கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -5 பாகம் -6

This entry is part of 29 in the series 20100402_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா++++++++++++++++++++++++++++++++++
நாம் எங்கே இருக்கிறோம் ?
++++++++++++++++++++++++++++++++++

அங்கே புயல் அடித்துத் தூக்கிச்
சிதறிவிட உதவுகிறது
அதே வேளையில்
செலுத்துகிறது பாதை நோக்கி
ஒரு கப்பலை !
உண்மையாக உள்ளது கடவுள்
என்று எவரும்
உரைப்பர் அங்கே !
எங்கே ?
எதற்கு அப்பால் உள்ளது ?

+++++++++++

இங்கும் அங்குமாய் நுழைந்து
நெய்து செல்கிறது
ஒளி வெட்டித்
தையல் பொறிக் கருவி !
எங்கிருக் கிறோம் நாம்
கிழக்கிலா ? இல்லை மேற்கிலா ?
எங்கிருக் கிறேன் என்று
விண்ணில்
வினாவிக் கொண்டு மிதக்கும்
பரிதி கேட்பது போல்
தெரிகிறது !

+++++++++++

நண்பன் நுழைகிறான்
என் உடலுக் குள்ளே
நடு மையம் தேடிக் கொண்டு !
காண முடியாமல் தனது
கத்தியை உருவி
குத்திக் கிழிப்பான்
எங்காவது !
அங்கே ஓர் பளுவில்லா
வித்துள்ளது !
நிரப்பிக் கொள் உன் உடலுக்குள்
நீ அதனை,
இல்லையேல்
செத்து விடும் வித்து !

++++++++++++++

இந்த நீர்ச்சுழி விசையில் நான்
பிடி பட்டேன்
உந்தன் நெளிந்த கூந்தல் !
ஊமையாய் இருப்போன்
நியாயமாய் நடப்போன்
பித்தனாய் எண்ணப் படுவான் !
நானென்ன செய்கிறேன் என்று
எனக்குத் தெரிவதாய்
உனக்குப் புரிகிறதா ?
முழு மூச்சு அல்லது
அரை மூச்சு இழுக்க
நானெனக்குச் சொந்தமா ?
பேனா அறியுமா இனிமேல்
தானென்ன எழுதும் என்று ?
அல்லது
ஓடும் கோளம் ஒன்று
அடுத்துப்
போகு மிடம் யூகிக்குமா ?

*****************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (March 30, 2010)

Series Navigation