செய்தாலி கவிதைகள்

This entry is part of 29 in the series 20100402_Issue

செய்தாலி


கோபம்

எனக்கு எதிரானவன்
என்னுள் மறைந்த்திருக்கிரன்
அவ்வபோது வெளிப்படுவான்
புயலினைப்போல்
புன்னகை தருணங்களில்
அகன்று நிற்பான்
அன்னியனாய்

நாணம்

முலைப்பால் பருவத்தில்
என் லீலைகளை
உறவினர்களின் நகைப்பில்
ஒளிரும் தருணம்
என்னை ஒழித்துகொள்கிறேன்
அம்மாவின் முந்தானைக்குள்

தேடல்

கிராமத்து வீதிகளில்
கண்ணாம்பூச்சி விளையாட்டில்
ஒளிந்திருந்த தெருக்கோடிகளில்
ஒரு முறை தேடிப்பார்க்கிறேன்
காலத்தில் துலைந்த்துபோன
பால்ய நாட்களை
காற்று

ஆடையின்றி குளிக்கையில்
அத்துமீறி நுழைகிறான்
அனுமதியின்றி தொடுகிறான்
என் அங்கங்களை

வறுமை

முன்னறிவிப்பின்றி
விருந்தினர்களின் வருகை
வறண்டு சுருண்ட முகத்தில்
இரவல் புன்னகையுமாய்
வாசப்புரத்து வரவேற்கையில்
அடுப்பின் மேல்சுவட்டில்
உறங்கியிருந்த பூனை
சட்டிகளை உருட்டியபடி
வெளியேறியது

அனுமதி

தென்றல் என்னசொல்லியதோ
சரியென்று தலையசைத்தது
மரக்கிளைகள்

– செய்தாலி கவிதைகள்

Series Navigation