மிதந்தது கொண்டிருந்தது மேகம்

This entry is part of 46 in the series 20110417_Issue

மகாஷ்ரி


வெள்ளை வெள்ளையாய்
திட்டு திட்டாய்
மிதந்தது கொண்டிருந்தது மேகம்
நான் பட்டம்
விட்டுத் திரிந்த வயதினிலும்,
நான் பட்டம்
வாங்கிய பின்னும்,
தோல்வியில் துவண்டு
வானம் வெறித்த போதும்,
வெற்றியில் எனை
மறந்து மிதந்த போதும்,
மிதந்து கொண்டிருந்தது மேகம்
திட்டு திட்டாய்
வெள்ளை வெள்ளையாய்
கடக்கும் மேகங்கள்
கண்காணித்துச் செல்கிறதோ
சந்தேகம் உண்டெனக்கு!
சில வேளைகளில்
வானவில்லை விட
வானமேகம் அழகாய்த்
தோன்றும் ஏனோ!

Series Navigation