திரை

This entry is part [part not set] of 35 in the series 20110213_Issue

சத்யானந்தன்


மந்திரகாரன் காலிப் பெட்டியை
மூடியிருந்த துணியை எடுத்ததும்
இரண்டு புறாக்கள் பறந்தன

அவனால் ஒருவரை அந்தரத்தில்
தூங்க வைக்க இயன்றது

அவன் கையிலிருந்த கோலில்
மந்திர சக்தி இருக்கலாம்
அவன் சொற்களாலோ வேறு
வழியிலோ நம்மை வசியம்
செய்து விடுகிறானாம்

அவன் எதை ஒளித்து வைக்கிறான்
எதைக் காட்டுகிறான் வித்தையைத்
துவங்கும் போது
ஒருவர் கேள்வி

அதற்கான பதிலை நான் தேடவில்லை
யாரிடமும் அதைப் பற்றிப் பேசவில்லை
கனவு பற்றியும்����

Series Navigation

சத்யானந்தன்

சத்யானந்தன்

திரை

This entry is part [part not set] of 46 in the series 20050311_Issue

ஜோசப்


“என்ன ராமு டிசைட் பண்ணியிருக்கே ?”

ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்த ராமு திடுக்கிட்டு நிமிர்ந்து நண்பனைப் பார்த்தான்.

“என்னடா கேட்டே ?”

“இல்ல, ரொம்ப நேரமா விட்டத்தையே பார்த்துக்கிட்டிருக்கியே.. ஏதாவது முடிவு பண்ணிட்டயோன்னு கேட்டேன்.”

“இல்லடா. என்ன முடிவு பண்றதுன்னு தெரியாம குழம்பிப் போயிருக்கேன். நீயே ஒரு யோசனை சொல்லேன் முருகேஷ்.”

முருகேஷ் நண்பனைப் பார்த்து புன்னகைத்தான். “இதுல என்னோட யோசனை எதுக்குடா ? நம்ம ஆஃபீஸ்லயே நீதான் சொலுஷன் எக்ஸ்பர்ட். நம்ம கணேசன் சார் கூட பல தடவை நீ சஜ்ஜஸ்ட் பண்ற முடிவைத்தான் எடுப்பாரு.. நீ என்னோட யோசனையைக் கேக்கறே ?”

“அது வேற, இது வேறடா. ஆஃபீஸ் விஷயத்துல நம்ம மூளையை மட்டும்தான் இன்வால்வ் பண்றோம். நம்ம அறிவு, பயிற்சி, அனுபவம், பாஸ்ட் ஹிஸ்டரி ன்னு எல்லாத்தையும் யூஸ் பண்ணி டிசிஷன் எடுக்கறோம். அதுல உணர்ச்சிகளுக்கு எந்த விதமான ரோலுமில்லை. ஆனா இது அப்படியில்லையே.. நான் எடுக்கற முடிவு என்னை மாத்திரமா பாதிக்கும் ? என் குடும்பத்தையே பாதிக்குமே. கல்யாணத்துக்கு ரெடியா நிக்கற என் தங்கையோட வாழ்க்கையக்கூட பாதிக்க வாய்ப்பிருக்கே. அதான் யோசிச்சி, யோசிச்சி ஒண்ணும் பிடிபடாம.. போறும்டா இந்த வேதனை.. காதல், மண்ணாங்கட்டின்னு இந்த நாலு வருஷத்துல எனக்கு கிடைச்ச எல்லா வெற்றிகளையும் இன்னைக்கி நடந்த சம்பவம் ஒண்ணுமில்லாம ஆக்குனது மட்டுமில்லாம ஆஃபீஸ்ல எனக்கிருந்த மதிப்பையும் ரொம்பவும் பாதிச்சிட்டது முருகேஷ்” நண்பனின் குரலில் ஏற்பட்ட நடுக்கம் முருகேஷை வெகுவாக பாதித்தது.

அவனுடைய நண்பர் குழுவிலேயே மிகத் திறமையான, அனுபவமிக்கவன் என்று பெயரெடுத்தவன் ராமு. பார்க்க சுமாராயிருந்தாலும், அவனுடைய அதிகப்படியான திறமை அவனுடைய அலுவலகத்தில் அவனுக்கு அநேக பெண் நண்பர்களை ( அட்மைரர்ஸ் என்பதுதான் சரி) ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.

