கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) இரவில் அடிக்கும் காற்று ! கவிதை -7

This entry is part of 30 in the series 20100425_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


+++++++++++++++++++++++++++++
தாகமுள்ள ஒரு மீன்
++++++++++++++++++++++++++++++

எனக்குக் களைப்பு வருவதில்லை
உனது அருகா மையில் !
வெறுப்படை யாதே நீயும் என்மேல்
பரிவு மேற்கொண்டு !
தண்ணீர்க் கூஜா
நீர்க் குடங்கள் போன்ற
தாக முள்ள
சாதன மெல்லாம்
ஓய்வெடுத்துக் கொள்ளட்டும்
ஒருநாள்
என்னை விட்டு !
மோகம் கொண்டதில் என்றும்
தாகம் தீராத
தாகமுள்ள மீன் ஒன்று
வாசம் செய்யும் என்
உடலுக் குள்ளே !
கடலுக்குப் போக
காட்டுவாய் எனக்குப் பாதை !
குறை குடத்தையும்
சிறு கிண்ணத் தையும்
உடைத்து விடு !
இந்தக்
கனவு வாழ்வையும்
எனது மன உலைச் சலையும்
தவிர்ப்பாய் !

+++++++++++

நேற்றிரவு
முற்றத்தில் பொங்கி எழுந்த
கடல் அலைகளில்
மூழ்கட்டும்
இதயத்துள் மறைந்துள்ள
எனது இல்லம் !
நிலவு கிணற்றில் குதித்தது போல்
விழுந்தார் ஜோஸப் !
எதிர்பார்த்த
அறுவடை விளைச்சலை
அடித்துச் சென்றது வெள்ளம் !
அதற்குக் கவலை இல்லை !
என் புதைப்புக் கல்லின் மேல்
எரியுது நெருப்பு !
உரிய மேன்மை வேண்டேன்,
மரியாதை வேண்டேன்.
அறிவும் வேண்டேன் !
கான இசை வேண்டும் !
காலைப் புலர்ச்சி வேண்டும் !
நம்மிருவர்
கன்னங் களும் உரசிக் கொண்ட
கணப்பு வேண்டும்
எனக்கு !

+++++++++++

அணிவகுத் திங்கு நிற்கிறார்
அவல மோடு
இராணுவ வீரர்கள் !
ஏக வில்லை நான்
அவரோடு
இணைந்து கொண்டு !
இப்படித் தான் இருக்கும்
என் கவிதை முடியும் போது !
நீடித்த மௌனம்
மூடிக் கொள்ளும்
என்னை !
வியந்து போவேன் நான்
எழுத்து வரிகளைப்
பயன் படுத்தியது
ஏன் என்று ?

(தொடரும்)

*****************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (April 20, 2010)

Series Navigation