எஞ்சியவை

This entry is part of 31 in the series 20100319_Issue

A P ஏழுமலைஎப்படி தெரிந்துவிடுகிறதோ
இந்த பாழாய்ப்போன மொழிகளுக்கு
நான்……
உன்னை பற்றி யோசிப்பது

சரியாய் வந்து மன்றாடுகின்றன
என் வாசலில் வாய்ப்பு கேட்டு

முயன்று …..முயன்று…….
சரணடைந்தவை போக
முடிந்தவரை வடிவமைத்து
முடிவிற்காக காத்திருந்தன சில

என் உணர்வுகளை பிரதிபலிக்காத
ஒவ்வொரு வார்த்தையாய்
அழித்து முடித்த அந்த
இரவின் முடிவில்
எஞ்சியவை
சில
வெள்ளை காகிதங்களும்,
என் இன்னொரு
ஊமை கவிதையும் தான்……

Series Navigation