ஆதலினால்..

This entry is part of 29 in the series 20100502_Issue

ஆறுமுகம் முருகேசன்..


புதைக்கத்தகுதியான
இடமிருப்பதாக சொல்லப்படவில்லை,
கனவைக்கொன்று படுக்கையில் கிடத்தியிருக்கிறேன்
நீயொருமுறை சொன்னதையே வாளாக்குகிறேன்
துண்டு துண்டுகளாக்கித்தின்று விட,
உன் வருகைக்கான காத்திருப்பினில்
உனக்கான துண்டுகளையும் பத்திரப்படுத்துகிறேன்..

அத்தனை எளிதல்ல..
இலெகுபடுத்த காதலின் வலி.

பின்குறிப்பொன்றும் அவசியப்படாது நம்மவர்களுக்கு..

நிச்சயமாக மரணப்பட்டிருப்போம்.
அத்தனை எளிதல்ல,
மறதியெனப்படுவதும்..
மறத்தலெனப்படுவதும்..

Series Navigation