இலையாய் மிதந்தபடி..

This entry is part of 46 in the series 20110417_Issue

தேனம்மை லெக்ஷ்மணன்


****************************************

மோதிரக்கையால்
மெல்லமாக செல்லக்
குட்டுப்பட்டாலும்
அனுபவிப்பவரின்
எண்ணங்களில்
ஒளிந்திருக்கிறது
வலிக்கான இலக்கணம்..
தொட்டுப்பார்க்கும்தோறும்
புடைப்பற்ற இன்பமாய்..

ஒவ்வொரு
ஒத்திப் போடுதலிலும்
ஒளிந்திருக்கிறது
சந்தோஷத்தை
நீட்டிப்பதற்கான மந்திரம்..

எண்ண ஊஞ்சலில்
முன்னும் பின்னும்
ஆடுவதோடு
முடிந்துவிடுகிறது
என் ஆசைப் பயணம்..

எதிர்பார்ப்புகளிலும்
அதற்கான முஸ்தீபுகளிலும்
ஏறி இறங்குவதான
டோரா டோரா கனவுகள்
தினம் தினம்
என்னைத் தின்றபடி
உயிர்க்கின்றன..

தின்னப்படும் நானே
தினம் கனவை
தின்னுபவளாகவும்
அசைபோடுபவளாகவும்
அனுபவித்தவளாகவும்
ஆராதிப்பவளாகவும்
ஆனந்த் அலைகளில்
இலையாய் மிதந்தபடி..

Series Navigation