இரண்டு கவிதைகள்

This entry is part [part not set] of 37 in the series 20100912_Issue

சோ.சுப்புராஜ்



1 .குழல் இனிது; மிஸ் இனிது

செல்ல மகள் சில்வியா
மெல்லத் தான்
பேசத் தொடங்கினாள்…..

அம்மா, அப்பா, மாமா
தாத்தா, பாட்டி என்று
உறவுகளின் பெயர்களை
அவளின்
உதடுகளுக்குள் ஏற்றி
உச்சரிக்கச் செய்வதற்குள்
உயிர் போய்விட்ட்து எங்களுக்கு….

ஆயினும்……
இரண்டரை வயதில்
பள்ளிக்குப் போய் விட்டு
வீடு திரும்பிய
முதல் நாளிலிருந்து
எல்லோரையும்
அழைக்கத் தொடங்கினாள்
மிஸ் மிஸ் என்று…..

2.தூக்கமிழந்த பொம்மைகள்

இரவுகளில்
தரையில் விரிக்கப்பட்ட மெத்தையில்
பொம்மைகள் புடைசூழத் தூங்குவாள்
எங்கள் வீட்டு இளவரசி!

பொம்மைகளுடனான
அவளின் உலகத்தில்
அனுமதியில்லை யாருக்கும்….!

பொம்மைகளுக்கு
அம்மாவைப் போல் ஊட்டி விடுவாள்;
ஆசிரியையாக

பாடம் சொல்லித் சொல்வாள்;
பாட்டியாக தட்டிக் கொடுத்து
கதை சொல்வாள்;
தூங்க மறுக்கும் பொம்மைகளை
அப்பாவாக மிரட்டி உருட்டியும்
தூங்கப் பண்னுவாள்……!

விழிப்புவரும் நடு இரவுகளில்
இளவரசியைத் தேடினால்
மெத்தையிலிருந்து உருண்டுபோய்
வெறும் தரையில் விழுந்து
தூங்கிக் கொண்டிருப்பாள்
தேவதைக் கனவுகளுடன்…..

இவளின் வரவை எதிர்பார்த்து
மெத்தையில் உருண்டு கொண்டிருக்கும்
அவளின் பொம்மைகள்
கொட்டக் கொட்ட விழித்தபடி…….!

 சோ.சுப்புராஜ்
Email : engrsubburaj@yahoo.co.in

Series Navigation

சோ.சுப்புராஜ்

சோ.சுப்புராஜ்