என் அன்னை கமலாவுக்கு

This entry is part [part not set] of 44 in the series 20110109_Issue

செந்தில்


கமலமலரின் இதழ் போன்று மென்மை
வைரம் போன்ற வைராக்கியம்
நேசத்தை தவிர எதையும் வழங்காதவள்
தன்னம்பிக்கையும் தைரியமும் மிக்கவள்
எளிமை, கண்ணியம், பெருமை
அவளது மொத்த வாழ்வு!
சாதிமத எல்லைகள் கடந்து தன் வாழ்வையும்
உறவுகளையும் வளர்த்துக் கொண்டவள்!
எத்தனை ஏழை பெண்களின்
வாழ்வில் ஒளியேற்றிருக்கிறாய்!
அம்மா, இளம் வயதில் உன்னுடன்
எங்கெல்லாம் வலம் வந்திருக்கிறேன்
வறண்ட கிராமங்களும்
வயல்வெளிகளும் தோப்புகளும்!
வாழ்வின் ஏற்ற தாழ்வுகளை
எத்தனை எளிதாக உணர்த்தியை நீ!
என் முதல் ஆசிரியை நீ!
என் இறுதி ஆசிரியையும் நீதான்!
5 வயதில் நீ எனக்கிட்ட முத்தத்திற்கு
40 வருடங்கள் கழித்து நான் உனக்கிடும் முத்தம்!
ஈடாகுமா? இணையாகுமா?
இளநீரில் சீராட்டினாய் என்னை!
உன்னை நெருப்பில் எப்படி நீராட்டுவேன்!
நெருப்பினில் இட்டாலும், உன்னுள் உறையும்
கமலஞானத்தை தீ சுட இயலுமா?

Series Navigation

செந்தில்

செந்தில்