அப்படியொரு அட்மைரராக ராமுக்கு அறிமுகமானவள்தான் சுகந்தி. முருகேஷும் அவளும் ஒரே நேரத்தில் அந்த அலுவலகத்தில் மென்பொருள் டெவலப்பர்சாக சேர்ந்தபோது ராமுவின் டாமில் பயிற்சிக்காக சேர்க்கப்பட்டார்கள். முதல் ஆறு மாதத்திலேயே ராமுவும் முருகேஷும் நல்ல நண்பர்களானார்கள் (ஒரே அறையில் தங்க வேண்டிய சூழ்நிலை காரணமாயிருந்திருக்கலாம்).

ஆரம்ப முதலே சுகந்திக்கு ராமு என்றால் ஒரு ஹீரோவொர்ஷிப் இருந்ததை முருகேஷ் உணர்ந்திருக்கிறான். இது விஷயமாக முருகேஷ் அவனை அவர்களிருவரும் தனித்திருந்த மாலைப் பொழுதுகளில் கேலி செய்திருக்கிறான்.

அப்போதெல்லாம் ‘அதெல்லாம் உன் கற்பனைடா ‘ என்று ராமு ஒதுக்கிவிடுவான்.

முருகேஷும் சுகந்தியும் பயிற்சி முடிந்து வேறொரு ‘லைவ் ‘ ப்ராஜக்ட் டாமில் சேர்க்கப்பட்ட அன்று சுகந்தி “மிஸ்டர் ராமு, நான் உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணும். வில் யூ பி ஃப்ரீ இன் தி ஈவ்னிங் டுடே ?” என்று கேட்டபோது ராமுவால் தவிர்க்க முடியவில்லை.

அன்று மாலை அலுவலக நேரம் முடிந்து இருவரும் தனித்தனியாக புறப்பட்டு மெரீனா கடற்கரையில் சந்தித்தனர்.

வாரநாளானதாலும் மாலையுமில்லாமல் இரவுமில்லாத நேரமாயிருந்ததாலும் கூட்டம் வெகுவாய் குறைந்திருந்தது. இருவரும் காந்தி சிலையில் சந்தித்து பேசிக்கொண்டே மெதுவாய் நடந்தனர்.

சிறிது நேர மெளனத்திற்குப் பிறகு சுகந்தி தன் உள்ளத்திலிருப்பதை ராமுவிடம் சுருக்கமாகக் கூறினாள்.

அவள் பேசி முடிக்கும் வரை பொறுமையாய் கேட்ட ராமு ஒன்றும் பேசாமலிருந்தான்.

“என்ன ராமு, ஒண்ணும் சொல்ல மாட்டேங்குறீங்க ?”

ராமு அவளைப் பார்த்து லேசாய் புன்னகைத்தான். “நீங்க சொல்றதை என்னால ஏத்துக்க முடியலைங்க. அதான் என்ன சொல்றதுன்னு தெரியாம யோசிச்சிக்கிட்டிருக்கேன். உங்கள நான் இதுவரைக்கும் ஒரு அலுவலக சக ஊழியராத்தான் பார்த்திருக்கிறேன். இப்போ திடார்னு… இப்படியொரு எண்ணம் உங்க மனசுல ஏற்படுறதுக்கு நான் எந்த வகையிலாவது காரணமாயிருந்திருக்கேனான்னு யோசிச்சி பார்க்கிறேன். மே பி. ஐ டோண்ட் நோ. அப்படி ஏதாவது வகையிலா காரணமாயிருந்திருந்தா ஐ யாம் சாரி. இப்படிபட்ட ஒரு உறவை ஏற்படுத்திக்கற நிலையிலே நான் இப்போ இல்லை. என்ன மன்னிச்சிருங்க சுகந்தி. என்னை இதுக்குமேல ஒண்ணும் கேட்காதீங்க, ப்ளீஸ்.”

