உலக ஆத்மா நீ = கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஒரு பெரும் வாகனம் கவிதை -15 பாகம் -3

This entry is part [part not set] of 33 in the series 20100815_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


++++++++++++++
உலக ஆத்மா நீ
++++++++++++++

யாவரும் முயல்கிறார் நீ
யாரென்று அறிய !
ஓர் ஆன்மீகனா ? அல்லது
ஒரு காமுகனா ?
மன்னன் சாலமனைப் பற்றி
அவரது பல
மனைவியரைப் பற்றி
மனிதர் வியப்படைகிறார் !
உலகத்தின் உடம்பில்
ஓர் ஆத்மா
உள்ளதாய் அவர்
உரைக்கிறார் !
அந்த ஆத்மா நீதான் !
ஆனால்
நமது தனித்துவ வழிகள் உள்ளன
நம்மிருவருக்குள் !
அவற்றை எல்லாம் எவரும்
புகட்டுவ தில்லை !

+++++++++++

வசந்த காலத்தில் நீ
வர வேண்டும்
எனது பூந்தோப்புக்கு !
வெளிச்சம் உள்ளது அங்கு
ஒயின் மது
உள்ளது அங்கு !
இனிய இதயங்கள் உள்ளன
மாதுளை
மரத்தின் பூக்களில் ! நீ
வராது போனாலும்
இவை எல்லாம்
கவலைப் பட மாட்டா ! நீ
வருகை தந்தாலும்
இவை யெல்லாம்
கவலைப் பட மாட்டா !

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (August 9, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா