கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) பேச முடியாத விலங்கு ! கவிதை -25 பாகம் -2

This entry is part of 29 in the series 20100402_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


கலில் கிப்ரான் சொல்கிறார் :

குப்பைக் குவியலில் நோய்வாய்ப்பட்டு தோலில் கொப்பளங்களோடு நாய் ஒன்று சாம்பல் மேல் கிடப்பதைக் கண்டேன். அத்தமிக்கும் பரிதியை வெறித்து அங்குமிங்கும் பார்க்கும் அந்த நாயின் கண்கள் நாய் பட்ட இன்னல்கள், ஏமாற்றங்கள், அவமானத்தைக் காட்டின.

எனக்குப் புரிந்தது இது :

++++++++++++

ஊமை விலங்கு கூறாமல் கூறியது :

“ஆதாமின் புதல்வனே ! எனது
விழிகட்குத் தெரிகிறது
எனக்கும்
உனது சந்ததி களுக்கும்
இடையே உள்ள
ஒற்றுமை !
தடை செய்தது கால மாற்றம்
அவருக் கெல்லாம் !
நாட்டுக்குப் போராடினர்
படை வீரர்
வாலிபராய் உள்ள போது !
முதிய வயதில் பிறகு
வயலை உழுதார் !
பனிக்கால வாழ்வில் இப்போது
பயனற்றுப் போனார் !
பலராலும்
விலக்கப் பட்டார்
எம்மைப் போல் !”

++++++++++++++

“எனது இனத்துக்கும்
உலக மாதர் குழுவுக்கும்
ஒருமைப் பாடு கண்டேன் !
வாலிப மாது
தனது நளின வயதில்
வாலிபன் இதயத்தில் வாழ்ந்தாள் !
தாயாகிப் பிறகு வாழ்வைச்
சேய்களுக்கு அர்ப்பணித் தாள் !
இப்போது
முதிய வயதில்
தனித்து விடப்பட்டு அவளும்
ஒதுக்கப் பட்டாள் !
உனது போக்கு
எத்தகைய கொடுங் கோன்மை !
கடுமைப் போக்கு !
ஆதாமின் புதல்வனே !

+++++++++++++++

அப்படிச் சொல்லாமல் சொன்னது
அந்த ஊமை விலங்கு !
என்னிதயம் புரிந்து கொண்டது
அந்த உணர்வுகளை !

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (March 30, 2010)

Series Navigation