சுகந்தி இப்படியொரு பதிலை எதிர்பார்க்கவில்லை. ‘என்னிடம் என்ன இல்லை ? பார்க்கப்போனால் இவன் எனக்கு எந்த வகையிலும் பொருத்தமில்லை. ‘ அவளுக்கு சட்டென்று தன் மீதே கோபம் வந்தது. தன்னுடைய அழகால் கவரப்பட்டு அந்த அலுவலகத்திலேயே பலரும் தன்னுடைய நட்புக்காக முயற்சி செய்தும் அதை தவிர்த்திருக்கிறாள். ஆனாலும் இவனை அலுவலகத்தில் பார்க்கும்போதெல்லாம் தன் மனதில் ஏற்படும் ஒரு இணம் புரியாத உணர்வு.. இவனோடு பேசும்போதெல்லாம் தனக்கு கிடைக்கும் ஒரு சந்தோஷம்.. பலமுறை இந்த உணர்வுகளோடு அவள் போராடியிருக்கிறாள்.

ஆரம்பத்தில் இது ஒரு தற்காலிக உணர்வுதான் என்று அலட்சியப்படுத்த முயன்றிருக்கிறாள். ஆனால் கடந்த ஒரு மாதமாக அவனை ஒரு நாள் பார்க்கவில்லையென்றாலும் தன்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பதை உணர்ந்தபோதுதான் அவனிடம் தன் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தாள்.

அவளுக்கென்று இருந்த ஒரே உறவான தாயும் கடந்த ஆண்டு மரித்தபின் உலகில் தனித்து விடப்பட்டவளாய் உணர்ந்த சுகந்தி ராமுவை சந்தித்த பிறகுதான் தன்னுடைய வாழ்வில் ஒரு அர்த்தத்தை உணர ஆரம்பித்தாள். தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்திய உடனே அவன் தன்னை முழுமையாக ஏற்றுக்கொள்வான் என்றுதான் அவள் நினைத்திருந்தாள். அவனுடைய நிராகரிப்பை அவள் முற்றிலும் எதிர்ப்பார்க்கவில்லை.

“உங்களுக்கு நேரமாகலையா சுகந்தி ?”

தன் நினைவுகளில் ஆழ்ந்திருந்த சுகந்தி ராமுவின் குரலைக் கேட்டு திடுக்கிட்டு ‘என்ன சொன்னீங்க ‘ என்பதுபோல் அவனைப் பார்த்தாள்.

அவள் கண்கள் கண்ணீரால் நிறைந்திருப்பதைப் பார்த்த ராமு ஒரு கணம் என்ன பேசுவதென்று தெரியாமல் திகைத்துப் போனான். தன்னுடைய உள்ளத்திலிருப்பதை அவளிடம் எப்படி சொல்வது ? ‘நானும் உன் மேல் அளவுக்கதிகமான அன்பை வைத்துவிட்டு இப்போது மறக்கமுடியாமல் தடுமாறுகிறேன் என்று எப்படி சொல்ல ? எல்லாம் அந்த முருகேஷால் வந்த வினை. கடந்த மூன்று மாதங்களில் தினமும் ஒரு முறையாவது அவளைப் பற்றி அவனிடம் கூறாமலிருந்ததில்லை. ‘சுகந்திக்கு உன் மேல் பயங்கர மதிப்பு ராமு. நீ என்ன சொன்னாலும் அது அவளுக்கு வேத வாக்கு போலத்தான். நீ வேணும்னா ஏதாச்சும் சொல்லிப்பாரேன். அடுத்த நிமிஷமே அதை செஞ்சிட்டுதான் மறுவேலை பார்ப்பா. அப்படியொரு கண்மூடித்தனமான மதிப்பு. ‘ என்றான் ஒரு நாள்.

அப்போதெல்லாம் அதைப் பொருட்படுத்தாமல் ‘போடா, நீயா ஏதாவது கற்பனைப் பண்ணிக்கிட்டு.. ‘ என்று தட்டிக்கழித்துவிடுவான். ஆனால் நாளடைவில் சுகந்தியின் அமைதியான நடவடிக்கை, அவளுடைய அபிரிமிதமான கிரகிப்புத்திறன், எந்த வேலை கொடுத்தாலும் சட்டென புரிந்துக்கொண்டு கச்சிதமாய் முடித்துக்கொடுக்கும் சாமர்த்தியம் எல்லாம் அவனையுமறியாமல் அவளிடம் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது.

