கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இடிக்கப்பட்ட ஆலயங்கள் கவிதை -27 பாகம் -2

This entry is part of 30 in the series 20100425_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


“எனது ஆளுமையில் காதலை நான் புரிந்து கொள்வதற்கும், வாழ்க்கையின் அழகுத்துவத்தைச் சுவைப்பதற்கும் தடை அரண்கள் இருந்தன. ஆனால் நான் உன்னைக் கண்ட போது காதல் விழிப்புற்று அந்தத் தடை அரண்களைத் தகர்த்து விட்டன ! பரிதியின் கீழ் நான் வாழ்ந்த வந்த வாழ் நாட்களை எல்லாம் கர்வமாகக் கருதி வருந்தினேன்.”

கலில் கிப்ரான்.

+++++++++++++++++++++++++++++++
<< இடிக்கப்பட்ட ஆலயங்கள் >>
+++++++++++++++++++++++++++++++

மனிதன் கூறினான் :
“மன்னன் மிக்க பேரறி வாளன் !”
தேவதைகள் கூறின :
“மந்த மானது மன்னன் அறிவு”
ஆனால் பூரிப்படைந்தன
தேவதைகள்
நானுனைக் கண்ட போது
எனதினிய காதலி !
காதல் கீதம் பாடின
உனக் காகத் தேவதைகள்
மனிதர் யாரும் எனது
கீதத்தைக்
கேளாத போதிலும் !

++++++++++++++

ஒளியூட்டும் காதல் எனக்கு
பணிவு மனநிலை
எய்தினேன்
பழங்குடி மரபினர்
முன்னால்
என் இனத்தவர் முன்னால் !
அஞ்சுபவர் அவரெல்லாம்
எனது இராணுவ
வல்லமைக்கு !
மரணம் வந்த போது
சிதைவு ஆயுதங்கள் யாவும்
புதைக்கப் பட்டன
பூமியில் !
ஏகினேன் நான்
காதலை ஏந்திக் கொண்டு
கடவுளிடம் !

+++++++++++++++

மற்றோர் தேவதை சொல்லும் :
மலர்கள்
உயிரையும் நறுமணத் தையும்
மண்ணுலகில்
அடைவது போல்
ஆத்மாவும்
ஈர்த்துக் கொள்ளும்
ஞானத் தையும் வலுவையும்
பலவீனமும் முறிவுகளும்
மண்டிய
பிண்டத்தி லிருந்து !

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (April 20, 2010)

Series Navigation