கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -5 பாகம் -3

This entry is part of 31 in the series 20100312_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


+++++++++++++++++++++++++++
உருகும் பனியாக இரு
++++++++++++++++++++++++

நண்பனே !
உன் கதையைச் சொல்ல
உரோம இழையாய்ச்
சுருங்கினேன் !
நீ என் கதையைச் சொல்வாயா ?
நெய்துள்ளேன்
நிரம்பக் காதற் கதைகளை !
புனைகதைப்
படைப்பாளி யென்று நான்
உணர்கிறேன் இப்போது !
சொல்
உரைப்பது நீ தானே
உண்மை அது !
நானோர் சினாய் மலை !
நீ ஏறி வரும்
மோஸஸ் !

++++++++++

இக்கவிதை உன் வாய்மொழியின்
எதிரொலிப்பு ! வெறும்
தரைநிலம் பேச முடியாது
எதுவும் அறியாது !
உரைப்பினும்
வரையறைக் குட்படும் !
ஆன்மீக வானியல் கணிக்கும்
ஓர் எந்திரம்
இந்த மனித உடல் !
உயரம் அளக்கும் கருவியை
ஊடுருவி நோக்கிக்
கடலாக ஆகிவிடு !

++++++++++++

சிந்தையைத் திருப்பும்
இந்த மொழிகள் எதற்கு ?
என் தவறில்லை
இப்படி நான் உளறு வதற்கு
இதைச் செய்தது நீ !
என் காதற் பித்தை
ஏற்றுக் கொள் வாயா ?
ஆமென்று சொல் !
எந்த மொழியில் கூறுவாய்
அரபியிலா
அல்லது பாரசீ கத்திலா ?
திரும்பவும்
கட்டப்பட வேண்டும் என்
கரங்கள் !

*****************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (March 9, 2010)

Series Navigation