ஆனாலும், தன்னுடைய குடும்பச் சூழ்நிலையை.. தன்னுடைய வருமானத்தை மட்டுமே நம்பி ஊரில் காத்திருந்த தன் தாய், திருமண நிச்சயம் முடிந்து இன்னும் ஆறு மாதங்களுக்குள் தன்னுடைய திருமணத்திற்கான பணத்துடன் வருவான் என தனக்காகக் காத்திருக்கும் தன் தங்கை, தன்னையும் விட புத்திக்கூர்மையுடன் மேற்படிப்புக்கு தயாராய் நிற்கும் தன் +2 படிக்கும் தம்பி.. தன்னுடைய கடமைகளின் சுமை ராமுவை காதல், கல்யாணம் என்றெல்லாம் நினைத்துப் பார்க்கக்கூட முடியாமல் கட்டிப்போட்டிருந்தன. அதையெல்லாம் இவளிடம் கூறி புரியவைக்க முடியுமா ? ‘காத்திருக்கும் கடமைகளையெல்லாம் முடித்துவிட்டு வருகிறேன், காத்திரு ‘ என்று இவளிடம் கூறுவது எந்த விதத்தில் நியாயம் ? அப்படியே அவள் தயாராயிருந்தாலும் எத்தனைக் காலம் காத்திருப்பாள் ? அவனுக்கே தெரியாமலிருந்த அந்த கால அளவை அவளுக்கெப்படி சொல்லி புரியவைப்பது ? அதற்கு ஒரே வழி தன்னுடைய உணர்வுகளை அவளிடமிருந்து மறைப்பதுதான் என்று ஏற்கனவே முடிவெடுத்திருந்தான்.

ஆனாலும் இதோ இவளுடைய கண்ணீர் தன்னுடைய மன உறுதியைக் கறைத்துவிடுமோ என்ற அச்சத்தில் முகத்தை திருப்பிக் கொண்ட ராமு, “இல்ல, உங்க ஹாஸ்டல்ல நீங்க லேட்டா போனா ஏதாவது சொல்வாங்களேன்னுதான் கேட்டேன். நான் வேணா உங்களுக்கு ஒரு ஆட்டோ பிடிச்சிக் கொடுத்துட்டு போறேன்.” என்று சொல்லிவிட்டு அவள் மறுப்பதற்குள் அந்த வழியே வந்து ஆட்டோவை நிறுத்திவிட்டு அவளைத் திரும்பி பார்த்தான்.

அவள் ஒன்றும் பேசாமல் ஆட்டோவில் ஏறிக்கொண்டு டிரைவரிடம் “மைலாப்பூர் போங்க” என்றாள்.

சீறிக்கொண்டு புறப்பட்ட ஆட்டோ அந்திமாலை நேர வாகன நெரிசலில் கலந்து கரைந்து போகும்வரை பார்த்துக் கொண்டிருந்த ராமு ஒரு நீண்ட பெருமூச்சுடன் அருகிலேயேயிருந்த தன் அறையை நோக்கி நடந்தான்.

நேற்று தான் சொன்னதை சுகந்தி சரியாக புரிந்து கொண்டிருப்பாள் என்றுதான் அவன் நினைத்திருந்தான். ஆனால் இன்று அவள் அலுவலகத்தில் நடந்துகொண்ட முறை.. இதை எப்படி எதிர்கொள்வது என்பதை முடிவு செய்ய முடியாமல் குழம்பினான்.

“என்ன ராமு, ஃப்ளாஷ்பேக்கா ?”

திடுக்கிட்டு நிகழ்காலத்திற்கு திரும்பிய ராமு, “ஆமாடா.. இந்த பொண்ணு இப்படி முட்டாள்தனமான காரியத்தை செய்வான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலைடா.. நேத்து பீச்சிலே நான் சொன்னதைக் கேட்டுட்டு கோவிச்சிக்கிட்டு போனாலும், புத்திசாலிப் பொண்ணு, புரிஞ்சிக்குவான்னுதான் நெனச்சேன். ஆனா விஷயம் இப்படி முடியும்னு நான் நினைக்கவேயில்லை:”

“சரி, இன்றைக்கு என்னதான் நடந்தது ? அதைச் சொல்லேன்.”

“சுகந்தி என் மேல கம்ப்ளைண்ட் பண்ணிட்டாடா ?”

