• Home »
  • »
  • பதிவிறக்கக் கனவு

பதிவிறக்கக் கனவு

This entry is part of 42 in the series 20110327_Issue

அருண்வாசகன்


அப்படி ஒன்றும் பெரிதான கனவில்லை…!!!

ஒரு கவளச் சோறாகினும் ஊர் கூடும் பந்தி …

ஒரு வருடப் பிரிவாகினும் ஒரு நாள் தேரோட்டம் …

சற்று தாமதம் …இருக்கட்டும் அந்த மாட்டு வண்டி பயணம் ..

ஆட மறந்து விட்டாலும் …பொக்கிஷம் கிட்டுப் புல் கட்டை …

வார்த்தை புரியாது ..இருந்தாலும் கேட்க வேண்டும் கிழவியின் கதைகள் ..

இன்னும் அறுந்துவிட வில்லை ..ஆட மனமில்லாத புளிய மர ஊஞ்சல் …

அடுத்த வண்டி பார்த்தே கற்றுக் கொண்ட அந்த மணிக் கணக்குகள்…

ஒரு ரூபாய்க்கு கை நிறைய கிடைக்கும் கற்பூர மிட்டாய் ..

பட்டாளத்து பயணம் முடிந்து வரும் அப்பாவை பார்ப்பது …

பெட்டி நிரைய நிரப்பிக்கொள்ளும் கரும்பலகை பலப்பம் …

இப்படி சிதறிப் போன வாழ்க்கை மட்டும் போதும்…..

எந்த முக நூலிலோ ….அல்லது வலைதளத்திலோ இருந்தால் சொல்லுங்கள் ..

அடுத்த தலைமுறைக்குச் சொல்லி தருவதற்குள் செத்தே போய்விடும்

இந்த பதிவிறக்கக் கனவுகள் …. !!!!

Series Navigation

அருண் வாசகன்