• Home »
  • »
  • துப்பாக்கியே அழிந்துவிடு

துப்பாக்கியே அழிந்துவிடு

This entry is part of 37 in the series 20101024_Issue

எம்.எல். லாஃபிர், யாழ்ப்பாணம்



யுத்தம் வந்தது
துப்பாக்கி வெடிகள் முழங்கின
சூடுபட்ட உடல்கள்
குருதி மழை பொழிந்தன
ஈற்றில் உடலை விட்டு
உயிர் பிரிந்தது
மிஞ்சியது எங்கும்
கண்ணீர் அஞ்சலியே

ஈன்ற அன்னை
மகளைத் தேடுகிறாள்
சகோதரி பாசமிகு சகோதரனை
காணாது பதறுகிறாள்
மனைவியோ இழந்த கணவனை
காணாது புலம்புகிறாள்
வாலிபர்கள் தம் நண்பர்களை
இழந்து ஏங்குகிறார்கள்
தந்தைக்கு குடும்பத்தைக்
காணாத அதிர்ச்சி

வாழப் பிறந்த மனிதர்கள்
இவ்விதம் அழிகின்றனரே
இந்தத் துப்பாக்கியைக் கண்டுபிடித்தவன்
நாசமாகட்டும்
அவன் விட்டுச் சென்ற சொத்து
ஆயிரமாயிரம் உயிர்களைப் பலிகொள்கிறது

குருதி வெள்ளத்தில்
நீந்தும் மனிதா
உன்னை அழிக்கும் ஆயுதங்களை
முற்றாய் அழித்துவிடு
அன்றேல்
நீதான் அழிவாய்
நீ அழிந்தால்
நாடு எதற்கு

– எம்.எல். லாஃபிர், யாழ்ப்பாணம்

Series Navigation

எம்.எல். லாஃபிர், யாழ்ப்பாணம்