“என்னது, கம்ப்ளைண்ட்டா ? யார்கிட்ட ?”

“நம்ம கணேசன் சார்கிட்ட.”

“என்னன்னு ? விவரமாத்தான் சொல்லேன் ?”

“கணேசன் சார் இன்னைக்கி அவரோட அறைக்கு கூப்பிட்டனுப்பிச்சாரு. நானும் ஏதோ ரொட்டான் அசைன்மெண்ட் சம்பந்தமாத்தான் டிஸ்கஸ் பண்ண கூப்பிடறார்னு நெனச்சி போனேன்.”

“சரி.”

“அங்கே போறேன்.. அவரோட அறையில சுகந்தியும் இருந்தா. சரி அவளும் இந்த அசைன்மெண்ட்ல இருப்பா போலிருக்குன்னு நானும் ஒண்ணும் பெரிசா எடுத்துக்கலை. ரெண்டு பேரையும் பொதுவா பாத்து ஸ்மைல் பண்ணிட்டு, சொல்லுங்க சார்னு உக்கார்ந்தேன்.”

“ஹும்.”

“அப்புறம்தான் கவனிச்சேன். சுகந்தி கண்ணெல்லாம் சிவந்து… ராத்திரி முழுசும் அழுதிருப்பாங்கன்னு நெனக்கிறேன். பார்க்கவே பாவமாயிருந்தது…”

“சரி, விஷயத்துக்கு வா. சார் ஏதாச்சும் உன்னைக் கேட்டாரா ? அத சொல்லு.”

“ஆமாடா. எடுத்தவுடனே ‘நீங்க இப்படி செய்வீங்கன்னு நான் நெனைக்கலே ராமு. எவ்வளவு சீனியர் நீங்க, உங்க கீழே ட்ரெய்னிங்காக போஸ்ட் பண்ணியிருக்கிற லேடி மெம்பர்கிட்ட இப்படியா நடந்துக்கறது ? ‘ன்னு கேட்டுட்டாருடா. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியாம ஒரு நிமிஷம் திகைச்சு போயிட்டேன். அப்புறம் சுதாரிச்சிக்கிட்டு ‘நான் என்ன பண்ணேன்னு இவங்க சொன்னதை சொன்னீங்கன்னா பரவாயில்லை. ‘ன்னு மெதுவா கேட்டேன்.”

“சார் என்ன சொன்னார் ?”

“அவர் எங்க சொன்னார் ? அதுக்குள்ள சுகந்தி மறுபடியும் அழ ஆரம்பிச்சிட்டாங்க. எங்க ரெண்டு பேருக்கும் என்ன பண்றதுன்னு தெரியலை… கொஞ்ச நேரத்துல சமாளிச்சிக்கிட்டு ‘சார் நான் இவர் மேல கொடுத்த கம்ப்ளைண்ட்டை வித்ட்ரா பண்ணிக்கறேன். என்னை மன்னிச்சிருங்க சார் ‘னு சொல்லிட்டு சட்டுன்னு எழுந்து போயிட்டாங்க முருகு.. எங்க ரெண்டு பேருக்கும் என்ன பண்றதுன்னு தெரியாம கொஞ்ச நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தோம்.. அப்புறம் சார் டேபிள்ல கிடந்த லெட்டரை எடுத்து என்கிட்ட கொடுத்து இதை படிங்கன்னு கொடுத்தார்…”

“லெட்டரா ? என்ன லெட்டர் ?”

“சுகந்தியோட ராஜினாமா லெட்டர் ?”

“என்னது, ராஜினாமாவா ? ஏன், எதுக்காம் ?”

“அதான் முருகு.. என்னோட பிஹேவியர்தான் காரணமாம்!”

“உன் பிஹேவியரா ? விளக்கமாதான் சொல்லேன் ?”

“அந்த லெட்டர்ல அவங்க அப்படித்தான் எழுதியிருந்தாங்க.”

“என்னன்னு ?”

