பெண்ணின் பங்கு

This entry is part of 31 in the series 20100319_Issue

யூசுப் ராவுத்தர் ரஜித்மலையின் பங்கென்ன?
மழையின் பங்கென்ன?
அருவியில்

காற்றின் பங்கென்ன?
சிறகின் பங்கென்ன?
பறவையில்

வெள்ளையின் பங்கென்ன?
மஞ்சளின் பங்கென்ன?
முட்டையில்

இடதின் பங்கென்ன?
வலதின் பங்கென்ன?
தராசில்

மன்னனின் பங்கென்ன?
மக்களின் பங்கென்ன?
நல்லாட்சியில்

ஆணின் பங்கென்ன?
பெண்ணின் பங்கென்ன?
வாழ்வியலில்

சரிசமம் என்கிறது இயற்கை

ஆனால். . .
மூன்றில் ஒரு பங்கு
என்கிறார் அவர்
அதற்கும் குறைவே
என்கிறார் இவர்

ஆண்கள் ஆணிவேராம்
பெண்கள் சல்லி வேர்களாம்

ஆம்
உண்மையே சொன்னீர்

சல்லிவேர்கள் இல்லையேல்
ஆணிவேர் அழுகும்
அடி மரமே சாகும்

Series Navigation