கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -12 – பாகம் -2

This entry is part of 34 in the series 20100704_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


++++++++++++++++++++++++++++++
சுயப் புராணம் வேண்டாம்
++++++++++++++++++++++++++++++

எனது வார்த்தை களைப்
பணம் கொடுத்து வாங்கு வோரை
ஒரு காலத்தில் எதிர்பார்த்து
விரும்பினேன் !
இப்போது என் படைப்பின்றி
என்னை மட்டும்
வாங்குவோர்
வர வேண்டுமென விழைகிறேன் !
கவர்ந்து சிந்திக்க வைக்கும்
கற்பனைக் காட்சிகள்
அநேகத்தை
உற்பத்தி செய்தேன்
அற்புத ஒளித் திலகமான
ஆப்ரகா மோடும்
அவரது பிதா அஸாரோடும்* !
அவ்விதம் செய்ததில்
அயர்ச்சி அடைந்தேன் நான் !

+++++++++++

பிறகு வடிவ மில்லா
ஒரு காட்சி
வருகை தந்தது !
விரைவில் அகன்றேன் !
அங்காடியைக்
கவனித்துக் கொள்ள
எவனை யாவது
வைத்துக் கொள் !
சுயப் பெருமையை
மயக்கிக் காட்டிடும்
வணிகத்தைப்
புறக்கணித்து வருகிறேன் !

+++++++++++++++

முடிவில் தெரியுது எனக்கு
பித்த மயக்கத்தின்
விடுவிப்பு ! மீண்டும்
தயங்காமல் ஏனோ வருகிறது
சுயப் பெருமை மயக்கம் !
“விட்டு வெளியேறு,” என்று
சட்டென அலறுவேன் !
முற்றும் சிதைகிறது அச்சிந்தை !
என் இனிய காதலி !
தேசக் கொடி தான்
நேசக் கையில் வசப்படக்
காற்று வேண்டும் !
ஆனால்
சுயக் கொடி வேண்டாம் !

***************
ஆஸார் *Azar – Abraham’s Father

*****************

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (June 28, 2010)

Series Navigation