“நான் ஆரம்பமுதலே அவங்கள பொருட்படுத்தலையாம். அவங்க எது செய்தாலும் நான் அப்ரிஷியேட் பண்றதில்லையாம். ஆண் ட்ரெய்னீஸ்க்கு கொடுத்த இம்ப்பார்ட்டன்ஸ் பெண் ட்ரெய்னீஸ்க்கு, முக்கியமா அவங்களுக்கு நான் கொடுக்கலையாம். அதனால அவங்களால சரியா ஜாப் நாலெட்ஜ வளர்த்துக்க முடியலையாம். இன்னும் என்னென்னமோ குழந்தைத் தனமா எழுதிட்டு கடைசியில இப்படிப்பட்ட அட்மாஸ்ஃபியர்ல வொர்க் பண்ணமுடியாதுங்கற சூழ்நிலை ஏற்பட்டுட்டதால தனக்கு தன்னுடைய வேலையை ராஜிநாமா செய்யறதைத் தவிர வேறு வழி தெரியலைன்னு அந்த லெட்டர்ல எழுதியிருந்தாங்கடா..”

“சரி, அதுக்கு நீ என்ன சொன்னே சார்கிட்ட ?”

“இதுக்கு நீங்க என்ன சொல்றீங்க ராமுன்னு சார் என்னைக் கேட்டார்.”

“நீ என்ன சொன்னே ?”

ராமு நண்பனைப் பார்த்து சோகத்துடன் சிரித்தான். “நான் என்னத்த சொல்றது ? இதுல எழுதியிருக்கறதுக்கும் நிசத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை சார். நீங்க வேணும்னா ஒரு அஃபிஷியல் என்க்வ்யரி ஆர்டர் பண்ணுங்க.. இஃப் யூ ஃபைண்ட் மி கில்டி ஐ ஆம் ரெடி டு ஃபேஸ் எனி ஆக்ஷன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.”

“சார் இதுக்கு ஒண்ணும் சொல்லலையா ? அவர் இதை நம்பிட்டாரா என்ன ?”

“சார் அப்போதைக்கு ஒண்ணும் சொல்லலை. ‘ஓகே ராம். நீங்க போய் வேலையைப் பாருங்க. நான் ஜி.எம் கிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்றேன் ‘னு சொல்லிட்டு லெட்டரை எடுத்துக்கிட்டு அவர் ஜி.எம் கேபினுக்கு போயிட்டார். நான் எழுந்து வந்துட்டேன்.”

“இது எப்ப நடந்தது ? நான் கவனிக்கவேயில்லையே!”

“நீ அந்த ப்ரொஜக்ட் க்ரூப் டிஸ்கஷன்ல இருந்தேயில்ல அப்பத்தான்.. ஒரு பதினோரு மணியிருக்கும். அத்தோட இந்த விஷயம் முடியல முருகு. இன்னும் கேளு.”

“பிறகு ? ஜி.எம் உன்னை கூப்பிட்டு ஏதாவது கேட்டாரா ?”

“ஜி.எம் மா ? அதெல்லாமில்லே.”

“பின்னே ?”

“நான் சங்கர் சார் கேபினை விட்டு வெளியே வந்து காரிடார்ல நின்னுக்கிட்டு ஒரு சிகரெட் பிடிச்சிக்கிட்டிருந்தேன். நம்ம டாம்ல இருக்கற வசந்தி வந்து ‘சார் உங்ககிட்டே ஒரு விஷயம்..னு ‘ இழுத்தாங்க.. இதென்னடா புது குழப்பம்னு ஒண்ணும் புரியாம ‘என்ன சொல்லுங்க ‘ன்னு கேட்டேன். அவங்க சுற்றும் முற்றும் பார்த்துட்டு ‘சுகந்தியால உங்களை மறக்க முடியலை சார். தயவு செய்து அவளைத் தற்கொலை செஞ்சுக்கற நிலைக்கு ஆளாக்கிறாதீங்க ‘ன்னு சொல்லிட்டு விடுவிடுன்னு போயிட்டாங்க. நான் அப்படியே ஷாக்காகி நின்னுட்டேன்.”

“ஐயையோ, அப்புறம் ?”

