை அடித்தாலும்
உன்னோடு தான்
விளையாட துடிக்கும்
என் மனது

கந்தலான மேகங்கள்
கைகோர்த்து விட்டது
உன் வரவுக்காக

நானும் வந்து
இங்கு காத்திருக்கிறேன்
உன் உறவுக்காக

அன்னை வரும்
முன் அணைத்திடு
என்னை ஒரு
முறை நனைத்திடு

உன் தூறலுக்காக
வந்தேன் தூரமாக
என்னை ஏமாற்றிவிடாதே
ஏங்கும் துயரமாக

மழை வரும் வரை
கவலை தான்
மழை விரும்பும்
மழலை நான்

– ச. மணி ராமலிங்கம்

Series Navigation