“அப்படியே எவ்வளவு நேரம் நின்னுக்கிட்டிருந்தேன்னு தெரியலை. கணேசன் சார் ஜி.எம் ரூம்லருந்து திரும்பி வந்து நான் நின்னுக்கிட்டிருக்கறதைப் பார்த்துட்டு என் கிட்டே வந்து என்னுடைய தோளை ஆறுதலா தட்டிக் கொடுத்துட்டு ‘நத்திங் டு வொரி ராமு. ஜி.எம் நான் பாத்துக்கறேன். சுகந்தியோட ட்ரெய்னிங் பீரியட் முடிஞ்சதும் அவங்களை டிஸ்மிஸ் பண்ணிடுங்கன்னு சொல்லிட்டார்னு சொல்லிட்டு போயிட்டார்.”

“அடப்பாவமே. அந்த பொண்ணுக்கு யாருமே இல்லையாமே ராமு. லேடாஸ் ஹாஸ்டல்லதான் ஸ்டே பண்றாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். இப்ப திடார்னு டிஸ்மிஸ் பண்ணிட்டா அவங்க என்ன பண்ணுவாங்க.. பாவம்டா ராமு.. ஒண்ணு பண்ணேன்..”

“என்ன ?”

“ஜி எம் கிட்ட நீயே பேசி இதை சுமுகமா முடிக்கப் பாறேன்.”

“எப்படிடா ? கம்ப்ளைண்ட் குடுத்தது சுகந்தி. நான் போய் சொன்னா ஜி.எம் கேப்பாரா ?”

“நீ சொன்னா கண்டிப்பா கேப்பார். சுகந்தியை வேணும்னா டைடல் பார்க் ஆஃபீஸ் ப்ராஜக்ட் டாம்ல சேர்த்துர சொல்லி ரெக்கமண்ட் பண்ணேன். ஜி.எம்முக்கு உன் மேல எப்பவுமே ரெஸ்பக்ட் உண்டு ராமு. ப்ளீஸ் ட்ரை பண்ணு ராமு. அந்த பொண்ணோட பாவம் நம்ம மேல விழவேண்டாம்டா..”

வெகு நேரம் ஒன்றும் மறுமொழி கூறாமலிருந்த ராமு ஒரு பெருமூச்சுடன் தன் நண்பனைப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்தது போல் புன்னகைத்தான். “ஓகே நீ சொல்றது சரிதான். வசந்தி சொன்னா மாதிரி சுகந்தி ஏதாவது எமோஷனலா செஞ்சுக்கறதுக்கு முன்னாடி இதுக்கு ஒரு சுமுகமான முடிவைக் கண்டுபிடிக்கணும். இல்லன்னா என்னாலயும் இந்த ஆஃபீஸ்ல நிம்மதியா கண்டின்யூ பண்ணமுடியாது. உன் அட்வைசுக்கு தாங்க்ஸ்டா முருகு”

இத்தனை விரைவில் நண்பன் ஒத்துக்கொள்வான் என நினைத்து பார்க்காத முருகேஷ் அதி சந்தோஷத்துடன், “தாங்க்ஸ் ராமு. நீ எடுத்த முடிவுதாண்டா சரி.” என்றான். பிறகு சற்றே தயக்கத்துடன் தன் நண்பனைப் பார்த்தான்.. “ராமு நான் ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்காம பதில் சொல்வியா.. ப்ளீஸ்..”

ராமு சட்டென்று நண்பனைத் திரும்பி பார்த்து ‘நீ என்ன கேக்க வரேன்னு தெரியும் ‘ என்கின்ற பாவனையில் புன்னகைத்தான்.. ஆனால் அதில் ஒரு சோகம் கலந்திருந்ததைக் காண முடிந்தது.

“நீ நினைக்கிறது சரிதான் முருகு.. என்னையுமறியாம அவளை நானும் நேசிக்க ஆரம்பிச்சிட்டேன்… ஆனா.. என் குடும்பம் இப்ப இருக்கற சூழ்நிலையில…. என்னோட உணர்ச்சிகளுக்கு திரைபோட்டு மறைக்கறதைத் தவிர எனக்கு…” எங்கே தன் கண்களில் துளிர்க்கவாரம்பித்த கண்ணீரை நண்பன் பார்த்துவிடுவானோ என்ற அச்சத்தில் முகத்தைத் திருப்பிக் கொண்ட ராமுவை நெருங்கி தோளைத் தொட்டு ‘ஐ அண்டர்ஸ்டாண்ட் ‘ என்றான் முருகேஷ்.

****

tbrjoseph@csb.co.in

Series Navigation

ஜோசப்

ஜோசப்